Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vizhven Endru Ninaithayo?
Vizhven Endru Ninaithayo?
Vizhven Endru Ninaithayo?
Ebook158 pages1 hour

Vizhven Endru Ninaithayo?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிங்கப்பூரின் கலாசாரம், பொருளியல், மரபுடமை தொடர்பான ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள உலகளவில் அளிக்கப்பெறும் லீ காங் சியான் புலமைப் பரிசிலைப் பெற்ற முதல் இந்தியரும் தமிழருமான மாலன் ஆறுமாத காலம் சிங்கப்பூரில் தங்கியிருந்து 1965லிருந்து 2015 வரை எழுதப்பட்ட சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் அதன் சமூக வாழ்வியலை எவ்விதம் பிரதிபலித்தது என்ற ஆய்வினை மேற்கொண்டார். அவர் தனது அனுபவங்கள், வாசிப்பு இவற்றின் வழி அறிந்தவற்றைக் கொண்டு ஒரு நாடாக, சமூகமாக நாம் சிங்கப்பூரிடமிருந்து கற்க வேண்டியவை என்ன என்பதைப் பேசும் கட்டுரைத் தொடர் இது.
Languageதமிழ்
Release dateMar 24, 2020
ISBN6580115405167
Vizhven Endru Ninaithayo?

Read more from Maalan

Related to Vizhven Endru Ninaithayo?

Related ebooks

Related categories

Reviews for Vizhven Endru Ninaithayo?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vizhven Endru Ninaithayo? - Maalan

    http://www.pustaka.co.in

    வீழ்வேன் என்று நினைத்தாயோ?

    Vizhven Endru Ninaithayo?

    Author:

    மாலன்

    Maalan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maalan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அறிவார்ந்த, பயனுள்ள ஒரு படைப்பு

    இணை கோடுகள் மீது ஓரு நடை

    1. இறங்கியது இடி

    2. ரகசியம்...பரம ரகசியம்

    3. யார் அந்தப் பத்துப் பேர்?

    4. அண்டை வீட்டாரும் சண்டைக் குரல்களும்

    5. ராஜரத்தினத்தின் ராஜதந்திரம்

    6. வீடு பேறு

    7. அம்.... மா!

    8. குடிசையிலிருந்து கூடுகளுக்கு…

    9. சிங்கப்பூரில் பஸ் ஸ்டிரைக்!

    10. சந்தை நடத்தும் சங்கம்

    11. தேவன் என்று ஒரு மனிதன்

    12. அடி சறுக்கிய யானை

    13. தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்!

    14. ஆங்கிலம் அவசியம்!

    15. பரிட்சை என்றொரு பயங்கரம்!

    16. குழந்தைகள் சுகமா? சுமையா?

    17. நீ மனிதன், நாயல்ல!

    18. எதிர்த் திசையில் ஒரு பயணம்

    19. தலைவன் என்று ஒரு பாத்திரம்

    20. மரபணு மாற்றம் சாத்தியமா?

    முன்னுரை

    சிங்கப்பூரின் கலாசாரம், பொருளியல், மரபுடமை தொடர்பான ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள உலகளவில் அளிக்கப்பெறும் லீ காங் சியான் புலமைப் பரிசிலைப் பெற்ற முதல் இந்தியரும் தமிழருமான மாலன் ஆறுமாத காலம் சிங்கப்பூரில் தங்கியிருந்து 1965லிருந்து 2015 வரை எழுதப்பட்ட சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் அதன் சமூக வாழ்வியலை எவ்விதம் பிரதிபலித்தது என்ற ஆய்வினை மேற்கொண்டார். அவர் தனது அனுபவங்கள், வாசிப்பு இவற்றின் வழி அறிந்தவற்றைக் கொண்டு ஒரு நாடாக, சமூகமாக நாம் சிங்கப்பூரிடமிருந்து கற்க வேண்டியவை என்ன என்பதைப் பேசும் கட்டுரைத் தொடர் இது.

    அறிவார்ந்த, பயனுள்ள ஒரு படைப்பு

    து. அழகிய பாண்டியன்

    (தலைவர், தமிழ் மொழிச் சேவைகள் சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம்)

    மார்ச் இருபத்தொன்பது, 2015. தேசத் தந்தை என்று சிங்கப்பூரர்களால் மதிக்கப்படும் திரு லீ குவான் இயூவின் இறுதிச் சடங்கு நடைபெற்ற தினம். தமிழ் முரசு நாளிதழில் அதன் துணை ஆசிரியர் என்ற முறையில் அன்று அவருக்காக தீட்டிய அஞ்சலியில் இவ்வாறு எழுதியிருந்தேன்:

    அவர் மறைந்த மறுதினமே தமிழகக் கிராமங்கள் சில கண்ணீர் விட்டழுததை நாம் செய்திகளில் படித்தோம்; வியந்தோம். தாம் விழித்திருந்த ஒவ்வொரு கணமும் சிங்கப்பூரின் நலன் குறித்தே சிந்தித்து செயல்பட்ட ஒரு தலைவர், தமது நாட்டு மக்களை மட்டுமின்றி தம்மை நம்பிவந்த அயல்நாட்டினரையும் கைதூக்கி வாழ வைத்த கதைதான் லீ குவான் இயூவின் கதை.

