Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

குங்குமக் கோலங்கள்
குங்குமக் கோலங்கள்
குங்குமக் கோலங்கள்
Ebook115 pages41 minutes

குங்குமக் கோலங்கள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நடையை சற்றே வேகம் கூட்டிய படியே ஓரக்கண்ணால் பக்கவாட்டில் நோக்கினாள்.
 அவன் இயல்பாக இடைவெளி விட்டு நடந்து வந்து கொண்டிருந்தான்.
 நெஞ்சில் நெருப்பு தகித்தது. "யார் இவன்?'
 சமீப காலமாக கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக இது நடக்கிறது. அவள் இறங்கும் நிறுத்தத்தில் நிற்கிறான். அவள் பேருந்திலிருந்து இறங்கியதும் இப்படி இடைவெளி விட்டு அவள் பின்னால் வருகிறான்.
 பேசுவதோ, சிரிப்பதோ... ஏன்... பார்ப்பது கூட கிடையாது. இவள் பேருந்திலிருந்து இறங்கும் பொழுது கூட அவன் இவளை ஏறிட்டுப் பார்ப்பது இல்லை.
 கையில் செய்தித்தாளையோ அல்லது ஏதேனும் ஒரு புத்தகத்தையோ வைத்துப் புரட்டியபடி, படித்தபடி அவளைப் பார்ப்பதைத் தவிர்த்தபடிதான் நிற்பான்.
 இவள் பின்னாலேயே வருபவன் இவள் வீட்டிற்கு எதிரே இருக்கும் ஒரு தையல் கடையில் வந்து நிற்பான். பக்கத்திலேயே ஒரு டீ கடை. அதில் ஒரு டீயை வாங்கி அந்தத் தையல் கடைக்காரரிடம் பேசியபடி குடிப்பான்.
 பிறகு போய் விடுவான்.
 தினமும் இந்தக் கதை தொடருகிறது.
 பார்த்தால் பொறுக்கியைப் போலவும் அயோக்கியனைப் போலவும் இல்லை.
 நன்றாகப் படித்தவன் போல் இருக்கிறான். அவனுடைய முகத்தை நன்றாக ஏறிட்டுப் பார்க்கும் தைரியம் இவளிடம் இல்லை.
 எதற்காக இவன் தினமும் என்னைப் பின் தொடருகிறான்?
 யார் இவன்? பெயர் என்ன? என்ன செய்கிறான்?அவன் யாராக இருந்தால் எனக்கென்ன? அவன் பெயர் என்னவாக இருந்தால் என்ன?
 ஒரு பெண்ணின் பின்னால் வேலை வெட்டியைப் போட்டு விட்டு இப்படி தினமும் வருபவன் நல்லவனாக எப்படி இருக்க முடியும்?
 பொறுக்கியாகத்தான் இருக்க முடியும்.
 எதற்காக தினமும் என் பின்னால் வருகிறாய்? என நறுக்கென்று கேட்டு விடலாமா? இப்படித் தினமும் என் பின்னால் வந்தால் செருப்பு பிஞ்சிடும் என எச்சரிக்கலாமா? அவன் பார்ப்பதில்லை... பேசுவதில்லை... சிரிப்பதில்லை... இப்படி இருக்கும்போது ஏன் என்னைப் பின் தொடர்கிறாய் என எப்படிக் கேட்பது?
 நான் எங்கே உன்னைப் பின்தொடர்ந்தேன்? நான் பாட்டுக்கு சாலையில் செல்கிறேன். ரோடு என்ன உனக்குச் சொந்தமா? என்று திருப்பிக் கேட்டால்...?
 எதையாவது கேட்டு வைத்தால்தான் அவன் பின் தொடர்வதை முக்கியப்படுத்தியதைப் போலாகும். நாம் பாட்டுக்குப் பொருட்படுத்தாமல் இருந்தால் அவன் தானாகப் பின்தொடர்வதை நிறுத்திக் கொள்வான்.
 எத்தனை நாட்களுக்கு இப்படி சும்மாவே பின் தொடர்வான்? அவன் மனதில் ஏதேனும் எண்ணமிருந்தால் அதை வெளிப்படுத்த என்றைக்காவது பேச முயற்சி செய்யாமல் போவானா?
 அன்றைக்குப் பார்த்துக் கொள்ளலாம். ஐ லவ் யூ என்று அப்படி, இப்படிப் பிதற்றட்டும்... செருப்பைக் கழட்டி விளாசி விடுகிறேன்.
 நோட்டம் பார்க்கிறான். இப்படியே பின்தொடர்ந்து கொண்டிருந்தால் இவளுக்கும் இஷ்டமிருந்தால் பார்ப்பாள்... சிரிப்பாள்... பிறகு பேசிக் கொள்ளலாம் என நினைக்கிறான் ராஸ்கல்!
 கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் நடையில் வேகத்தைக் கூட்டி விறுவிறுவென வீட்டிற்கு வந்து விட்டாள்.
 அழைப்பு மணியை அழுத்தும் போது மூச்சு இறைத்தது. ரதி கதவைத் திறந்தாள்.
 "ஏய் விஜி! என்ன நாய் துரத்துச்சா? ஓடி வந்தியா? இப்படி மூச்சு இரைக்குது?"
 "ஆமா நாய்தான் துரத்துச்சு. அதனால்தான் வேகமா வந்தேன்.ரதி கலகலவென சிரித்தாள்.
 "ஒரு கல்லை விட்டு எறிஞ்சா ஓடிடப் போகுது. கேவலம் ஒரு நாய்க்குப் போய் பயந்துகிட்டு ஓடி வர்றே?"
 "ஒரு நாளைக்குப் பெரிசா ஒரு கல்லைத் தூக்கிப் போடத்தான் போறேன்."
 "ஒரு நாளைக்குப் போடப் போறியா? அப்போ தினமும் அந்த நாய் உன் பின்னாடி வருதா?"
 "ஆமா."
 "வெறி நாயா இருக்கப் போகுது."
 "நானும் அப்படித்தான் நினைக்கிறேன்."
 "அப்ப ஒரு கம்ப்ளைய்ன்ட் கொடுத்தா போதும். வந்து பிடிச்சுட்டுப் போயிடுவாங்க. நாளைக்கே அதுக்கு ஏற்பாடு பண்றேன்" என்று உள்ளே சென்றாள் ரதி.
 ரதி சொன்னால் உடனே வந்து நாயைப் பிடிச்சுப் போய்விடுவார்கள்தான்.
 காரணம் –
 அந்தப் பகுதிக்கு சப்-இன்ஸ்பெக்டர் ரதி.
 ஆனால் -
 பிடித்துப் போக அவன் ஒன்றும் நாய் இல்லையே மனிதன்.
 இப்படி அவன் பின்தொடரும் விஷயத்தை ரதியிடம் ஒரு வார்த்தை சொன்னால் போதும். உண்டு... இல்லை என்றாக்கி விடுவாள்.
 முட்டிக்கு முட்டித் தட்டி உள்ளே தூக்கிப் போட்டு விடுவாள். சொல்லி விடலாமா? என ஒரு கணம் நினைத்தாள்.
 பின் வேண்டாம் என்று விட்டு விட்டாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 17, 2023
ISBN9798223970583
குங்குமக் கோலங்கள்

