Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Puli Vettai
Puli Vettai
Puli Vettai
Ebook188 pages1 hour

Puli Vettai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இது மாலன் அண்மைக்காலத்தில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. இதுவரை நூல்வடிவம் பெறாத கதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெறுகின்றன.

இந்தக் கதைகளில் பல அயல் மண்ணில் வாழும் தமிழ்ப் பாத்திரங்களை மையமாகக் கொண்டு அமைந்தவை என்ற வகையில் இவை புதுமையானவை. தமிழ் இலக்கியத்தின் எல்லைகளை விரிவுபடுத்துபவை.

மாலன் இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான பாஷா பரிஷத் விருதை முழுமையான படைப்பாளுமைக்காகப் பெற்றவர். சாகித்ய அகாதெமியின் மொழிபெயர்ப்புப் பரிசு, தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது ஆகியவற்றால் சிறப்பிக்கப்பட்டவர். பல்வேறு இலக்கிய அமைப்புகளால் வாழ்நாள் சாதனையாளர் விருது அளிக்கப்பட்டவர். சிங்கப்பூரின் லீ காங் சியான் ஆய்வுக் கொடை பெற்ற ஒரே இந்தியர்.

Languageதமிழ்
Release dateJul 29, 2023
ISBN6580115410016
Puli Vettai

Read more from Maalan

Related to Puli Vettai

Related ebooks

Reviews for Puli Vettai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Puli Vettai - Maalan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    புலி வேட்டை

    (சிறுகதைகள்)

    Puli Vettai

    (Sirukathaigal)

    Author:

    மாலன்

    Maalan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/maalan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    கனவு ராஜ்யம்

    பழையன புகுதலும்

    சந்தான லட்சுமி

    இருபது வருடங்கள்

    களவு

    அசலும் நகலும்

    அந்தரத்தில் கண்ணாடி துடைப்பவர்

    புலி வேட்டை

    அம்மாவின் கிரீடம்

    அதுவும்

    சரஸ்வதி

    வடு

    சந்தன மரம்

    கனவு ராஜ்யம்

    பீரங்கிச் சத்தம் கேட்டதும் திடுக்கிட்டுப் போனேன். இந்தியானாவே அதிர்ந்து குலுங்குவது போல் முழங்கியது பீரங்கி.ஆனிக் காற்று ஆடையை உருவிக்கொண்டு போய்விடாமல் வேட்டியை வழித்துக் காலிடுக்கில் கவ்விக்கொண்டு இந்தியானா கப்பலிலிருந்து எதிரே தெரிந்த தீவை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.கண்ணுக்கெட்டியவரை கடும் பச்சை. . .நாற்றுப் பச்சை இல்லை.காட்டுப் பச்சை.வயல் போல் இல்லை, வனம் போல் தெரிந்தது. இந்தக் காட்டில் என்ன வியாபாரம் செய்யப் போகிறேன்? கவலையில் உள்ளங்கைகளை உரசிக் கொண்டேன். அது என் பழக்கம். எப்படி ஏற்பட்டது எனத் தெரியவில்லை. கவலையோ சிந்தனையோ என்னை அரிக்கும்போது உள்ளங்கைகள் ஒன்றையொன்று பற்றிக் கொண்டு உராய்ந்து கொள்ளும்.

    நாராயணா, நகரு! என்று என்னை இடித்து ஒதுக்கிக் கொண்டு வடத்தை இழுத்துக் கொண்டு ஓடினார்கள். நங்கூரம் பாய்ச்சப் போகிறார்கள். துரையோடு சேர்ந்து நாமும் கரையிறங்கினால்தான் பிழைத்தோம். இல்லையென்றால் கப்பலோடு சேர்ந்து அல்லாடிக் கொண்டிருக்க வேண்டியதுதான். நாளை மதியம் சரக்கு இறக்க வரும்போது நம்மையும் அள்ளிப் போட்டுக்கொண்டு போவார்கள்.

