Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manaveli Kalaignan
Manaveli Kalaignan
Manaveli Kalaignan
Ebook196 pages1 hour

Manaveli Kalaignan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அண்மையில் நூறாண்டுகளைக் கடந்தார் லாசரா. அவரது படைப்புக்கள் வாசகனுக்குத் தருவது தனியொரு அனுபவம். ஏனெனில். அது உரையாடல். மேடைப் பேச்சல்ல. ஒரு பொருள் குறித்து விளம்ப உரைக்கும் கருத்தரங்க உரையல்ல. திட்டமிடாத, நோக்கங்கள் அற்ற உரையாடல். பின் கட்டில் பூத்திருக்கும் செம்பருத்தியில் துவங்கி, பிரபஞ்சம் வரை தாவியும் தத்தியும் நகர்கிற உரையாடல். அங்கு சொல் முக்கியம் ஆனால் இலக்கணத்திற்கு இடமில்லை. கருத்துக்கு சுதந்திரம் உண்டு. என்றாலும் மெளனம் கூட முக்கியத்துவம் வாய்ந்தது. அவரை அறிந்து கொள்ள இந்த நூல் உதவும்.

Languageதமிழ்
Release dateMar 24, 2020
ISBN6580115405173
Manaveli Kalaignan

Read more from Maalan

Related to Manaveli Kalaignan

Related ebooks

Reviews for Manaveli Kalaignan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manaveli Kalaignan - Maalan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மனவெளிக் கலைஞன்

    Manaveli Kalaignan

    Author:

    மாலன்

    Maalan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/maalan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. மாதா பிதா மற்றும்...

    2. குரு

    3. தெய்வம்

    4. வாழ்க்கை

    5. மௌனமும் சொல்லும்

    6. மனவெளிக் கலைஞன்

    7. விமர்சனக் குரல்கள்

    விடை பெறுதல்

    படைப்புக்களும் பரிசுகளும் நாவல்கள்

    1. மாதா பிதா மற்றும்...

    நவீனத் தமிழ் இலக்கியத்தின் அபூர்வ ராகம் எனக் கருதப்படும் லா.ச.ரா. என்ற லா.ச. ராமாமிர்தம் பற்றிய எந்தக் குறிப்பையும். வியப்பையும் விமர்சனத்தையும், அறிமுகத்தையும் குடும்பம் என்ற புள்ளியிலிருந்து துவங்குவதே பொருத்தமாக இருக்கும். ஏனெனில் லா.ச.ரா-வினுடைய எழுத்தின் அடிநாதமே குடும்பம்தான், குடும்பம் என்ற பாற்கடலை, பரவசத்தோடு, இடைவிடாமல் கடைந்து கொண்டிருந்தவர் அவர்.

    என் மேல் இன்றும் ஒரு குற்றச்சாட்டு உண்டு. நான் குடும்பத்தைப் பற்றி மட்டுமே எழுதுகிறேன். ஒரே கதையைத் திரும்பத் திரும்பச் சொல்கிறேன் என்று. ஏன் எழுதக் கூடாது? சொல்லின் உச்சரிப்பை, அதன் சத்யத்தை, சௌந்தர்யத்தை ஏன் குடும்பத்தில் தேடக்கூடாது? குடும்பம் என்பது உலகத்தின் ஆரம்பம், வளர்ச்சி எல்லாவற்றையும் பிரதிபலிக்கும் ஒரு அற்புதமான கண்ணாடி. மானுடத்தின் பரம்பரை, பண்பு, மாண்பு எல்லாவற்றின் தொட்டில். தாயின் மடி. எவ்வளவோ மகத்துவம் நிறைந்த உபதேச பீடம். கோட்பாடுகள், Values, இவைகளின் பிறப்பிடம். ஞானக் கோவில் என்று அடுக்கிக் கொண்டே போகும் லா.ச.ரா. தன் எழுத்தின் ஊற்றுக்கண், தேடலின் மூலம் குடும்பம்தான் என்பதை இறுதிவரை உறுதியாக நம்பியவர். குடும்பத்தைப் பற்றிப் பேசுவது தெய்வீகத்தை ஆராய்வதற்கு நிகரானது என்று கருதியே தன் எழுத்தின் மூலம் அதனைச் செய்து வந்தார்.

