Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Rosavey
Kaadhal Rosavey
Kaadhal Rosavey
Ebook136 pages47 minutes

Kaadhal Rosavey

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எடப்பாடி ஆ. அழகேசன் ஏழு வயதில் எழுதத் தொடங்கினார். இன்று 63 வயதைக் கடந்து நிற்கிறார். எடப்பாடி தமிழ்ச்சங்கம் நிறுவனர், எடப்பாடி முத்தமிழ் சுற்றுச்சூழல் குழந்தைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு நிறுவனர் என பல அமைப்புகளில் பங்கேற்று இலக்கியப் பணிகள், இயற்கை நலம் பேணும் பணிகள் என பலவற்றில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ளார்.

ஒரு சாதாரண எழுத்தாளராக அரசுப் பணியைத் தொடங்கி மத்திய மாநில அரசுப் பணிகளில் பணியாற்றி, படிப்படியாக முன்னேறி மக்கள் நல வாழ்வில் நல்ல பல முன்னேற்றங்களை, மாற்றங்களை எவ்வாறு ஏற்படுத்தித்தர முடியும் என்பதை நூலாசிரியர் மிக அழகாகத் திறம்பட இந்நூலில் எடுத்துரைக்கிறார். பல்வேறு தின, வார, மாத இதழ்கள் வானொலிகள் தொலைக்காட்சிகள் ஆகியவைகளால் பாராட்டப்பட்டவர். பல மிக மிக முக்கிய நபர்களாலும் அறிஞர் பெருமக்களாலும் பாராட்டப்பட்டவர்.

எங்களது நிறுவனத்தால் வெளியிடப்பட்ட "மானுடம் வளர்ப்போம் சாதியம் ஒழிப்போம்" எனும் சிறுகதை நூல் சிறந்த நூலாக சென்னை பகுத்தறிவாளர் இணையத்தால் 2006-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கி பாராட்டப்பட்டுள்ளார். "கல்லூரிப் பறவைகள்" எனும் இவரது நாவலைச் சிறந்த நூலாக தேர்வு செய்து சேலம் கே.ஆர்.ஜி. நாகப்பன் அறக்கட்டளை நிறுவனமும், எழுத்துக் களம் இலக்கிய அமைப்பு, தாரைப்புள்ளிக்காரர் அறக்கட்டளை அமைப்பு 2008, 2009 ஆண்டுகளில் அருவினை நம்பி, இலக்கிய விருது 2009-ல் வழங்கியுள்ளன. எங்களது நிறுவனத்தால் வெளியிடப்பட்ட "திருக்குறளின் 133 அதிகாரங்களுக்கும் 133 சிறுகதைகள்" எனும் நூல் மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் நாடுகளில் வெளியிடப்பட்டு சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்நூலிற்கு தஞ்சை உலகத் திருக்குறள் மாநாட்டில் 26-02-2021 அன்று "திருக்குறள் சுடர்" விருதும், சேலம் தமிழ்ச் சங்கத்தால் சிறந்த நூல் பரிசு ரூபாய் பத்தாயிரமும் "தமிழ் வாகைச் செம்மல்" விருதும் 13-03-2021 அன்று வழங்கப்பட்டுள்ளன.

தமிழ் நாடு அரசு ஆளுநரின் பாராட்டுச் சான்றும், வெள்ளிப் பதக்கமும், 1-02-2021 அன்று இந்நூலாசிரியருக்கு "சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் விருது” ரூபாய் ஒரு இலட்சம் பரிசும் ஒரு சவரன் தங்கப்பதக்கமும் வழங்கி பாராட்டப்பட்டுள்ளார். இலக்கிய மற்றும் பொதுநல அமைப்புகள் எழுத்துச் செல்வர், சிறந்த மாமனிதர், கவியருவி, கவிப்பேரரசர் வைரமுத்து விருது, திருக்குறள் நூலறிச் செம்மல் விருது என நாற்பதுக்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கியுள்ளனர். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு நோக்கர், தமிழ்நாடு தேர்வாணையக் குழுவால் தமிழ் மொழித் தேர்வுக்கு "தமிழ் வல்லுநர்" என தமிழ் மொழிக்கு பெரும் பங்காற்றியுள்ளார்.

