Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kuvigam Kadaisi Pakkam
Kuvigam Kadaisi Pakkam
Kuvigam Kadaisi Pakkam
Ebook197 pages1 hour

Kuvigam Kadaisi Pakkam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒவ்வொரு மனிதனுக்கும் தங்களது கடைசி வாழ்வு எப்படி இருக்கும் என்று கற்பனை உண்டு. அதுபோலவே கதைகளிலும் கடைசி பக்கம் எப்படி அமைய வேண்டும் என்பதை பற்றி காண்போம்.

Languageதமிழ்
Release dateFeb 4, 2023
ISBN6580126309451
Kuvigam Kadaisi Pakkam

Read more from Dr. J. Bhaskaran

Related to Kuvigam Kadaisi Pakkam

Related ebooks

Reviews for Kuvigam Kadaisi Pakkam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kuvigam Kadaisi Pakkam - Dr. J. Bhaskaran

    http://www.pustaka.co.in

    குவிகம் கடைசி பக்கம்

    Kuvigam Kadaisi Pakkam

    Author:

    டாக்டர். ஜெ பாஸ்கரன்

    Dr. J. Bhaskaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/dr-j-bhaskaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion there of may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முகவுரை!

    என்னுரை

    கடைசி பக்கம்...

    பனைமர நட்பு

    வணக்கம் டாக்டர்ஸ்!

    நம்பிக்கை என்னும் மந்திரச் சாவி!

    அப்பாவின் நினைவில்

    கதை கேளு... கதை கேளு...

    சிறுகதைகள்

    அசோகமித்திரனின் கட்டுரைகள்!

    மனமென்னும் குரங்கு!

    சைக்கிள் காலம்!

    நில், கவனி, எடுத்துக்கொள்!

    வாழ்வா? சாவா?

    வாணிகப் பரிசிலனோ யான்?

    வைதீஸ்வரன் கவிதைகள்

    அசோகமித்திரனும் ஹார்மோனியமும்!

    பாக்கியம் ராமசாமி ஜ.ரா. சுந்தரேசன்

    தூளியில் துயிலும் சிந்தனைகள்!

    தமிழ்த் தாத்தா உ.வே.சா. (1855 - 1942) சில குறிப்புக்கள்!

    ஃப்ளாஷ் பேக் விழா!

    ஸ்ட்ரெஸ் தவிர்க்கப்பட வேண்டிய மனநிலை!

    நேர்மையின் மறுபெயர் ஏ.என். சிவராமன்!

    சுழலும் பம்பர நினைவுகள்!

    ஞாயிறு போற்றுதும்!

    நெட் வைத்தியம்!

    கோழைகளின் சரணாலயம் தற்கொலை

    கஸ்டமர் சர்வீஸ்!

    மருத்துவர் நோயாளியாகும் நேரம்

    அனுபவம்!

    புத்தகத் திருவிழா 2019

    சாருகேசி அவர்களுக்கு அஞ்சலி!

    பங்களூரில் ஸிந்துஜாவைத் தேடி!

    சுதந்திரக் கதை சொல்லும் அந்தமான் செல்லுலார் ஜெயில்!

    அசோக் நகர் கோடைப் புத்தக விழாவும், நானும்!

    எதிர் மரியாதையும் சுதாமன் குபேர செல்வமும்!

    இது தொற்று வியாதியா? பரம்பரை வியாதியா?

    தமிழ்வாணன் பன்முக வித்தகர்!

    கடைசி பக்கங்களின் பிதாமகன்

    சுஜாதா

    அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த

    நமஸ்காரங்கள்

    முகவுரை!

    முகவுரை எழுதுவது அப்படி ஒன்றும் சுலபமான விஷயமல்ல. என்னைக் கேட்டால் நாவல் எழுதுவதைவிடக் கடினமானது முகவுரை எழுதுவதுதான் என்பேன் என்கிறார் லா.ச.ரா. (அலைகள் ஓய்வதில்லை).