Read more from R.Sumathi

Related to குங்குமக் கோலங்கள்

Related ebooks

Related categories

Reviews for குங்குமக் கோலங்கள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    குங்குமக் கோலங்கள் - R.Sumathi

    1

    விஜி நடத்திக் கொண்டிருந்த பாடத்தை முடிக்கவும் பள்ளி இறுதி மணி ஒலிக்கவும் சரியாக இருந்தது.

    மணி ஒலித்தது கூட மாணவ, மாணவிகளை சலனப்படுத்தவில்லை. மந்திர சக்திக்குக் கட்டுப்பட்டதைப் போல் அமர்ந்திருந்தனர். எல்லாம் விஜி செய்த தந்திரம்தான்.

    அவள் நடத்திய ‘முக்கூடற்பள்ளு’ மாணவிகளை அப்படி வசப்படுத்தியிருந்தது. இன்னும் சற்று நேரம் நடத்தமாட்டாளா என ஏங்க வைத்தது. ஏன் மணி அடித்ததோ என எரிச்சல் பட வைத்தது.

    சரியான நேரத்திற்குத்தான் மணி ஒலித்ததா என கைக்கடிகாரத்தை திருப்பி மணி பார்க்க வைத்தது.

    இத்தனைக்கும் விஜி தமிழ் ஆசிரியை இல்லை. கணித ஆசிரியை. ஒன்பதாம் வகுப்பு தமிழ் ஆசிரியை மீரா அவளுடைய அப்பா இறந்து விட்டதால் ஒரு வாரம் விடுப்பு எடுத்திருந்தாள்.

