Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ponnezhil Poothathu Pudhu Vaanil...
Ponnezhil Poothathu Pudhu Vaanil...
Ponnezhil Poothathu Pudhu Vaanil...
Ebook124 pages44 minutes

Ponnezhil Poothathu Pudhu Vaanil...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பொன்னெழில், சமத்துவம் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. திருமணம் ஆன நாளிலிலிருந்தே பொன்னெழில், சந்தேகம்படும் வகையில் சமத்துவம் நடந்து கொள்கிறான். சாதனா, என்கிற பெண்ணை எங்கு சென்றாலும் சமத்தவம் தேடி கொண்டே இருக்கிறான். சாதனா என்கிற பெண் யார்? எதற்காக பொன்னெழிடம் இதை மறைக்க வேண்டும்? முடிவில் பொன்னெழில் பூ பூத்ததா? இல்லையா? என்பதை பார்ப்போம்!

Languageதமிழ்
Release dateApr 6, 2024
ISBN6580137110926
Ponnezhil Poothathu Pudhu Vaanil...

Read more from R. Sumathi

Related to Ponnezhil Poothathu Pudhu Vaanil...

Related ebooks

Reviews for Ponnezhil Poothathu Pudhu Vaanil...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ponnezhil Poothathu Pudhu Vaanil... - R. Sumathi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பொன்னெழில் பூத்தது புது வானில்...

    Ponnezhil Poothathu Pudhu Vaanil...

    Author:

    ஆர். சுமதி

    R. Sumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-sumathi

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    அலங்கரிக்கப்பட்ட அந்த கார் மிதமான வேகத்தில் சென்றுக் கொண்டிருந்தது.

    பின் இருக்கையில் அமர்ந்திருந்த சமத்துவம் பக்கத்தில் அமர்ந்து ஜன்னல் வழியே சென்னை மாநகரை ஒருவித குதூகலத்துடன் பார்த்துக் கொண்டிருந்த தன் புது மனைவி பொன்னெழிலை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

    பொன்னெழில்!

    அந்த பெயரை அவன் பெண் பார்க்கப் போனபோது கேள்விப்பட்ட நிமடத்தில் ஏற்ப்பட்ட இதயச் சிலிர்ப்பு இன்னும் மெல்லிய காற்றால் உண்டான குளத்து அலைகளாய் அவனுக்குள் தவழ்ந்துக் கொண்டேயிருந்தது.

    பொன்னெழில்! நிறமும் பொன் போல். எழிலும் அதன் ஜொலிப்பாய். கண்ணெழில் காந்தம். தண்ணென்ற நிழலின் குளிர்ச்சியாய் பார்வை. விண்ணெழில் அத்தனையும் அவளிடம் அடைக்கலம். கார்மேகமாய் கூந்தல். பார் பார் என சிரிக்கும் விண்மீன்கள் சரமாகி அதில் சிரிக்கும் முல்லை. நிலவு முகம். அதில் உளவு பார்க்க வந்து உட்கார்ந்துக் கொண்ட உளவாளியாய் மச்சம். அந்திவான ஆரஞ்சு நிற இதழ்கள். வானவில்

    குடைக்கு கீழி வந்து நின்ற தேவதைப் போலொரு மிதப்பு. இந்த பொன்னெழில் இனி உன்னெழில் என்பதைப் போன்று நெருங்கியமர்ந்திருந்த அருகாமை. அருகாமை அந்த அழகை இன்னும் பருகாமையால் தந்த ஏக்கம் அவனுக்குள் இருந்தாலும்...

    அவளுடைய அழகை இப்பொழுது அவனால் புதுமாப்பிள்ளைக்குரிய குறுகுறுப்புடனும்; ஆர்வத்துடனும் ரசிக்க முடியவில்லை.

    மாறாக அவனுடைய பார்வையில் ஆச்சரியம்தான் இருந்தது.

    காரணம்...

    சீர்காழியில் திருமண மண்டபத்தில் நடந்த அந்த நிகழ்வுதான்.

