Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kinatrukkul Cauvery
Kinatrukkul Cauvery
Kinatrukkul Cauvery
Ebook215 pages6 hours

Kinatrukkul Cauvery

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இது என்னுடைய இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. இருபத்தோரு கதைகளில், இருபது கதைகள் லேடீஸ் ஸ்பெஷல், நவீன விருட்சம், கலைமகள், அமுதசுரபி, கல்கி, தினமணிக் கதிர், வலம் போன்ற பத்திரிகைகளில் வெளியானவை. என்னை இடைவிடாது எழுதிக்கொண்டிருக்க வைக்கின்றவர்கள், இவர்களுக்கு என்றும் என் நன்றிகள்!

சிதம்பரம் தாண்டி, கொள்ளிடம் பாலத்தின் மேல் மெதுவாகச் செல்லும் ரயிலில், ஜன்னல் கம்பிகளில் கன்னம் பிதுங்க, கீழே கரை புரண்டோடும் காவிரியை, விழிகள் அகலப் பார்த்துச் சென்றிருக்கிறேன். சமீபத்தில், காவிரி புஷ்கரத்திற்குச் சென்றபோது, ஆற்று மணலில் ஆழ்துளையிட்டு, நீர் இறைத்து, தொட்டிபோல் கட்டிய துலாக்கட்டத்தில் முதுகு நனையாமல் மூழ்கி எழுந்தபோது, கண்களில் மட்டும் நீர் வழிந்தோடியது. ஐம்பது வருடங்களில், நல்லனவற்றையெல்லாம் விட்டு வெகுதூரம் வந்துவிட்டதைப் போன்ற ஓர் உணர்வு - வருத்தம். அப்போது தோன்றியதுதான், ‘கிணற்றுக்குள் காவிரி.’ வாழ்க்கை ஓயாமல் நமக்கு எதையாவது கற்றுக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது - கற்றுக்கொள்ளும் மனதும், ஆர்வமும்தான் வேண்டியிருக்கிறது.

Languageதமிழ்
Release dateMar 11, 2023
ISBN6580126309452
Kinatrukkul Cauvery

Read more from Dr. J. Bhaskaran

Related to Kinatrukkul Cauvery

Related ebooks

Reviews for Kinatrukkul Cauvery

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kinatrukkul Cauvery - Dr. J. Bhaskaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கிணற்றுக்குள் காவிரி

    Kinatrukkul Cauvery

    Author:

    டாக்டர். ஜெ பாஸ்கரன்

    Dr. J. Bhaskaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/dr-j-bhaskaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அணிந்துரை

    என்னுரை

    அண்ணாசாமியும், ஜீரா ரஸமும்!

    இடது கை!

    உடைந்த உண்டியல்!

    எமர்ஜென்சி

    ஓ...

    காப்பு

    கிணற்றுக்குள் காவிரி!

    குங்குமம்!

    சகிப்பு!

    ஞானம்!

    தன்னைத் தொலைத்தவன்!

    துணை!

    நப்பின்னையாகிய நான்...

    பிரமை

    மஞ்சள் குடம்!

    மணி

    மாரி!

    முடிவு!

    வாழ்க்கை எனும் ஓடையிலே...

    விசும்பல்கள்

    விருது!

    வேலை

    அணிந்துரை

    "தற்கால இலக்கியத்தில் தடம் பதிக்கும்

    சிறுகதைகள்!"

    - திருப்பூர் கிருஷ்ணன்.

    வெவ்வேறு துறைசார்ந்தவர்கள் தமிழிலக்கியம் படைக்கும்போது அந்தந்தத் துறையின் புதிய பரிமாணங்கள் தமிழுக்குக் கிடைக்கின்றன. ஒரு மனிதனுக்கு அவனது வாழ்க்கையை அவன் எவ்விதம் பார்க்க வேண்டும் எனக் கற்றுக்கொடுப்பதுதான் தற்கால இலக்கியத்தின் வேலையே. அந்த வேலையை ஜெ. பாஸ்கரனின் இந்தச் சிறுகதைத் தொகுப்பு அழகாகச் செய்கிறது.

    ‘எமர்ஜென்சி’ கதையைப் படிக்கும்போது கதாசிரியர் ஒரு மருத்துவர் என்பதை வரிக்கு வரி புரிந்துகொள்ள முடிகிறது. மிக நேர்த்தியான விவரணைகள். சிகிச்சை பெறும் தாயாரோடு நாமும் இருப்பதைப்போன்ற உணர்வை ஏற்படுத்துகிறார் கதாசிரியர்.