    எந்த ஒரு புத்தகம் வாங்கினாலும் நான் முதலில் வாசிப்பது அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் எழுதிய முன்னுரை, மற்றொரு இலக்கியவாதி அதற்கு எழுதியிருக்கும் முகவுரை இவைகளைத்தான். எந்த ஒரு முன்னுரையோ, முகவுரையோ அழுத்தமாக எழுதப்பட்டிருக்கிறதோ, வாசிக்கும் ஆவலைத் தூண்டுகிறதோ, அதுவே அந்தப் புத்தகத்திற்குப் பெருமை சேர்த்துவிடும். என்கிறார் எழுத்தாளர் வித்யா சுப்பிரமணியம் (‘கதையின் கதை’).

    இப்படி ஒரு சுலபமில்லாத, அழுத்தமாக எழுதப்பட வேண்டிய விஷயத்தை அவரது கடைசிப்பக்கம் புத்தகத்துக்குச் செய்து தர வேண்டினார் எழுத்தாளர் ஜெ. பாஸ்கரன் (டாக்டரை ஒரு நல்ல எழுத்தாளராகப் பார்ப்பதில்தான் அதிகம் மகிழ்ச்சி அடைபவன் நான்). எல்லா நாளும் என் நேரத்தைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பணிச்சுமையினால் சற்றுத் தயங்கினாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன். காரணம் அவரது பன்முகத்தன்மையுடைய எழுத்து. தன்துறை சார்ந்த கட்டுரைகள் மட்டுமின்றிச் சிறுகதை, பயணக் கட்டுரை, இசை, இலக்கியம் இப்படி எது பற்றியும் சுவையாக, மெல்லிய நகைச்சுவையுடன் எழுதக் கூடிய ஒரு எழுத்தாளர். இன்று தமிழில் இப்படி எல்லாப் பிரிவுகளிலும், எழுதக்கூடியவர்கள் மிகச் சிலரே.

    நம்மில் பலருக்கு எது சுலபம் எனக் கேட்டால் பளிச்சென்று வரும் பதில். ‘வேறன்ன? படிப்பதுதான்’ என்பதாகத்தான் இருக்கும். ஆனால் எல்லோரும் ரசித்துப் படிக்கும்படி எழுதுவதுதான், உண்மையில் கடினமான விஷயம் என்பது எழுத்தாளர்களுக்குத்தான் தெரியும். அதுவும் பத்திரிகையில் கடைசிப் பக்கம் எழுதுவது எந்த எழுத்தாளருக்கும் ஒரு சவால்தான்.

    விஷயங்களைச் சேகரித்து எழுதுவது எனக்குக் கஷ்டமாக இல்லை. ஆனால், அதை எல்லாத் தரப்பு வாசகர்களுக்கும் பிடிக்கும் வகையில் எழுதுவதுதான் கஷ்டம். அதைக் கவனமாகச் செய்யாவிட்டால் வாசகன் நாவலின் கடைசிப் பக்கத்துக்கு தாவிவிடுவான் என்கிறார் கண்ணதாசன். அப்படி அவர் சொன்ன கடைசிப்பக்கத்தை ஆவலுடன் படிக்கும்படி படைக்கும் ஆற்றல் கொண்ட ஆசான் வருவார் என்று அன்று அவருக்குத் தெரியாது. விளம்பரங்கள் இல்லாவிட்டால் ஆசிரியருக்குக் கடிதங்கள், அல்லது அறிவிப்புகள் என்றிருந்த கடைசிப் பக்கத்துக்கு ஒரு அந்தஸ்தத்தை கொடுத்தவர் சுஜாதா. அவர் தேடலின் வீச்சும், பன்முகத்தன்மையும் வெளிச்சத்துக்கு வந்தது அவர் கணையாழியில் எழுதி வந்த கடைசிப் பக்கத்தினால்தான்! இன்று இந்தச் சின்னப் பகுதியை எழுதுபவருக்குப் பெருமை சேர்க்கும் விதமாக பிரபலங்களை எழுதச்செய்து அந்தக் கடைசிப் பக்கத்தைப் பத்திரிகையில் முதலில் படிக்கும் பகுதியாகச் செய்து கொண்டிருப்பது கல்கி இதழ். கண்ணதாசனில் தொடங்கிப் பல பிரபலங்களின் எழுத்துகளுடன் இன்றும் அதில் தொடரும் பகுதி இது.