    அவனுக்குள் அவளைப் பற்றி அவன் நினைத்திருந்த பிம்பம் களைந்துப் போய் ஒருவித திகைப்பும்...ஏன் மதிப்பும் கூட வந்திருந்தது.

    ஒரு சாதாரண கிராமத்துப் பெண் என்று நினைத்திருந்த பொன்னெழில் அவனுக்குள் அவளை புரிந்துக் கொள்ள முடியாத ஒரு புதிராக விநாடியில் மாறிப் போயிருந்தாள்.

    அந்த சம்பவம் இதுதான்.

    திருமணம் முடிந்து உறவுக்காரர்களைத் தவிர வந்திருந்த கூட்டம் பரிசுப் பொருட்களைக் கொடுத்தவிட்டு வாழ்த்திவிட்டு வயிறு நிறைய விருந்து சாப்பிட்டுவிட்டு களைந்துப் போய்க்கொண்டிருந்தனர்.

    சற்று முன் ஏறியிருந்த புது மஞ்சள் கயிறு...மனம் நிறைய பெற்றுக் கொண்ட வாழ்த்துகள்...பரிசுகள் என பொன்னெழில் புது எழில் பெற்று அவனருகில் மாலையும் கழுத்துமாய்...

    தூரத்து உறவினர்களும் ஒவ்வொருவராய் விடைப் பெற்றுக் கொண்டு நகர நகர...மண்டபம் மெல்ல மெல்ல காலியாகத் தொடங்கியிருந்தது.

    நல்ல நேரம் முடியறதுக்குள்ள பொண்ணு மாப்பிள்ளையை மாப்பிள்ளை வீட்டுக்கு அழைச்சிட்டுப் போங்கப்பா பெரிசு ஒன்று குரல் கொடுக்க சமத்துவத்தின் தாய் நாகவல்லி பெண் வீட்டாரிடம் வந்தாள்.

    நாங்க...பொண்ணு மாப்பிள்ளையை அழைச்சுக்கிட்டு கிளம்பறோம். உங்க வீட்டு சார்பா யார் யார் வர்றீங்களோ வாங்க. வேன் ரெடியாயிருக்கு. மறுவீடு எப்ப அனுப்பனும்னு நல்ல நாள் பார்த்து சொன்னீங்கன்னா பொண்ணு மாப்பிள்ளையை அனுப்பி வைக்கிறோம் சொல்லிவிட்டு சமத்துவத்தின் தாய் நாகவல்லி அடுத்த வேலையைப் பார்க்க நகர்ந்துவிட பொன்னெழிலின் தாயும் தந்தையும் பொன்னெழிலை நோக்கி வந்தனர்.

    அவளுடைய கையைப் பற்றிக் கொண்ட அவளுடைய தந்தை தன்னையும் மீறி குலுங்கத் தொடங்கினார்.

    தாய் கலாவதி விம்மலுடன் தன் கைகள் நடுங்க பொன்னெழிலின் கையில் தன் கையையும் சேர்த்துக் கொண்டாள்.

    இந்த சூழ்நிலை சமத்துவத்திற்குள் ஒருவித நெகிழ்வான உணர்வுகளை உண்டாக்கியது.

    இத்தனை வருடங்கள் பாசமுடன் வளர்த்த தாய் தந்தையை பிரிவதென்றால் எத்தனைக் கடினம்?

    இத்தனை வருட பந்தத்தை ஒற்றைத் தாலிக்கயிறு நொடியில் தூரமாக்கிவிடுகிறதே.

    நேற்றுவரை அவர்களுக்கு உரிமையாக இருந்தவள் இன்று எனக்கு எல்லா உரிமையுமாகிவிட்டாள்.

    பாவம் கிராமத்து பெண் வேறு. தாய் தந்தையைப் பிரிந்த வரப் போகும் இந்த நொடியில் எத்தனை உடைந்துப் போவாள்?

