Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyirodu Vendum…
Uyirodu Vendum…
Uyirodu Vendum…
Ebook110 pages1 hour

Uyirodu Vendum…

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100903670
Uyirodu Vendum…

Read more from Pattukottai Prabakar

Related to Uyirodu Vendum…

Related ebooks

Related categories

Reviews for Uyirodu Vendum…

Rating: 5 out of 5 stars
5/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    g o o d d s t o r y

Book preview

Uyirodu Vendum… - Pattukottai Prabakar

http://www.pustaka.co.in+

உயிரோடு வேண்டும்...

Uyirodu Vendum...

Author:

பட்டுக்கோட்டை பிரபாகர்

Pattukottai Prabakar

For more books

http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

அத்தியாயம் 14

அத்தியாயம் 15

அத்தியாயம் 16

அத்தியாயம் 17

1

நிஜமாவா?

கவுதம் தப்பான தகவல் தந்ததில்லைங்க.

அப்படி ஆசையே இல்லைன்னு சொன்னானே.

சுத்தி உள்ளவங்க தூண்டி விட்டுட்டாங்க.

பெருசா ஒண்ணும் சப்போர்ட் இல்லையே.

குறைச்சி மதிப்புப் போடறது தப்புங்க.

வரட்டுமே, என்னாய்டும்?

நமக்கு இப்போ சபையில அப்சல்யூட் மெஜாரிட்டி இருந்தா கவலைப்படாம காலாட்டலாம். பதினைஞ்சி பேரு கூட்டா ஆதரவை விலக்கிட்டா கவுந்துடுவோம்.

அப்படி விலகிடுவாங்களா என்ன?

அப்படி நடந்ததே இல்லையா என்ன? சரித்திரத்தில் எவ்வளவு சம்பவங்கள் இருக்கு. உதாரணமா... ஆயிரத்து தொள்ளாயிரத்தி...

என்ன பண்ணலாம்?

குரு பிரசாத் எலெக்ஷன்ல நிக்கக் கூடாதுங்க.

அதுக்குதான் என்ன செய்யலாம்னு கேக்கறேன்.

பேசிப் பார்க்கிறீங்களா? லைன் போட்டுத் தரட்டுமா?

பேரம் பேசச் சொல்றியா?

சேச்சே! குருகிட்ட இல்லாத காசா?

பின்னே?

பகைச்சுக்கறது நல்லதில்லைன்னு...

மிரட்டற விஷயமா இது? சரியா வராது.

ஏதாவது செய்யுங்க...

ஒரு விஷயம் புரியலை எனக்கு.

என்ன?

"ரஜினிகாந்த் எவ்வளவு பெரிய நடிகர்! அவருக்குப் பின்னாடி எவ்வளவு பெரிய மாஸ் இருக்கு! அவரே அரசியல் சரிப்பட்டு வருமான்னு நூறு தடவை யோசிக்கறாரு. இந்த குருபிரசாத் நேத்து வந்தவன். இன்னும் இருபது படம் கூட முடிக்கலை. இவன் எதுக்கு நம்ம அரசியலுக்கு வர்றான்? யானைக்குப் பயப்படறது நியாயம். பூனைக்கெல்லாம் பயப்படணுமா? இடைத் தேர்தல்தானே, நின்னுட்டுப் போகட்டுமே, தொகுதிக்கு நிறைய செஞ்சிருக்கோம், லட்சம் ஒட்டுவித்தியாசத்தில் ஜெயிச்ச தொகுதி. ஒண்ணும் ஆயிடாது.

யங் மாஸ் குருபிரசாத்துக்கு இருக்குங்கறதை மறந்துடக் கூடாதுங்க. அதுவுமில்லாம மக்கள் சைக்காலஜியையும் பார்க்கணும். இந்தத் தொகுதில ஆளுங்கட்சி தோத்தாலும் ஆட்சி கவிழாதுன்னு தெரியும். ஒரு மாற்றத்துக்கு குருபிரசாத்துக்குப் போடுவமேன்னு குத்திடுவாங்க, சின்னதா பொறி பறக்கறப்பவே ஊதி அணைச்சுடணும். பெரிய நெருப்பா வளர விட்டுட்டா ஃபயர் என்ஜின் வந்துதான் போராடற நிலைமை வந்துடும்.

சின்னப் பையன்.இப்பதான்வளர்ந்துட்டிருக்கிற பையன். அவனைப் போயி ஒரு பொருட்டா நினைச் சி... ஆனாலும் நீங்க சொல்றதை யோசிக்கத்தான் வேண்டியிருக்கு. தலைவர் கிட்ட பேசிடட்டுமா?

இதெல்லாம் தலைவர் காதுக்கே கொண்டு போகாம செய்யணுங்க. செஞ்சி முடிச்சிட்டு அப்புறம் சொன்னா திட்டவாப் போறாரு? நான் ஒரு திட்டம் வெச்சிருக்கேன், கொஞ்சம் செலவாகும். அனுமதி கொடுத்தா நானே இதைப் பார்த்துக்கறேன்.

என்ன திட்டம் அது?

