Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ervadi S. Radhakrishnanin Short Stories
Ervadi S. Radhakrishnanin Short Stories
Ervadi S. Radhakrishnanin Short Stories
Ebook133 pages49 minutes

Ervadi S. Radhakrishnanin Short Stories

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் சிறுகதைகள்” என்னும் இச்சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு கதையும் ஒரு புதையல். வெவ்வேறு கோணங்களில் அமைந்துள்ள எடுத்துக்காட்டு கதைகள். மனிதனை மனிதனாக வாழத்தூண்டும் மகத்தான சிறுகதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு காவியத்தின் கருவாக உள்ளன. வாழ்க்கை என்னும் அனுபவ ஓடையில் மலர்ந்துள்ள அர்ச்சனை மலர்கள் அவை.

“செலவு பண்ணினாலும் பரவாயில்லை வேலை சுலபமா முடிஞ்சிடுச்சி... இல்லேன்னா இட்லி சின்னது. காப்பிக்குச் சர்க்கரை போதாது. நெய் சுத்தமில்லேன்னு இந்தக் கதிரேசன் தினமும் கத்திட்டிருப்பான்” என்று எடுத்ததற்கெல்லாம் குறை சொல்லிக் கொண்டிருப்பதைவிட எடுத்த வேலையை செய்து முடிப்பதில் அக்கறை கொள்ள வேண்டும் என்கிறது. இது யதார்த்த வாழ்வின் படப்பிடிப்பு.

வீட்டு நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைப்பதால் ஏற்படும் அவலங்களைப் பட்டியல் போடுகிறது ஒரு கதை.

தெய்வத்தின் பேரால் திருவிழாவென்று பணத்தைக் கொட்டிக் கரியாக்குவதை விட ஒருவருடைய வாழ்க்கைக்கு உதவும் கல்விக்கு உதவுவது கோடி மடங்கு புண்ணியந்தரும் என்பது மற்றொரு கதை.

சமுதாயப் பணி என்கிற போர்வையில் வீட்டையும், குடும்பத்தையும், உறவுகளையும் புறக்கணித்துவிட்டு சாதிக்கப் போவது எதுவுமில்லை. குடும்பத்துக்குப் பின்னரே சமூகச் சேவை என்பது நல்ல வாழ்வியல் சிந்தனை.

தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணித்தல் என்பது தீயவர்களைத் தேர்ந்தெடுக்க மறைமுகமாக ஆதரவு அளிப்பது போலாகும் என்று ஒரு சிறுகதையில் சிறந்த குடிமக்களின் கடமை நினைவூட்டப்படுகிறது. இன்று தேர்தல் எந்திரத்தில் நோட்டாவை பயன்படுத்துவதுகூட அப்படித்தான்.

படித்துவிட்டு வேலை தேடி அலைவதை விட எந்த வேலையானாலும் படித்த அறிவைக் கொண்டு இன்னும் சிறப்பாகச் செய்து ‘செய்யும் தொழிலே தெய்வம்' என உழைக்க வலியுறுத்துகிறது ஒரு கதை. தொழிலுக்குத் தொழில் உத்திகள் மாறும் என்பது படிப்பினையாக உள்ளது.

மனிதர்கள் தவறலாம் மகான்கள் தவறக்கூடாது என்னும் படிப்பினை மூலம் ‘துறந்தவர்கள் எல்லாம் துறந்தவரா' என்னும் வினாவாகி நிற்கும் பாதிரியாரைப் படம் பிடிக்கக் காணலாம்.

"வாழ்ந்து முடிஞ்ச நிறைவோட சாவிலே கூட நாம் சேர்ந்ததே போயிடலாம்" என்று மறைந்த கணவனைக் கட்டிக் கொண்டு மனைவி கோதாவரியில் ஜலசமாதி ஆகும் கதை கண்ணீர்க் காவியம். திரைப்படமாகும் தரமுடைய கதை.

நல்ல வீட்டு வேலைக்காரர்கள் கிடைத்துவிட்டால் அவர்கள் விட்டுச் செல்லாத வகையில் ஈர்ப்புடையவர்கள் போல காட்டி உழைப்பைச் சுரண்டும் வீட்டு சொந்தக்காரர்களை வெளிச்சம் போடுகிறது ஒரு கதை.

