Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Velai Paduthum Paadu
Velai Paduthum Paadu
Velai Paduthum Paadu
Ebook222 pages1 hour

Velai Paduthum Paadu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அவசர யுகத்தில் பொய் - பித்தலாட்டம் - வஞ்சம் - சூழ்ச்சி - சூது - வாது - கபடம் - அரசியல் - கொலை - கொள்ளை – அடிதடி - பணத்தாசை - இவற்றுக்கிடையில் ரசிக்க ருசிக்க நகைச்சுவைக்கு இடமில்லாமல் போய்விடுகிறது. எத்தனை சீரியசான விஷயத்தையும், இறுக்கத்தையும் நகைச்சுவையான அணுகுமுறையில் சரி பண்ணிவிடலாம். பிறரை புண்படுத்தாத நகைச்சுவை உறவை வளர்க்கிறது. டிவி - ஒப்பாரி - மெகா சீரியல்களுக்கிடையில் மாறுதலுக்கு தமாஷ்களும் தேவைப்படுகின்றன. தமாஷ் எனும் போது, கொச்சையான அணுகுமுறை இன்றி படைக்கப்படுபவை மிக சிலதே.

என் கதைகளில் எப்போதும் ஒரு 'ஜோவியல்' வர்ணிப்பு இருக்கிற மாதிரி அமைப்பது உண்டு. சமூக பார்வை! இந்த படைப்புக்களில் துக்ளக் சோவின் 'சடையர் பாணியும்’,அப்புசாமி - சீதாபாட்டியின் சாயலும், தெரிந்தால் அதற்கு நானே பொறுப்பு. அவர்களுடன் ஒப்பிடும் அளவிற்கு, அல்லது அவர்களை நினைவுபடுத்துகிற மாதிரி இருந்தாலே இக்கதைகள் வெற்றி என அர்த்தம். (அவர்கள் ராயல்டி கேட்கக்கூடாது!)

இதில் இடம்பெற்றுள்ள கதைகள் பிரபல வார இதழ்களில் அவ்வப்போது பிரசுரமானவைகள். உதிரி கதைகளாக இல்லாமல் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தை படைத்து நகைச்சுவை தரலாமே என்று தினமலர் வாரமலர் பொறுப்பாசிரியர் (எனது குரு ஸ்தானத்தில் இருப்பவர்) யோசனை தர, உடன் உற்சாகம் பெற்று மிஸ்டர் பன்கஜாம் கதைகளை தினமலர் வாரமலரில் எழுத ஆரம்பித்தேன். அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து நகைச்சுவை கதைகள் எழுதும்படி இப்போதும் 'குரு' ஊக்கம் தருகிறார். ஆனால் பாலைவன வேலை சூழ்நிலை, சீதோஷ்ண நிலையில் நகைக்க நேரம் கிடைத்தாலும் படைக்க முடியவில்லை. நவிலும் அன்புடன், என்.சி. மோகன்தாஸ்

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580132405466
Velai Paduthum Paadu

Read more from Nc. Mohandoss

Related to Velai Paduthum Paadu

Related ebooks

Related categories

Reviews for Velai Paduthum Paadu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Velai Paduthum Paadu - NC. Mohandoss

    http://www.pustaka.co.in

    வேலை படுத்தும் பாடு

    Velai Paduthum Paadu

    Author:

    என்.சி. மோகன் தாஸ்

    NC. Mohandoss

    For more books

    http://www.pustaka.co.in/home/author/nc-mohandoss

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வாழ்த்துரை

    முன்னுரை

    1. மிஸ்டர் பன் M.L.A.

    2. வேலைக்காரி ஏஜன்சி

    3. மிஸ்டர்பன் + ஜாம் டிரைவ் அவுட்

    4. விலைக்கு ஒரு வம்பு

    5. சூரப்பனை பிடிக்க...!

    6. கண்டேன் கதாநாயகியை!

    7. தக்காளிக்குள் தங்கம்!

