Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ponveedhi
Ponveedhi
Ponveedhi
Ebook214 pages1 hour

Ponveedhi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திரு மோகன்ஜி கடலூரில் பிறந்தவர். 61 வயது நிரம்பியவர். இளவயது முதலே கவிதை,கதை,நாடகம் என்று மிகுந்த ஈடுபாட்டுடன் வளர்ந்தவர்.

சமூக அக்கறையும், தமிழ்ப்பற்றும் மிக்கவர். இலக்கிய,ஆன்மீக நிகழ்வுகளில் பங்கேற்பவர்.

இவர் படைப்புகள் தினமணிக்கதிர், அமுத சுரபி, போன்ற பத்திரிகைகளிலும், இணைய இதழ்களிலும் வெளிவந்துள்ளன.

கல்லூரி நாட்கள் முதலே கவியரங்கங்களில் பங்கேற்றும் ,நடுவராயும் ஈடுபட்டவர். அகில இந்திய வானொலியில் இலக்கிய உரைகள் நிகழ்த்தியவர்.

‘சாகித்ய அகாதமி’ மொழிபெயர்ப்புக்கான பணியை அளித்திருக்கிறது (ஆர்.கே.நாராயணன் ஆங்கிலத்திலிருந்து தமிழில்) .

தேசியமயமாக்கப்பட்ட வங்கியொன்றின் 35 ஆண்டுகள் பணி. வங்கி அதிகாரிகள் கல்லூரியில் முதன்மைப் பயிற்சியாளராகவும் துணை முதல்வராகவும் இருந்தவர்.

தற்போது பல்கலைக் கழகங்கள், பல வங்கிகளின் பயிற்சி கல்லூரிகள், மற்றும் தொழில் நிறுவனங்களிலும் மனோவியல், மேலாண்மை,ஆளுமை பயிற்சி வகுப்புகள் எடுத்து வருகிறார்.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சிறப்புரை, தலைமை என பலமுறை பங்கேற்றவர்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580122302516
Ponveedhi

Related to Ponveedhi

Related ebooks

Reviews for Ponveedhi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ponveedhi - Mohanji

    http://www.pustaka.co.in

    பொன்வீதி

    Ponveedhi

    Author:

    மோகன்ஜி

    Mohanji

    For more books

    http://www.pustaka.co.in/home/author/tamil/mohanji

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளக்கம்

    என்னுரை

    சிரம் கண்ட அட்சதைகள்

    பொன்வீதி

    நாட்டி கார்னர்

    பச்ச மொழகா

    'பியார் கி புல்புல்'

    கல்யாணியை கடித்த கதை

    தத்த்தி

    வெளையாட்டு

    கூளம்

    வாக்கிங்

    அங்கிங்கெனாதபடி...

    ஒரு பயணம்

    விட்டகுறை தொட்டகுறை

    வீட்டைத் துறந்தேன்

    எப்படி மனம் துணிந்தீரோ?

    நிழல் யுத்தம்

    பாண்டு

    வடு

    தமிழே! என் தமிழே!!

    ஒரு ஊதாப்பூ நிறம் மாறுகிறது

    காமச்சேறு

    என்னைக் காட்டிக் கொடுத்து விட்டாயே??

    ஆசிரியர் பற்றி சிறு குறிப்பு

    என்னுரை

    சிறுகதை என்பது இலக்கியத்தின் முக்கிய வகையா? அல்லது சிறுகதை, இலக்கியத்தின் ஆறாம் விரலா? வடிவக்குறுக்கத்தால் தான் ஒரு படைப்பு சிறுகதை ஆகிறதா? இந்த விவாதங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

    படைப்பாளியின் மனம் உள்வாங்கிய ஒரு கணத்தின் நிகழ்வை, தன் புனைவின் மூலம் காட்சிப்படுத்தி, சிறுகதையாய் வாசகனுக்கு படைத்தளிக்கிறான். அவன் சொன்னதை விடவும், சொல்லாமல் விட்டவையை தன் புரிதலுக்கு ஏற்ப சிறுகதையாய் வாசகன் மனதில் எழுதிக் கொள்கிறான். ஒரு படைப்பாளியின் புத்தியில் விழுந்த பொறியும் கருவும் வாசகர்கள் மனத்துள் பற்பல சிறுகதைகளாய் எழுதிக் கொள்ளப்படுகிறது என்பதே என் துணிபு. ஆக, சிறுகதை நிகழ்வது வாசகன் மனமுற்றத்தில் தான். மிகச்சிறந்த சிறுகதையோ, ஒரு வாசகனுக்குள்ளேயே படிக்குந்தோறும் பலவாறாய் உருக்கொள்கிறது. புதிய வாசல்கள் திறக்கின்றன. தேடல் மிக்க வாசகர் ரசனை, எதிலும் எளிதில் திருப்தியுறாமல் அந்த உச்ச படைப்புக்காய் தேடியபடியே இருக்கிறது. அவனுக்கான அந்த சிறுகதை இனிமேல் தான் எழுதப் படவேண்டும்!

