Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sirithu Sirithu Ennai...
Sirithu Sirithu Ennai...
Sirithu Sirithu Ennai...
Ebook93 pages45 minutes

Sirithu Sirithu Ennai...

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100903532
Sirithu Sirithu Ennai...

Read more from Pattukottai Prabakar

Related to Sirithu Sirithu Ennai...

Related ebooks

Reviews for Sirithu Sirithu Ennai...

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sirithu Sirithu Ennai... - Pattukottai Prabakar

    https://www.pustaka.co.in

    சிரித்து சிரித்து என்னை...

    Sirithu Sirithu Ennai...

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    ஆயிரத்து எண்ணூற்று பத்தொன்பதாம் வருடம் ‘சர் ஸ்டாம்போர்ட் ரேஃபிள்ஸ்’ கண்டுபிடித்த சிங்கப்பூர். பருத்தி வெடித்து அலையும் பஞ்சுத் துகள்கள்போல் மழை மெலிதாக சிணுங்கிக்கொண்டிருக்கிறது.

    பெரிய கப்பல்களை ‘ரிப்பேர்’ செய்யும் தனியார் நிறுவனங்களில் ஒன்றில் ‘பர்சனல் மேனேஜர்’ அறையில் அந்த நீலக் ‘கோட்’டு சைனாக்காரன் எழுந்து நின்று மதியழகனின் கையைப்பற்றி அழுத்தமாகக் குலுக்கினான். அருகில் ஜன்னல் கண்ணாடியில் மழை... புள்ளி புள்ளியாய் ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது.

    "இந்த ஆறு வருட ‘கான்ட்ராக்ட்’ நேற்றோடு முடிந்தது ‘மிஸ்டர்’ மதியழகன்! இந்த ‘கவரில்’ உங்கள் ‘பாஸ்போர்ட்’, சென்னைக்கான விமான ‘டிக்கெட்’, கம்பெனி உங்களுக்குத் தரவேண்டிய பாக்கிக்கான ‘செக்’ மற்றும் உங்களின் திருப்திகரமான சேவைக்கான நற்சான்றிதழ் எல்லாம் இருக்கின்றன. உங்களின் எதிர்காலத்துக்காக எங்கள் வாழ்த்துகள். ஒரு சிறப்பான தொழிலாளியைக் கம்பெனி இழப்பதில் சற்று வருத்தம்தான். ஒப்பந்தகாலம் முடிவடைந்த பிறகு, உங்களை வற்புறுத்த இயலாது.

    ஆனால், இந்தியா சென்ற பிறகு, இதே கம்பெனியில் தொடர்ந்து பணியாற்ற நீங்களே விரும்பினால் ஒரு கடிதம் எழுதுங்கள். போதும்... உங்களை இங்கே நாங்கள் வரவழைத்துக்கொள்கிறோம், மீண்டும் நல்வாழ்த்துகள்."

    மதியழகன் தன் கையை விடுவித்துக்கொண்டு புன்னகைத்தான். இந்த ஆறு வருடங்களில் அவன் கற்றிருந்த ‘சைனீஷ்’ மொழியில், சார், அதற்கு அவசியம் ஏற்படாது. ஆனாலும், உங்கள் மனம் திறந்த அழைப்புக்கு என் நன்றி என்று கூறிவிட்டு, ‘கவரை’ எடுத்துக்கொண்டான்.

    மதியழகன்! இந்தியா சென்று என்ன செய்யப்போகிறீர்கள்?

    என் சொந்த ஊர் காஞ்சிபுரம். அங்கே என் தந்தை நெசவுத் தொழிலாளியாக இருக்கிறார். எனக்கு அம்மா இல்லை. ஒரு தம்பி. அவன், கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறான். நான் திருமணமாகி ஆறே மாதத்தில் சிங்கப்பூர் புறப்பட்டேன். என் அப்பா, தம்பி, மனைவி... இவர்களை எல்லாம் பார்த்து ஆறு வருடங்கள் ஆகின்றன. முதலில் ஒரு மாதத்துக்கு அவர்களோடு மகிழ்ச்சியாக ஊட்டி, கொடைக்கானல் என்று சுற்றுலா செல்லப்போகிறேன். அதன்பிறகு, சொந்தமாக தறிகள் போடப்போகிறேன். எந்திரத் தறிகள் போட்டு, அந்தத் தொழிலில் தீவிர கவனம் செலுத்தப் போகிறேன்.

