Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhalinaal...
Kaadhalinaal...
Kaadhalinaal...
Ebook204 pages1 hour

Kaadhalinaal...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காதலினால் உயிர் தோன்றும், காதலினால் அந்த உயிர் வீரத்தில் ஏறும். காதல் அறிவை வளர்க்கும். கவிதை பயிர் செழிக்கும். காதலினால் கவிதை உண்டாகும், கானம் உண்டாகும். சிற்பம் முதல் கலைகள் உண்டாகும் என்று பாரதி பெரிய பட்டியல் தருகிறார். காதலினால் மரணம் பொய்யாகும் என்று சத்தியம் செய்கிறார்.

காதல் இல்லாத அகமோ, அந்த அகத்தோடு தொடர்பற்ற புறமோ, இல்லாத காலமோ, இடமோ கிடையாது என்று தொல்காப்பியம் சொல்கிறது.

இலக்கியம், சினிமா என்ற இந்த இரண்டு சாளரங்களையும் சற்று மூடிவிட்டு வரலாற்றின் வழியாக காதலை அறிமுகம் செய்துகொள்ள வாய்ப்புண்டா? வாசகர் ஒருவரின் கேள்வி என்னைச் சீண்டியது. யோசிக்கவும் வாசிக்கவும் ஆரம்பித்தேன். அந்தத் தேடலில் கிடைத்த திரவியம்தான் இந்த நூல்.

Languageதமிழ்
Release dateApr 23, 2022
ISBN6580115408132
Kaadhalinaal...

Read more from Maalan

Related to Kaadhalinaal...

Related ebooks

Reviews for Kaadhalinaal...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhalinaal... - Maalan

    https://www.pustaka.co.in

    காதலினால்...

    Kaadhalinaal...

    Author:

    மாலன்

    Maalan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/maalan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வரலாற்றில் வாழும் காதல்

    1 ஆபிரஹாமின் காதல்

    2 ஜின்னாவின் மனைவி

    3 ஆனந்த பவனத்தில் ஓர் ஆரண்யவாசம்

    4 காதல் வெள்ளம்

    5 உயிரே! உயிரே!

    6 மகுடம் துறந்த மன்னன்

    7 காதல் என்னும் காந்தம்

    8 இருவர்

    9 எந்தையும் தாயும்

    10 முள்ளும் மலரும்

    11 அழியாத அன்பு

    12 ராஜாவின் ரோஜா

    13 புரட்சித் தலைவி

    14 கலைந்த ஓவியம்

    15 உனக்காக நான்

    16 அம்மா!

    17 கறிவேப்பிலைக் காதல்

    18 கனவல்ல, வாழ்க்கை!

    வரலாற்றில் வாழும் காதல்

    காதலினால் உயிர் தோன்றும், காதலினால் அந்த உயிர் வீரத்தில் ஏறும். காதல் அறிவை வளர்க்கும். கவிதை பயிர் செழிக்கும். காதலினால் கவிதை உண்டாகும், கானம் உண்டாகும். சிற்பம் முதல் கலைகள் உண்டாகும் என்று பாரதி பெரிய பட்டியல் தருகிறார்.

    காதலினால் மரணம் பொய்யாகும் என்று சத்தியம் செய்கிறார்.

    காதல் இல்லாத அகமோ, அந்த அகத்தோடு தொடர்பற்ற புறமோ, இல்லாத காலமோ, இடமோ கிடையாது என்று தொல்காப்பியம் சொல்கிறது.

    ஆனால் தமிழ்சினிமா இளைஞர்களுக்கு காதலை அறிமுகப்படுத்தும் விதம் வேறுவகையானது. கீழே விழுந்த கைக்குட்டையை எடுத்துத் தருகிறவர்கள், பேருந்தில் நமக்காக பயணச்சீட்டு வாங்குபவர்கள், கைபேசிக்கு கட்டணம் கட்டுபவர்கள் இவர்களெல்லாம் காதலர்களாக ஆகிவிட சினிமாவில் வாய்ப்புண்டு.