    8. சி.சிங்காரம்!

    9. வலை வீசு மாமா, வலை வீசு!

    10. அதிகமில்லை ஜென்டில்மேன் ஒருகடி!

    11. மிஸ்டர் பன்னின் மூக்கு

    12. ஜாமிருக்க பயமேன்!

    13. கடத்து, கடத்து!

    14. சி.பி.ஐ., ஜாக்கிரதை!

    15. யாம் பெற்ற துன்பம்...

    16. சகுனிராஜ்

    17. அனு, ஜ லவ்யூ, ஆனால்...

    18. விடாதே, துரத்து

    19. இந்த விஞ்ஞான யுகத்திலே

    20. காணோம்!

    21. காதல் களேபரம்

    22. சம்சா

    23. வேலைபடுத்தும் பாடு

    24. வருகிறது சி.பி.ஐ!

    வாழ்த்துரை

    TAMIL NADU CONGRESS COMMITTE

    G.K. VASAN, M.P.,

    President

    அன்புடையீர்,

    வணக்கம். ஜெயிப்போம் வாருங்கள் இத்தொகுப்பு நூல் வெளியிட இருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

    இந்நூலாசிரியர் திருச்சி மாவட்டத்தில் பிறந்தாலும், ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்ற பழமொழிக்கிணங்க வெளிநாட்டில் வேலை செய்துகொண்டு எழுத்துலகில் ஈடுபட்டு மனிதநேயத்தை மையமாக வைத்து இந்நூலை படைத்திருப்பது மிகுந்த பாராட்டுதலுக்குரியது.

    இதன் தொடர்ச்சியாக வெளியிடப்படும் மலர் சிறப்புடன் வெளிவர என் நிறைவான நல்வாழ்த்துக்கள்.

    தங்கள் அன்புள்ள,

    G.K. Vaasan

    *****

    சு.திருநாவுக்கரசர் எம்.ஏ., பி.எல்.,

    முன்னாள் மத்திய இணை அமைச்சர்

    Ex. Minister of State for Communications & I.T.

    அன்புடையீர்,

    வணக்கம். காலைக் கதிர் வாரக்கதிரில் எழுத்தாளர் என்.சி.எம். தொடராக திருச்சி சுற்றுப்புற பகுதியில் வெற்றிகரமாய் செயல்பட்டு வரும் பிரபலங்களைப் பற்றி எழுதிய ஜெயிப்போம் வாருங்கள் தொகுப்பு புத்தகமாகி வரும் ஆகஸ்ட் திங்கள் 7ஆம் நாள் திருச்சி பெமினா ஹோட்டல் அரங்கில் நானும் இன்னும் சில பிரபலங்களும் கலந்துகொண்டு இப்புத்தகத்தை வெளியிட உள்ளதையும், இத்துடன் என்.சி.எம்மின் நான்கு நாவல் தொகுப்புகளும் வெளியிடப்பட உள்ளதையும், இதனையொட்டி சிறப்பு மலர் ஒன்று வெளியிட இருப்பதையும் அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

    திருச்சி மாவட்டத்தில் நம்புக்குறிச்சி எனும் சிற்றூரில் பிறந்த இந்நூலின் ஆசிரியர் திரு. என்.சி.எம். அவர்கள் திரைகடல் ஓடியும் திரவியம் தேடி என்னும் பாரதியாரின் கூற்றிற்கேற்ப சிற்றூரில் பிறந்த இவர், தற்போது குவைத்தில் நேஷனல் பெட்ரோலியம் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாலும் தன் பணியை அதோடு முடித்துக் கொள்ளாமல் எழுத்துலகில் நூற்றுக்கும் மேல் நாவல்கள், 300க்கும் மேல் சிறுகதைகள், எண்ணி முடியாத கட்டுரைகள், அறுபது நூல்கள். நான்கு டி.வி. நாடகங்கள் என பலவற்றை படைத்து தனக்கென வாசகர்களின் மனதில் ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் என்றால் அது மிகையாகாது.