"மூன்று பேராகப் போகிறோம் என்று மனைவியை முழுகாமல் பார்க்க ஆசைப்பட்டவனுக்கு அவள் முழுகாமலேயே மூன்று பேராகினர் அவள் தம்பியின் வருகையால்" என்னும் நளினமான நடைச்சித்திரம் சிந்தனைக்கு விருந்து. நகைச்சுவை விருந்தும்கூட.

"தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறு வேறுதான்” என்பதைப் போல தந்தையானாலும் மகனானாலும் ஒருவர் உதவியை ஒருவர் பெறக்கூடாது என்ற மனஉறுதியோடு வாழும் தந்தை மகனைக் காட்டுவது ‘வைராக்கியம்'.

- முனைவர் குமரிச் செழியன்

Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580132006104
Ervadi S. Radhakrishnanin Short Stories

Read more from Kalaimamani Ervadi S. Radhakrishnan

Related to Ervadi S. Radhakrishnanin Short Stories

Related ebooks

Reviews for Ervadi S. Radhakrishnanin Short Stories

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ervadi S. Radhakrishnanin Short Stories - Kalaimamani Ervadi S. Radhakrishnan

    http://www.pustaka.co.in

    ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணனின் சிறுகதைகள்

    Ervadi S. Radhakrishnanin Short Stories

    Author:

    கலைமாமனி ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன்

    Kalaimamani Ervadi S. Radhakrishnan

    For more books

    http://www.pustaka.co.in/home/author//ervadi-radhakrishnan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    மேல் மட்டங்கள்

    திருமணங்கள் வெறும் நிகழ்ச்சிகள் அல்ல

    செலவல்ல மூலதனம்

    சேவையா... தேவையா

    இனி வரும் நாள்களில்...

    வேலை(ளை) வந்து விட்டது

    மனிதர்கள்

    இனி அவர்கள் வரமாட்டார்கள்

    சாந்திக்குச் சம்மதமில்லை

    படித்தால் மட்டும் போதாது

    வைராக்கியம்

    அணிந்துரை

    சிறுகதை மன்னர் தோழர் த. ஜெயகாந்தன்

    நண்பர் திரு. ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்கள் தாம் எழுதிய கதைகளின் தொகுப்பிலிருந்து தாமே சிறந்தவை என்று தேர்ந்த கதைகளை வாசகர்கள் முன் பெருமிதத்துடன் படைத்தளிக்கும் நூலே இத்தொகுதி.

    வாழ்க்கையில் நமது சக மனிதர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், அவர்தம் வழியிலேயே சென்று அவற்றுக்குத் தீர்வு காண்பதையும் மிகுந்த மனிதாபிமானத்துடன் விளக்குகிற யதார்த்தமான படைப்புகள் இவை.

    இவரது கதைகள் ஒவ்வொன்றும் ஒரு கருத்தை வலியுறுத்தும் நோக்கில் அமைந்திருப்பினும் பிரச்சாரக் கதைகளாக இல்லாமல் கதை படிக்கும் சுவை கருதிப் படிப்போருக்கும் ஏற்ற வகையில் அமைந்திருப்பது ஒரு தனிச்சிறப்பே ஆகும்.

    எழுதுவதும், எழுத்தின் மூலம் பெறுகிற பெருமையை வாழ்வில் பெற்ற பேறுகளிலேயே பெரும் பேறாய்க் கருதும் ஆசிரியரின் பண்பும் போற்றத்தக்கது.

    இவரது எழுத்துக்களை அவ்வப்போது பத்திரிகையில் பார்த்திருக்கிறேன். இப்போது நூல் வடிவில் இக்கதைகளைப் படித்துப் பார்க்கையில் நல்ல நோக்கமும், எழுதுவதன் மூலம் தன்னையும் தனது தரத்தையும், படிப்பவர்களையும் அவர்தம் தரத்தையும் உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற இலக்கிய நோக்கமும் கொண்ட நமது சக எழுத்தாளர்களில் ஒருவர் இவர் என்று திரு. ஏர்வாடி இராதாகிருஷ்ணனை இனங்கண்டு கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

    இந்நூலுக்கு அணிந்துரை வழங்குவதும் எனக்கு மகிழ்ச்சி தருகிறது.