    இன்றைய வாசகனுக்கு நேரமில்லை. முகநூலும், ட்விட்டர் கொறிப்பும் நேரத்தைத் தின்றபின் வாசிப்புக்கு மிச்சம் ஏது? வரும் நாட்களில், தொழில்நுட்ப தாக்கம் இலக்கியம் பற்றிய கண்ணோட்டத்தையே மாற்றிவிடக் கூடும். இன்று, இயல் இசை, நாடகம் என்ற மூன்றுகூறுகளில் நாடகம் என்பது சினிமாவாகி, குறும்படமாகி, யூடியூபின் இரு நிமிடச் சலனமாய் மாறியபடி... எல்லாமும் மாற்றத்துக்கு உட்பட்டவையே என்பதை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.

    இலக்கிய வாசிப்பின் அதிகபட்ச இருப்பாய் சிறுகதை வடிவம் உருப்பெறுமோ? (இன்றைய நாவலின் இடம் போல) காலம் தான் பதில் சொல்ல வேண்டும். எப்படியோ... சிறுகதை தன் இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளும். சிறுகதையை 'ஒரு பக்கக்கதை' என்று மூளி செய்வோமோ, 'நாலுவரி நச்கதை' என்று நறுக்கி வைப்போமோ அறியேன்... ஐந்துநாள் கிரிக்கெட் அரைநாளில் 'காட்டடி மாட்டடி' என்று மாறியதைப்போல ரசனைகள் மாறலாம். அதிலும்கூட சிறந்த படைப்புகள் சாத்தியமாகலாம்.

    கடந்த நாற்பது ஆண்டுகளில், கவிதை, சிறுகதை, நாடகம், வானொலி, பேச்சு என்று இலக்கிய முயற்சிகளை செய்தபடி இருக்கிறேன். எனது வலைப்பூவான 'வானவில் மனிதன்' பரவலாக வாசிக்கப்படுகிறது. மிக கண்ணியமான விவாதங்களும், கருத்து பரிமாற்றங்களும் அதில் நிகழ்ந்தபடி இருக்கின்றன. இந்த நூலில் உள்ள சிறுகதைகள் பல்வேறு கால கட்டங்களில் எழுதப்பட்டவை.

    சில இணையத்தில் வெளிவந்து பரந்த கவனமும் பாராட்டும் பெற்றவை. வம்சி வெளியீடாக 'வேங்கைச்சவாரி' எனும் தொகுப்பில் எனது ஆக்கமும், எழுத்தாளர் ஜெயமோகன் உட்பட சில படைப்பாளிகளின் படைப்போடு வெளியானது. அக்ஷ்ரா பிரசுரம் வெளியீடாக 'சாஸ்தாம்ருதம்' எனும் ஆன்மீக நூலும் வெளியானது. "வானவில் மனிதன் கவிதைகள்' என்ற தொகுப்பும் வெளிவர இருக்கிறது. மேலும் சில குறுநாவல்களும் அச்சேற காத்திருக்கின்றன.

    கடந்த சில வருடங்களில் இணையத்தில் வாசிக்கப்பட்டு வரவேற்பு பெற்றபடியாலேயே ஒரு தொகுப்பில் இதை அச்சேற்ற துணிவு வந்தது. இந்த சிறுகதை தொகுப்புக்கு பெரிதும் ஊக்கமளித்த எனது ஆருயிர் நண்பர்களுக்கும் இந்தப் புத்தக வெளியீட்டை ஒருங்கிணைத்த திரு. மாரிமுத்து அவர்களுக்கும் ஒளிஅச்சு செய்த திரு செந்தில் குமார் அவர்களுக்கும் என் அன்பும் நன்றியும்.

