Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aachi Manorama
Aachi Manorama
Aachi Manorama
Ebook267 pages1 hour

Aachi Manorama

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆச்சி மனோரமாவைப் பற்றிச் சொல்ல வார்த்தைகள் கிடையாது. அன்பு, நேசம், பாசம், மனிதநேயம் போன்றவற்றின் பிறப்பிடமாகத் திகழ்ந்தார் ஆச்சி. செட்டி நாட்டில் பிறக்கவில்லை என்றாலும் அங்கு வாழ்ந்த காரணத்தால் ‘ஆச்சி’ என்னும் அடைமொழியைப் பெற்றார். இவர் கடந்து வந்த பாதை மிகக் கரடு முரடானது. இவர் அனுபவித்த கஷ்டங்களும், துன்பங்களும் கடல் அளவு என்றால் மிகையல்ல. காலத்தை எதிர்நீச்சல் போட்டு வெற்றிகரமாகக் கரை சேர்ந்த தாய் மனோரமா.

நடிப்புத் திறமையால் புகழின் உச்சத்தை அடைந்தார் ஆச்சி மனோரமா. இன்று அவர் நம்மிடையே இல்லை என்றாலும், அவரது நினைவுகள் இன்றும் நம்மைச் சுற்றிக் கொண்டே இருக்கின்றன என்பதே உண்மை. இவரைப் பற்றின சுவாரஸ்யமான தகவல்களை இந்தப் புத்தகத்தில் காணலாம்.

Languageதமிழ்
Release dateSep 3, 2022
ISBN6580156709012
Aachi Manorama

Read more from Kundril Kumar

Related to Aachi Manorama

Related ebooks

Reviews for Aachi Manorama

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aachi Manorama - Kundril Kumar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஆச்சி மனோரமா

    Aachi Manorama

    Author:

    குன்றில் குமார்

    Kundril Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kundril-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    1. ஆச்சி மனோரமா

    2. வறுமையின் கொடுமை

    3. நல்ல பழக்கம்

    4. பெயர் மாற்றம்

    5. பொய்ப் பிரச்சாரம்

    6. திரைப்பட வாய்ப்பு

    7. அண்ணாவின் பாராட்டு

    8. மறக்க முடியாத அனுபவங்கள்

    9. தந்தையாக..

    10. பணத்தை எண்ணாதே

    11. தாய்மை என்றால்...

    12. அதிகமாகப் பணம் வாங்கு

    13. விபத்து

    14. இப்படியும் மனிதர்கள்

    15. இந்தி படத்தில் வாய்ப்பு

    16. சினிமா ஆசை

    17. கண்ணதாசனின் வருத்தம்

    18. கற்ற பாடம்

    19. குடும்ப வாழ்க்கை

    20. மகன் பூபதி

    21. நல்ல கதாபாத்திரம்

    22. இறுதி யாத்திரை

    என்னுரை

    ஆச்சி மனோரமாவைப் பற்றிச் சொல்ல வார்த்தைகள் கிடையாது.

    அன்பு, நேசம், பாசம், மனிதநேயம் போன்றவற்றின் பிறப்பிடமாகத் திகழ்ந்தார் ஆச்சி.

    செட்டி நாட்டில் பிறக்கவில்லை என்றாலும் அங்கு வாழ்ந்த காரணத்தால் ‘ஆச்சி’ என்னும் அடைமொழியைப் பெற்றார்.

    இவர் கடந்து வந்த பாதை மிகக் கரடு முரடானது.

    இவர் அனுபவித்த கஷ்டங்களும், துன்பங்களும் கடல் அளவு என்றால் மிகையல்ல.

    காலத்தை எதிர்நீச்சல் போட்டு வெற்றிகரமாகக் கரை சேர்ந்த தாய் மனோரமா.

    ஐந்து முதல்வர்களுடன் நடித்த ஒரே நடிகை யார் என்று கேட்டால் கண்ணை மூடிக் கொண்டு சொல்லி விடலாம் ஆச்சி மனோரமா என்று.

