Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Arputha Aani Muthey!
Arputha Aani Muthey!
Arputha Aani Muthey!
Ebook184 pages1 hour

Arputha Aani Muthey!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பாசத்துக்காக ஏங்கி தந்தையிடம் ஓடிவந்த குழந்தை, தன் கணவனுக்காக தன்னோட கனவு லட்சியம் எல்லாத்தையும் தூக்கிப் போட்ட மாதுரி. வாழ்க்கைன்னா ஒரு தாலி மட்டும்தான். ஆனா… இந்த ஜெனரேஷன் பெண்களுக்கு வாழ்க்கைங்கறது வெறும் தாலிமட்டும் இல்லை. அவங்க ரொம்ப உயரத்துக்குப் பறக்கனும். ரொம்ப தூரம் போகனும். அவங்களோட சிறகை வெட்ற அரிவாளா இருக்கறது அப்பாவா இருந்தாக் கூட அந்த அரிவாள்கிட்டயிருந்து தூரவிலகியிருக்கறதுதான் புத்திசாலித்தனம்னு நினைக்கிறேன். என்று கூறும் வைதேகி. மாதுரி மற்றும் வைதேகி இருவருக்கும் இடையில் இருதலைக்கொள்ளியாக தவிக்கும் வரதனின் நிலையை வாசித்து தெரிந்து கொள்வோம்.

Languageதமிழ்
Release dateDec 31, 2022
ISBN6580137109348
Arputha Aani Muthey!

Read more from R. Sumathi

Related to Arputha Aani Muthey!

Related ebooks

Reviews for Arputha Aani Muthey!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Arputha Aani Muthey! - R. Sumathi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அற்புத ஆனி முத்தே!

    Arputha Aani Muthey!

    Author:

    ஆர். சுமதி

    R. Sumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-sumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    1

    வைதேகி… நான் ரெடி. சுஜிதா ரெடியாயிட்டாளா? என்றான் வரதன்.

    சுஜிதாவிற்கு ஜடைப்பின்னிக் கொண்டிருந்த வைதேகி ‘ஆச்சுங்க’ என்றாள்.

    சுஜிதாவைப் பார்த்தான் வரதன். சீருடையில் கம்பீரமாக இருந்தாள்.

    அப்பா யூனிஃபார்ம் எப்படியிருக்கு?

    சூப்பர். பழைய ஸ்கூல் யூனிஃபார்ம்மைவிட அழகாயிருக்கு

    ஆமாங்க. இந்த ஸ்கை ப்ளுகலர் ரொம்ப அழகாயிருக்கு"

    அம்மா யூனிஃபார்ம் மட்டும் இல்லை. அந்த ஸ்கூல் கூட எவ்வளவு அழகாயிருக்குத் தெரியுமா? அட்மிஷன் அன்னைக்கு கூட நீ வரலையே. இன்னைக்கு வாயேன்.

    இல்லடா கண்ணா. புது வீட்ல எவ்வளவு வேலை இருக்குத் தெரியுமா? அப்பாவுக்கும் லீவு கிடைக்கலை. மாற்றலாகி வந்த உடனேயே அப்பா லீவு போடறதும் சரியில்லை இல்லையா? நானே எல்லாத்தையும் அரேஞ்ச் பண்ண வேண்டியிருக்கு. நீ அப்பா கூட போ. இன்னொரு நாள் நான் வர்றேன்

    வைதேகி மகளை சமாதானப்படுத்தினாள்.

    போம்மா... முதன் முதலா ஸ்கூலுக்குப் போறேன். நீ வரமாட்டேன்கறியே

    வரதனும் வைதேகியும் சிரித்தனர். வரதன் மகளின் தலையில் செல்லமாகக் குட்டினான்.

    என்னமோ இப்பத்தான் ஸ்கூலுக்குப் போறமாதிரி பேசறே? ஏழாங்கிளாஸ் படிக்கறே ஞாபகம் வச்சுக்க

    ஆனாலும் இது புது ஸ்கூல். முதன்முதலா புது ஸ்கூலுக்குப் போறேன்ல

    புது ஸ்கூலுக்கு போறது பெரிய விஷயம் இல்லை. நல்ல பொண்ணா நடந்துக்கனும். நல்லா படிக்கனும். வேற ஸ்கூல்ல படிச்சவளாயிருந்தாலும் ரொம்ப நல்ல பொண்ணுன்னு பேர் எடுக்கனும்

    சுஜிதா அழகாக சிரித்தாள்.

