Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sirukathai Thoguppu - Part 2
Sirukathai Thoguppu - Part 2
Sirukathai Thoguppu - Part 2
Ebook186 pages1 hour

Sirukathai Thoguppu - Part 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உழைப்பும், திறமையுமே ஒரு மனிதன் முன்னேற காரணம். அதைத்தவிர அதிர்ஷ்டம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை என்பதை அதிர்ஷ்டம் என்ற சிறுகதையிலும், பணத்தைத்தானே இழந்தேன். தன்னம்பிக்கையை இழக்கவில்லையே என்று உணர்த்துகிறார் குழந்தை உபதேசம் என்னும் கதையில்! பெற்றவர்களை சுமையாக நினைத்து, இரண்டு பிள்ளைகளும் அவர்களை ஆளுக்கு ஒருவராக பிரிக்கும்போது ஏற்படும் பிரிவின் வலியையும், துயரத்தையும் அன்றில் பறவைகள் கதையில் அழகாக எடுத்துரைத்துள்ளார் கதை ஆசிரியர். இவ்வாறாக பல அற்புதமான சிறுகதைகளை வாசித்து அறிந்துகொள்வோம் ஆர். சுமதியின் சிறுகதை தொகுப்பு பாகம் இரண்டில்...

Languageதமிழ்
Release dateMay 27, 2023
ISBN6580137109218
Sirukathai Thoguppu - Part 2

Read more from R. Sumathi

Related to Sirukathai Thoguppu - Part 2

Related ebooks

Reviews for Sirukathai Thoguppu - Part 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sirukathai Thoguppu - Part 2 - R. Sumathi

    A picture containing icon Description automatically generated

    http://www.pustaka.co.in

    சிறுகதை தொகுப்பு - பாகம் 2

    Sirukathai Thoguppu - Part 2

    Author :

    ஆர். சுமதி

    R. Sumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-sumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. அதிர்ஷ்டம்

    2. குழந்தை உபதேசம்!

    3. ஐம்பதிலும் ஆசை வரும்

    4. ஒட்டாத உறவுகள்

    5. பச்சைக் கொடி

    6. வரவுகள்

    7. ஏணிகள் ஏறுவதில்லை

    8. சீர்காழி

    9. பாவத்திலும் ஒரு புண்ணியம்

    10. மனதின் நிறங்கள்

    11. பச்சைமண்

    12. கரையும் களங்கம்

    13. அன்றில் பறவைகள்

    14. சப்பாணி வாத்தியார்

    15. ராசுக்குட்டி

    16. விசுவாசம்

    17. மலரத்துடிக்கும் மொட்டுகள்

    18. போதி மரம்

    19. மன்னிக்க வேண்டுகிறேன்

    20. இனி காற்று வீசும்

    1. அதிர்ஷ்டம்

    இரண்டு வருடம் கழித்து என் சொந்த ஊரான மேலமாத்தூருக்கு செல்கிறேன். நினைக்கும்போதே ஒருவித சந்தோஷம். ஊருக்கு போவது ஒருவித சந்தோஷம் என்றால் அதை இரட்டிப்பாக்கும் விஷயம் என் தங்கையின் திருமணம். வெகுநாட்களாக திருமணம் சரியாக அமையாமலேயே இருந்தது. இப்பொழுதுதான் ஒருவழியாக திருமணம் அமைந்தது.

    ஒருவாரம் தங்குவதற்கான ஆடைகளை சலவை செய்து மடித்து மடித்து பெட்டியில் வைத்துக் கொண்டிருந்தாள் என் சண்டைக்கார மனைவி மாதுரி, அவளுக்கு ஒவ்வொரு விஷயத்திலும் என்னிடம் சண்டை போடவேண்டும். அதில் என்ன சுகமோ எனக்குத் தெரியாது. சண்டை போடுவாள். அடுத்த நிமிடம் குழைவாள். கொஞ்சுவாள். ஆனால் நான் அவளுடைய சொற்களை எப்பொழுதுமே காதில் வாங்குவதில்லை. மதிப்பதில்லை. அதுதான் சண்டைக்கு காரணமே.

    இதோ, இப்பொழுதுகூட கத்திக்கொண்டிருக்கிறாள்.

