Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nizhal Thedum Nenjangal
Nizhal Thedum Nenjangal
Nizhal Thedum Nenjangal
Ebook152 pages55 minutes

Nizhal Thedum Nenjangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எண்ணற்ற வானொலி நாடகங்களும், தொலைக்காட்சி நாடகங்களும், ஒருசில மேடை நாடகங்களும் எழுதியிருக்கிற நான் அவை என் நேயர்களுக்குப் போய்ச் சேருகிறபோது கிடைக்கிற வரவேற்பு, தருகிற உற்சாகத்தில் இப்போது இதனை நாடக வரிசையில் என் ஆறாவது நூலாகத் தருகிறேன். நூலின் தலைப்பாக அமைகிற 'நிழல் தேடும் நெஞ்சங்கள்' என்ற நாடகத்தை, சென்னை வானொலி நிலையம் தயாரித்து ஒலிபரப்பியது. "தடங்கலுக்கு வருந்துகிறோம்” நாடகம் சென்னைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாயிற்று. இவ்விருநாடகங்களுக்குமே நல்ல வரவேற்பிருந்தது. ஏராளமான என் நேயர்கள் பாராட்டியதின் விளைவாகவே மீண்டும் மீண்டும் ஒலிபரப்பாகிற வாய்ப்பு இவற்றிற்கு வாய்த்தது. அதனாலேயே இவை ஒரு அமரத்துவத்தைப் பெறுவதற்காக நூல் வடிவம் தருகிறேன்.

நேர்மையாக வாழ நினைக்கிறவனை, சமூகமும் சூழ்நிலைகளும் நேர்மையாக இருப்பதற்கு உதவ வேண்டுமென்கிற சீரியஸான விஷயத்தை நிழல் தேடும் நெஞ்சங்களிலும் திருமணம் செய்து கொள்ளத் துடிக்கிற ஒரு இளைஞன் தன் திருமண முயற்சிகளிலெல்லாம் தோல்வியுற்று தொல்லைகளில் மாட்டிக் கொள்கிற சிரிப்பலைகளை ‘தடங்கலுக்கு வருந்துகிறோம்', நாடகத்திலும் தந்திருக்கிறேன்.

இவ்விரு நாடகங்களையும் கல்லூரிகள், பள்ளிகள், அலுவலக மனமகிழ் மன்றங்கள் இவையெல்லாம் மேடையேற்றி மகிழலாம்; மகிழ்விக்கலாம். வானொலி, தொலைக்காட்சி நாடகங்கள் எழுத விரும்புகிறவர்களுக்குப் பயிற்சியாகவும் இந்நூல் அமையும். படித்தும், நடித்தும் மகிழ இந்நூலைப் பரிந்துரைக்கிறேன்.

- ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்

Languageதமிழ்
Release dateApr 8, 2020
ISBN6580132005221
Nizhal Thedum Nenjangal

Read more from Kalaimamani Ervadi S. Radhakrishnan

Related to Nizhal Thedum Nenjangal

Related ebooks

Reviews for Nizhal Thedum Nenjangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nizhal Thedum Nenjangal - Kalaimamani Ervadi S. Radhakrishnan

    http://www.pustaka.co.in

    நிழல் தேடும் நெஞ்சங்கள்

    Nizhal Thedum Nenjangal

    Author:

    ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்

    Ervadi S. Rathakrishnan
    For more books

    http://www.pustaka.co.in/home/author/ervadi-s-rathakrishnan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    அணிந்துரை

    கோ. செல்வம்

    இயக்குநர், சென்னை வானொலி

    இந்நூலில் இரண்டு கதைகள் சொல்லப்பட்டுள்ளன. முதல் கதையை முதலில் பார்ப்போம்.