    துரையைப் பார்க்க படியிறங்கிய போது, எதிரே துரையே ஏறி வந்து கொண்டிருந்தார். கறுப்புக் கால் சாரய், கறுப்புக் கோட்டு, கழுத்து வரை வெள்ளைச் சட்டை, பட்டாம் பூச்சி இறக்கை விரித்தார் போல் கழுத்தை இறுக்கின ‘போ’ என கச்சேரிக்குப் போகிற உத்தியோகஸ்த உடுப்புக்கு மாறியிருந்தார். ஏணியில் ஏறித் திரும்பினபோது தங்கப் பொத்தான்களில் மாலைக் கதிர் பட்டுக் கண்ணைச் சீண்டின. ராபிள்ஸ் துரையே பொன்னிறம்தான். கண்கள்தான் வெளிறிப்போன பாசிப்பச்சை. நீரோட்டம் ததும்பும் அந்தக் கண்களும் ஜொலிப்பது போல் தோன்றியது எனக்கு. துரை உற்சாகமாக இருக்கும் போது அந்தக் கண்கள் ஜொலிக்கும். பார்த்திருக்கிறேன் பலமுறை.

    பிள்ளை! இங்கு என்ன செய்கிறாய்? என்று வாஞ்சையோடு அழைத்து தோளில் கை வைத்து இந்தியானா முகப்பிற்கு அழைத்துச் சென்றார் துரை. என்னவோ தெரியவில்லை, வந்த சில நாள்களிலேயே துரைக்கு என்னைப் பிடித்துவிட்டது. ஆனால் அந்த வாஞ்சைதான் அடுத்தவர்களது வயிற்றெரிச்சலுக்கு வார்த்த நெய். பொறாமையின் அனல் பொறுக்கமாட்டாமல்தான் பினாங்கிலிருந்து புறப்பட்டு விட்டேன்.

    பார்த்தாயா? என்று கையை உயர்த்திச் சுட்டினார் துரை. அவர் காட்டிய திசையில் வெள்ளையில் சிவப்பு வரிகளோடிய கும்பெனி கொடி காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது. பார்த்தாயா, சிங்கப்பூர்! கோடீஸ்வரனாக நீ கொழிக்கப் போகும் பூமி!

    ‘இந்தக் காட்டிலா?’ என்று எனக்குள் பொங்கிய கேள்வியை விழுங்கிப் புன்னகைத்தேன்.

    பூரித்துப் பொங்கிய மகிழ்ச்சியில் பேசிக்கொண்டு போனார் துரை. காற்றில் எழுதியதைக் கூட என்னால் படிக்க முடியும் பிள்ளை. எதிரில் தெரியும் அலைக்கரையில் என்ன எழுதியிருக்கிறது தெரியுமா? விரிந்து கிடக்கும் வனத்தின் ரகசியத்தை வாசித்துக் காட்டுகிறேன் கேள். இந்தத் தீவில்தான் எதிர்காலம் எழுதப்பட்டிருக்கிறது. உன்னுடையது மட்டுமல்ல, என்னுடையதும்தான், இருவரும் சேர்ந்து உருவாக்கலாம் ஒரு கனவு ராஜ்யம்!

    கனவின் விசையில் ஒளிர்ந்த கண்களை ஒன்றும் பேசாமல் பார்த்துக் கொண்டு நின்றேன்.

    மௌனத்தைப் பிளந்து கொண்டு மறுபடியும் முழங்கியது பீரங்கி. இந்தமுறை கரையிலிருந்து. ஒருமுறை அல்ல, பதினேழுமுறை. என்னையும் அழைத்துக்கொண்டு கரையிறங்கினார் ராபிள்ஸ் துரை. கீழே நின்றிருந்த வில்லியம் துரை விறைப்பாக ஒரு சலாம் வைத்தார். ரத்தச் சிவப்பும் வெள்ளை உடுப்பும் அணிந்த சோல்ஜர்கள், நீலம் தரித்த அதிகாரிகள், பொன்னிற ஆடை பூண்ட மேலதிகாரிகள் என அணிவகுத்து நின்றவர்களும் சல்யூட் வைத்தார்கள்.