    அப்புறம் பூட்டிய காரின் உள்ளே சிக்கிக்கொள்ளும் குழந்தை. கார்க் கதவைத் திறப்பதற்குள் நம் மனக்கதவு படபடவென்று அடித்துக்கொள்கிறது. முடிவில் அப்பாடா என ஒரு பெருமூச்சு விடுகிறோம். வாழ்வின் இயல்பான சில தருணங்கள் முன் அறிவிப்பே இல்லாமல் திடீரென்று எப்படிச் சிக்கலாகி விடுகின்றன என்பதை உணர்த்துகிறது கதை.

    வாழ்க்கைக்கு அடிப்படையான என்றும் நிலைபேறுடைய கருத்துகளை வைத்துக் கதை எழுதுவது குறைந்துவரும் காலம் இது. சுவாரஸ்யத்திற்காக எழுதப்படும் பொழுதுபோக்குக் கதைகளே மலிந்துவிட்டன. நிரந்தரமான உண்மைகளை வைத்து எழுதும்போது அந்த இலக்கியம் சாகாவரம் பெற்றுவிடுகிறது.

    சங்கப் பாடல்கள் இன்றளவும் நிலைத்து நிற்கக் காரணம், அவற்றில் தென்படும் வாழ்க்கையைப் பற்றிய விசாரணையும், அதனால் அவை புலப்படுத்தும் நிரந்தரமான உண்மைகளுமே. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது என்றைக்கும் தேவையான ஓர் உண்மை. ‘பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’ என்பதும் அப்படியான ஓர் உண்மையே. ‘கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்பதும் கூட அப்படித்தான். இவ்விதம் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

    இத்தொகுப்பில் உள்ள ‘துணை’ சிறுகதை வாழ்வில் அனைவரும் உணர வேண்டிய மிகத் தேவையான ஓர் அடிப்படை விஷயத்தைப் பேசுகிறது. வயதான கணவனையும், மனைவியையும் கதாபாத்திரங்களாக்கி வாழ்க்கை குறித்த ஓர் அற்புதமான தத்துவத்தைச் சொல்கிறது.

    ‘நீயோ, நானோ நிரந்தரமில்லை. நிரந்தரமானவற்றை நேசிப்பதுதான் வாழ்வின் ஆதார சுருதி. அப்படி நேசிப்பதற்கு, நிரந்தரமில்லாத துணைகள் உடனிருக்கலாம். வாழ்வில் கொஞ்சம் சுவாரசியம் கூட்டுவதற்கு. மரங்களையும், செடிகளையும், பூக்களையும், மனிதநேயத்தையும், இந்தப் பூங்காவின் காலையையும் நான் சுற்றி வருவேன். இறந்துவிட்டாலும். நீயும் அதையே செய்.’

    இந்த வரிகளைப் பொன்மொழியாய் நாம் எழுதி வைத்துக் கொள்ளலாம். முதியவர்கள் பலர் முதியோர் இல்லங்களில் வாழ நேர்ந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் இந்தக் கதையின் கருப்பொருள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகிறது.

    தேர்ந்த கலைத்திறனோடு எழுதப்பட்ட ஒரு சிறந்த சிறுகதை அதன் இறுதி முடிச்சை நோக்கியே நகர்கிறது. இறுதியில் எப்படி முடியும் என ஊகிக்கவே இயலாமல், அந்த முடிவைப் படித்ததும் அடடா என பிரமிக்க வைக்குமானால் அந்தக் கதை சிறந்த கதைதான் என்பதில் சந்தேகமில்லை.

    ‘தன்னைத் தொலைத்தவன்’ கதை தன் சொந்த ஊர் தேடிவரும் கதாநாயகனைப் பற்றிய கதை. அவன் உண்மையில் அந்த ஊரிலிருந்து காணாமல்போன குழந்தை. வடக்கே வளர்ந்து தன் சொந்த ஊர் எதுவென வளர்ப்புத் தந்தை மூலம் அறிந்து சொந்தத் தந்தை, தாயைத் தேடி வருகிறான். அவனிடம் அவன் சிறுகுழந்தையாக இருந்தபோது பச்சைத் தொங்கட்டான் அணிந்து எடுத்த ஒரு பழைய படம் இருக்கிறது. அதுதான் ஆதாரம்.