    மோகன்ஜி

    சிரம் கண்ட அட்சதைகள்

    இந்தக் கதைகள் வெளியானபோது வந்த கருத்துக்கள் மிக உண்டு. அவற்றில் சில மட்டும் இங்கே தொகுக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கருத்துக்களைப் பகிர்ந்த அன்பு உள்ளங்களுக்கு என் உளமார்ந்த நன்றி. நீங்களே என்னை செதுக்கினீர்கள்:

    காஸ்யபன் (தீக்கதிர் - செம்மலர் முன்னாள் ஆசிரியர்)

    மோகன்ஜி! நல்ல காலம். வெகுஜனப் பத்திரிகைகளுக்கு போகாமல் இருந்தீர். பதிவுலகம் கண்டெடுத்த முத்து நீர். என்ன லாவகம்! பிசிறில்லாத சொல்லாடல்.!சபாஷ்! வாழ்த்துக்களுடன் (வெளையாட்டு சிறுகதை)

    ரிஷபன்: (எழுத்தாளர்)

    மோஹித்துப் போனேன் நீங்கள் சொல்லிப் போன விதத்தில்...நிகழ்வுகளை வளர்த்துப் போன யதார்த்தமும் சரி... முடிவில் அப்படியே புரட்டிப் போட்ட சூடு... தேர்ந்த எழுத்தாளருக்கே இது சாத்தியம். (கல்யாணியைக் கடித்த கதை)

    நிலாமகள்: (பதிவர்)

    ஆடுபுலி ஆட்டத்தில் வெட்டுப் படுவதும் பெற்றுக் கொள் வதுமாக சந்தர்ப்ப சூழலே சாமான்யனையும் சபையேற்று வதாக வாழ்வெனும் மேடை. வாழ்தலின் நெருக்கடியில் ஆசுவாசமாய் தங்களை வாசிப்பது...நன்றி ஜி! (பியார் கி புல்புல்)

    ஜீவி (எழுத்தாளர்)

    ஹப்பா... என்ன கதை ஐயா!... மனுஷனின் மகோன்னதம் எப்படியெல்லாம் அவனைப் போட்டு அலைக்கழிக்கிறது!... ஒவ்வொரு காகிதத்தைச் சுற்றியும் பின்னிக் கொள்ளும் நினைவுப் பின்னல் அற்புதம்! 'கூளம்' கதை ஏற்படுத்திய உணர்வுகள் மறக்கவே மறக்காது! மோகன்ஜியின் படைப்புலம் வாழ்க! கைநிறைய சுமந்திருக்கும் வாழ்த்துக்களைப் பிடியுங்கள், நண்பரே!(கூளம்)

    கீதா சாம்பசிவம் (பதிவர்):

    என்ன சொல்ல? கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டு, மனம் நெகிழ்ந்து கிடக்கிறது. சராசரி வாசகருக்கான எழுத்து இல்லை உங்களுடையது. (அங்கிங்கெனாதபடி)

    கீதமஞ்சரி (எழுத்தாளர்)

    தனிமையின் ஏக்கத்தொனிப்போடு ஒரு வாழ்க்கை... இயலாமை... எதிர்பார்ப்பு... ஏமாற்றம்... ஆதங்கம்... இதுதான் என்று முகத்திலறையும் யதார்த்தத்தோடு கதை நடக்கிறது... ஆம்... நடையாய் நடக்கிறது. எழுத்துநடை பற்றி என்ன சொல்ல? வரிகளுக்குள் வாசிப்போரை ஈர்த்துக்கொள்ளும் அற்புதம். மனம் நிறைந்த பாராட்டுகள் மோகன்ஜி உங்களுடைய தனித்த முத்திரை இந்தக் கதையிலும் பதிக்கப்பட்டுவிட்டது. (வாக்கிங்)

    ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி (பதிவர்)

    கதை கொண்டு சென்ற பாங்கு நேர்த்தி! ஒரு ஜெயகாந்தனின் கதை படிக்கும் மோஸ்தரில் இருந்தது. இன்று சாயந்திரமே, என் பெற்றோர்களிடம் படித்துக் காண்பிக்கப் போகிறேன். (பாண்டு)

    மஞ்சு பாஷிணி (பதிவர்):