    திருச்சி சுற்றுப்புற பகுதியில் வெற்றிகரமாய் செயல்பட்டு வரும் பிரபலங்களைப் பற்றிய தொகுப்பு புத்தகமான ஜெயிப்போம் வாருங்கள் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரபலங்கள் குறித்து கூறியிருப்பது படிப்பவர்களின் வாழ்வில் தொடர்ந்து முன்னேற இது ஒரு படிக்கல்லாக அமையும் வகையில் உள்ளது.

    இந்நூலின் ஆசிரியரான திரு.என்.சி.எம். அவர்களின் பணி தொடரவும், அவரது கற்பனையில் பல நூல்கள் பிறக்கவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    நன்றி.

    அன்புடன்,

    சு. திருநாவுக்கரசர்

    *****

    தேவி வார இதழ்

    தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான திரு. என்.சி. மோகன்தாஸ் அவர்களின் 'ஜெயிப்போம் வாருங்கள்’ கட்டுரைகளின் தொகுப்பு நூல் மற்றும் அவரது படைப்புகளான 4 நாவல்களின் தொகுப்பு வெளியிடப்படும் நிகழ்ச்சிகளுடன், ஏழை மாணவ - மாணவியர் கல்விக்கு உதவி மற்றும் நற்பணிகளுக்காக ரூ. 2.50 லட்சம் வழங்கப்படும் நிகழ்ச்சியும் இணைந்து திருச்சி மாநகரில் ஒரு சிறந்த விழாவாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சிக்கு உரியதாகும்.

    தமிழகத்தின் எல்லா பிரபலமான இதழ்களிலும், திரு. என்.சி.மோகன்தாஸ் தொடர்கள், சிறுகதைகளை எழுதியவர் என்பதாலும், அவரது நற்பணி உதவிகள் மூலமாகவும் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் என்பதை மறுக்க இயலாது.

    தனது எழுத்துக்கள் மூலம் தமிழக வாசகர்கள் மனதில் இடம் பெற்றுள்ள மோகன்தாஸ், ஒவ்வொரு ஆண்டும் குவைத் நாட்டில் தமிழகத்தின் பிரபலமான பிரமுகர்கள், கலைஞர்களை அழைத்து விழா நடத்தி, அதன் மூலம் நிதி சேர்த்து இந்தியாவில் - தமிழகத்தில் பல்வேறு நலப்பணிகளுக்கு உதவிகளாக வழங்கி வரும் தொகை ஆண்டுதோறும் பல லட்சங்கள் ஆகும். எழுத்துப் பணியுடன் இப்படி மனிதநேயமும் கொண்டவராக திரு. என்.சி.எம். திகழ்வது எழுத்துலகுக்கே பெருமை ஆகும். வெறும் பொழுதுபோக்குக்காக, புகழுக்காக மட்டும் எழுத்தாளராக திகழாமல், அவர் கொண்டுள்ள சமுதாய நோக்கம் பாராட்டுக்கு உரியது. திருச்சியில் நடைபெறும் சீர்மிகுந்த விழாவையொட்டி வெளியிடப்படும் இந்த சிறப்பு மலர், எழுத்துலகில் சிறந்து விளங்கும் இந்த இளைஞர்களின் மனிதநேய உள்ளங்களை மேலும் ஊக்கப்படுத்தும் மலராக அமையும் என நம்புகின்றேன்.

    அன்புடன்,

    பா. இராமச்சந்திர ஆதித்தன்

    ஆசிரியர் – ‘தேவி’ வார இதழ்.

    *****

    PADMASHRI K. Balachandor

    FILM PRODUCER - DIRECTOR

    குவைத்தில் பணிபுரியும் தமிழ் எழுத்தாளரான திரு. மோகன்தாஸ் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டபோது - எனது திரைப்படங்களின் நீண்டகால ரசிகராக, ஓர் எழுத்தாளராக, தமிழகத்து கலைஞர்களின் மீது பற்றும் பாசமும் கொண்ட ஒரு சராசரி அபிமானி - சராசரி நல்லவராக மட்டுமே எனக்குத் தோன்றிற்று.