    கறுப்பாய், குள்ளமாய், உருண்டை முகமும், உதட்டில் சிரிப்புமாய் வேட்டியில் வீசி நடந்து வரும் இந்தத் தமிழனைப் பார்க்க அவர்களுக்கு வேடிக்கையாத்தான் இருக்கும். எல்லோர் கண்ணிலும் ஒரு கேலி தொக்கி நின்றது. வில்லியம் துரை கூட என்னைத் திரும்பிப் பார்த்து பெரிய துரையிடம் ஏதோ பேசினார். யார் எனக் கேட்டிருப்பார் போல.

    துரை என்னை அருகில் அழைத்தார். வில்லியம் துரைக்கு அறிமுகப்படுத்தினார். இவர் பிள்ளை. நாராயண பிள்ளை. நேர்மையான வியாபாரி. கம்பெனிக்கு மிகவும் தேவைப்படுவார். கவனித்துக் கொள்ளுங்கள்.

    கடைசி இரண்டு வாக்கியத்தை அவர் வேண்டுமென்றே உரக்கச் சொன்னதாக எனக்குத் தோன்றியது. அப்படியெல்லாம் இருக்காது. அதிரப் பேசுகிறவர் இல்லை துரை. ஆனால் அழுத்தமாகப் பேசுகிறவர். துரைமார்களின் நாசூக்கு, நறுவிசு இதெல்லாம் நமக்கு வராது.

    துரை கேம்புக்குள் போனதும் நான் தீவைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினேன். சுற்றிப் பார்க்க ஒன்றுமில்லை. நான்கைந்து அத்தாப்புக் கொட்டகைகள் இருந்தன. கும்பனிக்காரர்கள் தரையில் ஆப்பு அடித்து கித்தானில் போட்ட கொட்டகைகளும் இருந்தன. புழங்குகிற இடத்தில் மட்டும் புல்லையும் புதரையும் செதுக்கி சமதளப்படுத்தியிருந்தார்கள்.

    கருக்கிருட்டில சுத்திக்கிட்டு திரியாதேயும். காட்டுக்குள்ள புலியெல்லாம் இருக்கு என்றான் ஒரு சிப்பாய் மலாய் மொழியில்.

    நிசமாவா?

    சும்மா பயங்காட்டுதான். நரி ஓடும். அங்கிட்டு இங்கிட்டு புதைசேறு நிறைய இருக்கு. பார்த்துக்கிடும். நேத்திக்குக் கூட ஒத்தனை கயிறு போட்டு மீட்டோம் என்றான் இன்னொருவன்.

    இவன் பயங்காட்டறானா? தெம்பூட்டறானா? புதைசேறுக்கு புலிக்கதையே தேவலாம்.

    அத்தாப்புக் கொட்டாயின் ஓரமா கித்தானை விரித்துப் படுத்தேன். தூக்கம் வரவில்லை. இருட்டில் ஏதோ ஒளிர்ந்து உருள்வதைப் போலிருந்தது. புலியின் கண்ணோ? உறுமல் கேட்கிறதா எனக் கூர்ந்தேன். சீச்சீ மின்மினிப் பூச்சி. ‘தாயே மாரியம்மா, இதென்ன சோதனை! துரையை நம்பியா வந்தேன்? உன்னை நம்பித்தானே வந்தேன், இப்படி நடுக்காட்ல கொண்டாந்து இறக்கி விட்டியே!’