    இதையேதான் பெங்களுர் ஸ்கூல் பிரின்ஸ்பாலும் டிசியைக் கொடுக்கும்போது சொன்னார். எந்த ஊருக்குப் போனாலும் எந்த ஸ்கூல்ல படிச்சாலும் நம்ம ஸ்கூலோட பேரைக் காப்பாத்தனும்னு

    உண்மைதான்

    திடீரென சுஜிதாவின் முகம் வாடியது.

    அம்மா எனக்கு பிட்டு, ரேயன், கவி ஞாபகமெல்லாம் வருதும்மா சொல்லும் போதே சுஜியின் கண்கள் கலங்கியது.

    அடடா… எனக்கு ஆபிஸ_க்கு நேரமாயிட்டு. இப்பத்தான் இவ மலரும் நினைவுகளை நினைச்சுக்கிட்டு கண்ணீர் வடிச்சுக்கிட்டு இருக்கா. நீ உட்கார்ந்து ஒப்பாரி வச்சுக்கிட்டு இரு. நான் கிளம்பறேன் வரதன் கோபம் கொள்ள வைதேகி அவளை துரிதப்படுத்தினாள்.

    புத்தகப் பையை சுஜியின் தோளில் மாட்டி கையில் டிபன் பையையும் கொடுத்து விரட்டாதக் குறையாக இருவரையும் வாசல்வரை வந்து அனுப்பி வைத்து டாடா காட்டினாள் வைதேகி.

    அப்பாவும் பெண்ணும் அரைமணி நேரத்தில் பள்ளி வளாகத்தை அடைந்தனர். அதுவரை வள வளவென்று பேசிக்கொண்டே வந்த சுஜி சட்டென்று சாந்தமானாள்.

    புது பள்ளிக் கூடத்தின் பிரமாண்டமான கட்டிடமே அவளை மிரள வைத்தது. பெங்களுரில் படித்தபோது அவள்தான் படிப்பில் முதல் மாணவி. தைரியத்துடனும், உற்சாகத்துடனும் வளைய வருபவள்.

    புது பள்ளிக்கூடம் எல்லா தைரியம், நம்பிக்கையும் மீறி ஒருவித படபடப்பை உண்டுப் பண்ணியது.

    என்னடா திடீர்னு கம்முன்னு ஆயிட்டே? காரை நிறுத்தும்போது சிரித்தபடி கேட்டான் வரதன்.

    பயமாயிருக்குப்பா

    எதுக்குப் பயம்?

    அந்த ஸ்கூலைவிட இந்த ஸ்கூல் ரொம்ப பெரிசா இருக்கு. க்ளாஸ்ல ஸ்டூடன்ஸ் எப்படி இருப்பாங்கன்னு தெரியலை. போட்டி அதிகம் இருக்கும்னு நினைக்கிறேன்

    வரதன் மகளின் பயத்தை நினைத்து சிரித்தான்.

    எவ்வளவு பேர் இருந்தா என்ன? எப்பவும் நீதான் ஃபர்ஸ்ட் வரணும். இதை ஞாபகம் வச்சுக்க

    ஏற்கனவே பயத்தில் இருந்த சுஜிக்கு அப்பாவின் இந்தப் பேச்சு இன்னும் பயத்தை தந்தது.

    அந்த பயத்துடனேயே காரிலிருந்து இறங்கினாள்.

    ஒருவித பிரமிப்பும் பயமும் கலந்து பள்ளிக் கட்டிடத்தை அண்ணாந்துப் பார்த்தாள்.

    மாணவ மாணவிகள் பள்ளி சீருடையில் கலகலப்பாக நட்பை பிரதிபளிக்கும் விதமாக கூட்டம் கூட்டமாக கைகோர்த்தபடியும் தோளில் கைப்போட்டபடியும் சென்றுக் கொண்டிருந்தனர்.