    இராமநாதன் சராசரி மனிதனுக்குப் பலபடி மேற்பட்டவர். மனசு சுத்தம். ஆகவே கையும் சுத்தம், அதுவே அவரது குறிக்கோள். அவரை அப்படியே விடாதபடி அவர் முதல் மகன் ஆனந்தும், அலுவலக உதவியாளர் சுகவனமும், டெல்லி முதலானவர்களும் நடக்கின்றனர். விடாப்பிடியாக இராமநாதன் தன் குறிக்கோள் பழுதுபடாது வாழ்கிறார். அதனால் படாதபாடு படுகிறார். அலுவலகத்தில் டெல்லி செய்த தவறை இராமநாதன் கண்டிக்கப் போய், அவன் இவரைக் கத்தியால் குத்திச் சிறை போகிறான். சிறையிலிருந்து வந்து இவரைக் கொல்லாமல் விடமாட்டேன் என்று அவன் சூளுரைக்கிறான். இது முதல் சோதனை. இராமநாதன் அலுவலக வேலையாக பம்பாய் செல்கிறார்.

    கதையில் இங்கே திருப்பத்தை ஏற்படுத்துகிறார் ஆசிரியர். ரயில் விபத்தினால் பலர் மாள, சிலர் காணாமற் போக - செய்தி குடும்பத்தார்க்கு எட்டுகிறது. ஆற்றில் விபத்தில் சிக்கி மூழ்கிய பலர் காணப்படவில்லை. சடலமும் கிடைக்கவில்லை. இராமநாதன் அந்தப் பட்டியலில் சேர்க்கப்படுகிறார். அவர் இறந்ததால் பெருந்தொகை அவரது குடும்பத்துக்கு நிறுவனத்திடமிருந்தும் ரயில்வே நிர்வாகத்திடமிருந்தும் கிடைக்க, அவரது மூத்த மகனான, சுயநலமி ஆனந்த் மருத்துவக் கல்லூரியில் சேர்கிறான். மகள் அனிதாவுக்குத் திருமணம் ஏற்பாடாகிறது.

    இப்போது இரண்டாவது சோதனை உண்டாகிறது. இராமநாதன் தப்பிவிட்டார். வீட்டுக்குத் தாடி மீசையுடன் அலங்கோலமாக அடையாளம் தெரியாதபடி வருகிறார். அனிதாவின் திருமண எற்பாடுகள் நடைபெறும் வேளை இது.

    இராமநாதனின் மனைவி கஸ்தூரி அவரை அடையாளம் கண்டு கொண்டு, தான் விதவைக் கோலம் கொண்டதால் வெதும்பியபடி கிடக்க, அவர் திரும்பி வந்ததைச் சொல்லக் கூடாதபடி அவர் தடுத்து விடுகிறார். காரணம், அவரது பணி நிறுவனத்துக்குத் தான் பெற்ற ஈட்டுத் தொகை திரும்பப் போய்விடும்! கூடவே அவர்களது வசதிகளும் போய்விடும். எப்படியோ திருமணம் நடந்து விடுகிறது. கதையில் மற்றொரு திருப்பம் வர வேண்டும். அது இங்கே நிகழ்கின்றது. அவரை எல்லோரும் இனம் கண்டு கொள்கின்றனர். அவர் என்ன ஆவது? தக்க முடிவை இராமநாதனுக்கும் கஸ்தூரிக்கும் தந்து கதாசிரியர் கதையை முடித்திருக்கிறார்.

    கதை எழுதுவது ஓர் கலை. கதையைப் படிக்க நாடகமாக்குவது ஒரு படி மேலான கலை. மேடையில் நடிக்க எழுதும் போது அந்த ஆசிரியன் இன்னும் உயரப்போக வேண்டியிருக்கிறது. அதையே வானொலியில் படித்து நடிக்க எழுதுகையில் அந்த ஆசிரியன் வானத்தின் உயரத்துக்கும் போகவேண்டும்.

    நாடக பாத்திரங்கள் ஆசிரியர் இனம் கண்டு, வானொலி நேயர்களுக்கு அவர்களை வெறும் குரல் வழியாகவே அடையாளம் காட்டியாக வேண்டும். சில சொல்லுக்கு, தாடி மீசை வைத்து கம்பீரமானவர் என்றும், சில சொல்லுக்குப் புடவை கட்டி மென்மையான பெண் என்றும் காண்பிக்க வேண்டிய அருங்கலை இது.

