Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Medai Nadagangal + Thiraipadangal - Oru Paarvai
Medai Nadagangal + Thiraipadangal - Oru Paarvai
Medai Nadagangal + Thiraipadangal - Oru Paarvai
Ebook271 pages1 hour

Medai Nadagangal + Thiraipadangal - Oru Paarvai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நாடகத்துறையை வளர்க்க பெரும் துணையாக இருந்த சிலரின் ஆளுமை மற்றும் செயல்பாடுகளச் சிறிதாவது வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதிய சிறு முயற்சியே என்நூல். என் சிறு காணிக்கையாக தமிழன்னைக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்.

Languageதமிழ்
Release dateMar 30, 2024
ISBN6580153210921
Medai Nadagangal + Thiraipadangal - Oru Paarvai

Read more from R. Subashini Ramanan

Related to Medai Nadagangal + Thiraipadangal - Oru Paarvai

Related ebooks

Reviews for Medai Nadagangal + Thiraipadangal - Oru Paarvai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Medai Nadagangal + Thiraipadangal - Oru Paarvai - R. Subashini Ramanan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மேடை நாடகங்கள் + திரைப்படங்கள் - ஒரு பார்வை

    Medai Nadagangal + Thiraipadangal - Oru Paarvai

    Author:

    சுபாஷிணி ரமணன்

    R. Subashini Ramanan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-subashini-ramanan

    பொருளடக்கம்

    வாழ்த்துரை

    முன்னுரை

    என்னுரை

    1. ஸ்ரீ வள்ளி (நாடகம்) - சங்கரதாஸ் சுவாமிகள்

    2. ஸ்ரீ வள்ளி (திரைப்படம்)

    3. மனோகரா( நாடகம்) - பம்மல் சம்பந்த முதலியார்

    4. மனோகரா (திரைப்படம்)

    5. அந்தமான் கைதி (நாடகம்) - கு. சா. கிருஷ்ணமூர்த்தி

    6. அந்தமான் கைதி (திரைப்படம்)

    7. இராஜ ராஜ சோழன் (நாடகம்) - அரு. இராமநாதன்

    8. இராஜ ராஜ சோழன் (திரைப்படம்)

    9. போலீஸ்காரன் மகள்(நாடகம்) - பி. எஸ். ராமையா

    10. போலீஸ்காரன் மகள் (திரைப்படம்)

    11. ஞானஒளி (நாடகம்): - வியட்நாம் வீடு சுந்தரம்

    12. ஞானஒளி (திரைப்படம்)

    13. தண்ணீர் தண்ணீர் (நாடகம்) - கோமல் சுவாமிநாதன்

    14. தண்ணீர் தண்ணீர் (திரைப்படம்)

    15. காசேதான் கடவுளடா (நாடகம்) - ‘சித்ராலயா கோபு’

    16. காசேதான் கடவுளடா (திரைப்படம்)

    17. முகம்மது பின் துக்ளக் (நாடகம்) - ‘சோ’ ராமசாமி

    18. முகமது பின் துக்ளக் (திரைப்படம்)

    சமர்ப்பணம்

    தன் நகைச்சுவை எழுத்துகளால் எல்லோரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் ‘சித்ராலயா’கோபு சார் அவர்களுக்கு…

    வாழ்த்துரை

    நான் தான் சித்ராலயா கோபு. எல்லோரும் நாடகத் துறையிலிருந்து சினிமாவிற்கு வருவார்கள்.

    சித்ராலயா கோபுவாகிய நான் திரைப்படத்துறையில் பல படங்களை இயக்கிய பின்பு நாடகத் துறைக்கு வந்தேன்.

    நான் எழுதிய முதல் நாடகமே ‘கலாட்டா கல்யாணம்’.

    நான் நாடகத் துறைக்கு வந்ததே பெரிய கதை மாதிரி தான்.

    1955-ஆம் ஆண்டு போர் வீரர்களுக்கு நிதி திரட்ட நினைத்த தமிழக அரசு சிவாஜி கணேசனை அணுகியது. அவர் என்னையும், ஸ்ரீதரையும் நகைச்சுவை நாடகம் ஒன்றை எழுதச் சொன்னார். அதுதான் ‘கலாட்டா கல்யாணம்’.