    தாய், தகப்பன், உடன் பிறந்தோர், மனைவி, மக்கள் இவர்கள் எல்லாம். எனக்கு Values இல்லாமல் வாழமுடியாது. தெய்வத்தை நாம் கண்ணால் பார்க்கவில்லை. ஆனால் குடும்பம் என்கிற ஊர் உறவுகள் மூலம் தெய்வீகத்தின் தன்மைகளை நாம் ஆராய முடியும். குடும்பம் என்கிற உழற்சியில் ஏதோ Mysticism இருக்கிறது. என் தேடல் இந்த மூலத்திலிருந்துதான் ஆரம்பிக்கிறது என்கிறார் லா.ச.ரா.

    தனது குடும்பத்தைப் பெருந்திருக்குடும்பம் என்பார் லா.ச.ரா. பெருந்திரு அவரது பூர்வீக ஊரான லால்குடியில் கோயில் கொண்டுள்ள கடவுள். அவர்கள் குடும்பத்துக் குலதெய்வம். ப்ரவிருத்த ஸ்ரீமதி என்ற சமஸ்கிருதப் பெயரின் தமிழ் பெருந்திரு. அவளோடு உடனுறைத் தெய்வம் சப்தரிஷீசன்.

    லா.ச.ரா. தன் குடும்பத்தைப் பெருந்திருக்குடும்பம் என்றழைத்துக் கொள்வதற்கு வேறு ஒரு காரணமும் உண்டு. லா.ச.ரா-வின் அன்னையின் பெயரும் ஸ்ரீமதிதான். தந்தையின் பெயர் சப்தரிஷீசன். 1916 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் தேதி (நள வருடம் ஐப்பசி மாதம் 14ஆம் தேதி) பெங்களூரில் பிறந்தார் லா.ச.ரா.

    லா.ச.ரா. அவரது பெற்றோரின் முதல் குழந்தை அல்ல. அவருக்கு முன் நான்கு குழந்தைகள் பிறந்து தரிக்காமல் போயின. பின் பெற்றோர்கள் ராமேஸ்வரம் போய் பிள்ளை வரம் வேண்டப், பிறந்தவராதலால். ராமனின் பெயரும், அமிர்தமய்யர் என்ற குடும்ப மூதாதையரின் பெயரையும் இணைத்து ராமாமிர்தம் எனப் பெயர் சூட்டினார்கள். அதனால்தான் லா.ச.ரா. லால்குடி சப்தரிஷீசன் ராமாமிர்தம்.

    தன் பிறப்பைக் குறித்த ஒரு சம்பவத்தை விவரிக்கிறார் லா.ச.ரா:

    நீலம் பூரித்து சலனமற்ற கட்டையாகத்தான் விழுந்தேனாம்... என்னைத் தலை கீழாகப் பிடித்து, சப்பையில் இரண்டு அறை அறைந்து ஆட்டின பின்னர்தான் குழந்தை வீரிட்டதாம். அப்படியும் கழுதைப் பாலைப் புகட்டினார்களாம். கழுதைப் பால் நெருப்பு. அத்தனைச் ‘சில்’லில் பிறந்த குழந்தைக்குச் சுயச் சூடு வர அந்த நெருப்பு வேண்டியிருந்ததாம்.

    தனது குடும்பத்தைப் பெருந்திருக்குடும்பம் என லா.ச.ரா. சொன்னாலும் அது பெரிய செல்வந்தக் குடும்பம் அல்ல. நாங்கள் ஏழ்மையான குடும்பம் எனச் சொல்லிக் கொள்வதில் நான் பெருமையேபடுகிறேன். என் முன்னோர்களும் என் பெற்றோர்களும் பட்டினி பார்த்தவர்கள் என்று குறிப்பிடுகிறார் லா.ச.ரா.