    நுணுக்கம் தான் ஒவ்வொரு வரிகளிலும் நிமிரச்செய்தது வாசகர்களை என்றால் அது மிகையில்லை கண்டிப்பாக கதை தான்... திரும்ப திரும்பச்சொல்லி பார்க்கிறேன் இது கதை தான் ஆனால் கதை போலவே இல்லாதது போல அத்தனை இயல்பு கதை நடை... தெளிவான வரிகள். அற்புதமான கதை மோகன்ஜி! நீண்ட நாள் கழித்து ஒரு அருமையான நிகழ்வை நேரில் கண்டது போலவே கதையின் பாணி அமைத்தது அசத்தல்.(தத்த்தி)

    பத்மநாபன் (பதிவர்):

    ஜீ...தொடர்ந்து இரண்டு தடவை படிச்சிட்டேன்... வரிகள் சுத்திட்டே இருக்கு... எல்லார் வாழ்க்கையையும் ஏக்கத்தையும் தொட்டுட்டிங்க... உரைநடை சுவாரசியம் திருப்பி திருப்பி படிக்க வைக்குது.இனியும் எவ்வளவு தடவை படிப்பேன்னு எனக்கே தெரியல....(நிழல் யுத்தம்)

    சிவகுமாரன், கவிஞர்

    \\அப்பாவுக்கும் கண்கள் கசிந்து நான்கூட மங்கலாய்த் தான் தெரிந்திருப்பேன்//

    எனக்கும் கண்கள் கசிந்து எழுத்துக்கள் மங்கலாய்த் தான் தெரிகின்றன. மூன்றே பாத்திரங்கள் - எத்தனை குணாதிசயங்கள். எவ்வளவு விவரணைகள். செல்லச் சண்டையில் இழையோடும் பாசம். பிள்ளைக்காக தந்தையும், தந்தைக்காக பிள்ளையும் போடும் திட்டங்கள். அப்பப்பா... சுந்தர்ஜி சொல்வது போல் ராட்சஷன் தான் நீங்கள் அண்ணா! (நிழல் யுத்தம் )

    அப்பாதுரை (பதிவர்)

    அசத்திட்டீங்க போங்க.! Period detailss தெளித்து எழுதப்பட்ட கதைகளை மிகவும் ரசித்துப் படிப்பேன். இந்தக் கதையில் அங்கங்கே தெளித்திருக்கிறீர்கள். Very nice.

    இன்னதென்று தேர்ந்தெடுக்க முடியாமல் கதையின் உரையாடல்கள் எல்லாமே அருமை. படிக்கும் போது பூ முகர்ந்து பார்ப்பது போல் இருந்தது. ஒரு முறையோடு நிறுத்திக் கொள்ள முடியவில்லை. ஒன்று செய்தாலும் அதை நன்று செய்கிறீர்கள் மோகன்ஜி... (பொன்வீதி)

    சுப்பு தாத்தா (பதிவர்)

    கூடலும் ஊடலும்

    வாடலும் தேடலும்

    பாடலும் சாடலும்

    பவனி வரும்

    பள்ளியறை அன்றோ கூளம்! !

    கூளம் எனது சரித்திரம். என்றுமதை

    வைத்திருப்பேன் பத்திரம். (கூளம்)

    GM BALASUBRAMANIAN (பதிவர்)

    யாருக்காவது அனுமானின் வால் தெரிந்ததா? நம்பிக்கைகளுக்கு எவ்வளவு முகங்கள்.தெளிவான கதை நடை. பாராட்டுக்கள். (தத்த்தி)

    வை கோபாலகிருஷ்ணன் (பதிவர்)

    மிகவும் அருமையானதொரு கதை. வெகு அழகாகவே கொண்டு சென்றுள்ளீர்கள். கதையில் வரும் ராஜாமணி என்றும் மறக்க முடியாததோர் கதாபாத்திரமாக எப்போதும் வெற்றிலை பாக்குப்புகையிலைக் குதப்பிக்கொண்டு நம் கண்முன் நிற்பவராக காட்சியளிக்க வைத்து விட்டீர்கள்.

    //ரெண்டு நாளாத்தான் போட்டகாசு கையைக் கடிக்காம எடுக்குறேன் சார்!' ராஜாமணியின் குரல் தழுதழுத்து கண்கள் குளம் கட்டின.//

    படித்த என் கண்களே குளம் கட்டின. திறமைக்கும் வறுமைக்கும் எப்போதுமே இதுபோலப் போட்டி தான். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.(பச்ச மொழகா)

    சுந்தர்ஜி

    சபாஷ் ரகத்துக் கதை.