    சற்றுத் தள்ளி நின்றவாறு அந்த நெகிழ்ச்சியான காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த சமத்துவத்தை அம்மா நாகவல்லி அவசரமாக நெருங்கினாள்.

    என்னடா...இங்க நிக்கறே? போ...அவக்கிட்ட போய் நில்லுடா அம்மா உந்தித் தள்ளினாள்.

    அம்மா...அவ அம்மா அப்பாக்கிட்ட சொல்லிட்டு வரப் போயிருக்கா. பாவம் அவங்களை பிரிஞ்சு வரப் போறா. நெருக்கமா ஏதாவது பேசிப்பாங்க... பாரு அவளோட அப்பா எப்படி சின்ன பிள்ளையாட்டம் அழறார். அவங்களுக்கான நேரம் இது. நான் ஏன் அதை டிஸ்டர்ப் பண்ணனும்?

    ப்ச். அவங்கப்பா அழறதாலதான்டா சொல்றேன். இந்த பொண்ணும் இப்ப பெரிசா அழ ஆரம்பிச்சுடுவா. ஒரே பொண்ணு இல்லையா? பிரிஞ்சு வர்றது ரொம்ப வேதனையாத்தானிருக்கும். அழுது அழுது முகம் மேக்கப்பெல்லாம் களைஞ்சு ஒரு மாதிரியாயிடும்.அழுத முகத்தோட அவ நம்ம வீட்டுக்கு வர்றது எனக்குப் பிடிக்கலை. இந்த சூழ்நிலையை நீதான்டா லேசாக்கனும். அவக்கிட்டப் போய் அவ ரொம்ப அழாம ஆறுதலா இரு. அவங்க அப்பா அம்மாக்கிட்ட நான் நல்லபடியா உங்க பொண்ணை பார்த்துப்பேன்னு அவருக்கு ஆறுதல் சொல்லு. இல்லாட்டி மனுஷன் உடைஞ்சுப் போயிடுவார். பொன்னெழில் அழாமப் பார்த்துக்கப் போ...போ... அம்மா இழுத்துக் கொண்டு போய் அவர்களிடம் விடாதக் குறையாக விட்டுவிட்டு அடுத்த வேலையை நோக்கி ஓடினாள்.

    தாய் தந்தையை விட்டு பிரியப் போகும் பொன்னெழிலை எப்படித் தேற்றுவது?’ என கற்பனையாக வார்த்தைகளை யோசித்தவாறே அவர்களை நெருங்கியவனுக்கு பொன்னெழிலின் வார்த்தைகள் திகைப்பைத் தந்தன.

    அப்பாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு கேலியாக சிரித்துக் கொண்டிருந்தாள் பொன்னெழில்.

    அவளுடைய முகத்தில் தெரிந்த கேலியான உணர்வையும் பெரிதாக மலரந்திருந்த கண்களில் தெரிந்த மலர்ச்சியையும் கண்டு திகைத்தான்.

    "என்ன இது? இந்த பெண் அம்மா அப்பாவை விட்டுப் பிரியாமல் அழுதுக் கொண்டிருப்பாள் என்று நினைத்தால் இங்கே சிரித்துக் கொண்டு நிற்கிறாள்?’ அந்த சிரிப்பில் தெரிந்த பூரிப்பு அவனை மெய் மறக்க செய்தது.

    அப்பா...என்னப்பா இது? சின்னக் குழந்தையாட்டம்...

    நான் எப்படி...எப்படி உன்னைப் பிரிஞ்சு...? அப்பாவின் வலிமையான கம்பீரமான தேகம் அணுஅணுவாய் உதிர்கிறது என்பதை அவருடைய குரலின் தடுமாற்றம், உடைந்த உணர்வு வெளிப்படுத்தியது.

    "அம்மா...அப்பாவைப் பாரும்மா. அட...நீயும் என்னம்மா சின்னக் குழந்தையாட்டம் இப்படி விசும்பறே? நான் எங்கப் போறேன்? இதோ இருக்கற சென்னைக்கு. நாலே

    Enjoying the preview?
    Page 1 of 1