    திரு லீ குவான் இயூவும் அவரது சகாக்களும் 1965ல் நிர்க்கதியாக விடப்பட்ட ஒரு தேசத்தை மட்டும் கட்டியெழுப்பவில்லை. பிழைப்புத் தேடி இங்கு வந்தோருக்கும் வளப்பத்தைத் தந்த நாடு இது என்பதைப் பல ஆண்டுகளாகவே பார்த்து வளர்ந்தவன் என்ற முறையில் நான் அவ்வாறு எழுதினேன்.

    சிங்கப்பூர் சுதந்திரம் பெறுவதற்கு ஓராண்டுக்கு முன்பு அங்கு பிறந்தவன் நான். கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்த தேசத்தின் வளர்ச்சியோடு என் வாழ்க்கையும் பின்னிப் பிணைந்திருக்கிறது. எனவே இந்த தேசத்தின் வரலாற்றையும் அது சந்தித்த சவால்களையும், நிகழ்த்திக் காட்டிய சாதனைகளையும் ஒரு குடிமகன் என்ற முறையில் நான் நன்கு அறிவேன்.

    எனக்குத் தெரிந்திருந்த வரலாற்றை திரு மாலன் எவ்வாறு தரப்போகிறார் என்ற எதிர்பார்ப்புடன்தான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்ற இந்தத் தொடரை நான் வாசிக்கத் தொடங்கினேன்.

    நான் பணியாற்றும் சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் லீ கொங் சியான் புலமைப் பரிசிலைப் பெற்று, ஆறுமாத காலம் சிங்கப்பூரில் தங்கியிருந்து மேற்கொண்ட ஆய்வு இந்தத் தொடரை எழுத மாலனுக்கு உதவியிருக்கிறது.

    சிங்கப்பூரின் வரலாற்று நிகழ்வுகளை அவர் வர்ணித்திருக்கும் விதம் ஒரு திகில் நாவலைப் போன்று சுவாரசியமாகவும், வழக்கமான வரலாற்று நூல்கள் தரும் சலிப்பைத் தராமலும் விறுவிறுப்பான மொழி நடையில் எழுதப்பட்டுள்ளது.

    அளவுக்கு மீறிய புகழ்ச்சியோ, ஆதாரமற்ற குறைகூறல்களோ இல்லை.

    உதாரணத்திற்கு, மூன்றாம் அத்தியாயத்தில், இன்றைய சிங்கப்பூருக்கு அடித்தளமிட்ட இவர்கள் யாருக்கும் சிங்கப்பூரில் சிலை கிடையாது. அவர்கள் பெயரில் தெரு கூடக் கிடையாது! தனிமனித வழிபாட்டுக்கு சிங்கப்பூரில் இடம் இல்லை, என்று சற்றும் மிகைப்படுத்தாமல் பதிந்துள்ளார் மாலன்.

    அதே அத்தியாயத்தில், இத்தனை இல்லாமைகளுக்கு நடுவில் அவர்களிடமிருந்த ஒரு செல்வம், ஒரே ஒரு செல்வம் என்று கூடச் சொல்லுவேன், அவர்களது தலைவர்கள், என்ற நியாயமான பாராட்டையும் முன்வைக்கிறார்.

    இந்தத் தொடரின் இன்னொரு பலமாக நான் நினைப்பது, சிங்கப்பூர் படைப்பிலக்கியத்திலிருந்து அவர் தேடியெடுத்திருக்கும் சில வரலாற்று வர்ணனைகளும் அனுபவங்களும். சிங்கப்பூரின் பல முக்கிய வரலாற்றுத் தருணங்களை தாங்கள் எழுதிய கதைகளிலும், நாவல்களிலும், நாடகங்களிலும் பதிந்திருக்கின்றனர் சிங்கப்பூர் எழுத்தாளர்கள். அவை சிங்கப்பூரின் வரலாற்றைப் பற்றிய கலாசார ரீதியிலான புரிதலை மாலனுக்கு வழங்கியிருக்கும் என்று நான் நம்புகிறேன். அதனால்தான் திரு மாலன் அந்தப் படைப்புகளைத் தனது கட்டுரைக்கு ஆதாரமாகப் பயன்படுத்தியிருக்கிறார். அது இந்தப் படைப்புக்கு ஒரு தார்மீகப் பலத்தை வழங்கியுள்ளது.

    இந்தத் தொடரின் ஒட்டுமொத்தக் கருத்தையும் அவர் இருபதாம் அத்தியாயத்தில் இரண்டே வரிகளில் இப்படிக் கூறுகிறார்:

    புதிதாக ஒன்றை முயற்சித்துப் பார்க்கலாம் என்றால் ‘பார்க்கலாமே’ என்று சொல்வது சிங்கப்பூர் மனோபாவம். வேண்டாம் வேண்டாம்" என்று எண்ணுவது நம் மனோபாவம்.