    ஆனால் தந்தையையோ, தாயையோ கண்டுபிடிக்க முடியாமல் திரும்புகிறான். வழியில் ஒரு பைத்தியக்காரப் பெண்ணைப் பார்த்துப் பரிதாபப்பட்டு அவள் கையில் நூறு ரூபாயைத் திணித்துவிட்டு ரயிலேறுகிறான். பைத்தியம் தன் சுருக்குப் பையில் ரூபாயைத் திணித்துக் கொள்ளும்போது கதாசிரியர் சொல்கிறார்:

    ‘சுருக்குப் பையின் உள்ளே கசங்கிய புகைப்படத்தில் இருந்த குழந்தையின் காதில் பச்சை நிறத் தொங்கட்டான்.’

    சில சமூக விமர்சன உரையாடல்களோடு இயல்பாக நடக்கும் கதையின் அட்டகாசமான முடிவு பிரமிக்க வைக்கிறது. மிக வலுவான கதை. இந்தத் தொகுப்பின் மிக முக்கியமான கலைநேர்த்தி நிறைந்த கதைகளில் இதுவும் ஒன்று.

    இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற சிந்தனைகளை ஆசிரியர் தம் படைப்புகள் மூலம் நம் மனத்தில் விதைக்கிறார். ‘குங்குமம்’ கதை கணவனை இழந்த பெண்கள் ஏன் குங்குமத்தையும் இழக்க வேண்டும் என்ற சிந்தனையை நம்மிடம் எழுப்புகிறது. கதையில் வரும் அர்ச்சகர் மட்டுமல்ல, படிப்பவர்களும் மனம் மாற வாய்ப்பிருக்கிறது.

    கணவன் என்றும் மனத்தில் வாழ்கிறான் எனக் கருதிக் கைம்பெண்கள் கோலம் மாறாமல் இருக்கவேண்டும் எனச் சொல்கிறார் வள்ளலார். உடன்கட்டை ஏறும் வழக்கம் ராஜாராம் மோகன்ராயால் ஒழிந்தது. மொட்டையடித்து முக்காடுபோடும் வழக்கம், கல்கியின் ‘கேதாரியின் தாயார்’ போன்ற கதைகள் மூலம் மெல்ல மெல்ல மறைந்தது.

    பெண்களும் கணவனை இழந்தால் மறுமணம் செய்துகொள்ளலாம் என்ற கருத்தோட்டம் உருவாகியுள்ள இன்றைய காலகட்டத்தில் கணவனை இழந்ததைத் தோற்றத்தால் ஒருபெண் புலப்படுத்த வேண்டிய தேவையென்ன? ஒருவகையில் அப்படிப் புலப்படுத்துவது அவளது பாதுகாப்பிற்கும் நல்லதல்ல. சில மோசமான ஆண்கள் அத்துமீற அவளின் கைம்பெண் கோலமே வழிவகுக்கக் கூடும்.

    மனைவியை இழந்த கணவனுக்கு தோற்றத்தில் எந்த மாறுதலையும் விதிக்காத சமுதாயம், கணவனை இழந்த மனைவியை மட்டும் மாறச் சொல்வது ஏன்? இன்றைய சமுதாயத்திற்குத் தேவையான முற்போக்குச் சிந்தனையுடன் கதை எழுதப்பட்டுள்ளது மகிழ்ச்சி தருகிறது.

    அதிலும் ஆலயத்தில் குங்குமம் கொடுக்கும் அர்ச்சகரே மனம் மாறுவதாகச் சொல்லும் முடிவு கோலம் மாறாதிருக்கும் கைம்பெண்களுக்குக் கடவுளின் ஆசி உண்டு என்ற கருத்தையும் மறைமுகமாக நம் மனத்தில் தோற்றுவிக்கிறது.

    அந்தந்த வட்டாரத்தில் புழங்கும் மொழியின் எல்லா நயங்களும் புலப்படுகிற மாதிரிக் கதை எழுதுவது ஒரு தனித் தேர்ச்சி. அந்த வகையில் கொங்கு வட்டாரக் கதை எழுதிய ஆர். ஷண்முகசுந்தரம், அவர் வழியில் கொங்கு மொழியின் நயங்கள் புலப்படும் வண்ணம் தற்போது படைப்புகள் படைத்துவரும், ப.க. பொன்னுசாமி, கரிசல் கதைகள் எழுதிவரும் கி. ராஜநாராயணன் என இப்படிப் பலரைச் சொல்லலாம். சென்னை மொழியில் சாதனை படைத்தவர் என ஜெயகாந்தனைச் சொல்ல வேண்டும்.