    நாடகத்தை சிவாஜியே இயக்கி, பின்னர் அவர் நிறுவனம் மூலமாகவே அதைத் திரைப்படமாகவும் தயாரித்தார்.

    திருவல்லிக்கேணியில் எனக்கு மிகவும் பிடித்த இடம், பார்த்தசாரதி சபா. இந்த சபாவில்தான் என்னோட நாடக வாழ்க்கை மறுபிறவி எடுத்தது. ‘மாயா பஜார்’, ‘வீட்டுக்கு வீடு’, ‘காசேதான் கடவுளடா’, போன்ற நாடகங்கள் இங்கேதான் அரங்கேறின. அவை பிற்காலத்தில் திரைப்படங்களாக உருவெடுத்தன. அவற்றுக்கெல்லாம் அச்சாரமாக ‘கலாட்டா கல்யாணம்’ அமைந்தது.

    நாடகத்துறையின் மீது தீராத காதல் கொண்டிருந்தவர் நடிகர் திலகம். என்னை மீண்டும் நாடகத்துறைக்கு இழுத்ததே நடிகர் திலகம்தான்.

    அதற்குக் காரணம் நான் சிவாஜியோட நெருங்கிப் பழகினதுதான். அவர் சினிமாத் துறையில் மிகவும் பிரபலமாகவும், கதாநாயகனாகவும் இருந்த போதும் நாடகத் துறையில் ஆர்வம் காட்டினார்.

    ‘நடிகர் திலக’மாக உயர்ந்த பிறகும் நாடகத் துறையின் மீது ஈடுபாடு கொண்டிருந்தார் சிவாஜி. கோபுவாகிய நான் கதை வசனம் எழுதிய காலத்தில் மாலை ஐந்து மணி ஆனதும், படப்பிடிப்புக்கு டாட்டா சொல்லிவிட்டு, சிவாஜி நாடக மேடைக்குப் பறந்துவிடுவார்

    ‘நூர்ஜஹான்’, ‘காலம் கண்ட கவிஞன்’, ‘வியட்நாம் வீடு’ போன்ற சிவாஜியின் நாடகங்கள் எழுபதுகளில் பெரிய பரபரப்பை உருவாக்கியவை. மியூசிக் அகாடெமியில் ‘வியட்நாம் வீடு’ நாடகத்தில் ‘பிரிஸ்டீஜ்’ பத்மநாபனாக சிவாஜியின் நடிப்பைப் பார்த்த ஜெமினி அதிபர் எஸ்.எஸ். வாசன், தாரை தாரையாகக் கண்ணீர் விட்டு, கேவிக் கேவி அழுது கொண்டிருந்தாராம்.

    மேஜர் சுந்தரராஜன் ‘யூனிட்டி கிளப்’என்ற நாடகக் குழுவை நடத்திக் கொண்டிருந்தார். அவர் திரைத்துறையில் நுழைந்ததால் நாடகத் துறையிலிருந்து வெளியேறினார்.

    அந்தக் குழுவின் அங்கத்தினர்கள் சினிமாப் பின்னணியில் இருந்த ஒருவரைத் தேடிக் கொண்டு என்னிடம் வந்து அவர்கள் குழுவிற்கு நாடகம் எழுத என்னைக் கேட்டனர். நானும் ஒத்துக் கொண்டேன்.

    எனக்கும் சிவாஜியின் நாடக ஈடுபாட்டைப் பார்த்து அப்போதான் நாடக ஆர்வம் வந்திருந்தது... அதனால் யூனிட்டி கிளப் அங்கத்தினர்கள் கேட்டபோது நாடகம் எழுதித்தர இசைந்தேன்.

    நான் எழுதுவதைக் கேட்டு மனோரமா, முத்துராமன், வெண்ணிற ஆடை மூர்த்தி, மணிமாலா முதலானோர் யூனிட்டி கிளப் நாடகத்தில் நடிக்க ஒத்துக் கொண்டனர்.