    அன்புடன்

    த.ஜெயகாந்தன்

    *****

    மதிப்புரை

    கவிமாமணி முனைவர். குமரி செழியன்

    சிறுகதை என்பது வேகமாகப் பரவி மக்களிடம் அதிக இடத்தைப் பிடித்துள்ள எழுத்து வடிவம். தொல்காப்பியம் குறிப்பிடும் ‘விருந்து' என்னும் பகுப்பில் சிறுகதையும் அடங்கும். சிறுகதைக்கு இதுதான் இலக்கணம் அறுதிவிட்டு யாரும் என்று கூறுவாரில்லை. அது படைப்பவரின் மன ஓட்டத்தையும் படிப்பவரின் மனப்போக்கையும் பொறுத்தது.

    சிறுகதை என்றால்... சுருக்கமாக அதாவது 2000 சொற்களுக்குள் அளவில் சிறியதாக இருக்க வேண்டும் என்பார்கள். அதுவும் சில பக்கங்களில் அமைய வேண்டும் என்பார்கள். ஓரிரு பாத்திரங்களை உடையதாக இருக்கலாம். கிளைக் கதைகள் இல்லாததாக இருக்கலாம். ஓரிரு கருத்துக்களைச் சுட்டுவதாக இருக்கலாம். இவை எல்லாவற்றையும் விட வாசகர் மனத்தில் இடம்பிடிப்பதாக இருக்க வேண்டும் என்பதும் உண்டு. இவை எல்லாம் இருந்தாலும், படித்து முடித்ததும் வாசகர் மனத்தில் ஒரு நிறைவையும், சிந்தனையையும் பதிவு செய்வதுடன் மனத்தை வருடக்கூடியதாக, மறக்க முடியாததாக இருக்க வேண்டும்.

    புற்றீசல்கள் போல சிறுகதைகள் பெருகிக் காணப்பட்டாலும் சமூக அக்கறையோடு எழுதப்படும் கதைகள் எளிதாக மனத்தில் பதிகின்றன. சமூகச் சிந்தனைகளோடு, அறிவியல் எண்ணங்களோடு, சமுதாயத்தில் முளைவிடும் கருவில் துளிர்ப்பனவாக, கற்பனையில் உயிர்ப்பனவாக, ஆன்மிக நாட்டத்துடன் கதைகள் அமைகின்றன. சில கதைகள் படித்த உடனேயே எறிந்து விடும் நிலையில் உள்ளன. சில கதைகள் படித்த பின்பு நினைத்துப் பார்க்கப்படுகின்றன. அறிவுடனோ, அறநெறியுடனோ படைக்கப்படுகின்ற கதைகள் தத்தம் வாழ்க்கையில் நிகழ்ந்ததைப் போன்ற உணர்வுகளைத் தருகின்ற போது அது படிப்பவர் மனத்தில் பாதிப்பை ஏற்படுத்தி சமுதாய பிரதிபலிப்பாக அமைந்து விடுகின்றது.

    இன்றைய நிலையில் சிறுகதைகள் இடம் பெறாத இதழ்களே இல்லை எனுமாறு நீக்கமற எங்கும் நிறைந்தததைப் போலச் சிறுகதைகள் பரவிக் கொண்டிருக்கின்றன. மனத்தை எளிதாக்கும் நகைச்சுவை உணர்வுடைய கதைகள் அதிகமாக விரும்பப்படுகின்றன. அவை மன இறுக்கத்தைக் குறைப்பதற்குப் பயன்படுகின்றன.

    சிறுகதைகள் சிறிய கதைகளாக இருக்க வேண்டும். சிறிய வாக்கியங்களில் இருக்க வேண்டும். உணர்ச்சி ஓட்டமுடையதாக இருக்க வேண்டும். நல்ல சிந்தனைகளைக் கொண்டிருக்க வேண்டும். மக்கள் வாழ்க்கையைப் பண்படுத்துவதாக இருக்க வேண்டும். கலந்துரையாடல் போல் உரைச் சித்திரமாக இருக்க வேண்டும். ஒப்பிட்டுச் சொல்லும் தொடர்பு மொழியும், வாழ்க்கையினைச் சுட்டும் சிறுசிறு உவமை, உருவகம் போன்ற அணிநயங்களிருக்க வேண்டும் கற்பனை கலந்த சிறுசிறு வருணைகளுடன் அமைந்திருந்தால் வாசகரை மேலும் வசீகரிக்கும்.