    ஒரு கதை, நாவல், பயணக்கட்டுரை எழுதுவதைவிடச் சில நிமிடங்களில் படித்துவிடக்கூடிய இந்தக் கடைசிப் பக்கம் எழுதுவது எழுத்தாளருக்குக் கடினமான பணி. காரணம் கதைகள் எழுதுவதற்குத் தயாரித்துக்கொள்வதுபோலக் கரு அல்லது விஷயம் குறித்த ஒரு முக சிந்தனையாகவே, கடைசிப்பக்கத்துக்கு இருக்க முடியாது. வாரந்தோறும் மாறுபட்ட புதிய விஷயங்கள், அதைச் சொல்ல புதிய கோணங்கள் பற்றித் தொடர்ந்து சிந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும். எல்லாவற்றையும் விடச் சில பக்கங்களில் சொல்லக்கூடிய விஷயங்களை ‘நச்’சென்று சுருக்கமாக, நகைச்சுவையுடன் ஒரு பக்கத்தில் சொல்ல வேண்டும். அதையும் காலில் கட்டிய குண்டாய்க் கனக்கும் காலவரைக்குள் உள்ளடக்கத்துடன் செய்ய வேண்டும்.

    இந்தத் திறன்கள் எல்லாம் எழுத்தாளார் பாஸ்கரனுக்கு இயல்பாகவே கைவந்திருக்கிறது என்பது இந்தத் தொகுப்பில் தெரிகிறது.

    மஹாகவி சொல்லியிருக்கும் தெளிவுற அறிதல் என்பது, தான் ஆழ்ந்து வாசித்து அறிந்தவற்றை, சரியான இடங்களில் ஆசிரியர் அழகாகப் பயன்படுத்தியிருக்கும் பாங்கு இந்தக் கட்டுரைகளில் பளிச்சிடுகிறது. மற்றொரு விஷயம் அவரது அபாரமான நினைவாற்றல். நட்பு, நம்பிக்கை, மனித இயல்பு, இலக்கியம், சங்கீதம், பாராட்டு, பாதித்தவை, பார்த்தவை நினைவஞ்சலிகள், சந்தித்தவர்கள் இப்படித் தொடாத விஷயமே இல்லையோ என்று நினைக்கும் அளவிற்குக் கடைசி பக்கங்களால் நிறைந்திருக்கிறது இந்த முதல் தரமான தொகுப்பு.

    தான் சார்ந்த துறையின் தாக்கம் அவர்கள் எழுத்தில் தெரிவதை எழுத்தாளர்களால் தவிர்க்க முடியாது. (சுஜாதா விதிவிலக்கு) ஆனால் டாக்டராகத் தன்னிடம் சிகிச்சைக்கு வந்தவர்களின் கதையைச் சொல்லும்போது அதில் சமுகம் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகள், தவிர்க்கக்கூடிய தவறுகள் போன்ற இழைகளை ஊடுபாவாக நெய்திருக்கும் நேர்த்தி பாராட்டுக்குரியது.

    சில கட்டுரைகளில் வரும் வாக்கியங்கள், சொல்லாடல்கள் நம்மை நிறுத்தி மீண்டும் வாசிக்கச் செய்கிறது. மனமும் அதன் தன்மைகளும் வியக்க வைப்பவை. உடலை இயக்கக் கூடியவை என்கிறார் ஒரு கட்டுரையில். இந்திராவின் எமர்ஜென்சியின் முதல் பலி காமராஜர் என்று சொல்லப்பட்டதை மேற்கோள் காட்டுகிறார். யார் தூண்டினாலும் மனதில் நோய் உள்ளவர்களே தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்கிறார் மற்றொரு கட்டுரையில். தமிழ் சினிமாவில் ‘தூளி’ ஏழைக்கான குறியீடு. இப்படிப் பல கட்டுரைகளை வாக்கியங்களை மனதின் பக்கத்தில் நிற்கும் பக்கமாகப் படைத்திருக்கிறார் நூலாசிரியர்.

