Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Amateur Nadagangalin Varalaru
Amateur Nadagangalin Varalaru
Amateur Nadagangalin Varalaru
Ebook101 pages40 minutes

Amateur Nadagangalin Varalaru

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்றைய தென்னிந்தியா முழுவதுமே ‘தெருக்கூத்துகளும்’ புராண நாடகங்களும் தொழில்-முறை நாடகக் குழுக்களால் நடத்தப்பட்டு வந்த காலகட்டத்தில், ‘அமெச்சூர்’ நாடகக்குழுவைத் தோற்றுவித்து, பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்த, ஆனால் நாடகக் கலையில் ஈடுபாடு கொண்டவர்களை மட்டும் சேர்த்துக்கொண்டு நாடகங்களை எழுதித் தயாரித்து, இயக்கி மேடையேற்றினார். அமெச்சூர் நாடகங்கள் எவ்வாறு தோன்றியது என்பதை வாசித்து அறியலாமா…

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580136806799
Amateur Nadagangalin Varalaru

Read more from Aranthai Manian

Related to Amateur Nadagangalin Varalaru

Related ebooks

Reviews for Amateur Nadagangalin Varalaru

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Amateur Nadagangalin Varalaru - Aranthai Manian

    https://www.pustaka.co.in

    அமெச்சூர் நாடகங்களின் வரலாறு

    Amateur Nadagangalin Varalaru

    Author:

    அறந்தை மணியன்

    Aranthai Manian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/aranthai-manian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    அன்றைய மதராசிலும் தென்னிந்தியா முழுவதுமே ‘தெருக்கூத்துகளும்’ புராண நாடகங்களும் தொழில்முறை நாடகக் குழுக்களால் நடத்தப்பட்டு வந்த காலகட்டத்தில், ‘பம்மல்’ சம்பந்த முதலியார் என்ற வழக்குரைஞர் 1891 ஆம் ஆண்டிலேயே ‘சுகுண விலாச சபா’ என்ற பெயரில் ஓர் ‘அமெச்சூர்’ நாடகக்குழுவைத் தோற்றுவித்து, பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்த, ஆனால் நாடகக் கலையில் ஈடுபாடு கொண்டவர்களை மட்டும் சேர்த்துக்கொண்டு நாடகங்களை எழுதித் தயாரித்து, இயக்கி மேடையேற்றினார்.

    அக்குழு நாடகங்களில் பிரபலமான பலர் – சி.பி.ராமசாமி ஐயர், காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி – போன்றோரெல்லாம் கூட நடித்திருக்கிறார்கள்.

    ‘பம்மல்' சம்பந்த முதலியார் (1873 - 1964)

    'தமிழ் நாடகப் பேராசிரியர்' என்று புகழப்படும் 'பத்மபூஷண்' சம்பந்த முதலியார்தான் 'அமெச்சூர்' (தொழில் முறையில்லாத) நாடகக் குழுவை முதன் முதலாக மதராஸ் பட்டணத்தில் தொடங்கியவராகும்.

    பொதுவாக எல்லோரும் எண்ணிக்கொண்டிருப்பது ‘சங்கரதாஸ் சுவாமிகளின் தொழில்-முறை நாடகக் குழுக்கள்தான் முதலில் தோன்றியவை, பின்னர்தான் 'அமெச்சூர்'நாடகக் குழுக்கள் தோன்றின என்றுதான்! உண்மையில் 1891ஆம் ஆண்டிலேயே முதலியார் தமது 'சுகுண விலாச சபா' என்ற 'அமெச்சுர்' நாடகக் குழுவைத் தொடங்கி விட்டார்; ஆனால் சங்கரதாஸ் சுவாமிகளோ 1910 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் தமது தொழில்-முறை நாடகக்குழுவைத் தொடங்கினார் (அதற்கு முன்பாக அவர் பல குழுக்களில் நடிகராகத்தான் இருந்தார்).

    இன்றைய சென்னை நகரின் ஒரு பகுதியாக மாறி விட்ட 'பம்மல்' கிராமத்தை சேர்ந்த விஜயரங்க முதலியாரின் நான்காவது மகனாகப் பிறந்தவர் 'திருஞானசம்பந்தம்'. அவரது அன்னையாரின் ஊர் சென்னை என்பதால், சென்னையில் பிறந்த சம்பந்தம், ஒரு திண்ணைப்பள்ளியில் படிக்கத் தொடங்கி மாநிலக் கல்லூரியில் இளநிலைப் பட்டம் பெற்று, சட்டம் பயின்று பி.எல்.பட்டமும் பெற்று, தமது அண்ணன் ஏற்கெனவே வக்கீலாக இருந்ததால் அவரது 'சேம்பரில்' சேர்ந்து வக்கீலாகப் பதிவு செய்து கொண்டார்.

    பள்ளியிலும் கல்லூரியுி்லும் படிக்கும்போதே அவருக்கு நடிப்பு, நாடகம் ஆகியவற்றில் ஈடுபாடு இருந்ததால் தம்முடன் பள்ளி, கல்லூரியில் ஒன்றாகப் படித்த நண்பரான வி.வி.சீனிவாச ஐயங்கார் என்பவருடன் இணைந்து, 1891 ஆம் ஆண்டு 'சுகுண விலாச சபா' என்ற நாடகக் குழுவைத் தொடங்கினார்.