    எல்லாம் ராஜாவுக்கு பண்ணி வைக்கனும், துவைச்சு போடறதோட மட்டுமில்லாம, அயர்ன் வேற பண்ணி வைக்கனும். இந்த பேண்ட்டை ஜீன்ஸ் துவைக்ககாட்டியும் என்னோட ரெண்டு கையும் ஒடிஞ்சுப் போயிட்டு… என்று சத்தம் போட்டாள்.

    பதிலுக்கு இனி நீ துவைக்க வேண்டாம். நானே துவைச்சுக்கறேன். என்றால் கேட்கமாட்டாள். மறுபடியும் துவைத்து போட்டுவிட்டு கத்துவாள்.

    நான் பாட்டுக்கு பாட்டுப் பாடிக்கொண்டே தாடையை மழித்துக் கொண்டிருந்தேன்.

    ஏங்க…

    நான் பாட்டை நிறுத்தவில்லை.

    ஏங்க… உங்களைத்தானே

    சொல்லு… காதில விழுது என்று கூறிவிட்டு விட்ட இடத்திலிருந்து பாடலைத் தொடர்ந்தேன்.

    இது என்ன? என்றாள் அருகே வந்து.

    திரும்பினேன். அவள் கையில் கத்தையாய் லாட்டரிசீட்டு. பார்த்துவிட்டு சிரித்தேன்.

    லாட்டரிசீட்டை நீ பார்த்ததேயில்லையா

    என்ன கிண்டலா? அதான் பார்க்கிறேனே தினம் தினம். பணம் இருக்கவேண்டிய சட்டைப்பையில் இதுதான் இருக்கு. இப்பவெல்லாம் அதிகமா இருக்கு. சம்பாதிக்கற பணத்துல பாதி இதுக்கே அழியுது. நானும் தினம் தினம் கத்தறேன். மதிக்கிறீங்களா? கொஞ்சமாவது மதிக்கிறீங்களா? இவ யாரு? இவ பேச்சை எதுக்கு கேட்கணுமின்னு நினைக்கிறீங்க? நானும் எவ்வளவோ சொல்லிட்டேன். இந்த எழவை வாங்காதீங்கன்னு. காசைப்போட்டு இப்படி கலர் கலர் காகிதமா வாங்கிக் குவிக்கிறீங்களே…

    அவள் நெஞ்சு கோபத்தில் ஏறி இறங்க மூச்சிரைக்க கத்தினாள்.

    அது கலர் காகிதம் இல்லேடி. காசு தர்ற காகிதம். காசை அள்ளி அள்ளி குவிக்கப்போற காகிதம்.

    ஆமா காசை அள்ளி குவிக்கப்போவுது. இரும்பு பெட்டியை துடைச்சு தயாரா வைங்க. ரெண்டு பொண்ணை பெத்து வச்சிருக்கீங்க. ஞாபகம் இருக்கா, அதுங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமா சேர்த்துவச்சு, ஒரு நகைய நட்டை வாங்கணுமின்னு ஏதாவது இருக்கா. எனக்கு அடிவயித்தை கலக்குது. அவனவன் இப்பவெல்லாம் கண்ணுமண்ணு தெரியாம கேட்கிறான்.

    ஆமாண்டி. அதுக்குத்தான் இந்த லாட்டரிசீட்டை வாங்கறேன். லம்பா ஒரு தொகை அடிக்கப்போவுது. அதுல ரெண்டு பொண்ணுக்கும் வேணுங்கற நகை வாங்கிடுவேன். உனக்கும்தான்.

    இதுவரை நீங்க அழிச்ச காசுக்கே பத்து பவுன் வாங்கியிருக்கலாம்.

    பார்த்துக்கிட்டேயிரு, ஒரு நாளைக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போவுது. அன்னைக்குத்தான் என் மதிப்பு உனக்குத் தெரியும்.

    ஆமா. அதிர்ஷ்டம் அடிக்கப்போவது. உழைக்காம வர்ற எந்தக் காசும் ஒட்டாது.

    ஆமா பெரிய இவ, வந்துட்டா அறிவுரை சொல்ல, போய் வேலையப் பாரு.

    இப்படி முற்றுப்புள்ளி வைத்ததும், அவள் அவளுக்கே உரிய பாணியில் ஒரு வெட்டு வெட்டிவிட்டு உள்ளே போனாள்.