    1500 திரைப்படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஒரே தமிழ் நடிகை. அவர் பெற்ற விருதுகள் கணக்கிலடங் காதவை

    பள்ளிப்படிப்பைத் தொடக்கத்திலேயே தொடர முடியாமல் நிறுத்திக் கொண்டவர் என்றாலும், அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற படிக்காத மேதை மனோரமா.

    நடிப்புத் திறமையால் புகழின் உச்சத்தை அடைந்தார் ஆச்சி மனோரமா.

    இன்று அவர் நம்மிடையே இல்லை என்றாலும், அவரது நினைவுகள் இன்றும் நம்மைச் சுற்றிக் கொண்டே இருக்கின்றன என்பதே உண்மை.

    குன்றில்குமார்

    1. ஆச்சி மனோரமா

    திருவாரூர் மாவட்டம் ராஜமன்னார் குடியில் பிறந்தவர் மனோரமா. இவரது பெற்றோர் இவருக்கு சூட்டிய பெயர் கோவிந்தம்மாள். கோபிசாந்தா என்றே இவரை அழைத்து வந்தனர்.

    தமிழ்த் திரை உலகில் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ‘ஆச்சி’ என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப் பட்டார் மனோரமா.

    அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகிய பெருந்தலைவர்களுடன் நாடகங்களில் இணைந்து நடித்துள்ள பெருமை மனோரமாவிற்கு உண்டு.

    மற்றும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தவிர, ஆந்திராவின் என்.டி.ராமராவ் என்று மொத்தம் ஐந்து முதல்வர்களுடன் நடித்த பெருமைக்குரியவர் இவர்.

    மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்த சிறப்புமிக்க ஆச்சி, ஆரம்ப காலத்தில் நாடகத் துறையின் மூலமாகக் கலைத்துறை என்னும் மாளிகைக்குள் காலடி எடுத்து வைத்தார்.

    பின்னர் பிரம்மாண்டமான வெள்ளித் திரையில் தனி முத்திரை பதித்த ஆச்சி, அதன்பிறகு சின்னத்திரையிலும் காலூன்றி அனைத்து இல்லங்களுக்குள்ளும் நுழைந்து புகழ் பரப்பினார்.

    அம்மா, ஆச்சி, வில்லி, காமெடி, பாடல் என்று பல்வேறு முகங்களைக் கொண்டவராக நடித்து புகழின் உச்சத்தைத் தொட்டவர் மனோரமா.

    தான் நடித்த ஒவ்வொரு கேரக்டரிலும் தனி முத்திரையைப் பதித்தார் ஆச்சி மனோரமா. 

    நடிப்புத் துறையில் ஐம்பது ஆண்டுகளைக் கடந்து பொன்விழா கொண்டாடி ரசிகப் பெருமக்களை மகிழ்வித்தார்.

    தனது பன்னிரெண்டாவது வயதில் நாடகத்தில் முதன் முதலாக நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார். ‘யார் மகன்?’ என்பதுதான் முதன்முதலாக இவர் நடித்த நாடகத்தின் பெயர்.

    அன்றைய நாட்களில் ‘அந்தமான் கைதி’ என்னும் நாடகம் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. அந்த நாடகத்திலும் மனோரமா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    அறிஞர் அண்ணா எழுதி மிகப் பிரபலமாகப் பேசப்பட்ட ‘வேலைக்காரி’ என்னும் நாடகத்திலும் இவர் நடித்துள்ளார்.

    கலைஞர் கருணாநிதி எழுதிய ‘உதயசூரியன்’ என்னும் நாடகத்தில் கருணாநிதி கதாநாயகனாக நடித்தார். அந்த நாடகத்தில் கதாநாயகியாக கருணாநிதிக்கு ஜோடியாக நடித்தவர் ஆச்சி மனோரமா.

    ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடகங்களில் மனோரமா நடித்துள்ளார்.