1

அந்த நட்சத்திர ஹோட்டலின் டீலக்ஸ் அறையில் போர்வைக்குள் படுத்திருந்தான் ராவ்.

அதே போர்வைக்குள்ளிருந்த அவள், "விடிஞ்சிருச்சி டார்லிங். குட் மார்னிங் என்றாள், கண்களைச் சுழற்றி தன் உடைகளைத் தேடினாள்.

தொந்தரவு பண்ணாதே. ஐ ம் டயர்ட். ஒரு மணி நேரம் கழிச்சு எழுப்பு.

நான் போகணும்ப்பா.

என்ன அவசரம்? ஃபிளைட்டைப் பிடிக்கப் போறியா?

யா! ஒன்பது மணிக்கு பெங்களூர் ஃபிளைட்.

என்ன அங்கே? ஏதாச்சும் உங்க மாநாடா? இதை சிறுதொழிலா அங்கீகரிச்சி பேங்க் லோன் எல்லாம் தரணும்ணு கோரிக்கை வைக்கப் போறீங்களா?

ஏய்! நாட்டி!

அவன் தலையைத் தடவி விட்டுப் போர்வையிலிருந்து வெளிப்பட்டுத் தன் உடைகளைப் பொறுக்கிக் கொண்டு குளியலறைக்கு நடந்தாள்.

பேச்சுக் கொடுத்து தூக்கத்தைக் கலைச்சிட்டே! சாய்ந்து அமர்ந்து சிகரெட் பற்ற வைத்துக் கொண்டு, நானும் வரட்டுமா? என்றான்.

பெங்களுருக்கா? என்றாள் பாதிக் கதவுக்குப் பின்புறமிருந்து...

பாத்ரூமுக்கு கூட்டணிக் குளியல்.

நோ! நான் ஃபிளைட்டை மிஸ் பண்ணிடுவேன். கதவை சத்தமின்றி மூடினாள்.

ராவ் அவள் கைப்பைக்கு வெளியே சிதறியிருந்த மேக்கப் சாதனங்களில் லிப்ஸ்டிக் எடுத்து திருகிய படி யோசனையில் ஆழ்ந்தான்.

குட்டை ஈர முடிகளைத் துவட்டியபடி வந்து கண்ணாடி முன் அமர்ந்தாள், கையடக்க டிரையர் எடுத்து பிளக்கில் செருகி கூந்தலுக்குள் உஷ்ணக் காற்று அனுப்பியபடி, ராவ், ஒரு செல்போன் வாங்கிக் கொடேன்... என்றாள்.

பில் யார் கட்டறது?

அதுக்கு ஒரு ஸ்பான்சரர் பிடிச்சுக்கமாட்டேனா?

மகாபலிங்கபுரத்தில் ஒரு புது பிளாட்ஸ் வாங்கினேன், சும்மாதான் பூட்டி வெச்சிருக்கேன். தங்கிடறியா பர்மெனன்ட்டா? செல்போன் என்ன, உப்பு, புளி, மெளாகா எல்லாம் வாங்கித்தர்றேன், ம்...?

வேணாம் ராவ். அது வேணாம்.

ஏன்?

அது கமிட்மெண்ட் இப்போஜஸ்ட் ஃப்ரெண்ட்லி ஃபன்! அப்புறம் பாசம் வரும். செண்டிமென்ட் வரும். பொசசிவ்னெஸ் வரும். எதிர்பார்ப்புகள் வரும். ரெண்டு பேருக்குமே பிரச்சனை, ஒரு ஹோட்டல்ல நமக்கு டேஸ்ட் பிடிச்சிருக்குங்கறதுக்காக அந்த ஹோட்டலையே வாங்க நினைக்கறது புத்திசாலித்தனமா ராவ்?

இப்பல்லாம் ரொம்பப் பேசறே நீ

டெல்லிலயும் கனெக்ஷன் வந்துடுச்சே... அதான்.

சரி, பெங்களூர்ல யாரு?

இதானே வேணாங்கறது. பெங்களுர் போறேனா, அவன் நேத்து யாரோட இருந்தேன்னு கேட்பான். நான் என்ன சொல்வேன் தெரியுமா?

என்ன சொல்வே?

இதானே வேணாங்கரதுன்னு சொல்வேன், லிப்ஸ்டிக் கொடு.

நான் போட்டு விடறேன்.

அவன் அருகில் வந்து 'ஆ' காட்டினாள்.

என்னமோ தெரியலை தாரா, இப்பல்லாம் உன்னை கட்டிலுக்கு அப்புறமும் பிடிக்குது.

"ஐ லவ்யூன்னு சொல்லிடாதே. எனக்கு சிரிப்பு வரும், போன மாசம் ஒரு ஜோக். கோயமுத்தூர்ல ஒரு திருப்பூர் பார்ட்டி, செம மப்பு. நீ தேவதை. ஆ, ஊன்னு டயலாக், பிளாங்க் செக் கொடுத்தார், எவ்வளவு வேணும்னாலும் நிரப்பிக்கோன்னு சொன்னார், நியாயம்னு ஒண்ணு இருக்கே, நான்

Enjoying the preview?
Page 1 of 1