    ‘விஜி... நான் இன்னும் போர்ஷன் முடிக்கலை. நான் காரியம் முடிஞ்சு வர்றதுக்கும் பரீட்சை வர்றதுக்கும் சரியாயிருக்கும். நீ கொஞ்சம் முடிச்சுடேன்’ என கேட்டு கொண்டதற்கிணங்க விஜி தன்னுடைய வகுப்பையும் கவனித்துக் கொண்டு நேரம் கிடைக்கும் போதெல்லாம் மீராவின் வகுப்பையும் பார்த்துக் கொண்டாள்.

    கிட்டத்தட்ட எல்லாப் பாடங்களையும் நடத்தி முடித்து விட்டாள். மீரா, விஜியிடம் அப்படி கேட்டுக் கொண்டதற்கு காரணம் இருந்தது.

    விஜி படித்ததென்னவோ கணிதம்தான். ஆனால் அவளுக்குப் பிடித்தது தமிழ்தான். சிறிது ஓய்வு கிடைத்தாலும் அவள் இருப்பது நூலகத்தில்தான்.

    எப்பொழுதும் கையில் ஒரு இலக்கியப் புத்தகம் இருக்கும். புரியாத வரிகளை முறையாக தமிழ் பயின்ற ஆசிரியைகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்வாள். அதனால் தமிழ் ஆசிரியைகளுக்கு நிகரான மதிப்பும், மரியாதையும் அவளுக்குக் கிடைத்தது. இலக்கிய மன்ற விழாக்களை நடத்துவதற்கான கலந்தாலோசனையில் அவளையும் கமிட்டி அழைத்துக் கொள்ளும்.

    சிலையாக அமர்ந்திருந்த மாணவ, மாணவிகளைப் பார்த்து சிரித்தாள். என்ன... யாருக்கும் மணியடிச்சது காதில் விழலையா? என்றாள்.

    டீச்சர் நீங்க நடத்தின முக்கூடற்பள்ளு எங்களை அப்படியே கட்டிப் போட்டுடுச்சு.

    மாணவர்கள் மாற்றி மாற்றி அதையே சொல்லி அவளைப் பாராட்டிக் கொண்டிருந்தனர்.

    என்னை நீங்க பாராட்டறது முக்கியம் இல்லை. மீரா டீச்சர் வந்து உங்களைப் பாராட்டணும். நாம இல்லாவிட்டாலும் பரீட்சையில நிறைய மார்க் வாங்கியிருக்காங்களேன்னு சந்தோஷப்படணும். அப்பத்தான் நான் பாடம் எடுத்ததற்கும் ஒரு அர்த்தம் இருக்கும்.

    கண்டிப்பா மார்க் வாங்குவோம் டீச்சர்.

    சரி நாளைக்குப் பார்ப்போம். வகுப்பை விட்டு வெளியே வந்தாள்.

    ஓய்வறைக்குச் சென்று தன் பொருட்களை சேகரித்துக் கொண்டு பையைத் தோளில் மாட்டிய போது இதுவரை இருந்த மகிழ்ச்சி மனதில் இல்லை. மலர்ச்சி முகத்தில் இல்லை. உற்சாகம் வடிந்து போய் சோர்வு வந்து சூழ்ந்து கொண்டது.

    வீட்டிற்குப் போகும் சந்தோஷத்தில் எல்லோரிடமும் உற்சாகம் இருந்தது.

    அவளுக்கு இணையாக சங்கீதா மட்டும் புலம்பிய வண்ணம் கட்டுரை நோட்டுக்களை அடுக்கிக் கொண்டிருந்தாள்.

    வீட்டுக்குப் போறதுன்னாலே எரிச்சல் வருது.

    புதுக்கல்யாணம் ஆனவள். வீட்டுக்கு எப்படா போகலாம்னு ஆசையாயிருக்காம இப்படி அலுத்துக்கறே?

    ஆமா... கல்யாணம் ஆகிப் பாழாப் போனோம் போ... வீட்டுல என் மாமியார் ஒரு வேலை தொடமாட்டார். நான் போய்த்தான் பாத்திரம் தேய்ச்சு, துணி துவைச்சு மாவு அரைச்சு ராத்திரி சாப்பாடு பண்ணி அய்யோ நினைச்சாலே தலையைச் சுத்துது.

    சங்கீதாவைப் போல் இவளுக்கு வீட்டில் எந்தப் பிரச்சனையும் இல்லை. அவளுடைய உற்சாகமின்மைக்கு வேறு காரணமாயிருந்தது.