    தொகுப்பில் பல முன்னாள், இன்னாள் சிறுகதை எழுத்தாளர்களை அவர்களின் எழுத்துகளுடன் பாஸ்கரனின் பார்வையில் சந்திக்கிறோம். சில படைப்புகளின் பக்கங்களை ருசிக்கிறோம். நாலடியார், புறநானூறு பாடல்களுடன் கண்ணதாசனின் கவிதைகள்கூட அங்கங்கே தலையைக் காட்டுகின்றன.

    ஏ.என். சிவராமன், அசோகமித்திரன், சாருகேசி, தமிழ்வாணன் போன்றவர்களின் நினைவஞ்சலியில் அவர்களைப் பற்றிய புகழ் மாலைகளாகயில்லாமல் பலர் அறிந்திருக்காத பல புதிய விஷயங்கள் பேசப்பட்டிருக்கின்றன.

    மொத்தத்தில் ஒரு தேடலின் எல்லை இதுதான் என்று வகுத்துக் கொள்ளாமல் ஆர்வத்துடன் பல விஷயங்களைப் படித்துக் கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளனின் படைப்பு இது. மனமும் நேரமும் இசைந்திருக்கும் நேரத்தில், ஒரு நல்ல இசையைக் கேட்பதுபோல, நெட்பிளிக்ஸ், அமேசானில் நல்ல படம் பார்ப்பதுபோல, விரும்பும்போது நமது நூலகத்திலிருந்து எடுத்து வாசிக்கக்கூடியவகைப் புத்தகம் இது.

    ரமணன்

    பொறுப்பாசிரியர், கல்கி.

    ramananvsv@gmail.com

    என்னுரை

    மின்னிதழில் மாதம் ஒரு பத்தி கடைசி பக்கம் எழுதி வந்ததின் மூன்று வருடத்திய தொகுப்பு இது. பத்திக்கும் கட்டுரைக்கும், நீளம் தவிர, கொடுக்கும் விவரங்களின் அடர்த்திக்கும் வித்தியாசம் இருப்பதாகப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, ஒரு தொகுப்பாகப் பார்க்கும்போது, இப்படி ஒரு எண்ணம் வருகிறது.

    ஆர்.கே. நாராயண் தனது SALT&SAWDUST (Penguin Books) புத்தகத்தில், ‘Table-Talk’ என்று ஒரு பத்தி பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்: ஒரு கட்டுரை மாதிரி நிச்சயமான வடிவம் இல்லாமல், எதைப்பற்றி வேண்டுமானாலும் சிலவரிகள் விவாதம், முடிவுகள் எதுவும் இல்லாமல் ஒரு சின்ன நிகழ்வு, மனநிலை அல்லது ஐடியா பற்றி எங்கிருந்தோ வழிந்து வந்து, வந்த மாதிரியே மறைந்தும் விடுவதுபோல் எழுதுவது.

    இந்த குணாதிசயங்கள் உள்ள பத்திகளே கடைசி பக்கத்தை அலங்கரித்து வருகின்றன என்பதற்கு சுஜாதாவின் கணையாழியின் கடைசி பக்கங்களே சாட்சி! அதில் இழைந்தோடும் மெல்லிய நகைச்சுவையும், அங்கதமும் சுஜாதாவின் கைவண்ணத்தில் கிடைக்கும் எக்ஸ்ட்ரா போனஸ்!

    ஒவ்வொரு மாதமும் எதை எழுதுவது என்பது பெரிய கேள்விக்குறியாய் விஸ்வரூபம் எடுத்து முன்னால் நிற்கும்போது, ஏர்னஸ்ட் ஹெமிங்வேயின் வார்த்தைகள் நினைவுக்கு வரும். அவர் சொல்வது: "There is nothing to writing. All you do is sit down at a typewriter and

    Enjoying the preview?
    Page 1 of 1