Languageதமிழ்
Release dateNov 18, 2023
ISBN6580164110146
Kaadhal Rosavey

Read more from Edappadi A. Alagesan

Related to Kaadhal Rosavey

Related ebooks

Reviews for Kaadhal Rosavey

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Rosavey - Edappadi A. Alagesan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    காதல் ரோசாவே

    Kaadhal Rosavey

    Author:

    எடப்பாடி ஆ. அழகேசன்

    Edappadi A. Alagesan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/edappadi-a-alagesan

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அனைவருக்கும் எடப்பாடி. ஆ. அழகேசனின் அன்பு வணக்கம்.

    காதலின் எளிமையான, பெரும்பாலோரின் வெளிப்பாடு ரோசா, அதற்கடுகத்து காதலர்கள் பரிமாறிக்கொள்ளும் பரிசு ஆடைகளும், ரோசாவும், காதலர்களின் அன்புப்பரிமாற்றதில் முதலிடம் வகிப்பவை.

    என் எழுத்துக்கள் அனைத்துமே உண்மைச் சம்பவங்களைஅடிப்படியாகக் கொண்டவை. நான் வாழும் பகுதியான எடப்பாடி நகரில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இக்கதை எழுதப்பட்டிருக்கிறது

    எடப்பாடி நகரமக்கள் நெசவுதொழிலை தங்களது மூச்சாக சுவசித்து வாழ்பவரகள் நெசவுத்தொழிலில் இருந்து கல்வி அறிவு பெற்று வரும் ஒரு இளைஞனின் துணைக்கொண்டு வாழ்வின் வறுமையைத் துடைக்கப் பேராடும் ஒரு நெசவாளியின் குடும்பத்தைப்பற்றிய கதைதான் இந்நாவல்.

    இதில் காதல் உண்டு, மோதல் உண்டு, போட்டி உண்டு. விஞ்ஞானம் வளர்ந்து விட்ட இந்நாளிலும் தாய்மாமன், அத்தை மகன், மாமன் மகன், அக்கா மகள் அத்தை மகள், மாமன் மகள், உறவுமுறை கொண்டாடி உயிருக்குயிராய் நேசித்து, காதலித்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் இணைகள் ஏராளம்.

    அதுபோல், இதில் தாய்மாமனுக்காகவே தன்னை அர்ப்பணித்த ரோசாவின் காதல் போராட்டம் வெல்கிறதா, குடும்பப்பொருளாதாரச் சிக்கலில் சிக்குண்டு வெடித்துச் சிதறுகிறதா? என்பதுதான் கதை.

    இனி படியுங்கள் கருத்துக்களை பகிருங்கள்.

    நன்றி

    என்றும் அன்புடன்

    ,

    எடப்பாடி. ஆ. அழகேசன்

    1

    எடப்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அந்தச் சுற்று வட்டாராத்திலேயே மிகச்சிறந்த பள்ளியாக விளங்கி வந்தது. பள்ளியின் முகப்பு வாயிலில் கல்விக்கடவுள் சரசுவதி அமர்ந்திருப்பாள். பள்ளியைச் சுற்றிலும் குறைந்தது ஒரு ஐநூறு மரங்களாவது இருக்கும். ஐயாயிரம் காக்கைகளாவது அதில் குடியிருக்கும். மாவட்ட அளவிலான பெரிய மைதானம்; நீச்சல்குளம் உடற்பயிற்சிக்கூடம், நூலகம், அறிவியல், பரிசோதனைகூடம், என்.எஸ்.எஸ்.என்.சி.சி. என எந்தவொரு தனியார் பள்ளிக் கூடத்திற்கும் ஈடு கொடுக்கும் வகையில் கல்வியில் தரத்தில் உயர்ந்து நின்றிருந்தது.

    அந்தப்பள்ளியில் நான்காயிரம் மாணவர்கள் பயின்று வந்தார்கள். அருணும் அந்தப் பள்ளியில்தான் பயின்று வந்தான். +2-ல் முதல் பிரிவு.