    இந்த லாட்டரிசீட்டு வாங்கும் பழக்கம் எனக்கு கல்லூரி காலத்திலேயே தொற்றிக்கொண்டது. அதற்கு ஒரு வகையில் காரணம் பழனிவேல்தான். பழனிவேல் பள்ளிபருவ நண்பன். மிகவும் ஏழைவீட்டுப் பையன். அப்பா இளம்வயதிலேயே விபத்தொன்றில் இறந்தபோது ஒரே மகனான பழனிவேலை வளர்ப்பதற்கே அவன் தாய் மிகவும் பாடுபட்டாள். நாலைந்து வீடுகளில் வீட்டுவேலை செய்தாள். வரும் சொற்ப வருமானத்தில் வயிற்றைக் கழுவிக்கொண்டு படிக்க அனுப்பினாள். வறுமையினால் வறுக்கப்பட்டான் பழனிவேல். பள்ளிக்கூடம் முடிந்ததும் மற்ற மாணவர்கள் பயிற்சி வகுப்பு, விளையாட்டு, இந்தி வகுப்பு, பாட்டு வகுப்பு, கராத்தே என செல்ல, இவன் மட்டும் லாட்டரிசீட்டு விற்றான். தெருத்தெருவாக, வீதிவீதியாக, கடைகடையாக ஏறி இறங்கி விற்றான்.

    அப்பொழுது அவனுடன் பழகிக்கொண்டிருக்கும் போதுதான் இச்சபலம் தட்டியது. பள்ளிக்கூடம் போகும் காலத்தில் தொற்றிக்கொண்டு வளர்ந்தது. வீட்டில் செலவுக்கு தரும் பைசாவெல்லாம் லாட்டரிசீட்டாய் மாறியது. கல்லூரி நாட்களில் வீட்டில் பொய் சொல்லி காசு வாங்கி, சீட்டு வாங்குவேன். அவ்வப்போது விழும் இருபது, முப்பது என்னை அதில் பைத்தியமாக்கியது. சுயமாக சம்பாதிக்கும் காலம் வந்தபோது என் இஷ்டத்திற்கு வாங்கினேன். தினம் காலையில் எழுந்ததும் குடிநீர் குடிப்பதைப்போல் எனக்கு லாட்டரிசீட்டு வாங்கியாக வேண்டும். இல்லையென்றால் அன்றைய பொழுது முழுவதும் ஒரு வேலையும் ஓடாது. திருமணம் ஆன புதிதில் என் இல்லத்து நாயகிக்கு இது ஒரு இடியாக இருந்திருக்க வேண்டும் என்பதை ஒரு வாரத்திலேயே தெரிந்துகொண்டேன். முதலில் அன்பாக அறிவுரை சொன்னாள். என்னால்தான் விடமுடியவில்லை. பிறகு அதிகாரமாய் மிரட்டினாள். அதற்கும் நான் செவிசாய்க்கவில்லை. இறுதியில் இப்படித்தான் என்றைக்காவது ஒரு பிடிபிடிப்பாள். எல்லா விஷயத்திலும் லாட்டரி விஷயத்தை நுழைப்பாள். சொன்ன காய்கறியை வாங்க மறந்து வந்துநின்றால்,

    ‘சமையலுக்கு காய்கறி வாங்கணுமின்னு எப்படி ஞாபகம் இருக்கும்? கட்டுக்கட்டாய் லாட்டரிசீட்டு வாங்கத்தான் ஞாபகம் வரும்?’

    மாதக் கடைசியில் அவசரத்துக்கு பணம் கேட்டு இல்லை என்று சொன்னால்…

    ‘அதானே. எப்படி இருக்கும்? சிக்கனமா இங்க நான் குடுக்கற பணத்துல குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கேன். நீங்க ஒருபக்கம் அனாவசிய செலவு பண்றீங்க. என் வீட்டு காசெல்லாம் இப்படித்தான் அழியுது.’

    இதே பாணியில் தினம் தினம் கத்துவாள். நான் எதையுமே கண்டுகொள்வதில்லை.

    சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு ஆட்டோவில் வந்துசேர்ந்தோம். என்னுடைய இரண்டு பெண்களும் அதை வாங்கு, இதை வாங்கு என அடம்பிடிக்க… முறைத்து அதட்டி அடக்கினேன். கொஞ்சம் குழந்தைகளைப் பார்த்துக்க என்று கூறிவிட்டு லாட்டரிசீட்டு கடைக்கு சென்றேன்.