    விடிஞ்சும் விடியாததுமாய், சங்கரன் செட்டி, ஹசன் காக்கா, அவுக ஆளுங்க, நம்ப ஆளுங்கனு ஏழெட்டுப்பேர் சட்டியும் பொட்டியுமா வந்து சேர்ந்த பிறகு கொஞ்சம் தெம்பு வந்தது. ஆனால் வந்தவர்கள் வாயைத் தொறந்து மனசைக் கொட்டினபோது மறுபடியும் கவலை வந்து கையைப் பிறாண்டியது.

    பிள்ளைவாள் பூராவும் காடாயிருக்கே! பாத்தீங்களா? என கோயிந்தசாமிதான் முதல்ல பேச்சை ஆரம்பித்தார்.

    ம்ம்...

    இங்கே என்னத்தை வியாபாரம் பண்றது? என்று தொடர்ந்தார் கிருஷ்ணன் செட்டி.

    காரணம் இல்லாமியா கம்பெனிக்காரன் கொட்டகை போட்டிருக்கான்?

    அவன் கதை வேற. கப்பல் கப்பலா வியாபாரம் பண்றவனுக்கு ஈடு சோடா நம்மை நினைச்சிக்கிற முடியுமா?

    ம்ம் அதுவும் சரிதான்!

    சரிதான் சரிதானு தலையை ஆட்டிக்கிட்டு இருந்தா எப்படி? என்ன செய்ய இங்கே?

    நான் உள்ளங்கைகளை உரசிக் கொண்டு மெளனம் காத்தேன். எனக்கும்தான் விடை தெரியவில்லை.

    இருநூறு சோல்ஜர் இருப்பான இங்கே? என்றார் ஹசன் பாய்.

    அவ்வளவு இருக்காது. முன்னப் பின்ன போனா நூறு இருக்கலாம்.

    எதுக்கு இந்தக் கேள்வி? அவங்களுக்கு ஆக்கிப் போடலாம்னு நினைக்கிறீரோ? கிருஷ்ணன் செட்டியின் கேள்வியில் இருந்த கேலி ஹசன் காக்காவைச் சுட்டிருக்க வேண்டும். காக்கா கும்பெனிக்கு இறைச்சி விற்றுக் கொண்டிருந்தவர்.

    நீர் வேணா அவங்ககிட்ட லேவாதேவி நடத்துமே! என்றார் அவர் பதிலுக்கு சுள்ளென்று.

    எகத்தாளத்தைப் பாரு! பட்டாளத்துக்காரன்கிட்ட பணத்தைக் கொடுத்திட்டு திரும்ப வாங்கவா?

    ஆனையைக் கொண்டு வந்து நிறுத்தும், கரும்பைக் கொடுத்து மீட்டெடுக்கிறேன் பாரு என்று சவுடால் விடற ஆளாச்சே நீ!

    பேச்சின்போக்கு போகும் திசை எனக்குப் பிடிக்கவில்லை. நான் ஹசன் காக்காவைப் பார்த்தேன். அவர் வாயை மூடிக் கொண்டார். ஆனால் கோவிந்த சாமி அடுத்த அம்பை எய்தார்.

    கம்பெனிகிட்ட வியாபாரம் செய்யலாமுனு கூட்டிட்டு வந்துட்டு இப்படிக் கழுத்தறுட்டியே! குழி வெட்டி இறக்கினா பரவாயில்லை. புதை சேத்துல இறக்கிட்டியே!

    புதை சேறு!

    நேற்றுப் பார்த்த உற்சாகத்தோடு இன்றும் இருந்தார் துரை. நான் பேசத் தயங்குவதைப் புரிந்துகொண்டு அவரே கேள்வியைத் தொடுத்தார்.

    என்ன பிள்ளை! எப்ப வியாபாரத்தை ஆரம்பிக்கப் போறே?

    ஆளே இல்லாத ஊர்ல என்னத்தை வியாபாரம் செய்வேன் நான்?

    ராபிள்ஸ் சிரித்தார். ஹாஸ்யம் கேட்டதுபோல கடகடவென்று சிரித்தார். கதை சொல்றேன் கேக்றீரா?

