Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uthra! Uyir Thaa!
Uthra! Uyir Thaa!
Uthra! Uyir Thaa!
Ebook78 pages38 minutes

Uthra! Uyir Thaa!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஏழைகள் ஏழையாகவும், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், இன்று வரை இருக்க ஒரே காரணம் - சரியான தலைமை இல்லாததே!

அமைச்சர்களின் சுயநலங்களால்.. அதிகார துஷ்பிரயோகங்களால் , பினாமிகளின் பெயரில் தங்களுக்கே சொத்தைச் சேர்க்கின்றனர்.

ஆனால் எல்லாவற்றிக்கும் ஒரு முடிவு உண்டு.

ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியின் புலனாய்வு திறமையை ராஜேஷ்குமாரின் விறுவிறு எழுத்துநடையில்... படியுங்கள்.

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580100406667
Uthra! Uyir Thaa!

Read more from Rajesh Kumar

Related to Uthra! Uyir Thaa!

Related ebooks

Related categories

Reviews for Uthra! Uyir Thaa!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uthra! Uyir Thaa! - Rajesh Kumar

    https://www.pustaka.co.in

    உத்ரா! உயிர் தா!

    Uthra! Uyir Thaa!

    Author:

    ராஜேஷ்குமார்

    Rajesh kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    பாரிமுனை டாக்ஸி ஸ்டாண்ட் ராத்திரி பதினோரு மணி. தனியார் டாக்ஸிகள் விதவிதமான நிறங்களில் முன் இருக்கையிலும், பின் இருக்கையிலும் டிரைவர்கள் குளிர்க்கு அடக்கமாய் லுங்கிகளுக்குள் கதகதப்பாய் சுருண்டிருந்தார்கள். சாலை வெறிச்சோடிப் போயிருந்தது. டாக்ஸி ஸ்டாண்டுக்கு எதிரே இருந்த பிளாட்பார இட்லிக் கடையில் வயிற்றுக்குள் போயிருந்த மலிவு மதுவை உச்சத்துக்கு கொண்டு போக இட்லிகளை காரச்சட்னியோடு சேர்த்து விழுங்கிக் கொண்டிருந்தார்கள் அந்த இரண்டு டிரைவர்கள்.

    இரண்டு ஆட்டோக்கள் படபடத்தபடி பக்கத்தில் வந்து நின்றது. ஆட்டோ டிரைவர் இறங்கி குரல் கொடுத்தான்.

    பத்ரி...

    இட்லியை திணித்த கையோடு திரும்பினான் பத்ரி. இருட்டில் ஆட்டோ டிரைவரை அடையாளம் கண்டு கொண்டு சிரித்தான்.

    அஹ்மது! நீயா... வா... வா... இட்லி துண்ணு...

    அதெல்லாம் வேண்டாம்... ஒரு மேரேஜ் பார்ட்டிக்கு டாக்ஸி வேணும். சவாரி தர்றியா...?

    எங்கே போகணும்...?

    ஆந்திரா பார்டரில் இருக்கிற தடாவுக்கு. நாளைக்கு காலையில் கல்யாணம். மேரேஜ் பார்ட்டி வந்த வேன் திடீர்ன்னு பிரேக் டவுன்.

    எத்தினி பேரு...?

    அஞ்சு பேரு... கல்யாணப் பொண்ணு. பொண்ணோட அப்பா, அம்மா, ரெண்டு ஆம்பளைங்க...

    பத்ரி கையை கழுவிக் கொண்டு ஆட்டோவை நெருங்க உள்ளேயிருந்து கனமான பட்டுப் புடவையோடும், நகைகளோடும் கல்யாணப் பெண் இறங்க பின்னாலேயே அவளுடைய அப்பா, அம்மாவைப் போல் தோற்றமளித்த ஒரு வயதான பெரியவரும் ஒரு அம்மாவும் இறங்கினார்கள். அடுத்த ஆட்டோவிலிருந்து இரண்டு இளைஞர்கள் இறங்கி ஒரு சூட்கேஸை இறக்கிக் கொண்டிருந்தார்கள். கல்யாணப் பெண் அழகாக இருந்தாள். அந்த இருட்டிலும் அவளுடைய கிராமியத்தனமான அழகு பளிச்சென்று தெரிந்தது.

    பத்ரி அந்தப் பெண்ணை ஒரு கெட்ட பார்வைப் பார்த்துக் கொண்டே பெரியவரிடம் கேட்டான். தடாவுக்கு போகணுமா? சார்ஜ் அதிகமாகுமே...?"

    எவ்வளவு...?

    கிலோ மீட்டருக்கு மூணு ரூபாயாகும்.

    வழக்கமா... ரெண்டு ரூபாதானே...?

    அது டே... டையத்துக்கு...! இந்த ராத்திரிநேரத்துல... எந்த டாக்ஸியில் ஏறினாலும்... ஒரு மடங்கு ஜாஸ்தித்தான்...

    இளைஞர்களில் ஒருவன் கத்தினான். அப்பா! எந்த நேரத்துல எதுக்கு பேரம் பேசணும்கிற விவஸ்தையே உங்களுக்கு இல்லை. காலையில ஏழு மணிக்கு தங்கச்சி பாக்யத்தோட கழுத்துல தாலி ஏறியாகணும்... டிரைவர்! நீங்க டாக்ஸியை எடுத்துகிட்டு வாங்க...

    தடாவில் கொண்டு போய் ட்ராப் பண்ணினா போதுமா? இல்லே மறுபடியும் மெட்ராஸ் வரணுமா...?"

    ட்ராப் பண்ணினா போதும்...

    "அப்படின்னா

    Enjoying the preview?
    Page 1 of 1