Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nesathil Nanaintha Nenjangal
Nesathil Nanaintha Nenjangal
Nesathil Nanaintha Nenjangal
Ebook77 pages24 minutes

Nesathil Nanaintha Nenjangal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

சிறுகதைகளுக்கென்று ஏதேனும் இலக்கணம் இருக்கிறதா? காலங்காலமாய் இப்படி ஒரு கேள்வி உண்டு. ரொம்ப சுலபமான பதில், பக்க அளவு - 100 பக்கம் எழுதினால் அது சிறுகதை இல்லை. வேற்று மொழியில் இப்படி ஒரு சிறுகதை இருக்கிறது. விதிவிலக்குகளைத் தள்ளுவோம்.

வாசிக்க ஆரம்பித்தால் ஈர்க்க வேண்டும். கடைசி வரை சுவாரசியம் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எல்லாக் கதைகளுக்கும் அவசியமில்லை என்றாலும் முடிவில் சின்னதாகவாவது ஒரு ட்விஸ்ட் காத்திருக்க வேண்டும். ஊடே ஊடே சபாஷ் சொல்ல வைக்கிற சொல்லாடல் ஒன்று இயல்பாக இருந்துவிட்டால் அந்தக் கதைக்கு நட்சத்திர அந்தஸ்து கிட்டிவிடும் சுலபமாய். இந்தத் தொகுப்பில் பெரும்பாலும் அளவில் சிறிய கதைகள். எங்கே அவள்? தவிர. அதனால் சுவை குறையவில்லை. ஒவ்வொன்றிலும் கதைக்களனைக் காட்சிப்படுத்துவதும், சூழலுக்கு இழுத்துப் போகும் எழுத்தும், பிரச்சாரமில்லாத மெசெஜும் வாசிப்பை இனிமை ஆக்குகின்றன.

Languageதமிழ்
Release dateFeb 26, 2022
ISBN6580153208172
Nesathil Nanaintha Nenjangal

Read more from R. Subashini Ramanan

Related to Nesathil Nanaintha Nenjangal

Related ebooks

Reviews for Nesathil Nanaintha Nenjangal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    அன்பே இந்த வாழ்க்கைக்கு அடிநாதம் என்று சொல்லும் கதை. அன்பைத் தேடாத உயிர்கள் ஏது!

Book preview

Nesathil Nanaintha Nenjangal - R. Subashini Ramanan

https://www.pustaka.co.in

நேசத்தில் நனைந்த நெஞ்சங்கள்

Nesathil Nanaintha Nenjangal

Author:

சுபாஷிணி ரமணன்

R. Subhasini Ramanan

For more books

https://www.pustaka.co.in/home/author/r-subashini-ramanan

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

முன்னுரை

சிறுகதைகளுக்கென்று ஏதேனும் இலக்கணம் இருக்கிறதா ? காலங்காலமாய் இப்படி ஒரு கேள்வி உண்டு. ரொம்ப சுலபமான பதில், பக்க அளவு. 100 பக்கம் எழுதினால் அது சிறுகதை இல்லை. வேற்று மொழியில் இப்படி ஒரு சிறுகதை இருக்கிறது. விதிவிலக்குகளைத் தள்ளுவோம்.

வாசிக்க ஆரம்பித்தால் ஈர்க்க வேண்டும். கடைசி வரை சுவாரசியம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எல்லாக் கதைகளுக்கும் அவசியமில்லை என்றாலும் முடிவில் சின்னதாகவாவது ஒரு ட்விஸ்ட் காத்திருக்க வேண்டும். ஊடே ஊடே சபாஷ் சொல்ல வைக்கிற சொல்லாடல் ஒன்று இயல்பாக இருந்து விட்டால் அந்தக் கதைக்கு நட்சத்திர அந்தஸ்து கிட்டி விடும் சுலபமாய்.

இந்தத் தொகுப்பில் பெரும்பாலும் அளவில் சிறிய கதைகள். எங்கே அவள்? தவிர. அதனால் சுவை குறையவில்லை. ஒவ்வொன்றிலும் கதைக்களனைக் காட்சிப்படுத்துவதும், சூழலுக்கு இழுத்துப் போகும் எழுத்தும், பிரச்சாரமில்லாத மெசெஜும் வாசிப்பை இனிமை ஆக்குகின்றன.

