Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manam Enum Vanam
Manam Enum Vanam
Manam Enum Vanam
Ebook91 pages14 minutes

Manam Enum Vanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஊசிகள் செய்ய அல்ல, ஈட்டிகள் செய்யப் பிறந்தவன் நான் என்று என் சிறுகதைகள் குறித்ததொரு பிரகடனத்தை முன்னர் வெளியிட்டிருந்தேன். என்னைப் பொறுத்தவரை சிறுகதைகளில் நுட்பத்தைவிட அது ஏற்படுத்தும் தாக்கம் முக்கியம்
கவிதைகளைப் பொறுத்தவரை என் நிலை இதற்கு நேர் எதிரானது. அவை ஈட்டிகள் அல்ல. மலைப் பள்ளத்தாக்கில் உதிர்ந்து, காற்றில் சுழன்று இறங்கும் மலர் இதழ் எழுப்பும் ஒலி. அந்த மெல்லிய சப்தம் உங்கள் காதுகளை எட்டாமலே போகலாம். ஆனாலும் அவை என் அகமொழி.
கவிதை இதற்கு நேரதிர் தளத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. அரசியல் மேடைகளின் அலங்காரத்தையும், உரத்த குரலையும் அது வரித்துக் கொண்டிருந்தது. எழு,விழி, கொடு,பறி, மறு, எரி,சுடு என அது ஆணைகள் இட்டுக் கொண்டிருந்தது.காதல் கவிதைகள் கூட இரைச்சலாக இருந்தன. மலரின் மெல்லிது காமம் என்பதை ஒலிபெருக்கி வைத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். யாப்பிலக்கணத்தைப் பின்பற்றி எழுதப்படுவதாகச் சொல்லிக் கொண்டாலும், வடிவச் சிறப்பின் காரணமாக இல்லாமல், மொழியின் செழுமை காரணமாக அவை இயங்கின.
நான் இவை இரண்டிலிருந்தும் விடுதலை பெற விரும்பினேன். அதற்கு நானறிந்த வழி இதன் நேர் எதிர் திசையில் பயணிப்பதுதான்.
சிறுகதைகள் தமிழின் எல்லைகளை விரிவுபடுத்தின. ஆனால் கவிதைகள் தமிழுக்குச் செழுமை சேர்த்தன. சங்கம் தொட்டு, சமகாலம் வரை பொங்கிப் பெருகும் அந்த ஜீவ நதியிலிருந்து ஒரு கை அள்ளிப் பருகிய எவரும் இதற்குச் சான்றளிக்க முடியும்.
இந்தப் பெருமிதமும், செழுமையும் தந்த கவிமனம்தான் என்னைக் கவிதைகள் எழுத உந்தின. ஐரோப்பிய-அமெரிக்க இலக்கிய வாசிப்பின் தாக்கத்தால் இங்கே புதுக்கவிதை இயக்கமாக வேகம் கொண்ட 'எழுத்து' இதழில் என் கவிதைப் பயணம் தொடங்கிய போதும், ஐரோப்பியக் கோட்பாடுகளால் அல்ல, தமிழ்க் கவிதை மரபால் வசீகரிக்கப்பட்டே நான் என் கவிதைகளை எழுதுகிறேன். அவற்றில் பின் நவீனத்துவ இருண்மைகளைக் காண இயலாது. மரபின் ஒளிப்புள்ளிகள் தென்படுமேயானால் அது இயல்பானது.
என் அகமொழியை வாசிப்பதால் உங்களுக்கு என்ன லாபம்? இதோ இந்த முன்னிரவில், என் ஜன்னலுக்கு வெளியே பொலிந்து கொண்டிருக்கும் நிலவு, உங்கள் வீட்டு முற்றத்தில், ஜன்னலில், தோட்டத்தில், பால்கனியில், வீதியில்,மொட்டைமாடியில் ஒளியூட்டிக் கொண்டிருக்கக் கூடும். இடமல்ல, நிலவுதான் முக்கியம். கவிதைகள் அல்ல, கவிமனம்தான் முக்கியம்.
கிழிந்த கூரையின் வழியே நிலவை ரசிக்கும் பாஷோவின் கவி மனம் நமக்கும் வாய்த்துவிட்டால் அதைவிட ஆனந்தம் வேறேது?
மாலன்
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580115406076
Manam Enum Vanam

Read more from Maalan

Related to Manam Enum Vanam

Related ebooks

Reviews for Manam Enum Vanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manam Enum Vanam - Maalan

    http://www.pustaka.co.in

    மனம் எனும் வனம்

    கவிதைகள்

    Manam Enum Vanam

    Kavithaigal

    Author:

    மாலன்

    Maalan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maalan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    நன்றான விதத்தில் நான்கானவன்

    என் அக மொழி

    நான்

    எனினும்…

    மனம் எனும் வனம்

    கனவுப் பூக்கள்

    ஜூன் 26, 1975

    இயல்பு

    இதுவும்…

    அகம்

    பதின்மம் (அவன்)

    பதின்மம் (அவள்)

    த்வனி

    நீ

    புல்மனம்

    ஓர் இந்தியக் கிராமம்

    தனையாள விரும்புகின்ற உயிர்க்கெல்லாம்

    சிந்தை

    தமிழ்

    இன்று எதனை நான் பாடக் கூடும்?

    கனவு

    அறிமுகம்

    மாறிலிகள்

    புத்தகக் காட்சி (அல்லது) இலக்கிய உலகம்

    பிம்பங்கள்

    வாழ்க நற்றமிழர்!

    ஆணைக் காதலிப்பதென்றால்....

    வேலையில்....

    அவம்

    அறிவாயா?

    எங்கள் தேசத்தில்....

    உள்ளிருப்பு

    முரண் இயக்கம்

    வாதையும் மருந்தும்

    சாணை தீட்ட மழைநாளில் வந்தவன்

    கலை மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு

    அலைதல்

    ஏனெனில்...

    மிச்சம்

    கொரானா

    புற்றகம்

    எப்படி?

    சொல்லாத சொல்

    நேற்று வந்த ஞானம்

    அச்சமென்பதில்லையே!

    புத்தாண்டு புத்தி

    பரிசில் வாழ்க்கை

    சகி

    நன்றான விதத்தில் நான்கானவன்

    There is no surer foundation for a beautiful friendship than a mutual taste in literature.

    -P.G. Wodehouse

    நல்ல அழகான நட்பின் அடித்தளமாக இருப்பதில் மனமொத்த இலக்கிய ஈடுபாட்டை விட வேறொன்றுமில்லை என்று சொல்லுவது போல, 1970களில் பாலகுமாரன், சுப்ரமணிய ராஜு, மாலன் மூவருடனும் ஒரு புள்ளியில் இணைய வாய்த்தது, என்னுடைய வாழ்வின் நல்லூழே என்று கூற வேண்டும். இதை உட் ஹவுஸ் சொல்லித்தான் நமக்குத் தெரிய வேண்டுமென்பதில்லை உவப்பத் தலைக்கூடி உள்ளப்பிரிதல் பற்றி வள்ளுவர் ஏற்கெனவே சொல்லவில்லையா. இந்த மூன்று பேரும் எனக்கு கவிஞர்களாகவே அறிமுகமானார்கள், நட்பானார்கள். மாலன் அப்போதே ‘வாசகன்’ என்ற சிற்றிதழ் மூலமாக தன்னை ஒரு இலக்கியப் பத்திரிகை ஆசிரியராக நிறுவிக்கொண்டு விட்டவன். பின்னாளில் சிறந்த இதழியலாளராக

    Enjoying the preview?
    Page 1 of 1