    விஜி என்றபடியே மீனா வந்தாள்.

    என்ன மீனா?

    லைப்ரரியைப் பூட்டப் போறேன். நீ புக்ஸ் ஏதும் எடுக்க வரலியேன்னு கேட்க வந்தேன்.

    தினமும் பள்ளி விட்டுப் போகும் போது ஏதாவது புத்தகம் எடுத்துப் போவது விஜியின் பழக்கம். அதைப் படித்து முடித்து விட்டு மறுநாள் புதிதாக புத்தகம் எடுத்துப் போவாள்.

    இல்லை மீனா. ரெண்டு மூணு நாளைக்கு முன்னாடி கொண்டு போன புத்தகத்தையே இன்னும் படிக்கலை.

    ஏன்... என்னாச்சு? புத்தகத்தை முடிச்சுட்டுத்தானே தூங்கறது உன் பழக்கம்.

    விஜி முகம் மாறினாள். என்னைப் படிக்க விடாமல் குழப்பம் தடை செய்கிறதே... முன் போல் படிப்பதில் மனதைச் செலுத்த முடியவில்லையே...

    பசங்களோட நோட்டுத் திருத்தற வேலை இருந்தது. அதான்....

    சங்கீதா திரும்பினாள்.

    விஜிதான் கொடுத்து வச்சவள். வீட்டுக்குப் போனதும் ஹாயா புத்தகம் படிக்கலாம். சமையல் பண்ணி போட ஃபிரண்ட் ரதி இருக்கா. அம்மா மாதிரி செய்யறா. விஜி கல்யாணமே பண்ணிக்காதடி!

    ஆமா! இவ கல்யாணம் பண்ணிக்கலைன்னா இவ ஃபிரண்ட் ரதியும் கல்யாணம் பண்ணிக்காம இவளுக்குக் கடைசி வரை சமையல் பண்ணிப் போட்டுக்கிட்டிருப்பாளா?

    எல்லோரும் சிரிக்க விஜியும் சிரித்தபடி தன் கைப் பையை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டு வெளியே வந்தாள்.

    அதற்குள் மாணவ, மாணவிகள் சென்று விட்டனர். திடீரென பள்ளிக்கூடமே காலியானதைப் போல் இருந்தது. பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தாள். நிறுத்தத்தில் கூட்டம் குறைவாக இருந்ததைப் பார்த்ததுமே புரிந்தது, அவள் வழக்கமாகச் செல்லும் பேருந்து போய் விட்டதென்று.

    அடுத்த பேருந்து வருவதற்கு எப்படியும் அரை மணி நேரமாகலாம் என்று நினைத்தாள்.

    மழை வரும் என்று தோன்றியது.

    ஹலோ...

    குரல் கேட்டுத் திரும்பினாள்.

    மாதவன் அவளருகே பைக்கை நிறுத்தினான். சிரித்தான்.

    மாதவன் அவளுடைய பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர். அவளைப் போலவே கணித ஆசிரியர். பிளஸ் ஒன், பிளஸ் டூவிற்கு வகுப்பு எடுப்பவன். அவனைப் பார்த்ததுமே அவளுக்குள் எரிச்சல் பரவியது.

    என்ன விஜி... பஸ்சை விட்டுட்டிங்க போலிருக்கு என்றான்.

    ஆமாம்.

    அடுத்த பஸ் எப்போ வரும்?

    எப்படியும் அரைமணி நேரமாகும்.

    அதுவரைக்கும் இங்கேயே இருப்பீங்களா? வாங்களேன் பைக்ல டிராப் பண்றேன்.

    பரவாயில்லை. நான் பஸ்லயே போய்க்கிறேன்.

    ஏன் என் பைக்ல வரக்கூடாதா?

    சீக்கிரம் வீட்ல போய் என்ன பண்ணப் போறேன்? மெதுவா போய்க்கலாம். ஒண்ணும் அவசரமில்லை.

    மழை வர்ற மாதிரி இருக்கு.

    வரட்டுமே...

    அப்போ பைக்ல வரப் போறதில்லை?

    இல்லை.

    சரி. பஸ் வர்ற வரைக்கும் நான் இருக்கேன்.

    எதுக்கு?

    "நீங்க பஸ் கிடைச்சு வீட்டுக்குப் போனீங்களான்னு

    Enjoying the preview?
    Page 1 of 1