    'தொழில்-முறை' நாடகங்கள் ஏராளமாக நடத்தப்பட்டுக்கொண்டிருந்த அக்காலகட்டத்தில் நடிப்பைத் தொழிலாகக் கொள்ளாத, உயர்மட்டக் குடும்பங்களைச் சேர்ந்த, பல்வேறு பணிகளில் இருந்த இளைஞர்களை தமது நாடகக் குழுவில் இணைத்துக்கொண்டு அவர்களுக்குப் பயிற்சி கொடுத்து நடிக்க வைத்தார். பல வக்கீல்களும், அரசுத்துறை

    அதிகாரிகளும் கூட அவரது நாடகங்களில் நடித்தார்கள். புகழ் பெற்ற சி.பி.ராமசாமி அய்யர், வி.சி.கோபாலரத்தினம், சத்தியமூர்த்தி ஆகியோரும் அவர்களில் சிலர்.

    வக்கீல் தொழிலுக்குக் காட்டிய அக்கறையை விட அதிகமாக நாடகங்கள் இயற்றுவதிலும், தயாரிப்பதிலும், நடிப்பதிலும் அதிக அக்கறை காட்டினார் சம்பந்தம்.

    நீதி மன்றத்தில் ஆஜராக அதிகபட்சமாக ஆயிரம் ரூபாய் கூட ஒரு நாளைக்கு வாங்கிகொண்டிருந்த அவர் மாலையானால் நடிக்கப் போய் விடுவார்.

    தொழில் முறை நாடகங்கள் இரவு முழுவதும் நடந்து கொண்டிருந்த அக்கால கட்டத்தில் இரவு ஏழு மணிக்குத் தொடங்கி பதினோரு மணிக்குள் நாடகத்தை முடிக்கும் வழக்கத்தை

    அவர்தான் ஆரம்பித்து வைத்தார். அவரது நாடகங்களில் பாடல்களும், நடனங்களும் இருந்ததில்லை. 'அசட்டுப் பிசட்டு’ என்று நகைச்சுவைக் காட்சிகள் இருக்காது.

    பார்வையாளர்களும், நாடகக் குழுவினரும் இரவு வீட்டுக்கு சென்று உறங்கி விட்டு, மறுநாள் காலையில் தத்தம் பணிகளில் ஈடுபடும் வகையில் அவரது நாடகங்கள் அமைந்திருந்தன.

    முதலில் பல இடங்களில் இருந்த அரங்கங்களில் நாடகங்களை நடத்திக்கொண்டிருந்த சம்பந்தனார், சொந்தமாக அண்ணா சாலையில் ஓரிடத்தை விலைக்கு வாங்கி அங்கே நிரந்தர நாடக அரங்கத்தைக் கட்டிக்கொண்டு அங்கேயே தமது நாடகங்களை நடத்தத்தொடங்கினார். (அந்த அரங்கம் பின்னர் 'பிளாசா' என்ற திரைப்பட அரங்கமாக

    மாறி தற்சமயம், ஒரு 'மனமகிழ் மன்றமாக' சீட்டு விளையாடும், மது அருந்தும் இடமாக 'சுகுண விலாச சபா கிளப்’' என்ற பெயரிலேயே, -சீட்டு விளையாடாத, மது அருந்தாத அவருக்கு -

    ஒரு மோசமான 'நினைவிடமாக' திகழ்கிறது.)

    'பம்மல்' சம்பந்த முதலியார் 1891முதல் 1936 வரை 90 நாடகங்களுக்கும் மேல் இயற்றியிருக்கிறார். அவற்றில் குறிப்பிடத்தகுந்தவை வருமாறு:-

    மனோகரா, லீலாவதி-சுலோச்சனா, கள்வர்-தலைவன், விக்கிரம-ஊர்வசி', சாரங்கதரன், இரண்டு நண்பர்கள், நற்குல தெய்வம், சத்ருஜித், யயாதி, மார்க்கண்டேயர், சபாபதி, விஜயரங்கன், காதலர்-கண்கள், பேயல்ல-பெண்மணியே, மங்கபதி மெய்க்காதல், பொன்விலங்கு, சிம்ஹலநாதன், விரும்பிய விதமே, சிறுத்தொண்டர், காலவரிஷி,

    வாணிபுர வணிகன், ராஜபுத்திரன், ஹரிச்சந்திரா, இரத்தினாவளி, புஷ்பவள்ளி, கீதமஞ்சரி, ஊர்வசியின் சபதம், அமலாதித்யன், வெள்ளிமணம், வேதாள உலகம், புத்த அவதாரம், மனைவியாய் மீண்டவள், தாசிப்பெண், சுபத்ரா-அர்ஜுனா, சகுந்தலை, கொடையாளி கர்ணன், சகாதேவனின் சூழ்ச்சி, இடைச் சுவர் இருபுறம், ஓர் ஒத்திகை, பிராமணரும்-சூத்திரரும், சந்திரஹரி, மாளவிகா-அக்னிமித்திரன்.

    சமூக, சரித்திர, புராண, நகைச்சுவை, என்று எல்லா வகைகளிலும் அவர் நாடகங்களை இயற்றியிருக்கிறார்.

    நாடகங்களை இயற்றிக்கொண்டிருந்தபோதே, அவர் எழுதிய நூல்களாவன:-

    'கீதமஞ்சரி', 'நாடகத்தமிழ்', 'நாடகமேடையில் தேர்ச்சி பெறுவது எப்படி?', நாடகமேடை அனுபவங்கள், 'பேசும்பட-அனுபவங்கள்'.

    1924 ஆம் ஆண்டில் சி.பி.ராமசாமி அய்யரின் வேண்டுகோளின்படி, சம்பந்தனார் சென்னை 'சிறுவழக்குகள்-நீதிமன்றத்தில் ('Small-causes-court) நீதிபதியாக வெள்ளையர் அரசால் நியமிக்கப் பட்டார்.

    நீதிபதியாகப் பணியாற்றிக்கொண்டிருக்கும்போது கூட, சிறப்பு

    Enjoying the preview?
    Page 1 of 1