    மேற்படி சிறுகதை ஆசிரியர்களோடு ஒப்ப வைத்து எண்ணுகின்ற வகையில் மிகச் சிறந்த சிறுகதைகள் பலவற்றைப் படைத்திருப்பவர் கலைமாமணி ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்கள். அவருடைய சிறுகதைகள் இறுக்கமான மனங்களை எளிதாக்கும்; சிந்திக்க வைக்கும்; சிறகடித்துப் பறக்க வைக்கும்; சமுதாயத்தோடு இணைத்து வைக்கும்; சமுதாய அவலங்களைச் சுட்டி நிற்கும்; அவற்றைப் போக்க வழிகள் காட்டும்; அறவழியில் செல்ல வைக்கும், உறங்கிக் கிடக்கும் மனங்களைத் தட்டியெழுப்பும், மனங்களின் கீறல்களை ஒட்டுப் போட முயற்சி செய்யும்; இளைய தலைமுறைக்கு ஏணியாகும். வேராக இருக்கும். இளம் படைப்பாளர்களின் எழுச்சி நாதமாக இருக்கும். எழுந்து நடக்க முனையும் முடவர்களுக்கு ஊன்றுகோலாக இருக்கும்.

    அமைதியான கடலுக்குள் முத்துகள் போல் ஒளிரும் சிறுகதைகள் புயலுக்குள் பூத்த பூகம்பம் போலச் சில கதைகள்; நெருப்புக்குள் பூத்த தீபம் போலச் சில கதைகள்; வற்றிப் போன ஊற்றினை சுரக்க வைக்கும் கண்ணீர்த் துளிகள் போலச் சில கதைகள்; கொள்கையில் உறுதியாக இருந்து சாதனை படைக்கத் தூண்டும் சில கதைகள். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

    ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் சிறுகதைகள் என்னும் இச்சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு கதையும் ஒரு புதையல். வெவ்வேறு கோணங்களில் அமைந்துள்ள எடுத்துக்காட்டு கதைகள். மனிதனை மனிதனாக வாழத்தூண்டும் மகத்தான சிறுகதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு காவியத்தின் கருவாக உள்ளன. வாழ்க்கை என்னும் அனுபவ ஓடையில் மலர்ந்துள்ள அர்ச்சனை மலர்கள் அவை.

    செலவு பண்ணினாலும் பரவாயில்லை வேலை சுலபமா முடிஞ்சிடுச்சி... இல்லேன்னா இட்லி சின்னது. காப்பிக்குச் சர்க்கரை போதாது. நெய் சுத்தமில்லேன்னு இந்தக் கதிரேசன் தினமும் கத்திட்டிருப்பான் என்று எடுத்ததற்கெல்லாம் குறை சொல்லிக் கொண்டிருப்பதைவிட எடுத்த வேலையை செய்து முடிப்பதில் அக்கறை கொள்ள வேண்டும் என்கிறது. இது யதார்த்த வாழ்வின் படப்பிடிப்பு.

    வீட்டு நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைப்பதால் ஏற்படும் அவலங்களைப் பட்டியல் போடுகிறது ஒரு கதை.

    தெய்வத்தின் பேரால் திருவிழாவென்று பணத்தைக் கொட்டிக் கரியாக்குவதை விட ஒருவருடைய வாழ்க்கைக்கு உதவும் கல்விக்கு உதவுவது கோடி மடங்கு புண்ணியந்தரும் என்பது மற்றொரு கதை.

    சமுதாயப் பணி என்கிற போர்வையில் வீட்டையும், குடும்பத்தையும், உறவுகளையும் புறக்கணித்துவிட்டு சாதிக்கப் போவது எதுவுமில்லை. குடும்பத்துக்குப் பின்னரே சமூகச் சேவை என்பது நல்ல வாழ்வியல் சிந்தனை.

    தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணித்தல் என்பது தீயவர்களைத் தேர்ந்தெடுக்க மறைமுகமாக

    Enjoying the preview?
    Page 1 of 1