    அப்போது வெளியான நாடகங்கள் தான் திக்குத் தெரியாத வீட்டில், மாயாபஜார், காரணம் கேட்டுவாடி முதலானவை.

    இதில் ‘திக்குத் தெரியாத வீட்டில்’பின்னர் ‘வீட்டுக்கு வீடு’என்ற பெயரிலும், ‘காரணம் கேட்டு வாடி’ நாடகம்’வானமே எல்லை’என்ற பெயரில் பாலசந்தர் இயக்கத்திலும் திரைப்படங்களாயின.

    நான் பல நாடகங்களை எழுதிய போதும், எங்கள் மாஸ்டர் பீஸ் ‘காசேதான் கடவுளடா’நாடகம் தான்.

    இந்த நாடகத்தைப் பற்றி மேடம் சுபாஷிணி ரமணன் சிலாகித்து எழுதியது, என்னோட மலரும் நினைவுகளைத் தூண்டி விட்டது.

    அவர் நாடகத்தைப் பற்றிய எல்லா விவரங்களையும் எழுதியிருக்கிறார். நானே மறந்து போன விஷயங்களைக் கூட எழுதி இருக்கிறார். ரொம்ப சந்தோஷமா இருந்தது.

    அந்த நாடகம் மயிலாப்பூர் பைஃன் ஆர்ட்ஸில் அரங்கேற்றம் ஆனது. வெளியூர்களிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதன் வரவேற்பைப் பார்த்த பைஃன் ஆர்ட்ஸ் ராஜகோபாலன் நாடகத்தை மூன்று மாதங்களுக்கு புக் செய்து கொண்டார்.

    சுபாஷிணி மேடம் எழுதியதைப் பார்த்து மெய்மறந்து போனேன் என்றே சொல்லலாம். என்னதான் சினிமா உலகில் இருந்தாலும் நாடக மேடையில் கைத்தட்டல் வாங்குவது பெரிய விஷயம்.

    சினிமா உலகில் படவெற்றி என்பது வெகு நாளைய காத்திருத்தலுக்குப் பிறகே தெரியும். அதுவும் பத்திரிக்கைகளின் வாயிலாகத் தான் தெரியும். ஆனால் நாடகத்தில் வசனங்களுக்கு உடனுக்குடன் கிடைக்கும் கைத்தட்டல் என்பது நல்ல அனுபவம் மட்டுமல்லாமல் மகிழ்ச்சியையும் தரும்.

    எனவே நாடகத்துறையை என்னால் மறக்கவே முடியாது. என் நாடகத்துறை பயணத்தை மிக அழகாக எழுதிய சுபாஷிணிக்கு என்னோட வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    - சித்ராலயா’ கோபு

    முன்னுரை

    பொதுவாகவே சில பெண் எழுத்தாளர்கள் எதிர்மறை விஷயங்களைப் பற்றி நிறைய எழுதறாங்க.

    ஒரு பெண் ஆரம்பத்தில் கஷ்டப்படுவா. அவ வெகுண்டு எழுந்து தன்னைக் கஷ்டப்படுத்தினவங்களுக்கு புத்தி புகட்டுவா.

    மில்ஸ் அண்ட் பூன் கதை மாதிரி ஆண் ஆட்டிப் படைப்பனாகவும், பெண் புத்தி புகட்டுபவளாகவும் ஸ்டீரியோ டைப் கதைகளை மட்டுமே அதிகம் எழுதுகிறார்கள்.

    ஆண் என்றால் ஆட்டிப் படைப்பவன். பெண் என்றால் அவனை வழிக்குக் கொண்டு வருபவள் என்ற தண்டவாளத்திலேயே எழுதுகிறார்கள்.

    இல்லாவிட்டால் மாமியார், மருமகள் சண்டை, ஒருவரை ஒருவர் ஒழிப்பது என்று மதிய நேர டி. வி. சீரியல் கதைகளைப் போல எதிர்மறையான கருத்துகளை வைத்து எழுதுகிறார்கள்.