    நல்லது... எல்லாவற்றுக்கும் வாழ்த்துகள்!

    மதியழகன் அவரின் அறையைவிட்டு நீங்கினான். அறிந்த உயர் அதிகாரிகள் அனைவரிடமும் சென்று சொல்லிக்கொண்டான். சக தொழிலாளர்கள் கண்களில் கண்ணீருடன் கட்டித்தழுவி விடை கொடுத்தார்கள். தனது ‘யூனிபார்மை’யும், ‘டூல்ஸ் கிட்’டையும் முத்தமிட்டு ஒப்படைத்தபோது இவனுக்கே கண்கள் கலங்கின.

    நீலக்கடலில் நங்கூரம் பாய்ச்சின நூற்றுக்கணக்கான கப்பல்களை குழந்தைகளைப் பார்ப்பதுபோல பார்த்தான். ‘லெதர் ஜெர்கின் ஜிப்’பை இழுத்துவிட்டுக்கொண்டு ‘டாக்சி’ பிடித்தான்.

    டேபன் கார்டன்ஸ் ரோட் என்றான்.

    அரை மணிநேரத்தில் அந்த இருபத்தி இரண்டு மாடிக் கட்டிடத்தின் வாசலில் இறங்கிக்கொண்டான். ‘லிப்ட்டில் ஒலித்த மலேசியப் பாடலை ரசிக்கிற மனநிலை இல்லை. பதினேழில் வெளிப்பட்டு தனது ‘அபார்ட்மென்ட்ஸ்’ வந்து, அழைப்பு மணி அழுத்த அவசியம் இல்லாமல் கதவு திறந்தே இருந்தது.

    மேற்கத்திய இசை மிதந்துவர, ஜான் பிரிட்டோ ஆடிக்கொண்டே கிச்சனில் ‘பிரெட் டோஸ்ட்’ செய்துகொண்டிருந்தான்.

    ஹாய் மதி, ‘ரிலீவ்’ ஆயிட்டியா? ‘வெயிட்’லா... ‘கம்மிங்’லா...

    ஒரு முழுக்கை ‘ஸ்வெட்டரை’ அணியாமல் கழுத்தில் அதன் இரண்டு கைகளையும் முடிச்சிட்டு, ‘ஜீன்ஸ்’ அணிந்திருந்த பிரிட்டோவின் மார்பில் செம்பட்டை ரோமங்கள். தட்டில் அடுக்கின ‘டோஸ்ட்டட் பிரெட் ஸ்லைஸ்’கள்... ‘சாஸ்’ பாட்டிலுடன் வந்தான்.

    மதியழகன் அமர்ந்து, ஆமாம் என்றான்.

    அவன் எதிரே அமர்ந்து ‘ரிமோட் கன்ட்ரோல்’ எடுத்து ‘டி.வி.’யை அணைத்துவிட்டு, ரியலி யு ஆர் கோயிங்?’ போவாதேலா என்று இவன் கையைப் பிடித்துக்கொண்டான். பிரியறது கஷ்டமாத்தான் இருக்கு ஜான். ஆனா... போய்த்தானே ஆகணும்?

    ஜான் பிரிட்டோ, மதிக்கான தட்டை நீட்டிவிட்டு ஒரே சமயத்தில் உதட்டில் இரண்டு சிகரெட்டுகளைப் பொருத்திப் பற்றவைத்து... ஒன்றை இவனிடம் தந்துவிட்டுப் பெருமூச்சுவிட்டான். திடீரென்று நினைத்துக்கொண்டவனாகக் கேட்டான்: என்னை மறந்துவிடுவியா மதி?

    "ச்சே... என்ன கேள்வி இது? இந்த ரெண்டு வருஷத்தில் நம்மைமாதிரி யாரும்

    Enjoying the preview?
    Page 1 of 1