Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kai Veesum Thendral!
Kai Veesum Thendral!
Kai Veesum Thendral!
Ebook130 pages49 minutes

Kai Veesum Thendral!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சொந்தமாக தன்னுடைய முயற்சியில் தையல் பயிற்சி நிறுவனம் வைத்து நடத்தி வருகிறாள் ஜெயந்தி. அவளுடைய வாழ்க்கையில் இறந்த காலத்தில் நடந்த நிகழ்வு என்ன? தாயின் பாசத்திற்கு ஏங்கி தவிக்கும் முகுந்தனுக்கு தாயின் அரவணைப்புக் கிடைத்ததா? அடிமைப்படுத்துபவர்களை வெற்றி கொள்வதாக நினைத்து மேலும் அடிமை விலங்கை பூட்டிக்கொள்ளும் பெண்ணின் கதையை வாசிப்போம்.

Languageதமிழ்
Release dateFeb 18, 2023
ISBN6580137109461
Kai Veesum Thendral!

Read more from R. Sumathi

Related to Kai Veesum Thendral!

Related ebooks

Reviews for Kai Veesum Thendral!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kai Veesum Thendral! - R. Sumathi

    A picture containing icon Description automatically generated

    http://www.pustaka.co.in

    கை வீசும் தென்றல்!

    Kai Veesum Thendral!

    Author :

    ஆர். சுமதி

    R. Sumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-sumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    நான் கேட்டதற்கு நீங்க பதிலே சொல்லலையே... அவன் தன் கையிலிருந்த பெரிய பாலித்தீன் பையை அவளிடம் கொடுத்தவாறே அவளுடைய கண்களை ஊடுருவினான்.

    அவள் ஜெயந்தி!

    படபடக்கும் விழிகளோடு ஒரு கணம் அவனைப் பார்த்தவள் சட்டென்று விழிகளைத் தாழ்த்திக்கொண்டாள். அவனுடைய பார்வை அவளுக்குள் சிலிர்ப்பை உண்டாக்கியதை சிவந்துபோன அவள் கன்னங்கள் உணர்த்தின.

    அவனுடைய கையிலிருந்து அந்தப் பாலிதீன் பையை வாங்கிக்கொண்டவள் அந்தக் கடையிலிருந்து மௌனமாய் இறங்கினாள். இன்னிக்கும் மௌனம்தானா? என்றான்.

    மௌனம் இல்லை, புன்னகை என்பதைப்போல் மெல்லிய சிரிப்பைச் சிந்திவிட்டு அவள் கடையை விட்டு வெளியே கிளம்பிவிட்டாள். வாசலில் நிறுத்தியிருந்த தன் ஸ்கூட்டியைக் கிளப்பிக்கொண்டு செல்லும்போது அவனை ஒருமுறை பார்த்தாள். அவன், அவளை வளைத்து இழுப்பதைப்போல் ஒரு பார்வையைச் செலுத்திக் கொண்டேயிருக்க, அவள் சில நிமிடங்கள் வாகனத்தை ஓட்ட முடியாமல் தடுமாறினாள்.

    எப்படியோ தன்னிலைப்படுத்திக்கொண்டு சாலைக்கு வந்தாள். வாகனங்களோடு வாகனமாக கலந்தாள்.

    சாலையின் பரபரப்பை மீறி, சத்தங்களை மீறி அவளுடைய மனம் பின்னோக்கி அவனுடைய கடைப்பக்கமே ஓடியது.

    அவனுடைய அழகான, கம்பீரமான தோற்றம் மனதில் தோன்றி அவளை அலைக்கழித்தது.

    ஜெயந்தி சொந்தமாக ஒரு தையல் பயிற்சி நிறுவனம் வைத்திருக்கிறாள். நிறையப் பெண்கள் அங்கே தையல் பயில்கின்றனர். தன்னுடைய தொழிலுக்குத் தேவையான நூல்கண்டுகள், பாபின் இப்படித் தையல் சம்பந்தமான பொருட்கள் வாங்குவதற்காக மாதத்திற்கு இருமுறையாவது சிவாவின் ஜெனரல் ஸ்டோருக்கு வருவாள்.

    அப்பொழுதெல்லாம் சிவாவின் பார்வைக்கு இலக்காகித் தடுமாறுவாள். அவனுடைய காந்த விழிகள் இதயத்தைத் துளைக்கும். சிரிப்பில் சிந்தை பறிபோகும்.

    அவனைப் பார்க்கும் போதெல்லாம் சிறகு முளைத்த பறவையாக மனம் படபடக்கும்; பரபரக்கும்.

    அழகு தையல் பயிற்சி நிலையம் என்ற போர்டை தாங்கிய சிறிய மேம்போக்காக புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தாளே தவிர விழிகள் நொடிக்கொருதரம் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தன.

    பொருட்களை எடுத்த வண்ணம் இடையிடையே அவளைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தான்.

    ‘இந்த மயில் கழுத்து சுடிதார் உங்களுக்கு ரொம்ப அழகாய் இருக்குது’ என்றான்.

    முறைப்பு இல்லாமல் முகத்தில் சிரிப்பு பரவுவதைப் பார்த்தவனுக்கு உற்சாகம் உண்டானது. அதனால் தயக்கமில்லாமல் தொடர்ந்தான்.

    ஆமா... புடவையே கட்டமாட்டீங்களா? எப்பவும் சுடிதார் தானா? எனக்கென்னமோ நீங்க புடவை கட்டினா ரொம்ப அழகாய் இருப்பீங்கன்னு தோணுது

    சொல்லிவிட்டு அவளை அளவெடுத்தான். அவளுடைய தேகம் சிலிர்ப்பதை மிக அருகே நின்று கவனித்தான்.