    நேர்மறையான எழுத்துகளை எழுதுபவர்களும் இல்லாமல் போகவில்லை. அதில் சுபாஷிணி ரமணனும் ஒருவர்.

    என் அம்மா கமலா சடகோபன் பல பரிசு பெற்ற நாவல்களை எழுதியிருக்கிறார். அவர் மனோதத்துவ ரீதியான கதைகளை எழுதுவார்.

    அவர், ஒரு கதை எழுதினால் அதனால் நாலு பேராவது பாதிப்படைய வேண்டும். அதை பாடமாக அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்என்று கூறுவார்.

    அவர் எழுதிய ‘கதவுகள்’கதையைப் படித்தவர்களில் பல பேர் மறுபடி இணைந்து, என் தாய், தந்தைக்கு நன்றி சொல்லி விட்டுச் சென்றார்கள்.

    அந்த மாதிரி ஒரு நேர்மறையான எழுத்தை சுபாஷிணி ரமணனிடம் பார்க்கிறேன்.

    அதுவும் அவர் ஆண் எழுத்தாளர்களுக்கு நிகராக ஆய்வு செய்தும் எழுதி வருகிறார். ஒரு விஷயத்தைப் பற்றி எழுதும் போது பொத்தாம் பொதுவாக எழுதாமல், ஆழமாக, நுண்ணிய தகவல்களைத் திரட்டி எழுதுகிறார்.

    இது ஒரு நல்ல விஷயம். இப்போது நாடகங்களையும், திரைப்படங்களையும் பற்றி எழுதியிருக்கிறார். அதில் என் அப்பா ‘சித்ராலயா’கோபு எழுதி இயக்கிய, காசேதான் கடவுளடாநாடகம் பற்றியும், திரைப்படம் பற்றியும் எழுதி இருக்கிறார்.

    அதைப் பற்றி என் அப்பா, நானே மறந்து போன விஷயத்தைப் பற்றியெல்லாம் தேடி எடுத்திருக்காங்க. இது ஒரு நல்ல விஷயம் என்று சொன்னார்.

    அது மாதிரி எழுத்து மேல ஒரு பக்தி இருக்கணும். அது இந்த அம்மையாருக்கு நிறையவே இருக்கு. சுபாஷிணியோட இந்த நூல் நிச்சயமாக நல்ல வரவேற்பைப் பெறும்.

    ஏனென்றால் நாடகத் துறையே அழிந்து வரும் இன்றைய நிலையில் இவர் ஆய்வு செய்து எழுதியிருப்பது ஒரு மறுமலர்ச்சியைக் கொண்டுவரும் என்று நினைக்கிறேன்.

    இந்த மாதிரி இவர் நிறைய ஆய்வு செய்து எழுதி வருங்காலச் சந்ததியருக்கு நாடகத் துறை மற்றும் திரைப்படத் துறைப் பற்றிய செய்திகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.

    - காலச்சக்கரம்’ நரசிம்மன்

    என்னுரை

    இயல், இசை, நாடகம் என்ற மூன்றும் சேர்ந்து முத்தமிழ் என்ற சிறப்புப்பெயரால் தமிழில் அழைக்கப்படுகிறது. இது வேறு எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பாகும்.

    சங்க காலத்திலிருந்தே நாடகத்திற்கும் சிறப்பிருந்திருக்கிறது என்பதை ‘நாடக வழக்கிலும் உலகியல் வழக்கினும்

    பாடல் சான்ற புலனெறி வழக்கம்’

    என்ற தொல்காப்பிய வரிகளால் அறியலாம்.

    நாடகம் எழுதும் ஆசிரியன் முத்தமிழும் அறிந்தவனாக இருத்தல்வேண்டும் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

    அத்துடன் நாடக மேடை அமைப்பு, தூண்கள், விளக்குகள் வைப்பதற்கான இடங்கள் என்று அனைத்தும் ‘அரங்கேற்று காதை’யில் விளக்கப்படுகிறது.