    Frontliners அமைப்பு மூலம் குவைத் நாட்டுக்கு நான் ஒரு முக்கிய விருந்தினராக அழைத்துச் செல்லப்பட்டு, நாற்பதாண்டு கால சேவைக்காக பாராட்டுப்பெற்ற நேரத்திலே மோகன்தாசுடன் பழகிய அந்தக் குறுகிய இனிய மூன்று நாட்களுக்குள் மிகப்பெரிய ஓர் உண்மையை நான் புரிந்துகொள்ள முடிகிறது.

    தமிழையும், தமிழ் மணத்தையும், தமிழ்நல்லுலக நாயகர்களின் புகழையும் எந்நேரமும் அந்த அரபிக்காற்றின் நறுமணமாகக் கலந்து நம்மவர்களின் பெருமைகளைப் பரப்பிக் கொண்டிருக்கும் இந்த அற்புதத் தமிழனை - திறமையான ஒரு படைப்பாளியை - 24 மணிநேரமும் பம்பரமாய்ச் சுழன்று செயல்படும் ஓர் உழைப்பாளியை - தன்னலம் கருதாத இந்த இளைஞனை, ஒரு சராசரி மனிதனாக மதிப்பீடு செய்துவிட்டதாக நான் வருந்துகிறேன்.

    குவைத்திலிருந்து விமானநிலையத்தில் எனக்கு விடைகொடுத்து அனுப்பும்போது என்னைத் தனது நண்பராகப் பெற்றதைப் பற்றி பெருமையாக இவர் குறிப்பிட்டபோது நான் சொன்னேன் - உன்னை நண்பராகப் பெற்றிருப்பது எனக்குத்தான் பெருமை சாமி! இந்த உணர்வோடு நான் தாயகம் திரும்புகிறேன் என்று.

    இந்த நல்ல உள்ளமும், தொண்டு சிந்தனையும் படைத்த அக்மார்க் மனிதரோடு நட்பு கிடைத்தமைக்கு எனது இனிய அக்மார்க் நண்பர் (TV) வரதராஜன் அவர்களுக்கு நான் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.

    இந்த 'அரபிக் காற்று’க்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    அன்பன்,

    கே. பாலசந்தர்

    *****

    பன், ஜாம், இதையெல்லாம் சாப்பிட்டு பார்த்திருப்பீர்கள். படித்துப் பார்த்து. நேரில் சந்தித்திருக்கிறீர்களா? ‘மழை காலத்திலுமா உமக்கு மூளை பிசக வேண்டும்?' என்று எரிச்சல்படும் வாசகரே... மிஸ்டர் பன். மிசஸ் பன். மிஸ்டர் பன்னின் மச்சான் ஜாம் இவர்களை அடிக்கடி இனி சந்திக்கப் போகிறீர்கள், என்.சி.மோகன்தாஸ் மூலமாக,

    அது சரி. பன், ஜாம் எல்லாம் யார்? அவர்கள் குணம் எப்படி? என்ன செய்யப் போகிறார்கள்? கதையை படியுங்கள். தானாக எல்லாம் புரிந்துவிடும்.

    பொறுப்பாசிரியர்,

    தினமலர், வாரமலர்

    *****

    முன்னுரை

    அவசர யுகத்தில் பொய் - பித்தலாட்டம் - வஞ்சம் - சூழ்ச்சி - சூது - வாது - கபடம் - அரசியல் - கொலை - கொள்ளை – அடிதடி - பணத்தாசை - இவற்றுக்கிடையில் ரசிக்க ருசிக்க நகைச்சுவைக்கு இடமில்லாமல் போய்விடுகிறது. எத்தனை சீரியசான விஷயத்தையும், இறுக்கத்தையும் நகைச்சுவையான அணுகுமுறையில் சரி பண்ணிவிடலாம். பிறரை புண்படுத்தாத நகைச்சுவை உறவை வளர்க்கிறது.