    இது ஒரு வகையான சோதனைதான். இந்தச் சோதனையினின்று வெற்றிபெற்று, சாதனை புரியும் வானொலி நாடகாசிரியர்கள் வெகு சிலரே. அவர்களில் உயர் மட்டத்தில் உலாவுகிறவர் திரு. ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள்.

    வானொலிக்கு நாடகம் எழுதுவது என்பது எளிதன்று. எதையும் கதாபாத்திரங்களைக் கொண்டு எழுதுவதன் முன்னம், நல்ல கருத்துள்ள கதை வேண்டும். கதை கிடைத்தவுடன் அதை யாருக்காக ஒலிபரப்புகிறோம், யார் விரும்பிக் கேட்பார்கள் என்று கவனிக்க வேண்டும். எழுதி ஒலிபரப்பப் போகின்ற நாடகத்தினால் கேட்குநர்களைச் சிரிக்க வைக்கப் போகிறோமா அல்லது சீரிய சிந்தனை வயப்பட வைக்கப் போகிறோமா அல்லது படிப்பினை புகட்டப் போகிறோமா அல்லது சிரிக்க வைத்துச் சிந்தனை வயப்பட வைக்கப் போகிறோமா என்பதை முடிவு செய்ய வேண்டும். அது வானொலி நாடகத்துக்குரிய இலக்கணம், எதையோ எழுதி ஒலிபரப்பி நேரத்தை நிரப்புவதல்ல வானொலி நாடகம். ஏனென்றால் வானொலி வாடிக்கையாளர்களில் நாடகம் கேட்குநர் எண்ணிக்கையே அறுதிப் பெரும்பான்மை என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். வானொலி நிறுவனத்தினர் இந்த வாடிக்கையாளரைத் திருப்திப்படுத்தவே நல்ல நாடகாசிரியர்களை எதிர்பார்க்கின்றனர்.

    இனி, அவரது கதையைப் பார்த்து அவர் வானொலிக்காக வடிவமைத்திருப்பதை ஆய்வோம். நிழல் தேடும் நெஞ்சங்கள் நாடகம் லட்சியப் பாதையில் நடமாடத் துடிக்கும் இராமநாதனின் முதல் மகன் வில்லன்; இரண்டாவது மகன் பாபு நல்லவன்; மனைவி கஸ்தூரி வாசுகி அம்மையாரின் மறுவடிவம். இந்த நாடகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மாத்ருபூதம் உயிரோட்டமானவர். எதற்கும் ஏஜண்டாக விளங்குபவர். நாடகத்தை அவர் அதிகமாக நடத்தத் துணை புரியவில்லையானாலும், அவர் முடித்து வைக்கிறார். அவர் ஓர் அற்புதமான கேரக்டர்.

    இந்த 'நிழல் தேடும் நெஞ்சங்களில்' காட்சியமைப்பு நாடகத்தின் கதையமைப்பு விறுவிறுப்பாக மாற்றிக்கொண்டே வருகிறது. முதல் காட்சியிலேயே இராமநாதனின் கொள்கைப் பிடிப்பு அவரது வெள்ளிக்கிழமை மௌன விரதத்தின் மூலமாகக் காட்டப்படுகிறது.

    வானொலி நாடகத்தில் பேசாத ஓர் ஆசாமியை அறிமுகப்படுத்தியிருப்பதை ஒரு புதுவகை என்று பாராட்டலாம். ஒவ்வொரு காட்சியிலும் பேசுவோர் சலசலவென்ற நீரோடைபோல் எளிதாக பேசுகின்றனர். உரைநடை எப்போதும் அலுப்புத் தட்டக் கூடாது. இந்த நாடகக் கதாபாத்திரங்களின் எந்தப் பேச்சும் மிகையாகி அலுப்புத் தட்டவில்லை. உரையாடல்கள் விறுவிறுப்பாக உயிரோட்டமானவையாக அமைந்துள்ளன. டெல்லி அலுவலகத்தில் இரண்டு டியூப் லைட்களைத் திருடி விட்டதும், இராமநாதன் டெல்லியைப் பார்த்து 'வெளிச்சத்துக்காகத் திருடியது உன் வாழ்வை இருட்டாக்கிட்டது பார்த்தியா!' என்று பேசுவது ஒளியான உரையாடல்.