    அத்தகைய சிறப்புகளுடன் கொண்டாடப்பட்ட நாடகக்கலை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஏறத்தாழக் கீழ்நிலை அடைந்திருந்தது என்றே கூறல் வேண்டும். இச்சூழ்நிலையை மாற்றியமைத்த பெருமை தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளைச் சேர்ந்தது எனலாம். மொழிக்குத் தொண்டு செய்வதன் மூலம் தம்காலத்து வாழ்ந்த மக்களுக்கும் அடிகளார் தொண்டு செய்தார் என்பது வியப்புக்குரியது.

    சுவாமிகள் இயற்றிய ‘வெள்ளை வாணி’(இன்கவித்திரட்டு-7) என்ற நூலில் கீழ் வருமாறு பாடுகிறார்.

    தேவரும் மகிழ்கின்ற செந்தமிழ்நாடகம்

    சீர்கெட்டுப் போச்சுதம்மா

    சித்தம் மெலிவாக வாடுகின்றோம்

    செம்மை செய்துதாராய் வேண்டிநின்றோம்

    தினமும் புகழ்கின்றோம்

    செவித்து மகிழ்கின்றோம்

    திருவடி மலரையலால்

    ஒரு துணையே தருள்வாய்-வெள்ளைவாணி (புத்தகத்தில் கண்டபடி அப்படியே எழுதி இருக்கிறேன்)

    பரிதிமாற்கலைஞர் என்னும் சூரிய நாராயண சாஸ்திரியார் ‘நாடக இயல்’என்ற நாடக இலக்கண நூல் ஒன்றை எழுதியிருக்கிறார்.

    இந்நூற்றாண்டு நாடக வரலாற்றில் முக்கிய இடம் பெறும் ஒரு சிலருள் பம்மல் சம்பந்த முதலியாரும் ஒருவர். ஆங்கில, வட மொழி நாடகங்கள் பலவற்றை மொழி பெயர்த்த சம்பந்த முதலியார் பல நாடகங்களை தானே எழுதியும், நடித்தும் வந்தார்.

    தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்,

    பம்மல் சம்மந்த முதலியார்,

    பரிமாற் கலைஞர்

    ஆகிய மூவரையும் மேடை நாடக முன்னோடிகள் என்று கூறுவது மிகப் பொருத்தம்.

    சங்கரதாஸ் சுவாமிகளை ‘தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்’ என்றும், சம்மந்த முதலியாரை’நாடகத் தந்தை’ மற்றும்’நாடகப் பேராசிரியர்’ என்றும், பரிதிமாற் கலைஞரை ‘நாடகவியலார்’ என்றும் குறிப்பிடுவர்.

    ஆரம்ப காலத்தில் பாட்டுகளுடன் நடத்தப்பட்டு வந்த நாடகங்கள், பின்னர் வசனங்களுடன் கூடிய பாடல்களாக உருவெடுத்து, பின்னர் வசனங்கள் மட்டும் என்று மாறுதல் அடைந்திருக்கிறது.

    மரபோடு கூடிய கவிதைகள் புதுக் கவிதைகள், வசன கவிதைகள் என்றும் மாற்றம் பெற்றது போல், பாடல்களோடு வளர்ந்த நாடகக் கலை வசனங்கள் மட்டும் என்று மாறியது. சினிமாக்கலை வளர்ந்த பிறகு, நாடகக்கலை அடியோடு நசிந்து விட்டது என்று கூற முடியாது.

    நாடகங்களில் நடித்தவர்களே திரையிலும் நுழைந்து ஜெயித்தார்கள். இப்போதும் நாடகங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

    முன்பு போல் படிப்பதற்கு நாடகங்கள் எழுதப்படுவதில்லை என்ற குறையைத் தவிர தனக்கான ரசிகர்களோடு ஒவ்வொரு குழுவும் பயணித்துக் கொண்டே தான் இருக்கிறது.

    பல மேடை நாடகங்கள் திரைப்படங்களாகவும் வெளிவந்துள்ளன. அவற்றில் படிக்கக் கிடைத்த புத்தகங்களைத் திரைப்படங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் சிறு முயற்சியே இந்நூல்.