    நாடக இயக்குநர் திருவேங்கடம் மற்றும் ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜன் ஆகியோர் ‘மனோரமா’ என்னும் அழியாப் புகழ்மிக்க இப்பெயரை அவருக்குச் சூட்டினார்கள்.

    இவ்வாறு நாடகங்களில் நடித்துவந்த மனோரமாவிற்கு முதன்முதலாக 1958ஆம் ஆண்டு வெள்ளித் திரையில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. கவிஞர் கண்ணதாசன் இந்த அருமையான வாய்ப்பை அவருக்கு நல்கினார். அந்தத் திரைப்படத்தின் பெயர் ‘மாலையிட்ட மங்கை’. இதில் காமெடி ரோலில் நடித்தார் ஆச்சி.

    தொடர்ந்து காமெடி ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வந்தது. பிரபல நகைச்சுவை நடிகர் நாகேஷுடன் இணைந்து ஏராளமான படங்களில் நகைச்சுவைக் காட்சிகளில் கலக்கினார் மனோரமா.

    நாகேஷ் - மனோரமா இணையைத் திரையில் பார்த்ததுமே தியேட்டர்கள் சிரிப்பலையால் மூழ்கிவிடும். நகைச்சுவைக் காட்சிகள் அந்த அளவிற்குக் கலக்கலாக இருக்கும். இவர்களின் காமெடியை ரசிப்பதற்காகவே திரைப்படங்கள் பிரமாதமாக ஓடியதும் உண்டு.

    இவருக்குப் பெருமை சேர்த்த திரைப்படம் என்று சொன்னால் ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தைச் சொல்லலாம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நாட்டியப் பேரொளி பத்மினி உள்ளிட்டோர் நடித்த மிகப் பிரபலமான படம் இது. ‘ஜில் ஜில் ரமாமணி’ என்னும் கதாபாத்திரத்தில் நடித்த இவரின் நடிப்பு பெரிதும் வரவேற்பைப் பெற்றது. இன்று வரை இந்தப் படத்தில் இவரது நடிப்பைப் பற்றிப் பேசாதவர்களே இருக்க முடியாது.

    சிவாஜி கணேசன், பத்மினி, டி.எஸ்.பாலையா போன்ற முன்னணி நடிகர்கள் பலர் நடிக்கிற படம் என்பதால் இதில் நடிப்பதற்கு ரொம்பவே தயங்கினார் மனோரமா. நடிக்க முடியாது என்றும் மறுத்துவிட்டார். ஆனாலும் இயக்குநர் இவருக்கு மிகுந்த தைரியம் கொடுத்த பிறகே நடிக்க ஒப்புக்கொண்டார்.

    ஏற்கெனவே சிறுவயதில் பாடல்களைப் பாடுவதில் மிகுந்த ஆர்வம் உடையவராக இருந்த காரணத்தால் திரைப்படங்களில் பாடல்கள் பாடும் வாய்ப்பும் பின்னர் கிடைத்தது. பாடிக் கொண்டே நடித்தார்.

    தயாரிப்பாளர் குமார் என்பவர் ‘மகளே உன் சமத்து’ என்னும் திரைப்படத்தில் முதன்முதலாக இவருக்குப் பாடல் பாடும் வாய்ப்பைத் தந்தார்.

    தாத்தா தாத்தா பிடி கொடு

    இந்த தள்ளாத வயசில சடுகுடு

    என்பதுதான் முதலில் ஆச்சி பாடிய பாடல்.

    ‘வா வாத்தியாரே வூட்டாண்டே’ என்ற பாடல் இவரது சூப்பர் ஹிட் பாடலாக அமைந்தது. அன்றைய நாட்களில் இந்தப் பாடலை முணுமுணுக்காதவரே கிடையாது என்று சொல்லலாம்.

    ‘டில்லிக்கு ராஜாவானாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே’, ‘மெட்ராச சுத்திப் பாக்கப் போறேன்’ போன்ற இவரது பல பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

    ரத்த திலகம் படத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய ‘போகாதே போகாதே என் கணவா...’ என்ற பாடல்தான் இவர் பாடிய முதல் சினிமா பாடல்.