    உரையாடல் வழி மனிதப் பண்பைக் காட்டுவது சிறந்த முறை. சிறுகதை அல்லது புதினமானால் ஒரு பாத்திரத்தின் பண்பினைக் கதாசிரியர் விவரித்து விளாசலாம்; அல்லது வேறு ஒரு பாத்திரத்தை விட்டு விவரித்துப் புகழச் செய்யலாம். நாடகத்தில் அவ்வாறு செய்ய இயலாது. ஒரு பாத்திரத்தைப் பேசவைத்து, அவரது பேச்சின் மூலமாக அவரது பண்பைச் சித்திரிக்க வேண்டும். திருட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், இராமநாதன் பம்பாய் செல்லும் அவசரத்திலும் அவனை ஜாமீனில் விடச் செய்த ஏற்பாடு நடந்ததா என்று சுகவனத்திடம் கேட்டு, அது முடியாது என்று சுகவனம்

    கூறியதைக் கேட்டு ஆதங்கப்படுவது உயர்ந்த மனிதப் பண்பு. இங்கே உரையாடல் மூலமாகவே இராமநாதனை உயரத் தூக்கி நிறுத்துகிறார் ஏர்வாடியார்.

    ஓடுகின்ற கதையை இராமநாதனின் மரணச் செய்தி மூலம் திருப்பிய பின்னர், வீட்டுச் சூழ்நிலையே மாறி விடுகிறது. இராமநாதன் மாற்றுருவோடு வந்ததும் கஸ்தூரி அடையாளம் கண்டபின் எழுதப்பட்ட உரையாடல்கள் கண்ணீரை வரவழைப்பவை. நகைச்சுவை உரையாடல்களால் கேட்பவரைச் சிரிக்க வைப்பது போல் உணர்ச்சி கொண்ட உரையாடல்களை எழுதிப் பாத்திரங்களைப் பேச வைத்துக் கேட்கின்றவர்களைக் கண்ணீர் மல்க வைக்க வேண்டும். வானொலி உணர்ச்சிச் சாதனம். உணர்ச்சிக் குவியலைக் கொட்டி அழவைக்கும், சிரிக்கவைக்கும்; அதிர்ச்சியும் பெறவைக்கும். இம் மூன்றையும், இந் நாடகத்தில் நாடகாசிரியர் நன்றாகச் செய்துள்ளார்.

    நாடகத்தை நம்பும்படி முடித்திருக்கிறார் ஏர்வாடியார். கஸ்தூரியையோ, இராமநாதனின் மைத்துனர் இராஜ ரத்தினத்தையோ பேசி முடிக்க விடாமல், மாத்ருபூதத்தைக் கொண்டு உரையாடலை முடித்திருப்பதால் மாத்ருபூதத்தின் 'காரெக்டரை' கட்டம் போட்டுக் காட்டியுள்ளார். ஆமாம், மாத்ருபூதம் அனிதாவின் திருமணப் பந்தல் அலங்காரத்துக்கும் ஏஜண்ட்; இராமநாதனின் இறுதி ஊர்வலப் பல்லக்குக்கும் ஏற்பாடு பண்ணும் 'ஏஜண்ட்'! நல்ல படைப்பு.

    வானொலி நாடகம் என்பது ஒலிகளின் வழியாக நாடக அமைப்பில் ஒரு கதையைச் சித்திரிக்கும் கலை. வானொலி நாடகம் என்பது வானில் உலாவரும் இன் கவிதை. இதனை நல்ல வண்ணம் கைவரப்பெற்ற திரு. ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்

    Enjoying the preview?
    Page 1 of 1