    அவற்றில் சங்கரதாஸ் சுவாமிகளின்

    ‘வள்ளித் திருமணம்’, பம்மல் சம்மந்த முதலியாரின், ‘மனோகரா’, அரு. இராமநாதனின் ‘இராஜ ராஜ சோழன்’,

    கு ச. கிருஷ்ணமூர்த்தியின் ‘அந்தமான் கைதி’

    பி. எஸ். ராமையாவின்

    ‘போலீஸ்காரன் மகள்’,

    கோமல் சுவாமிநாதனின்’தண்ணீர் தண்ணீர் ‘

    வியட்நாம் வீடு சுந்தரத்தின்’ஞான ஒளி’

    சித்ராலயா கோபுவின் ‘காசேதான் கடவுளடா’

    சோ ராமசாமியின் ‘முகமது பின் துக்ளக் ‘ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து எழுத முயற்சி செய்தேன்.

    இவை நாடகங்களாகவும், திரைப்படங்களாகவும் வந்தவை. என்னால் முடிந்தவரை இணையத்திலிருந்தும், சம்மந்தப் பட்டவர்கள் எழுதிய புத்தகங்களிலிருந்தும் தகவல்களைத் திரட்டித் தந்திருக்கிறேன்.

    இரண்டின் கதைச் சுருக்கங்களையும், இடம் பெற்ற பாடல்கள், நடித்தவர்கள் பற்றிய தகவல்களைத் தர முயற்சி செய்திருக்கிறேன்.

    ஆங்காங்கே சில கருத்துகள் என்னால் சொல்லப்பட்டவை. சிலவற்றைச் சுருக்கிச் சேர்த்திருக்கிறேன். சிலவற்றை ஆசிரியரின் கருத்தை ஒட்டி சேர்க்கவும் செய்திருக்கிறேன்.

    மற்றபடி மூலக்கருத்தை அப்படியே பதிவு செய்திருக்கிறேன்.

    நாடகக் கருத்துகள் புத்தகத்திலிருந்தும், திரைப்படத்தைப் பற்றிய கருத்துகள், செய்திகள் யூ டியூப் மற்றும் இணையத்திலிருந்தும் எடுக்கப்பட்டவை.

    இதில் ‘வள்ளித் திருமணம்’

    ‘மனோகரா’

    ‘இராஜ ராஜ சோழன்’

    ‘அந்தமான் கைதி’ஆகியவை இணையத்தில் கிடைத்தவை.

    ‘போலீஸ்காரன் மகள்’ ‘முகமது பின் துக்ளக்’ இரண்டும் புத்தகமாய் வாங்கியவை. ‘ஞான ஒளி’

    ‘தண்ணீர் தண்ணீர் ‘வாரப் பத்திரிக்கைகளில் தொடராக வெளிவந்தவை.

    ‘காசேதான் கடவுளடா’இணையத்திலிருந்தும், கோபுவின் மகன் ‘காலச்சக்கரம் நரசிம்மா ‘எழுதிய சி(ரி)த்ராலயா புத்தத்திலிருந்தும் எடுக்கப் பெற்றவை.

    இதில் வள்ளித் திருமணம் புராணம் சம்மந்தப் பட்டது என்பதால் பலபேர்கள் எழுதியிருக்கிறார்கள். இதில் சங்கரதாஸ் சுவாமிகள் எழுதியதையே பயன்படுத்தி இருக்கிறேன்.

    அன்புடன்,

    ஆர். சுபாஷிணி ரமணன்.

    நன்றியுரை

    ‘காலச்சக்கரம்’ நரசிம்மா விடம் பேசிக் கொண்டிருந்த போது ‘நீங்கள் என்ன இப்போது எழுதிக் கொண்டு இருக்கிறீர்கள்? என்று கேட்டார். நான் ஏற்கனவே ‘கதைகளும் திரைப்படங்களும்’என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறேன்.

    இப்போது மேடை நாடகத்திலிருந்து திரைப்படமாக்கப்பட்டவைகளைப் பற்றி எழுதிக் கொண்டு இருப்பதைத் தெரிவித்தேன். உடனே

    Enjoying the preview?
    Page 1 of 1