    தமிழ் திரைப்படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல் களைப் பாடியுள்ளார் மனோரமா.

    பக்கம் பக்கமாக வசனம் இருந்தாலும் அவற்றை ஒரே நொடியில் மனப்பாடம் செய்து கொண்டு தனது ஸ்டைலில் அழகாகப் பேசி நடிக்கும் திறமை பெற்றவர் ஆச்சி.

    தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, சிங்களம் என்று மொத்தம் ஆறு மொழிப் படங்களில் நடித்த பெருமை மனோரமாவிற்கு உண்டு.

    இத்தனை பெருமையும் சிறப்பும் உடைய ஆச்சி மனோரமாவின் ஆரம்பகால வாழ்க்கை மிகுந்த துன்பமும், துயரமும், வறுமையும், ஏழ்மையும் நிறைந்ததாக அமைந்திருந்தது.

    சுனாமியில் சிக்கிய சிறிய படகு கரை சேர்ந்தால் அது எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். கடலில் எவ்வளவு மோசமான சம்பவங்களைக் கடந்து அது கரையை வந்தடைந்திருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்.

    அத்தனை கஷ்டங்களை அனுபவித்த பின்னரே தன் வாழ்வின் கட்டமைப்பைத் துணிவுடன் மாற்றி அமைத்தார்.

    பிற்காலத்தில் ஒரு இன்பமயமான வாழ்வை அவர் அனுபவித்தார் என்பது ஆச்சரியமான உண்மை. ஆனால் அதற்காக அவர் அனுபவித்த கஷ்டங்கள், துயரங்கள் மிக அதிகம்.

    அவரது வாழ்க்கைப் பயணத்தை இனிமேல் நாம் பார்க்கலாம்.

    அன்றைய தஞ்சை மாவட்டத்தில் ராஜமன்னார்குடி என்னும் சிற்றூரில் 1937ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் தேதி பிறந்தார் மனோரமா.

    தற்போது இந்த ஊர் திருவாரூர் மாவட்டத்தில் இணைந்துள் ளது. மன்னார்குடியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ராஜமன்னார்குடி.

    இவரது தந்தை காசி கிளாக் உடையார். தாயார் ராமாமிர்தம்.

    தந்தை காசி கிளாக் உடையார் நல்ல வசதியானவர். வீடு, நிலபுலன்கள் என்று செல்வச் செழிப்பு மிக்கவர்.

    சாலை ஒப்பந்தக்காரராகப் பணியாற்றியதால் நிறைய வருமா னம் கிடைத்து வந்தது இவருக்கு.

    ராமாமிர்தத்தைத் திருமணம் செய்த பின்னர் இவரது வாழ்க்கை மிகுந்த சந்தோஷமாகத்தான் இருந்தது. இனிப்பான இல்லற வாழ்க்கை.

    இவர்களின் மகிழ்ச்சியான தாம்பத்ய வாழ்க்கையின் பரிசாகத் தான் பெண் குழந்தை ஒன்று கிடைத்தது. தனது முதல் குழந்தை. அக்குழந்தையைக் கொஞ்சி விளையாடினார். சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார் காசி கிளாக்.

    தனது மகளுக்கு கோபிசாந்தா என்ற பெயரைச் சூட்டினார்.

    மொத்தத்தில் கோபிசாந்தா பிறந்த பிறகு அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சி நிரம்பி வழியத்தான் செய்தது.

    யாருடைய கண்திருஷ்டி விழுந்ததோ தெரியவில்லை, குடும்பத்தில் புகைச்சல் ஏற்படத் தொடங்கியது. ராமாமிர்தத்தோடு காசி கிளாக் கொண்டிருந்த காதல், ‘ஆசை அறுபது நாள்; மோகம் முப்பது நாள்’ என்றானது.