    நூறு ரூபாய்க்கு சீட்டு வாங்கி பாக்கெட்டில் பத்திரப்படுத்தினேன். ஏற்கனவே வைத்திருந்த சீட்டுகளுக்கு முடிவு பார்த்தேன். ஆனால் ஒன்றும் விழவில்லை. சளைக்கவில்லை நான். முயற்சி உடையார் இகழ்ச்சியடையார் என வள்ளுவர் சொன்னதை நான் இந்த விஷயத்தில் இணைத்துக்கொண்டேன்.

    திரும்பி வரும்போது அனல் பறக்கும் விழிகளுடன் என் அகமுடையாள் என்னைப் பார்த்தாள்.

    எங்க போய்ட்டு வர்றீங்க

    சும்மாதான். ஏதாவது கதை புத்தகம் வாங்கலாம்னு போனேன். ரயில்ல படிக்கலாமில்லே. அவளை சமாதானப்படுத்த வாங்கிய வாரப்பத்திரிகையைக் காட்டி முதன்முதலாய் அவளைப் பார்த்தபோது எப்படி அசடு வழிந்தேனோ அப்படி வழிந்தேன்.

    போதும் இந்த சப்பைக்கட்டு. லாட்டரிசீட்டுத்தானே வாங்கப்போனீங்க? சத்தம் அடுத்தவர் காதுக்குப் போகாமல் கர்ஜித்தாள்.

    இல்லடி…

    போதும், பேசாதீங்க. இந்த புள்ளைங்க ஆசையா கேட்டதை வாங்கித்தராம அதைப்போய் வாங்கிட்டு வர்றீங்க? திருந்தவே மாட்டீங்களா? என் வயிறு எரியுது. காசெல்லாம் இப்படி அழியுதே.

    நான் வழக்கம்போல் காதில் விழவில்லைபோல் இருந்தேன். ஒருநாளைக்கு எனக்கு அதிர்ஷ்டம் அடிக்கத்தான்போகுது. உன் வாயை நான் அடைக்கத்தான் போறேன்…

    உள்ளுக்குள் சொல்லிக்கொண்டேன். எட்டு முப்பதிற்கு வண்டி வந்தது. ஏறி அமர்ந்தோம். மாதுரி கலகலப்பாய் பேசவில்லை. முகத்தை தூக்கிவைத்துக் கொண்டாள். நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. வண்டி கிளம்பியதும் கண்களை மூடி கனவுகாணத் தொடங்கினேன். லாட்டரி விழுந்ததும் என்னென்ன வாங்கலாம் என திட்டம் போட்டேன்.

    விடியற்காலை ஐந்து மணிக்கு ரயில் மயிலாடுதுறையை அடைந்தது. அங்கிருந்து சொந்த ஊரான மேலமாத்தூர் செல்ல பேருந்து பிடித்து ஏறி அமர்ந்தோம். முகத்தில் என்னைத் தவிர மூவருக்கும் தூக்க கலக்கம். காலைநேரமானதால் பேருந்தில் கூட்டம் இல்லை. அரைமணிநேர பிரயாணத்தில் ஊர்வந்து சேர்ந்தோம். ஐந்து நிமிட நடையில் வீடு வந்தது. திருமண கோலாகலம் இருந்தது. திருமண வேலைகள் துரிதமாய் நடக்க, நானும் கலந்துகொண்டேன். அம்மா போட்டுத்தந்த பட்டியல்படி சாமான்கள் வாங்க நானும், பக்கத்து வீட்டுப் பையன் பல்லவனும் மறுபடி மயிலாடுதுறைக்கு வந்தோம். பேருந்தில் உட்கார இடம் கிடைத்த அதிர்ஷ்டத்திற்கு நன்றி தெரிவித்துக்கொண்டு ஊர் பற்றிய பேச்சினை ஆரம்பித்தேன். என்னுடைய உள்ளூர் நண்பர்களைப் பற்றியெல்லாம் பல்லவனிடம் விசாரித்தேன். பெரிதாக ஒருவிஷயமும் இல்லை. ஆனால் அவன் பழனிவேலைப் பற்றி சொன்ன விஷயம் என்னை உண்மையிலேயே ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.

    அண்ணே… நம்ம பழனிவேல் இருக்கான்ல. அவன்தான் இப்ப… ஊர்ல பணக்காரனே.

    "பழனிவேலா? பத்தாவது தேர்ச்சி

    Enjoying the preview?
    Page 1 of 1