    ஜெ. பாஸ்கரனின் இந்தத் தொகுப்பில் உள்ள ‘ஞானம்’ கதை அமர்க்களமான சென்னை வட்டார மொழிக் கதை. சென்னைத் தமிழின் சகல நயத்தையும் ஒரே கதையில் கொட்டித் தீர்த்திருக்கிறார் கதாசிரியர். வேடன் வடிவில் வந்த இந்திரன் தந்த அமிர்தத்தை அவன் கீழ்ஜாதி என்பதால் உதங்கர் அருந்தாது இழந்தது பற்றிய புராணக் கதையை இன்றைய கண்ணோட்டத்துடன் விவரித்திருக்கிறார். முற்பட்ட ஜாதியினர் முற்றிலுமாக மாறிவிட்டதையும், ஒரு கட்சிக்காரர்கள் மட்டும் அவர்கள் மாறவில்லை என்றே சொல்லிக் கொண்டிருப்பதையும், முத்தாய்ப்பாக வைத்துக் கதை கச்சிதமாக முடிக்கப்பட்டிருக்கிறது.

    கலைமகள் கி.வா.ஜ நினைவுப் பரிசு பெற்ற ‘காப்பு’ என்ற சிறுகதை கதையம்சத்தால் மட்டுமல்லாமல் சொல்லப்பட்ட உத்தி முறையாலும் கவனத்தை ஈர்க்கிறது. தமிழின் முன்னோடிச் சிறுகதையான வ.வே.சு. ஐயரின் ‘குளத்தங்கரை அரசமரம்’ சிறுகதையில் அரசமரம் கதை சொல்லிற்று. இந்தக் கதையில் இறந்துபோன ஒருவரின் ஆவி கதை சொல்கிறது. ஒரு சிறுகதையின் மதிப்பைத் தீர்மானிப்பது அதன் உள்ளடக்கமே என்றாலும்கூட, சிறந்த உத்தியில் எழுதப்படும்போதுதான் அந்த உள்ளடக்கம் வாசகனிடம் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கு இந்தக் கதை ஒரு சான்று.

    சந்தர்ப்பவசத்தால் பாலியல் உறவுக்கு ஆளான பெண்களுக்கு வாழ்வளிப்பதே சரி என்ற காந்தியின் தத்துவ விளக்கமாக அமைந்துள்ளது கதை. கதையம்சமே இல்லாத கதைகள் பெருகிவரும் காலகட்டத்தில் ஒரு வலுவான கதையம்சத்தோடு இந்தக் கதை அமைந்துள்ளதைப் பாராட்டத்தான் வேண்டும். இப்படிப்பட்ட கதைகளே நெஞ்சில் நிற்கக்கூடியவை.

    வாசகர்களிடம் கதையின் இறுதியில் என்ன முடிவுவரும் என்கிற பரபரப்பு தோன்றும் வகையில் கதை எழுதப்பட்டுள்ளதையும் பாராட்ட வேண்டும். இந்தத் தொகுப்பின் முக்கியமான கதைகளில் ஒன்று இது.

    கைக்கிளை என்பது ஒருதலைக் காமம் என்றும், பெருந்திணை என்பது பொருந்தாக் காமம் என்றும் பழைய தமிழ் இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன. ஒரே பாலினத்தவர் தங்களுக்குள் கொள்ளும் பாலின வேட்கையைப் பொருந்தாக் காமத்தில் அடக்கலாம். ஆனால் அதுவும் இயல்பே என்பது இன்றைய காலத்துச் சிந்தனை. அப்படியான திருமணங்களைக்கூட அங்கீகரிக்க வேண்டும் என்ற குரல் பல இடங்களில் எழத் தொடங்கிவிட்டது. இத்தகைய சூழலில் ‘ஓ’ என்ற கதையைப் படைத்திருக்கிறார் கதாசிரியர்.

    கதையின் முடிவு வெளிப்படையாக இல்லாமல் பூடகமாக அமைந்துள்ளது. ஓர் ஆண் கொடுத்த முத்தத்தை வெறுக்கும் மஞ்சு என்ற கிராமீய மனம்கொண்ட பெண், தன் தோழி பாருவுக்குத் தானே முத்தம் கொடுப்பது என்ன வகையான ஈர்ப்பு என்பதையோ, இல்லை, குழந்தைத்தனமான ஒன்றுதானா என்பதையோ விளக்காமல் வாசகர்களின் ஊகத்திற்குக் கதாசிரியர் விட்டுவிடுகிறார்.