    பல கேள்விகளுக்கும் பல அலசல்களுக்கும் இடம்தரும்-இப்படி ஆன்மாவை உலுக்கும் கதைகள் நிறைய எழுதப்படுவதில்லை. இருக்கும் காலத்துக்குள் இப்படி நாலு கதைகள் எழுதினால் போதும் மௌனி போல. உங்களை நமஸ்கரிப்பதில் பெருமைப்படுகிறேன் மோகன்ஜி. (பச்ச மொழகா)

    T.N. முரளிதரன் (பதிவர்)

    வசீகரமான நடை உங்களுடையது. என்ன ஒரு ஃபுளோ. தொடக்கத்தில் இருந்து நிறைவு வரை நகைச்சுவை இழையோடு அபாரமாக பின்னப்பட்ட (ஸ்னேகலின்)ஸ்வெட்டர் (பியார் கி புல்புல் )

    RVS (Venkatasubramanian Ramamurthy) (பதிவர்)

    மோகன் அண்ணா கதை ரூபத்தில் உணர்வுகளோடு விளையாடுவார். பச்ச மொழகா மாதிரி இன்னொரு கதை! எப்படி இப்படியெல்லாம் எழுதணும்னு கதைப் பட்டறை ஒண்ணு நடத்துங்க!

    பாரதசாரி (பதிவர்):

    அருமை :)

    உள்ளடக்கத்தை பற்றி சொல்லும் முன்: இந்த நடையே ஒரு திரைபடம் பார்பது போல் இருந்தது! மிக்க நன்றி மோகன்ஜி!

    ஸ்ரீராம் (பதிவர்)

    நன்றி மோகன்ஜி. படிக்கப்படும் படைப்பில் தன்னுடைய அனுபவத்தை ஒரு வாசகன் பார்ப்பானேயானால் அது அவன் இதயத்தில் நுழைந்து விடும் என்பதில் ஐயமில்லை (கூளம்)

    பொன்வீதி

    கொடியில் உணர்த்தியிருந்த தாவணியும் பாவாடை சட்டையும் இன்னமும் முழுதாய்க் காயவில்லை. மணி மூணாகி விட்டது. நாலுமணிக்கு சிவா வந்துவிடுவான்.

    கிரைண்டரின் பெல்ட்டையெல்லாம் இழுத்துவிட்டு, அவன் வருவதற்குள், காலையிலிருந்து காத்திருக்கும் இரண்டு பாத்திரம் அரிசி, உளுந்து ஊறலை அரைத்த பின்தான் முகம் கழுவிக்கொள்ள வேண்டும். ஜானுவுக்கு பரபரப்பாய் இருந்தது.

    ஒரு மில்குமாஸ்தாவுக்கு மகளாகப்பிறந்து வளர்ந்த இந்த பதினைந்து வயதிற்குள் ஜானுவுக்கு அசாத்திய நிதானமும் ஒரு முதிர்ச்சியும் வந்திருந்தது. அவளுக்குப்பின் மூன்று தங்கைகள், ஒரு தம்பி வேறு. கடந்த மூன்று வருடங்களாய் பள்ளி விடுமுறை நாட்களில் மேட்டூரிலிருந்து சேலம் அத்தைவீட்டுக்கு கூடமாட மாவு அரைக்க ஒத்தாசையாக வந்துகொண்டிருக்கிறாள். இல்லையா பின்னே? தட்டினாமுட்டினா அப்பாவுக்கு கைமாத்துத் தரும் அத்தைக்கு இந்த பிரதியுபகாரமாவது பண்ணவேணும் இல்லையா?

    ஜானு... ஜானும்மா... பின்கட்டிலிருந்து அத்தை கூப்பிட்டாள். தொண்டைக்கட்டின ஆம்பிளைக்குரல் அத்தைக்கு...

    முதலியார் வீட்டு மாவை அரைச்சுடேன் கொழந்தே

    சரித்தே... டீ போட்டுட்டு அரைக்கிறேனே?

    அதுவும் சரிதான்... மகராசியா இரு.

    ஸ்‌டவ்வில் தேநீருக்காய் நீரைக் கொதிக்கவிட்டாள்.

    'சளக்புளக்' என நீரும் கொதிக்கத் துவங்கியது. குமிழிகளாய்ப் பொங்கிப்பொங்கி பாத்திரத்தின் ஓரம்தொட்டு உடைந்தவாறு இருந்தது. அதில் டீத்தூள் சேர்ந்த எதிர்பாராமையில் சற்று அடங்கி, பின்

    Enjoying the preview?
    Page 1 of 1