    ராமாமிர்தத்தின் தங்கை மீது காதல் வயப்பட்டார் காசி கிளாக். மெல்ல மெல்ல மனோரமாவின் தாயை வெறுக்கத் தொடங்கினார். அவரோடு பேசுவதைக்கூடக் கொஞ்சம் கொஞ்ச மாகக் குறைக்க ஆரம்பித்தார்.

    முதலில் இதனை ராமாமிர்தம் சரியாகப் புரிந்து கொள்ள வில்லை. ஏதோ பணிநிமித்தம் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம் என்றும், அதனால்தான் இவ்வாறு நடந்து கொள்வதாகவும் நினைத்தார்.

    ஆனால் இந்தப் போக்கு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருந்ததால் அவருக்குச் சிறிதாக சந்தேகம் முளைக்க ஆரம்பித்தது.

    நாட்கள் செல்லச் செல்ல ஏதோ ஒரு விபரீதம் நடக்கப் போவதாக அவரது உள்ளுணர்வு உரக்கக் கூறியது.

    தனது அறிவைக் கூர்மைப்படுத்தினார்.

    தனது கணவரின் நடவடிக்கையை இரகசியமாகக் கண்காணிக்கத் தொடங்கினார்.

    ஆனால் மனைவியின் சந்தேகத்தை அவர் உணர்ந்து கொள்ளவில்லை. அல்லது அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவர் தனது தவறான செயலில் தீவிரமாக இறங்கிக் கொண்டிருந்தார்.

    அது என்ன தவறான செயல்?

    ராமாமிர்தத்தின் தங்கையோடு இரகசியமாகக் காதல் புரிந்து கொண்டிருந்தார். எப்போதும் அவருடனேயே பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தார்.

    இது ராமாமிர்தத்திற்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தது. தனது தங்கையை அழைத்துக் கண்டித்துப் பார்த்தார்..

    முடியவில்லை. அதற்குள் நிலைமை மிகவும் முற்றிப் போயிருப்பது தெரிந்தது.

    இனிமேல் எக்காரணம் கொண்டு தனது கணவனைத் திருத்தவே முடியாது என்ற உண்மையைப் புரிந்து கொண்டார் மனோரமாவின் தாயார்.

    ஒருநாள் விஸ்வரூபம் எடுத்தார். கணவரோடு கடுமையாக விவாதித்தாள்.

    ஆனால் அவரோ ராமாமிர்தத்தின் தங்கையைத் திருமணம் செய்யப் போவதாகவும், யார் தடுத்தாலும் கேட்கப்போவதில்லை என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.

    இப்படிக் கூறியதோடு நின்றுவிடாமல் ஒருநாள் ராமாமிர்தத்தின் தங்கையை  இரண்டாம் தாரமாகத் திருமணமும் செய்து கொண்டார்.

    ஆக ராமாமிர்தம், அவரது கணவன் காசி கிளாக் உடையா ரால் புறக்கணிக்கப்பட்டார். அந்த வீட்டில் இனிமேல் ஒரு வேலைக்காரியைப் போல மட்டுமே இருக்க வேண்டிய நிலை. கிட்டத்தட்ட ஒரு அடிமையாக மட்டுமே வாழ வேண்டும். அவரது தங்கைக்குக்  கீழ்ப்படிந்து நடந்தே ஆக வேண்டும்.

    இப்படியொரு நிலைமை ஏற்பட்டதை நினைத்துக் கண்ணீர் வடித்தார். அழுது அழுது முகம் வீங்கிப் போனதுதான் மிச்சம்.

    என்ன வந்தாலும் சரி, இனிமேல் நொடிப் பொழுதுகூட இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்று முடிவெடுத்தார்.

    ஆனால் அதற்கு ஒரேயொரு விஷயம் தடையாக இருந்தது.

    அவரது பெண் குழந்தை கோபிசாந்தா.

    இந்தக் குழந்தையையும் வைத்துக் கொண்டு எங்கே செல்வது? எப்படி வாழ்வது? வீட்டைவிட்டு வெளியேறுவது நல்ல முடிவுதானா?

    இப்படியெல்லாம் குழம்பினார் ராமாமிர்தம்.