    செல்வந்தர்கள் குடும்பம் இல்லை என்றாலும் கல்விமான்கள் குடும்பம் அவருடையது. சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் (1916) அவர் பிறந்த போதே, அவருக்கு முன் இரண்டு தலைமுறைகள் கல்வியில் சிறந்தவர்களாக விளங்கினார்கள். அவரது பாட்டனார் தமிழ் ஆசிரியர். அவரது பாட்டனாரோடு பிறந்தவர்களில் ஒருவர் தவிர மற்றவர்கள் அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள். ஒருவர் வழக்கறிஞர். அவரது தந்தை பள்ளி ஆசிரியர்.

    அவரது குடும்பத்தைச் சந்திக்கலாம் வாருங்கள்:

    லா.ச.ரா-வின் பாட்டனார் ராமசாமி ஐயர் ஒரு தமிழ்ப் பண்டிதர். அவரை வரகவி என்று வர்ணிக்கிறார் லா.ச.ரா. அவருக்கு பதினாறு வயதினிலே கனவில் பிள்ளையார் வந்து கற்கண்டு போட்டாராம். மறுதினத்திலிருந்தே வரகவியாகிவிட்டார். குலதெய்வத்தின் பேரில் தோத்திரங்கள் கொட்ட ஆரம்பித்தன. அச்சு வெட்கும் அழகான கையெழுத்தில் ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தில் கறுப்பு மசியில் எழுதி வைத்திருந்தார் என்று குறிப்பிடும் லா.ச.ரா. அந்தத் தோத்திரங்கள் கடவுளைப் பற்றிய புகழ்மாலைகளாக இல்லாமல் கடவுளுடன் நடத்தப்பட்ட உரையாடல்களைப் போல அமைந்திருந்ததாகச் சொல்கிறார்.

    மிக எளிமையான நடை பாணவேடிக்கை ஏதுமில்லாது அம்பாளிடம், சப்தரிஷிநாதரிடம் முறையீடுகள், தேவியுடன் தர்க்கங்கள், நேரிடை சண்டைகள், சமாதானங்கள், சாந்தங்கள், சஞ்சலங்கள், சலசலப்புக்கள், ஏக்கங்கள், உடனே தேறுதல்கள், திட்டுக்கள், அதட்டல்கள், அதிகாரங்கள், கெஞ்சல்கள் எங்கள் குடும்ப தினசரி நடப்பில் பெருந்திருவும் பங்கான ஒரு ஆள் என்கிறார் லா.ச.ரா.

    லா.ச.ரா-வின் சின்னத்தாத்தா அதாவது தாத்தாவின் தம்பி இந்து, சுதேசமித்ரன் நாளிதழ்களின் நிறுவனர் ஜி. சுப்ரமணியத்தின் மகளை மணம் புரிந்தவர். ஜி. சுப்ரமணியத்தின் உதவியினால் அவருக்கு லால்குடி போர்டு பள்ளிக்கூடத்தில் தமிழ்ப் பண்டிதர் வேலை கிடைத்தது, குடும்பம் சந்தித்த திருப்புமுனைகளில் ஒன்று.

    லால்குடியைத் தன் பெயரோடு பிணைத்துக் கொண்டிருந்தாலும் லா.ச.ரா. அங்கு அதிக காலம் வசிக்கவில்லை. தந்தையின் பணியின் காரணமாகவும், தன் பணியின் காரணமாகவும் வாழ்வின் பெரும்பகுதியை அயலூர்களில் செலவிட்டார். லா.ச.ரா-வின் தந்தை பள்ளி ஆசிரியர் பெங்களூரில் சில காலம் ஆசிரியராகப் பணிபுரிந்த அவர் தனது மகன்களைக் காலராவிற்கு பலி கொடுக்க நேர்ந்ததையடுத்துச் சென்னை ராயப்பேட்டையில் இருந்த முஸ்லீம் உயர்நிலைப் பள்ளியில் வேலை தேடிக் கொண்டு சென்னைக்குக் குடிபெயர்கிறார். ஆனால் அங்கு ஆஸ்த்மா அவரை வாட்டுகிறது. மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சென்னையை விட்டு நீங்கத் தீர்மானிக்கிறார்.