    பொருட்களையெல்லாம் கொடுத்துவிட்டு கம்பியூட்டரில் பில் போடும் போது பக்கத்துக் கடைப்பையனை அழைத்து, ஜில்லுன்னு ரெண்டு ஆரஞ்சு ஜூஸ் கொண்டு வா என்றான். ஜூஸ் வந்தது. அவள் மறுத்தாலும் தயக்கமாக வாங்கி உறிஞ்சினாள்.

    அவள் தலைகுனிந்து உதடு குவித்து பழச்சாறை ரசித்து உறிஞ்சும் போதுதான் அவளுடைய உயிரையே உறிஞ்சுவதைப்போல் அந்த வாக்கியத்தைக் கூறினான்.

    ஜெயந்தி! நான் உங்களைக் காதலிக்கிறேன்

    திடுக்கிட்டு நிமிர்ந்தவள் புரை ஏறிக்கொள்ள... இருமினாள். இருமியதால் கண்களில் கண்ணீர் துளிர்க்க, அவளுடைய தவிப்பை சாதாரணமாக பார்த்து ரசித்தபடி சிரித்தான்.

    நீங்களும் உங்கள் அபிப்பிராயத்தை சொல்லலாம். இப்பவே சொல்லணும்னு அவசியம் இல்லை. மெதுவா சொல்லலாம். ஆனா பதில் மட்டும் நல்ல பதிவாயிருக்கணும். நான் தாடி வச்சுக்கிட்டு அழுது அலையறமாதிரி ஒரு பதிலை மட்டும் சொல்லிடாதிங்க, ஏன்னா... எனக்கு தாடி வச்சா நல்லாயிருக்காது. போலிச்சாமியாருன்னு என்னைப் போலீஸ் கைது பண்ணிடும்.

    தன்னையும் மீறி அந்த நிமிடம் குபீரென சிரித்ததைப்போல் இந்த நிமிடமும் சிரித்தாள்.

    சூழ்நிலை மறந்து சிரித்தாள். சிரித்துக் கொண்டேயிருந்தாள். வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் திரும்பிப் பார்ப்பது தெரியாமல் சிரித்துக் கொண்டிருந்தாள்.

    சிரித்துக் கொண்டிருந்தவளை அந்த குரல் அசைத்தது.

    அம்மா...

    திடுக்கிட்டு சிரிப்பை நிறுத்தியவள் பக்கத்தில் நின்றிருந்த சிறுவனின் முகத்தைப் பார்த்ததும் முகம் மாறினாள்.

    அவளுடைய முகம் திடீரென மேகம் சூழ்ந்த வானமாக கருத்தது.

    2

    அவனுக்கு ஏழு வயது இருக்கும். பள்ளிச்சீருடையில் இருந்தான். நீலநிறத்தில் மெல்லிய கட்டம் போட்ட சட்டை. அடர்ந்த நீலநிற அரைக்கால் சட்டை. முகுந்தன் நல்ல கருப்புநிறம். விடைத்த காதுகள். பெரிய விழிகள். அந்த விழிகளில் லேசான மிரட்சி.

    என்னடா? உன்னைத்தான் கடைப்பக்கமெல்லாம் வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல. எதாயிருந்தாலும் வீட்லியே கேட்கணும்னு எத்தனைவாட்டி சொல்றது? எதுக்குடா இங்கே வந்தே?

    சுள்ளென தாழ்ந்த குரலில் கடுகடுத்தான். நிமிடத்தில் அவனுடைய பெரிய விழிகளில் கண்ணீர் கொப்பளித்துக்கொண்டு வந்தது. உதடுகள் துடித்தன.

    கையிலிருந்த மதிப்பெண் அட்டையை மெல்ல நீட்டினான்.

    அம்மா... கையெழுத்து வேணும் மெதுவாக கிசுகிசுத்தான்.

    வீட்ல கேட்கறதுக்கென்ன?

    ராத்திரி... நீங்க லேட்டா வந்திங்க, நான் தூங்கிட்டேன். காலையில சீக்கிரம் கிளம்பி கடைக்கு வந்துட்டிங்க, இன்னைக்கு எல்லாரும் கொடுக்கணும், மிஸ்ஸுதான் ‘உங்கம்மா கடை பக்கத்துலதானேயிருக்கு, போய் வாங்கிட்டு வா’ன்னு இன்ட்ரவெல் நேரத்துல என்னை அனுப்பிவிட்டாங்க.

    சரி கொண்டா! நாளைக்கு வாங்கிக்கிட்டா உங்க மிஸ்ஸுக்கு பள்ளிக்கூடமே முழுகிப் போய்டுமா? பெரிய யுனிவர்சிட்டியில வேலை பார்க்கறமாதிரி பந்தா காட்டுவாளுங்க.

    வெடுக்கென பிடுங்கி அவசரமாகத் தன் கையெழுத்தைப் போட்டவள்,

    இந்தா... சீக்கிரம் போ... என விரட்டினாள்.

    அம்மா... என்றான் மெதுவான குரலில்.

    என்னடா...? அவள் எரிச்சலாகக் கேட்க, சொல்லவந்ததை சொல்லாமல் வாய்க்குள்ளயே விழுங்கிக் கொண்டவனாக ஒருவிதமாக விழித்தபடி நகரத் தொடங்கினான்.

    அதே சமயம் நறுக்க வேண்டிய துணியும் கத்திரியுமாக

    Enjoying the preview?
    Page 1 of 1