    இலக்கியம், சினிமா என்ற இந்த இரண்டு சாளரங்களையும் சற்று மூடிவிட்டு வரலாற்றின் வழியாக காதலை அறிமுகம் செய்துகொள்ள வாய்ப்புண்டா? வாசகர் ஒருவரின் கேள்வி என்னைச் சீண்டியது. யோசிக்கவும் வாசிக்கவும் ஆரம்பித்தேன். அந்தத் தேடலில் கிடைத்த திரவியம்தான் இந்த நூல்.

    அரசியல், அறிவியல், கலைகள் என பல துறைகளில் வரலாற்றில் ஆழத்தடம் பதித்தவர்களுடைய வாழ்க்கையிலும் காதல் இருந்தது. அந்த காதல் எப்படி இருந்தது? அவர்களது ஆளுமையை அது எப்படி செதுக்கியது? அது மனதைத் தின்னும் காதலா? அல்லது உயிரை வளர்க்கும் காதலா? அடுத்து வரும் பக்கங்களைப் புரட்டினால் அது உங்களுக்கு புரிந்துபோகும். அந்த புரிதல் உங்களையும் செதுக்கும்.

    ஆலமரங்களுக்கு நடுவே விரிந்த புல்வெளியைப் போல இந்த பிரம்மாண்ட நாயகர்களுக்கு நடுவே ஒரு எளிய விவசாயியின் காதலையும் விவரிக்கிறது இதிலுள்ள ஒர் அத்தியாயம்.

    வாருங்கள், மனங்களை வாசிக்கலாம்

    அன்புடன்,

    மாலன்

    வாசகர்கள் எழுதுகிறார்கள்…

    அமெரிக்க ஜனாதிபதியின் மனைவியாய் இருந்தாலும், இறுதிவரை துன்ப வாழ்க்கையே வாழ்ந்து மடிந்த லிங்கனின் மனைவி மேரியின் வரலாறு, நெஞ்சைக் கனக்கச் செய்துவிட்டது.

    கே. கஸ்தூரி கதிர்வேல், காட்பாடி.

    ஆசிரியர் மாலனின் எழுத்து நடையில் வரலாறு பகுதியில் ஜின்னாவின் மனைவி குறித்து படித்தபோது பழைய சரித்திரப் படம் ஒன்றை சுவாராஸ்யமாக ரசித்துப் பார்த்த திருப்தி உண்டானது.

    ஏ. சீனிவாசன், வேளந்தாங்கல்.

    ஆனந்த பவனத்தில் ஓர் ஆரண்ய வாசம் என்ற தலைப்பில் நேரு குடும்பத்தைப் பற்றி மாலன் அவர்கள் சொல்லியிருந்த விஷயங்கள் அற்புதம்.

    காசியோக அக்ஷயா. கோவை-14

    காதல் வெள்ளத்தைத் தெளிந்த பளிங்கு நீராக ஓடவிட்டு, அதில் நீந்திக் கடந்த உன்னத காதல் தம்பதி ஜோசப் துய்ப்ளே – ஜேன் இருவரின் வாழ்க்கைச் சித்திரத்தை ஓர் அமர காவியமாக வழங்கிய மாலனின் எழுத்துக்கள் எங்கள் மனதில் ஆழமாய் பதிந்து போய்விட்டன.

    வி. எஸ். கிருஷ்ணமூர்த்தி, வரட்டணப்பள்ளி

    இதுவரை எத்தனையோ காதல் தோல்விக் கதைகள், நாவல்கள், திரைப்படங்கள் தராத ஒருவித சோகத்தை பூட்டாசிங் எங்கள் மனதில் ஏற்படுத்திவிட்டார். இதுவரை அரசியில் தலைவர்களின் சோகப் பக்கங்களைக் காட்டிய ஆசிரியர் அவர்கள், ஒரு சாதாரணக் குடிமகனின் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பங்களை தொய்வின்றிக் கூறி, சோகத்திலிருந்து மீள முடியாமல் செய்துவிட்டார்.

    ஆ. சீனிவாசன், எஸ். வி. நகரம்.

    காதலுக்காக மகுடம் துறந்த கதையில் வரும், காதல்– இந்த மூன்றெழுத்துச் சொல், சாம்ராஜ்யங்களைக் கூட சரித்து விடும். ஆனால் மனிதர்களை நிமிர்ந்து நிற்கச் செய்யும் என்பது வைர வரிகள்!