    இன்று அவன் பள்ளி வகுப்பிற்கு அரைமணி நேரம் தாமதமாக வந்திருந்தான். வகுப்பு ஆசிரியரின் அனுமதிக்காக வகுப்பு வாசலில் காத்திருந்தான்.

    எக்ஸ்கியூஸ்...மி...சார்...

    எஸ்... ஓய் லேட்...?

    சார்... வந்து... வந்து...

    அருண் நீ நல்லா படிக்கறே... இல்லேன்னு சொல்ல. அதுக்காக உன் சவுகரியத்திற்கு வகுப்பிற்கு வந்துபோக இது ஒன்னும் சினிமா தியேட்டர் இல்லே...

    சார்... சினிமா தியோட்டர்ல கூட டைம் ஆனா கேட்டை பூட்டிடுறான் சார்... ஒரு மாணவன் இடைமறித்தான்.

    நீ உருப்பட மாட்டே...

    அருண்... ஏன் லேட்டு?

    அவன் எதைச்சொல்வான் காலை எழுந்தவுடன் படிப்பு, மாலை முழுவதும் விளையாட்டு பாரதியார் பாடிவிட்டு சென்று விட்டார். அருணைப் பொறுத்தவரை அதற்கும் அவனுக்கும் துளியும் தொடர்பில்லை. அகதிக்கு எதற்கு அரசமோகம்? என்பதுபோல் அவனைப்பொறுத்தவரையில் பள்ளிக்கு வந்து செல்வது அதைப்போலதான்.

    அன்று விடியற்காலை தாய் எழுப்பி விட்டாள். மணி நான்கு. அவன் வீட்டில் ஓடிக்கொண்டிருக்கும் நூல்நூற்பு மெஷினில் அவனை நூல் இழைக்கச்சொன்னாள். ஒன்பதுமணி வரை நூல் இழைத்தான். அவன் நூல் நூற்கும்போது எல்லாம் மகாத்மாகாந்தியைப்போல நினைத்துக்கொள்வான். அவர் உபயோகித்தது நூல் இராட்டினம். அவன் உபயோகிப்பது எந்திர ராட்டினம் மகாத்மாவின் இந்த கொள்கையை பிறர் பின்பற்றுகிறார்களோ, இல்லையோ அவன் பின்பற்றுவதாய் தேற்றிக்கொள்வான்.

    காலை 9.30 க்குப் பள்ளி. தாய் ஞாபகப்படுத்தினாள். அவன் குளியல்போல் பெயருக்குக் குளித்தான். கசங்கிய சட்டை அணிந்தான். அவனது வீட்டிற்கும் பள்ளிக்கும் இடைப்பட்ட தூரம் ஐந்து கிலோமீட்டர். செல்வதற்கு சைக்கிள் இல்லை. பள்ளி செல்ல குறுக்குவழி ஒன்றும் இருந்தது. குறுக்கு வழியே சென்றால் இரண்டு கிலோமீட்டர் தூரம். வயல்காடுகளைக் கடந்து, இரட்டேரியை கடந்து, முனியப்பன் கோயிலைக் கடந்து, ஆற்றைக்கடந்து, மீண்டும் வயல்க்காடுகளைக் கடந்து வந்தால் அவனது பள்ளிக்கூடம் இதற்கு இரண்டு கிலோமீட்டர் தூரம்.

    அன்று அருண் குறுக்கு வழியில்தான் பள்ளிக்கு வந்திருந்தான். வயக்காடுகளைக் கடந்துவந்தபோது மனதில் பயம் ஏதும் கொள்ளவில்லை. இட்டேரியைக் கடக்கும் போதுதான். அவன் மனம் அடிவயிற்றிலே இடிவிழுந்தாற்போல், அந்த எட்டு நீள கருநாகத்தைக் கண்டதும் ஆடிப்போயிற்று. அவன் எதைச்சொல்வான்?