    ஒருபால் வேட்கையைச் சொல்லும் கதை இது என எடுத்துக்கொண்டால் நல்லவேளை, வெளிப்படைப் பாலியலை இவர் கையாளவில்லை. கரிச்சான் குஞ்சு எழுதிய ‘பசித்த மானிடம்’, ஆதவனின் ‘காகித மலர்கள்’ போன்ற மிகச் சில தமிழ்ப் படைப்புகளில் கலைநயத்தோடு பூடகமாக இந்தப் பிரச்சனை கையாளப்பட்டுள்ளது.

    பாலியல் வாழ்வின் முக்கியமான ஓர் அம்சம்தான். சிவானந்தர் சொல்வது மாதிரி, குழந்தைப் பருவத்தில் அது மறைந்திருக்கிறது. இளமைப் பருவத்தில் அது ஓங்கியிருக்கிறது. முதுமையில் அது அடங்கியிருக்கிறது. மற்றபடி அந்த உணர்வு இல்லாத பருவமே இல்லைதான். தி. ஜானகிராமன், கு.ப. ராஜகோபாலன் போல் அந்த உணர்வைப் பூடகமாக எழுதுவதே கலை நேர்த்தி. இல்லாவிட்டால் கிளர்ச்சியூட்டும் வணிக எழுத்தாக அது மாறிவிடும்.

    இதுபோன்ற விஷயங்களையெல்லாம் எழுதவேண்டுமா என்று சிலர் மனத்தில் கேள்வி எழக்கூடும். என்றாலும் கதாசிரியர் தி.ஜா., கு.ப.ரா. மரபையே தொடர்கிறார் என்பதும் வெளிப்படைப் பாலியல் பாணியைப் பின்பற்றவில்லை என்பதும் மனநிறைவு தருகிறது.

    ‘அண்ணாசாமியும், ஜீரா ரசமும்’ என்ற கதை ரசமான கதை. தன் மனைவிக்குச் சமைத்துப் போட்ட அண்ணாசாமி தன் படு மட்டமான சமையலைக் குறைசொல்லாமல், மனைவி சாப்பிட்டதைக் கண்டு மலைத்துப் போகிறார். ‘பேஷ், ரொம்ப நன்னா இருக்கு!’ என்று வேறு சொல்கிறாள் அவள்! அன்று முதல் பிறர் சமைப்பதில் குற்றம் காண்பதை அடியோடு விட்டுவிடுகிறார் அண்ணாசாமி. சமையல் பற்றிய இந்தக் கதையில் அளவாக அங்கங்கே நகைச்சுவையைத் தாளித்திருக்கிறார் கதாசிரியர்.

    இடது கைப் பழக்கத்தைப் பற்றி அலசி ஆராய்கிறது ‘இடது கை’ என்ற சிறுகதை. குறட்டை விடும் பழக்கமுள்ள ஒரு முதியவரின் பெருந்தன்மையையும், சகிப்புத் தன்மையையும் பற்றிப் பேசுகிறது ‘சகிப்பு’. ‘உடைந்த உண்டியல்’ என்ற கதை ஓர் அரசியல் தலைவரின் தாய்ப்பாசம் எப்படி விளம்பரத்திற்காக மட்டுமே பயன்படுகிறது என்பதை விளக்கும் காலத்திற்கேற்ற கதை.

    ‘கிணற்றுக்குள் காவிரி’ கதை, அதன் அழகிய சொல்லாட்சியால் நம்மைக் கவர்கிறது. ‘ஆளோடியின் ஒரு பக்கத்தில் சுவரோரமாய் இருந்த வானம் பார்த்த சிறிய முற்றத்தில் கம்பிகளாய் விழுந்துகொண்டிருந்த மழை காய்ந்த மனத்து நினைவுகளை ஈரமாக்கி உயிர்ப்பித்தது.’ என எழுதுகிறார் கதாசிரியர்.

    ‘ஆளோடி, ரேழி’ போன்ற வார்த்தைகளெல்லாம் இன்று புழக்கத்தில் இல்லை. இன்றைய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இவற்றிற்கெல்லாம் இடமும் இல்லை. தி. ஜானகிராமன் காலத்து வார்த்தை ஆளோடி. அதை இந்தக் கதையில் பார்க்க முடிவது, இந்தக்கதை நடந்த காலத்தை நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறது.

    ‘மைக்கில் காணாமல் போனவர்களைப் பற்றி அறிவித்துக் கொண்டிருந்தார்கள். காவிரி ஆற்றுக்கும் ஓர் அறிவிப்பைச் செய்திருக்கலாம்’ என்பன போன்று இந்தக் கதையில் வரும் வரிகள்

    Enjoying the preview?
    Page 1 of 1