    காஞ்சிபுரத்திலிருந்து மூன்று மைல் தொலைவில் உள்ள ஐயன்பேட்டை என்ற கிராமத்தில் உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியேற்கிறார். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு பணிபுரிகிறார். அத்துடன் அந்த கிராமத்தின் போஸ்ட்மாஸ்டரும் அவர்தான்.

    தன் தந்தையைப் பற்றி லா.ச.ரா. தீட்டுகிற சொற்சித்திரம் இது: பெங்களூரில் அண்ணா வேலை பார்த்தபோது யானைக்குட்டி மாதிரி இருப்பார் (தாத்தாவை அப்பா என்றும் அப்பாவை அண்ணா என்றும் அழைப்பது லா.ச.ரா-வின் குடும்ப வழக்கம்) அந்த நாள் பள்ளிக்கூட வாத்தியாரின் அங்கி, தலையில் டர்பன், கழுத்துவரை மூடிய கோட்டு, பஞ்சகச்சம், கம்பீரத் தோற்றம். வேட்டியில் ஒரு துளி அழுக்குக்கூடச் சேராது. கரையோரத்தில் கூடக் கிடையாது. கட்டிக் கொண்டதற்கு அடையாளம் லேசான கசங்கல்.

    இப்படிக் கம்பீரத் தோற்றம் கொண்ட அவரது தந்தை பெங்களூர் வாசம் முடிந்து சென்னைக்கு வந்த போது இங்கிருந்த சுற்றுச் சூழல் மாசு காரணமாக அவரை ஆஸ்துமா தாக்குகிறது. அப்போது அவர் எப்படி மாறிப்போனார் என்பதையும் லா.ச.ராவே வேறு ஒரு இடத்தில் எழுதுகிறார். எலும்பும் தோலுமாகிவிட்டார். நெஞ்சின் முள் எலும்பு முண்டிக் கொண்ட உடனே அதன் கீழ் நெஞ்சுக்குழியில் எண்ணையிட்டுத் திரியேற்றலாம். முகம் சுண்டி, உதடுகள் கசந்து, வயிறு முதுகோடு ஒட்டி...

    தனது குழந்தைப் பருவத்தில் தந்தையோடு சேர்ந்து வாழ்ந்த போதிலும் லா.ச.ராவால் அவரோடு அதிக நேரம் செலவிட முடியவில்லை. காரணம் அவரது தந்தை மேல் வருமானத்திற்காக டியூஷன் வகுப்புக்களும் எடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் அவரோடு செலவிட நேரம் கிடைக்கும் போது அவர் தன் குழந்தைகளுக்குக் கதைகள் சொல்வார். ஒரு எழுத்தாளன் உருவாவதற்கான வித்து அங்கே உருவாகிறது.

    லா.ச.ரா-வின் தந்தை, சப்தரிஷீசன் தனது அத்தை மகளையே மணம் புரிந்து கொண்டார். லா.ச.ரா-வின் தந்தையின் சகோதரி, ஸ்ரீமதி இளம் வயதிலேயே, தன் அண்ணன் வீட்டிற்கு (அதாவது லா.ச.ரா-வின் பாட்டனார் வீட்டிற்கு) தனது குழந்தைகளுடன் வந்து கூட்டுக் குடும்பமாக வாழ்கிறார். ஒரே வீட்டில் வசித்ததானல் லா.ச.ரா-வின் தந்தையும், தாயும் ஒருவரை ஒருவர் சிறுவயதிலிருந்தே நன்கு அறிந்தவர்கள், ஆனால் அவர்கள் திருமணம் திடீரென்று நிச்சயமாகிறது. லா.சா.ரா-வின் அன்னைக்கு குடும்பத்தினர் வைத்திருந்த செல்லப் பெயர் ‘அம்மா பெண்’ தனது தந்தைக்குத் திருமணம் உறுதியான விதத்தை லா.ச.ரா. விவரிக்கிறார்:

    அண்ணா! ராமண்ணா! குரலில் தனி கணீர். கண்ணாடி உடையப் போவது போல். பயம்? பயம் தந்த தைரியம்? இந்த நாள் பாஷையில் ஹிஸ்டீரியா?