    இந்த வீட்டில் தொடர்ந்து கஷ்டங்களை அனுபவிப்பதைக் காட்டிலும் எங்கோ கண்காணாத இடத்தில் கஷ்டத்தை அனுபவிப்பது தப்பே கிடையாது என்று நினைத்தார்.

    ஒருநாள் துணிச்சலுடன் வீட்டை விட்டு, ஒரே பெண் குழந்தையுடன் வெளியேறினார் ராமாமிர்தம்.

    கிடைத்த வாகனங்களைப் பயன்படுத்தினார். நடந்தே செல்ல வேண்டிய இடத்தில் குழந்தையையும் சுமந்தபடி நடந்தார். நடந்து கொண்டே இருந்தார்.

    ஒரு கட்டத்தில் களைத்துப்போனார். அந்த இடத்தையே தனது வசிப்பிடமாக மாற்றிக் கொள்ளவும் தீர்மானித்தார்.

    அந்த ஊர் - பள்ளத்தூர்.

    காரைக்குடி அருகே இருக்கிறது இக்கிராமம்.

    இங்குதான் தனது புதிய வாழ்க்கையை, மகள் கோபி சாந்தாவோடு தொடங்கினார் ராமாமிர்தம்.

    கையில் பணம் எதுவும் கிடையாது. நகை நட்டுகளும் கிடையாது. சொந்தமாக வீடு கிடையாது. உறவுகள் கிடையாது. நண்பர்கள் கிடையாது. தெரிந்தவர்கள் யாரும் கிடையாது.

    அது முற்றிலும் புதிய ஊர்.

    பழக்கமற்ற மனிதர்கள்.

    அத்தனை பேரும் புதியவர்கள்.

    போராட்டம் மிகுந்த வாழ்க்கையை வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயம். ஒரு வகையான துணிச்சலை வரவழைத்துக் கொண்டு வாழ்வதற்கு பிள்ளையார் சுழியைப் போட்டுவிட்டார் ராமாமிர்தம்.

    விவரம் அறியாத வயதில் அந்தப் பிஞ்சுக் குழந்தையும் தாயோடு வாழ்க்கைப் போராட்டத்தைத் தொடங்கியது.

    வறுமை அவர்களைச் சூழ்ந்து கொண்டது.

    அதனை எதிர்த்து நிற்க ஒரே வழி எங்காவது வீட்டு வேலை செய்து வயிற்றைக் கழுவுவது மட்டுமே.

    அந்த ஊரிலும் நல்லவர்கள் இருந்தார்கள். இவர்கள் மீது இரக்கம் கொண்டார்கள். பத்துப் பாத்திரம் தேய்த்து தன் வயிற்றையும், தன் குழந்தையின் வயிற்றையும் நிரப்பப் படாத பாடுபட்டார்.

    அரை குறை சாப்பாடு. பாதி வயிறுகூட நிரம்பாத நிலை. பசியைத் தவிர்க்க தண்ணீர் மட்டுமே அவர்களுக்கு ஒரே வழியாக இருந்தது.

    கடினமான உழைப்பு. ஆனால் குறைவான வருவாய்.

    கஷ்டத்தை உறுதியாக எதிர்த்துப் போராடினால் மட்டுமே தனது ஒரே குழந்தையை வளர்த்து ஆளாக்க முடியும் என்று அந்தத் தாயுள்ளம் நினைத்தது. அதற்காகக் கடுமையாக உழைத்தார். துயரத்தைத் துச்சமாக மதித்தார்.

    2. வறுமையின் கொடுமை

    வறுமை கெட்டியாகப் பற்றி நின்றாலும் கோபிசாந்தாவைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து படிக்க வைத்தார் ராமாமிர்தம். பள்ளியில் படித்தாலும் அப்போதே அச்சிறுமிக்குப் பாட்டுப் பாடுவதில் அதீத விருப்பம் உண்டு. ஏதாவது ஒரு பாடலை முணுமுணுத்துக்

    Enjoying the preview?
    Page 1 of 1