    சிவப்பிராகசம், திருப்பத்தூர்.

    மாலன் எழுதிய ‘காதல் என்னும் காந்தம்’ படைப்பில் எது உண்மையான செல்வம் என்பது ஏனோ பலருக்குத் தெரியாமலேயே போய்விடுகிறது என்ற கடைசி வரிகள் மனதில் ஆழப்பதிந்து போயின.

    கோமதி நடராஜன், சென்னை-28

    நெல்சன் மண்டேலாவின் காதல் மிகவும் அருமை, அவரின் வலிமையானப் போராட்டங்களுக்கான மன உறுதியைக் கொடுத்தது அவரின் காதலாகவே இருக்கும் என்பது என் எண்ணம்.

    sureshloving@gmail.com

    மார்க்ஸ் - ஜென்னி காதல் மிகவும் மெய்சிலிர்க்க வைத்தது. மார்க்ஸின் ஒவ்வொரு சிந்தனையையும் தன் எழுத்துகளில் அழகாகப் பதிவு செய்திருக்கும் மாலன் அவர்களின் பணி மிகவும் சிறப்பானது.

    கருணாகரன், காவேரிப்பாக்கம்.

    காதல், இது ரோஜாவுடன் இருக்கும் முள்ளா? முட்களுகிடையே இருக்கும் ரோஜாவா? என்ற கேள்வியுடன் ஹிட்லரின் காதல் வரலாற்றை அருமையாகச் சொல்லியிருந்த மாலனின் எழுத்துக்களுக்கு ஒரு சல்யூட்!

    கே. கே. ரமேஷ், திருச்சி - 1

    பீத்தோவன், ஜோசபின் மீது வைத்திருந்த மிதமிஞ்சிய காதலின் வெளிப்பாடு மிக அற்புதம். இது போன்று எத்தனையோ காதல் கதைகள் பதிவு செய்யப்படாமலே போய்விட்டன. ஆசிரியர் மாலனின் இந்தப் பணி அதை நிறைவேற்றி இருக்கிறது.

    பாரதி, சிதம்பரம்.

    நெப்போலியனின் வரலாற்றுப் பகுதியில், அதிகார ருசியில் கசந்து போன காதலைப் பார்த்துச் சிரித்தது விதி, தனிமையில் என் தைரியம் தோற்றுப் போகிறது’ என்ற மாலனின் வரிகள் வியக்கவும், திகைக்கவும் வைக்கின்றன. இவருக்கு மட்டும் எங்கிருந்து கிடைக்கின்றன இது மாதிரியான விஷயங்கள்?

    அ. அறிவொளி, மேச்சேரி.

    அர்ஜெண்டினாவில் பரம ஏழையாய் பிறந்திருந்தாலும் தன் லட்சியக் கனவான நடிகையாக வேண்டும் என்பதற்காக, விடாமுயற்சியுடன் போராடியது படிக்க சிலிர்ப்பாக இருந்தது. ஏவா, பெரோன் இடையே அரும்பிய காதல் அழுத்தமானது, ஆழமானது. அவர்களின் லட்சியக் காதல் வாழ்வைச் சரித்திரமாக்கி, நெஞ்சில் செதுக்கி நிரந்தர நினைவாய் நிலைப்படுத்திய ஆசிரியரை, காதல் உலகம் மனமாரப் போற்றி வாழ்த்தும் என்பது நிச்சயம்.

    வி. எஸ். கிருஷ்ணமூர்த்தி, ரெட்டினப்பள்ளி.

    வாழ்க்கையையும் ஓவியங்களையும் நேசித்த வான்கா, காதல் தோல்விகளையே சுமந்து தற்கொலையில் முடிந்து போன துயரம் தோய்ந்த காதல் வரலாற்றைப் படித்தபோது அந்தக் காதல் ஓவியம் கண்ணீர் வரவழைத்தது.

    கிருஷ்ணகுமார், மதுரை.

    இந்தியாவின் இரும்பு மங்கை இந்திராவின் வரலாற்றுப் பக்கங்கள் அருமை. இதுவரை நாங்கள் தெரிந்திராத புதிய தகவல், இந்திரா – பெரோஸ் திருமணத்திற்கு காந்தி உதவினார் என்பது. இந்தத் தகவலை அறிந்து மகிழ்வுற்றோம். புதிய தகவல்களை வழங்கிய உங்களுக்கு நன்றி.