    இங்கேதான் இருக்கேன். ஸ்ரீமதி! தாத்தாவிற்கு இந்தத் தங்கை மேல் எப்படியும் தனி உசிர்.

    அண்ணா! நான் நாளைக் காலை தாண்ட மாட்டேன்! அம்மாப் பெண் எங்கே? அம்மாப் பெண்ணே! அம்மாப் பெண் கையைப் பிடித்து, அண்ணன் கையில் கொடுத்து, என் பெண்ணை சப்த ரிஷிக்குத்தான் நீ பண்ணிக்கணும்!

    இப்போ என்ன அதைப் பத்தி? நாளைக்கு நடக்கப் போறதை யார் கண்டது? மன்னி நீட்டி முனகினாள். அவளுக்குத் தன் பிள்ளைக்குப் பரிசப் பணம் வாங்க வேண்டும் என்று ஆசை இருக்காதா? மூத்த பிள்ளை. எப்.ஏ.க்குப் படித்துக் கொண்டிருக்கிறான்.

    ஸ்ரீமதி காதில் வாங்கிக்கொண்டதாகத் தெரியவில்லை. நாலுபேர் நாலு சொல்வா. நீ கேட்கப்படாது. ஏற்கெனவே தகப்பனில்லாத குழந்தைகள். இதோ நானும் விட்டுட்டுப் போயிடப் போறேன். என் பெண் தெரியாத இடத்தில் புகுந்து கண் கலங்கினாள் என்று இருக்கக் கூடாது. நல்லதோ பொல்லதோ அவள் இந்த வீட்டுகே வாழ்க்கைப் படட்டும். நான் இப்போ உன்னைக் கேட்கிறபடி நீ நடப்பதை நான் தெய்வமாக இந்த வீட்டைச் சுற்றிப் பார்த்துண்டு இருப்பேன். என்ன சொல்றே?

    அப்படியே பண்ணிக்கிறேன் ஸ்ரீமதி!

    அம்மாப் பெண்ணை நீ உன் பிள்ளைக்குத்தான் பண்ணிக்கொள்ள வேண்டும்! என்று ஸ்ரீமதி தன் அண்ணனிடம் கை பிடித்துக் கொடுத்துவிட்டுத்தான் போகுமிடம் போய்ச் சேர்ந்துவிட்டாலும், மன்னிப் பாட்டிக்குச் சபலம் விடவில்லை. அம்மாப் பெண்ணைப் பெண் பார்க்க ஓரிருவர் வந்தார்களாம். அவர்களில் ஓரிடம் மெய்யாகவே வசதி உள்ளதுதானாம். இரண்டாந்தாரம். அப்படித்தானே வாய்க்கும்! கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்றால் முடியுமா? ஆனால் அப்படி ஒன்றும் வயதாகிவிடவில்லையாம். ஆள் திடகாத்திரம் தானாம்.

    அண்ணாகூட – அதான் என் தந்தை – சொன்னாராம்: அம்மாப் பெண்ணே, எனக்காக நீ பார்க்காதே உன் வாழ்க்கை உருப்பட வரும் சமயத்தை நழுவ விடாதே! இந்த வீட்டில் வாழ்க்கைப்பட்டால் – நான் சொல்லத் தேவையில்லை. இந்த வீட்டு நிலைமைதான் உனக்குத் தெரியும்.

    தாத்தா: அம்மாப் பெண்ணே, உன்னிஷ்டம் எப்படியிருந்தாலும் நான் குறுக்கே நிற்கமாட்டேன்.

    ஆனால், அம்மாப் பெண், நான் சப்தரிஷியைத்தான் பண்ணிக் கொள்வேன்! என ஒரே பிடியாகப் பிடித்து, மன்னியின்

    Enjoying the preview?
    Page 1 of 1