    வழிகேட்டு வந்தால் கதை கேட்கச் சொல்கிறார் துரை.

    ஒரு தீவு. அது முழுக்க பழங்குடி மக்கள் என் பதிலுக்காக காத்திருக்காமல் கதையை ஆரம்பித்தார் துரை. ஒருத்தனும் துணி கட்றதில்லை. உன்னை மாதிரி இரண்டு துணி வியாபாரி தீவுக்கு வந்தான். ஊர்ல எவனும் துணி கட்றதில்ல, இங்கே நான் எப்படி வியாபாரம் செய்வேனு ஒருத்தன் தலையில கையை வைச்சுக்கிட்டு உட்கார்ந்திட்டான். இன்னொருத்தன், அட, அத்தினிபேரையும் துணி கட்ட வைச்சா எவ்வளவு விற்கலாம்னு கணக்குப் போட ஆரம்பிச்சான். நீ எப்படி? என்றார் சிரித்துக்கொண்டே. வெள்ளைக்காரன் வியாபாரம் இதுதான் என்று தன் தோலைச் சுண்டிக்கொண்டே சொன்னார். சந்தையில் விக்காதே. சந்தையையே வித்திரு.

    சற்று மௌனித்து புரியுதா? என்றார்.

    நான் மலங்க மலங்க விழித்தேன்.

    மாறாதே! மாத்து. போற இடத்தை உனக்குத் தகுந்தாப்ல மாத்து! ஊரை மாத்து, பேச்சை மாத்து, ஆளை மாத்து, அப்புறம் உலகம் உனக்குத்தான்.

    ஆளில்லாம, எப்படி...? நான் என் பழைய பல்லவியை ஆரம்பித்தேன்.

    ஆளைக் கொண்டுவா! காட்டைப் பார்த்தீல. இன்னிக்குக் காடு. நாளைக்கு எல்லாம் கட்டிடம். உன் துணி மூட்டையைத் தூக்கிப் போடு. கட்டிடம் கட்டு. கொத்தனார், ஆசாரி எல்லாரையும் கூட்டிக்கிட்டு வா! என்றபடி எழுந்து கொண்டார் துரை.

    என்னைத் திட்டிக்கொண்டே எல்லோரும் திரும்பிப் போனார்கள். சங்கரன் செட்டியும் ஹசன் காக்காவும் என்னை நம்பி இருக்கத் தீர்மானித்தார்கள். ஊருக்குத் திரும்பியவர்களிடம் சித்தப்பாவிற்கு கட்டிட வேலைக்கு ஆள் அனுப்பும்படி கடிதம் கொடுத்து அனுப்பினேன்.

    ஆற்றோரம் இருந்த சேறு, அப்படி ஒன்றும் புதை சேறாக இல்லை. சட்டி பானை செய்கிறார் போல் வெண்ணைக் களிமண்ணாய் இருந்தது. நான் சட்டி பானை செய்யவில்லை. சூளைபோட்டு செங்கல் அறுத்தேன். கனவு ராஜ்யம் கட்டிடம் கட்டிடமாய் முளைத்துக் கொண்டிருந்தது. கல்லுக்கு நல்ல கிராக்கி.கம்பெனி எனக்கு காட்டை அழிக்கும் காண்டிராக்ட்டும் கொடுத்தது.மரம் வெட்டவும், வெட்டின மரத்தைஅறுத்து பலகை, உத்தரம், நாற்காலி பண்ணவும் ஆள் போட்டேன்.

    ஊருக்குப் போகும் முன் ராபிள்ஸ் துரை கூப்பிட்டு அனுப்பினார். நான் நினைக்கிற வேகத்திற்கு கட்டிடம் வரமாட்டேங்குதே! என்ன செய்யலாம் என்றார். நான் என்ன செய்யட்டும்? கல்லுதான் நான் கொடுக்கிறேன், கட்டற

    Enjoying the preview?
    Page 1 of 1