    மோகினிப்பேய் குடியிருப்பதாகச் சொல்லப்படும் முனியப்பன் கோயிலைக் கடந்த போது மரணத்தை சந்தித்து மீண்டதைப்போன்று அவன் மனம் ஆடிற்று அதனைக்கடந்து பேண்ட்டைக் கழற்றி இடுப்பளவு தண்ணீர் ஓடும் சரபங்கா நதியைக்கடந்தான்.

    அவனது இருகால்களுக்கும் இடையில் ஒரு தண்ணீர் பாம்பு சென்றதை உணர்ந்த போது அவன் ‘ஐயோ பாம்பு’ என ஐந்து நிமிடத்தில் கடக்க வேண்டிய ஆற்றை ஐந்தே நொடிகளில் கடந்து கரை சேர்ந்திருந்தான். அவன் எதைச்சொல்வான்?

    அவசர அவசரமாக பேண்ட்டை மாட்டிக்கொண்டான். வயல் காடுகளை ஓரிரு நிமிடங்களில் கடந்து வகுப்பறையில் வந்து காத்துக்கிடக்கிறான். பள்ளியை விட்டு மாலை வீடு திரும்பும்போது சின்ன மணலிக்கு அருகிலுள்ள செக்குமேட்டில் சித்தன் சலவைப்பட்டறையில் பத்துகட்டு நூலை எடுத்து வரச்சொல்லியிருந்தாள். அம்மா.

    அரை மணி நேரம் தாமதமாகப்பள்ளிக்கு வந்து வகுப்புக்கு வெளியே காத்திருக்கும் வேளையிலும் அவனது கவனம் அவன் அம்மா மாலை நேரம் சொல்லியிருந்த வேலையினை முடிக்க வேண்டும் என்பதிலும் அக்கறையாய் இருந்தது. அவன் எதைச் சொல்வான்?

    இதைத்தான் சொல்ல நினைத்தான். ஆனால், வகுப்பாசிரியர் கேட்ட, அருண்... ஏன் லேட்டு? எனும் கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாமல் மௌனமாய் நின்றிருந்தான்.

    அருண்... ஏன் லேட்டு? ஆசிரியர் மீண்டும் கேட்டார். பல சமயம் கேட்கப்படும் கேள்விக்கு பதில் ஏதும் சொல்லமால் மௌனமாய் இருப்பதே சிறந்தபதிலாய் அமையும்.

    அருண் அமைதியாய் நின்றிருந்தான். தலையை சொறிந்தான். லேசாக புன்னகைத்தான்.

    அருண்... ஏன் லேட்டு? ஆசிரியர் மீண்டும் எரிச்சலோடு கேட்டார்.

    அருண் நின்றிருந்ததைப் பார்த்த சகமாணவர்கள் ஒருவருக்கொருவர் கிசுகிசுத்துக் கொண்டார்கள். அவர்களது கிசுகிசுப்பே அந்த வகுப்பில் சில்லி வண்டுகள் சத்தம் போலக்கேட்டது.

    என்ன சத்தம்? ஆசிரியர் கேட்டார்.

    சார்... அருண் பேண்ட் ஜிப் போடாமல் இருக்கான் சார்... ஒரு மாணவன் சொன்னான்.

    அருண் மடமடவென்று ஜிப்பை இழுத்து சரி செய்தான்.

    ...ம்... உள்ளே வா... இனிமே வகுப்புக்கு லேட்டா வரக்கூடாது...

    சரிங்க ஐயா...

    ஆசிரியர் பாடத்தை நடத்த ஆரம்பித்தார். அருண் அதனை ஆழ்ந்து கவனிக்க தொடங்கினான்.

    அடுத்த வகுப்பு ஆரம்பமாயிற்று. அவர்தான் வகுப்பு ஆசிரியர். தேர்வு மதிப்பெண்கள் அட்டையை கொடுக்க ஆரம்பித்தார். அருண் இம்முறையும் முதல் வகுப்பு. படிக்கும் நேரம் குறைவு பெறும் மதிப்பெண் நிறைவு. அதுதான்

    Enjoying the preview?
    Page 1 of 1