    அப்பா… என்னோட க்ளாஸ_க்கு எப்படி போறதுன்னு தெரியலையே. எந்தப் பக்கம் செவன்த் ஸ்டேன்டர்ட் பி செக்ஷன்னு தெரியலையே

    யார்க்கிட்டயாவது கேட்போம். என்ற வரதன் சாரை சாரையாக நடந்துக் கொண்டிருந்த மாணவ மாணவிகளில் யாரைக் கேட்பது என பார்த்துக் கொண்டிருக்கும் போதுதான் வெகு அருகில் அந்தக் குரல் கேட்டது.

    ஹாய்…ந்யூ ஸ்டூடன்ட்டா?

    திடுக்கிட்டு வரதனும் சுஜியும் திரும்பினர்.

    இரட்டை ஜடை முன்புறம் விழ சீருடையில் அழகாக சிரித்தபடி நின்றிருந்தாள் அவள். பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் பருவத்தினளைப் போல் இருந்தாள். ஆமா…ஆமா… அவசர அவசரமாக தலையசைத்தாள் சுஜி.

    இவளை விட்டால் உதவிக்கு வேறு யாரும் கிடைக்கமாட்டார்களோ என பயந்ததைப் போலிருந்தது அவளுடைய தலையசைப்பு.

    க்ளாஸ_க்குப் போகனுமா? எந்த க்ளாஸ்?

    செவன்த். செவன்த் பி

    வா…. நான் கொண்டு விடறேன். என்றவள் வரதன் பக்கம் திரும்பி அங்கிள் நீங்க கிளம்புங்க. நான் கொண்டு விடறேன் என்றாள்.

    ரொம்ப தேங்க்ஸ்

    பரவாயில்லை அங்கிள் என்றபடி அவள் மிகவும் உரிமையோடு சுஜியின் கையைப்பற்றி அழைத்துக் கொண்டு சென்றாள்.

    சில அடிகள் சென்றதும் சுஜி திரும்பி பை... டாடி என்று கையசைத்தாள். அதே நேரம் அந்தப் பெண்ணும் திரும்பி வெகுநாள் பழசியவளைப் போல் பை…அங்கிள்என கையசைத்து சிரித்தாள்.

    2

    அலுவலகத்தில் வரதன் வெறுமனே கணிணியின் முன் அமர்ந்திருந்தான். திரையில் விழிகள் இருந்தன. ஆனால் வேலையில் மனம் ஓடவில்லை.

    ஒருவித தயக்கம், ஒருவித சங்கடம், இனம் புரியாத ஒன்று அவனை வேலை செய்யவிடாமல் செய்வதைப் போலிருந்தது.

    புது அலுவலகம். புது மனிதர்கள் என்பதாலா? யோசித்தான். இல்லை என்றே தோன்றியது. புது அலுவலகத்தில் ஜாயின் செய்து ஒரு வாரம் ஆகிவிட்டது. சக ஊழியர்கள் சகஜமாகிவிட்டனர். பழைய அலுவலகத்தில் பார்த்த அதே துறை சம்பந்தப்பட்ட வேலைதான். நிறைய அனுபவமும் பயிற்சியும் இருப்பதால் உதவி என்று யாரிடமும் போய் நிற்க வேண்டிய அவசியமும் இல்லை. வேலை இலகுவாகத்தான் போய்க்கொண்டிருந்தது.

    இந்த ஒரு வாரமாக இல்லாத தடுமாற்றம் இன்றைக்கு இருப்பதாக தோன்றுவது ஏன்?

    சுஜி புது பள்ளிக் கூடத்திற்கு போயிருப்பதா? பாவம் குழந்தை எப்படி இருக்கிறாளோ? பயப்படுகிறாளோ? படபடப்பாக இருக்கிறாளோ என்ற எண்ணமா? யோசித்தால் அதுவும் இல்லை என்றே தோன்றியது.

    பை… அங்கிள் சட்டென்று திரும்பி சுஜியுடன் சேர்ந்து சிரித்த அந்தப் பெண்.