    ஒன்றைச் செய்யத் தொடங்கும் போது அது சரியாக நடக்குமா என்று எண்ணுவது நம் மனோபாவம். தவறாகப் போனால் என்ன செய்ய வேண்டும் எனத் திட்டமிடுவது சிங்கப்பூர் மனோபாவம்."

    இரு வேறு நாடுகளின் மனோபாவத்தை இதை விடக் கச்சிதமாகச் சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை. சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது மாலனின் பலம்!

    ஒரு நாடாக, சமூகமாக சிங்கப்பூரிடமிருந்து கற்க வேண்டியவை எவை என்பதை ஆழமாகப் பேசும் இந்த அறிவார்ந்த தொடர், நிச்சயம் சுகமான வாசிப்பனுபவத்தை ஏற்படுத்தும். பயனுள்ள ஒரு படைப்பு.

    இணை கோடுகள் மீது ஓரு நடை

    இந்தியா மீது உங்களுக்கு இருக்கும் பற்று எனக்குத் தெரியும். ஒருவேளை, இது ஒரு பெரிய if, உங்களுக்கு இன்னொரு நாட்டில் நிரந்தரமாக வாழும் வாய்ப்புக் கிடைக்குமானால் எந்த நாட்டைத் தேர்ந்தெடுப்பீர்க்கள்? என்று என்னைக் கேட்டார் அந்த அயலக நண்பர்.

    பதில் சொல்ல நான் வாய் திறக்கும் முன், அவர் மூன்று நாடுகளைச் சொல்லலாம். வரிசைக் கிரமப்படி என்று வாய்ப்புக் கொடுத்தார்.

    நான் தயங்காமல் சொன்னேன், ஒன்று சிங்கப்பூர் இரண்டு சிங்கப்பூர் மூன்று சிங்கப்பூர்

    சிங்கப்பூரை அவ்வளவு பிடிக்குமா? என்றார் அவர்

    ஐயா, என் பிரச்சினை என்னால் என் தாய்மொழியிலிருந்து விலகி இருக்க முடியாது. எனக்கு இரு மொழிகளில் பேசவும் உரையாற்றவும், விவாதிக்கவும், வாதிடவும், எழுதவும் முடியும். அதை வைத்துக் கொண்டு உலகின் பல நாடுகளுக்குப் போய் வந்து விட்டேன். ஆனாலும் முற்றிலுமாக என்னால் என் தாய்மொழியைத் தவிர்த்துவிட முடியாது. அது என் அடையாளம். இன்னொரு பிரச்சினை ஒப்பிடுகிற புத்தி. ஆங்கிலத்தில் அது இருக்கிறது அதைப் போல என் தமிழுக்கு ஒன்று வேண்டுமே, இந்த நாட்டில் இது இருக்கிறதே அதைப் போல ஏன் என் நாட்டில் இல்லை இப்படி ஒப்பிட்டுப் பார்க்கிற புத்தி. எவ்வளவோ முயற்சி செய்தும் அதைக் கழற்றி வைக்க முடியவில்லை இவை இரண்டிற்கும் போதுமான சந்தர்ப்பம் அளிப்பது சிங்கப்பூர் என்றேன்

    இமை கொட்டாமல் நண்பர் என்னை உற்றுப் பார்த்தார். பின் நீங்கள் அங்கு உங்கள் ஊடகங்களை –அதாவது இந்திய ஊடகங்களை- மிஸ் பண்ணுவீர்கள் என்றார்.

    எங்கிருந்தாலும் செய்தி என் காதில் வந்து விழுந்து விடுகிறது. காதுக்கும் ஒரு மூடி கிடைத்தால் கூட நல்லதுதான் என்றேன்

    என் அருமை நண்பா நான் சொல்வது செய்திகளை அல்ல, ஊடகங்களை, அதன் கலாசாரத்தை, பரபரப்பை! என்று சொல்லி ஹா ஹா என்று உரக்கச் சிரித்தார்.

    அது என்னவோ ஓரளவு உண்மைதான். என்றாலும் சிங்கப்பூருக்கும் இந்தியாவிற்கும் கலாசார, வர்த்தக, உறவுகள் மட்டுமல்ல இரு நாட்டின் வரலாறு, குறிப்பாக விடுதலைக்குப் பிந்தைய அரசியல் வரலாறு தண்டவாளங்கள் போல இணையாக ஓடுகிறது. வலி நிறைந்த பிரிவினை, வலிமை நிறைந்த தலைவர்கள், வறுமை விடுத்த சவால்கள், காலனிய ஆட்சி நிறுவிவிட்டுப் போன நிர்வாக அமைப்பு, மக்களின் எதிர்பார்ப்புகள், பல இன -பல மொழி - பல மத சமூகம், அனுசரணையாக இல்லாத அண்டை நாடுகள், இரு வல்லரசுகளின் இழுபறிப் போட்டி, உலகத்தின் உன்னிப்பான பார்வை, எனப் பல ஒற்றுமைகள்

    Enjoying the preview?
    Page 1 of 1