சிலருக்கு சொல்லத் தெரியும். சிலருக்கு எழுத வரும். இரண்டும் சரியான விகிதத்தில் இணையும் போது நல்ல கதைகள் தானாகவே கிட்டி விடும். ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்திருக்கும் கதைசொல்லியைக் கண்டு பிடிப்பதும் பிறருக்கு அறிமுகப்படுத்துவதும் வாழ்க்கையை சுவாரசியம் ஆக்குகின்றன.

எழுதத் தெரிந்தவர் சுபாஷிணி என்பதை மெய்ப்பிக்கிற கதைகள் இந்தத் தொகுப்பில். இன்னும் தீவிரமாய் முயற்சித்தால் பெயர் சொல்லும் முழுமையான சிறுகதைகளை இவர் தரக் கூடும். அதற்கான வார்த்தைக் கட்டமைப்பு இக்கதைகளில் காணக் கிடைக்கிறது.

நல்வாழ்த்துகளுடன்

ரிஷபன்.

முன்னுரை

அனைவருக்கும் வணக்கம்.

ஜன்னலோரம் என்ற இந்தச் சிறுகதைத் தொகுப்பை சமீபத்தில்தான் படித்தேன். ஏற்கனவே சங்கப் பலகையில் வெளியாகி பலரது பாராட்டுகளைப் பெற்ற சிறுகதைகள், தொகுப்பாகப் படிக்கும்போது ஒரு நிறைவை, நம் வாழ்க்கையை நேரில் பார்த்தது போல் இருந்தது.

எளிய நடை, ரசனைகள், நச்சென்று வார்த்தைப் பிரயோகங்கள் என்று நெஞ்சைக் கவரும் கதைகள். ஜன்னலோரம் கதையில் அணில், பள்ளி போகும் சிறார்கள், வீட்டுச் சூழ்நிலைகள், என்று மாலாவின் பார்வை மூலம் நம்மை அங்கேயே கொண்டுபோய் விடுகிறார்.

மாலாவின் மீது பரிதாபம் ஏற்படும் நேரத்தில், நேசத்தில் நனைந்த நெஞ்சங்கள் சிறுகதை மூலம் பாசம், பிரியம், அன்பு போன்றவைகளை எளிமையாக நம் மனதில் புகுத்துகிறார். எளிமையான வார்த்தைகள், எழுத்து நடை மூலம் அந்தக் கதைக்குள் சுலபமாக நம்மை இழுத்துக் கொண்டு போய் விடுகிறார்.

ஒவ்வொரு கதையும் வித்தியாசமாய், வாழ்க்கையின் மற்றொரு சிறப்பான பக்கங்களைக் காட்டுகிறது. சாரும், மோரும், மலர்ந்த உறவு, உடன் பிறப்பு போன்ற கதைகள் படிக்கும்போது மனதிற்குள் புகுந்து நிலைத்து நின்று விட்டது.

ஒரு வாழ்க்கையின் சிறந்த பக்கங்களை இக்கதைகள் விவரிக்கிறது. வெறும் காதல் என்று இல்லாமல் உண்மையான, காதலின் பாசம், நேசங்களைப் பட்டியலிடுகிறது கதைகள். நெகிழ்த்தும் சம்பவங்களை இயல்பாகச் சொல்லிப் போகிறது சிறுகதைகள்.

கணவனை மறைமுகமாகத் திருத்தும் வாழ்க்கைப் பாடம், தன் மகள் போல் நாத்தனார் மீனாட்சிக்கு திருமணம் செய்து வைக்கும் அன்பைக் குறிக்கும் ஆனந்தம் விளையாடும் வீடு, தெய்வீகக் காதலைச் சொல்லும் மீராவின் காதல், என்று ஒவ்வொன்றும் குறிப்பிட்டுச் சொல்லும் விதத்தில் வித்தியாசமாக மலர்ந்திருக்கிறது.

ஒரு கவிஞர் என்று அறியப்பட்ட திருமதி சுபாஷிணி ஒரு நல்ல எழுத்தாளர் என்பதையும் இக்கதைகள் மூலம் நிரூபித்திருககிறார்.

சங்கப் பலகை என்ற முகநூல் குழுமத்தில் அடிக்கடி எழுதிய கதைகளின் தொகுப்பு. இவரின் குணங்கள்

Enjoying the preview?
Page 1 of 1