    இராம. சீனிவாசன், வில்லாபுரம்.

    1 ஆபிரஹாமின் காதல்

    அமெரிக்க சரித்திரத்தில் ஆபிரஹாம் லிங்கனைப் போல் புகழப்பட்ட ஜனாதிபதியும் இல்லை; மேரியைப் போல் துன்பப்பட்ட ஜனாதிபதியின் மனைவியும் இல்லை.

    மே19, 1875 அமெரிக்கா

    எங்கள் முன் வைக்கப்பட்ட சாட்சியங்களைப் பரிசீலித்தோம். அவற்றின் அடிப்படையில் மேரி டாட் லிங்கன் மனநிலை சரியில்லாதவர், மனநலக் காப்பகத்தில் வைத்துப் பராமரிக்கப்பட வேண்டியவர் என்று முடிவு செய்கிறோம்.

    கோர்ட்டிலிருந்த 12 ஜூரிகளும் பத்து நிமிடத்தில் முடிவு செய்துவிட்டார்கள். ஒரு மனதான முடிவு. அந்த விசித்திர வழக்கைக் காண வந்திருந்த அத்தனைபேர் பார்வையும் ராபர்ட் பக்கம் திரும்பியது.

    விசித்திர வழக்கு?

    ராபர்ட்தான் வழக்குத் தொடுத்தவர். ராபர்ட், மேரியின் மூத்த மகன். ஆபிரஹாம் லிங்கன் – மேரி தம்பதிக்கு மூன்று ஆண் பிள்ளைகள். சிறு வயதிலேயே இரண்டுபேர் இறந்து விட்டார்கள். அம்மாவிற்குப் பைத்தியம் என்று மகனே வழக்குத் தொடர்ந்து, இதோ, அதில் தீர்ப்பும் வந்துவிட்டது.

    நீதிமன்றத்தில் ஒரு கனமான நிசப்தம் நிலவியது. திடீரென்று பார்வையாளர்கள் பக்கத்திலிருந்து ஒரு விசும்பல் வெடித்துக் கிளம்பியது. விசும்பியவர் எலிசபெத். மேரியின் அக்கா. எலிசபெத் எழுந்துப்போய் மேரியைக் கட்டி அணைத்துக் கொண்டார். கண்கள் நீர் சிந்திக் கொண்டிருக்க மனம் பின்நோக்கி நகர்ந்தது.

    கடந்த பத்து வருடங்களில் ஆபிரஹாம் லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்டதற்குப் பின் மேரிக்குத்தான் அடுக்கடுக்காக எத்தனை துன்பங்கள்! லிங்கன் வாழ்ந்தபோது மட்டுமென்ன அவர் மகிழ்ச்சியாகவா இருந்தார்?

    நவம்பர் 4, 1842

    காலையிலிருந்தே இடைவிடாமல் மழை தூறிக் கொண்டிருந்தது. கல்யாணத்திற்கு நண்பர்கள் வருவார்களா, அல்லது அவளும் அவள் கணவன் எட்வர்டும் மாத்திரமே இருந்து நடத்தி வைக்க வேண்டியிருக்குமோ என்று எலிசபெத்திற்குக் கவலையாக இருந்தது. ஏற்கனவே கல்யாணம் எளிமையாக நடக்க வேண்டும் என்று லிங்கன் கண்டிப்பாகக் கூறியிருந்தார். மாதா கோயிலுக்குக்கூடப் போகத் தேவையில்லை, மேரியின் அக்கா வீட்டிலேயே திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லியிருந்தார்.

    எப்படி இரண்டுபேருக்கும் ஒத்துப்போகப் போகிறது என்று எலிசபெத்திற்குக் கவலையாக இருந்தது. லிங்கனுக்கு அநாவசிய பந்தா பிடிக்காது. மேரியோ ஆடம்பரப் பிரியை. அதற்காக கடன் வாங்கி செலவழிக்கவும் தயங்க மாட்டார்.