    டிவி - ஒப்பாரி - மெகா சீரியல்களுக்கிடையில் மாறுதலுக்கு தமாஷ்களும் தேவைப்படுகின்றன.

    தமாஷ் எனும் போது, கொச்சையான அணுகுமுறை இன்றி படைக்கப்படுபவை மிக சிலதே.

    என் கதைகளில் எப்போதும் ஒரு 'ஜோவியல்' வர்ணிப்பு இருக்கிற மாதிரி அமைப்பது உண்டு. சமூக பார்வை!

    இந்த படைப்புக்களில் துக்ளக் சோவின் 'சடையர் பாணியும்’, அப்புசாமி - சீதாபாட்டியின் சாயலும், தெரிந்தால் அதற்கு நானே பொறுப்பு.

    அவர்களுடன் ஒப்பிடும் அளவிற்கு, அல்லது அவர்களை நினைவுபடுத்துகிற மாதிரி இருந்தாலே இக்கதைகள் வெற்றி என அர்த்தம். (அவர்கள் ராயல்டி கேட்கக்கூடாது!)

    இதில் இடம்பெற்றுள்ள கதைகள் பிரபல வார இதழ்களில் அவ்வப்போது பிரசுரமானவைகள்.

    உதிரி கதைகளாக இல்லாமல் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தை படைத்து நகைச்சுவை தரலாமே என்று தினமலர் வாரமலர் பொறுப்பாசிரியர் (எனது குரு ஸ்தானத்தில் இருப்பவர்) யோசனை தர, உடன் உற்சாகம் பெற்று மிஸ்டர் பன்கஜாம் கதைகளை தினமலர் வாரமலரில் எழுத ஆரம்பித்தேன். அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

    தொடர்ந்து நகைச்சுவை கதைகள் எழுதும்படி இப்போதும் 'குரு' ஊக்கம் தருகிறார். ஆனால் பாலைவன வேலை சூழ்நிலை, சீதோஷ்ண நிலையில் நகைக்க நேரம் கிடைத்தாலும் படைக்க முடியவில்லை.

    நவிலும் அன்புடன்,

    என்.சி. மோகன்தாஸ்

    *****

    1. மிஸ்டர் பன் M.L.A.

    மிஸ்டர் பன், தான் ஆழம் தெரியாமல் காலை வைத்து விட்டோமோ என்று சற்று லேட்டாய்தான் உணர ஆரம்பித்தார்.

    சும்மா இருந்தவரை ஜாம் பிடித்து தொல்லைபடுத்தினான். இடைத்தேர்தல் வருதே... எம்.எல்.ஏ-வாய் நில்லுங்களேன்! என்று கிள்ளினான்.

    எம்.எல்.ஏ-வா... எதுக்குடா...?

    வீட்டில் சும்மாதானே இருக்கீங்க... அதை அங்கே போய் சும்மா இருங்களேன்!

    பொய் சொல்லாதடா, வீட்டுல எங்கே உங்கக்கா சும்மா இருக்க விடறா...? தண்ணியடிச்சு கொடுக்கவும், ரேஷன்ல நிக்கவும்தான் பெண்டு நழுவுதே! அதுசரி, எம்.எல்.ஏ-ன்னா ஓர் அருகதை வேணாம்...?

    அருகதையா...? ஜாம் சிரித்தான். "என்ன மாமா... உலகம் புரியாத ஆளாகீறீங்களே! ஜனங்க பார்த்து ஓட்டு போட்டா அருகதை தானாவரது! என்ன, கொஞ்சம் கெட்ட வார்த்தை மனப்பாடமா படிச்சிருக்கணும். சட்டசபையில் அடி -

    Enjoying the preview?
    Page 1 of 1