    திரும்ப திரும்ப அந்த முகம் தோன்றி தோன்றி மறைந்தது.

    அந்த சிரிப்பு மின்னலாய் மின்சாரமாய் நெஞ்சில் இதமான உணர்வுகளை ஏற்படுத்திக் கொண்டேயிருந்தது.

    கண்களை ஒரு நிமிடம் மூடி உள்ளுணர்வுகளோடு உறையாடியபோது உணரமுடிந்தது. தன்னை தடுமாற வைப்பது அந்த முகம் தந்த சிரிப்புத்தான் என்று.

    பார்த்த முகமாக, பழகிய குரலாக. பரவசமடைந்த சிரிப்பாக உணர்வுகளில் உறுத்தியது. ஒதுக்கிவிட்டு வேலையில் ஈடுபட்டாலும் இடையிடையே சொல்லி வைத்ததைப் போல் தோன்றித் தோன்றி மனதை அள்ளிக் கொண்டு போனது.

    தவிர்க்க முடியவில்லை. தள்ள முடியவில்லை. உடலின் ஒரு புது உறுப்பைப்போல் ஒட்டிக் கொண்டே வந்தது.

    கண்டுபிடியேன்! கண்டுபிடியேன்! பார்த்த முகமென்றால் எங்கே என்று கண்டுபிடியேன் பழகிய குரலென்றால் எப்படி என்று யோசியேன். பரவசப்பட்ட சிரிப்பென்றால் உள்ளுணர்வுடன் பேசிப்பாரேன்.

    அந்த முகமும் குரலும் சிரிப்பும் அவனுக்குள் ஏதோ ஒரு தேடலை தொடங்கியிருந்ததை அவனே உணரவில்லை.

    மாலை பள்ளி விட்டதும் சுஜியை அழைத்து செல்ல பள்ளிக்கூட வாசலில் காரில் காத்திருந்தபோது கொத்து கொத்தாய், படித்து களைத்து விளையாடி திளைத்து சோர்வுற்றிருந்தாலும் அந்த சோர்வின் சுவடு கொஞ்சம் கூட

    முக த்தில் தெரியாமல் காலையில் சென்ற அதே புத்துணர்வுடன் திரும்பிக் கொண்டிருந்த மாணவ மாணவிகளில் சுஜியை மட்டும் அவன் விழிகள் தேடவில்லை. காலையில் பார்த்த அந்தப் பெண்ணையும் தேடினான்.

    அந்த முகத்தையும் சிரிப்பையும் இன்னொரு முறை பார்த்துவிட அவனுடைய மனம் அலைந்தது.

    சீருடையில் எல்லா மாணவ மாணவிகளுமே ஒரேமாதிரியாகத்தான் தெரிந்தனர்.

    டாடி… அருகில் சுஜியின் குரல்.

    அட வந்துட்டியா? உன்னை நான் ஸ்டூடன்ஸ் மத்தியில் தேடிக்கிட்டிருந்தேன்.

    சுஜி துள்ளலுடன் காரில் ஏறிக்கொண்டாள். காலையில் இருந்த பயம், படபபடப்பு, தயக்கம் இப்பொழுது காணாமல் போயிருந்தது.

    இலகுவாகத் தெரிந்தாள். லேசாக சிரித்தாள்... பெரிய கடலைத் தாண்டிவிட்ட நிம்மதி தெரிந்தது அவள் முகத்தில். புது இடம், புது பள்ளிக்கூடம் இவற்றில் முதல்நாள் என்பது கடலைத்தாண்டுவது போல்தானே குழந்தைகளுக்கு.

    பள்ளி வளாகத்தைவிட்டு வெளியே வரும்வரை ஜன்னல் வழியே கடந்து செல்லும் மாணவ மாணவிகளையே பார்த்தபடி ஏதேதோ பேசிக் கொண்டு வந்தவள் திடீரென அக்கா டா... டா என இருக்கையிலிருந்து குதித்தாள். ஜன்னல் வழியே கையை நீட்டி அசைத்தாள்.

    வரதன்

    Enjoying the preview?
    Page 1 of 1