    லிங்கனுடைய குடும்பமோ மிகச் சாதாரணமானது. அவருடைய அப்பா தாமஸ் லிங்கன், ஒரு தச்சர், சவப்பெட்டி செய்வதுதான் தொழில். ஒரே ஒரு ஜன்னலுடைய ஒரு 16க்கு 18 மர வீட்டில் வசித்து வந்தார்கள். மேரியின் குடும்பம் சமூக அந்தஸ்துமிக்க, செல்வச் செழிப்புடைய குடும்பம்.

    ஆபிரஹாமை அழகன் என்று சொல்லமுடியாது. தீக்குச்சி போல் ஒல்லியான ஆறடி உருவம். மேரியோ கொழுக்மொழுக் என்று செழுமை ததும்பும் அழகி. ஏற்கெனவே இருவருக்கும் ஒருமுறை மனத்தாங்கல் ஏற்பட்டு, நடக்க இருந்த நிச்சயதார்த்தம் முறிந்து போயிற்று. எப்படி இருவருக்கும் வாழ்க்கை முழுவதும் ஒத்துப்போகப் போகிறது?

    மாலை தனது சில நண்பர்களுடன் வந்தார் லிங்கன். கனிவாக மேரியின் கரத்தை எடுத்து, விரலில் ஒரு மோதிரத்தை அணிவித்தார். சிறிய தங்க மோதிரம். அதன் உள்வளைவில் ஒரு வாசகம். ‘காதல் என்றும் அழியாதது’ கடைசி வரைக்கும் மேரியின் விரலில் அந்த மோதிரம் இருந்தது. ஆனால் மனதில் காதல் இருந்ததா? அது என்றுமே பெரிய கேள்விக்குறி. நெருக்கமாக இருக்கும் நேரங்களில் ஆபிரகாம், மேரியை ‘மோலி!’ என்று அழைப்பதுண்டு. ஆனால் மேரி எப்போதுமே ஆபிரஹாமை ‘மிஸ்டர் லிங்கன்’ என்றுதான் கூப்பிடுவாள். என்ன காரணம்?

    எலிசபெத்திற்குப் புரியவில்லை. ஒருவேளை ஆபிரஹாமின் வாழ்வில் ஏற்பட்ட அந்தக் காதல் அதற்குக் காரணமாக இருக்குமோ?

    1831 நியூ சேலம், அமெரிக்கா

    இருபத்தியிரண்டு வயது ஆபிரகாமை ஒரு கேள்வி ஓயாது மொய்த்துக் கொண்டிருந்தது. படகில் சவாரி ஏற்றிக்கொண்டு, ஆற்றைக் கடக்கும்போது அந்தக் கேள்வி கூடவே மிதந்து வந்தது. அப்பாவோடு சேர்ந்து இழைப்புளியை இழுக்கும்போது அந்தக் கேள்வி குறுக்கும் நெடுக்கும் போய் வந்தது. எத்தனை நாளைக்குத்தான் இப்படி வறுமையிலேயே இருப்பது?

    வறுமையை விட்டு வெளியேற வேண்டுமானால் படிப்புதான் ஒரே வழி. படிக்க வேண்டும் என்று முடிவு எடுத்தால் குடும்பத்தைவிட்டு, வீட்டைவிட்டு, ஊரைவிட்டு விலகிப்போக வேண்டும்.

    பக்கத்தில் நியூ சேலம் என்று புதிதாக ஒரு நகரம் உருவாகிக் கொண்டிருந்தது. அங்கே போனால் ஏதாவது ஒரு நல்ல வேலை கிடைக்கலாம். ஆபிரஹாம் ஊரை விட்டுப் புறப்பட்டார்.

    அங்கே ஆபிரஹாமிற்கு ஒரு அதிசயமான காட்சி காத்திருந்தது. ஜேம்ஸ் ரட்லஜ் என்பவர் நதியின் குறுக்கே ஒரு மடை கட்டி, நீரைத் திருப்பி, அதன்மூலம் எந்திரங்களை ஓடச்செய்து, மரம் அறுக்கும் தொழிற்சாலை நடத்திக் கொண்டிருந்தார். தண்ணீரின் வேகத்தைப் பயன்படுத்தி எந்திரங்களை இயக்குவதும், இயந்திரங்களை மரம்

    Enjoying the preview?
    Page 1 of 1