Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vilaga Vilaga Vibareetham
Vilaga Vilaga Vibareetham
Vilaga Vilaga Vibareetham
Ebook97 pages58 minutes

Vilaga Vilaga Vibareetham

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

பாண்டியனும் குமரேசனும் நண்பர்கள். கீதா என்னும் பெண் பாண்டியனால் கர்ப்பமாகி தற்கொலை செய்துகொள்கிறாள். உண்மையை அறிந்த கீதாவின் அண்ணி மாலினி அவளின் மரணத்திற்கு காரணமான பாண்டியனைத் தேடி அலைகிறாள். கடைசியில் மாலினி பாண்டியனை பார்த்தாளா? பாண்டியனுக்காக குமரேசன் செய்த தியாகம் என்ன? நட்பு உணர்வும் தியாகம் உணர்வும் கொண்ட கதையைப் பார்ப்போம்.

Languageதமிழ்
Release dateAug 9, 2021
ISBN6580100906983
Vilaga Vilaga Vibareetham

Read more from Pattukottai Prabakar

Related to Vilaga Vilaga Vibareetham

Related ebooks

Related categories

Reviews for Vilaga Vilaga Vibareetham

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vilaga Vilaga Vibareetham - Pattukottai Prabakar

    https://www.pustaka.co.in

    விலக விலக விபரீதம்

    Vilaga Vilaga Vibareetham

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    டை கட்டிக் கொண்டான் குமரேஷ்.

    அறைக்கு வெளியே மரத்தின் கிளைகள் சடசடக்க, மழையோ என்று மந்தார மேகங்களை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துக் கொண்டான்.

    கட்டிலில் அமர்ந்து சாக்ஸ் அணிந்தான்.

    டெலிபோன் ஒலிக்க, எடுத்து, ஹலோ என்றான். அப்படியா? நேத்தே இதை நீங்க கேட்டிருக்கலாமே? மூணு தடவை விளக்கமா சொன்னேனே... சரி, பரவாயில்லை. நான் ஆபீசுக்குப் புறப்பட்டுட்டேன். போற வழில கன்ஸ்ட்ரக்ஷன் சைட்டுக்கு வந்துட்டுப் போறேன். ஓக்கே?

    ரிசீவரை வைத்துவிட்டு, ஷூவில் நுழைந்து, பிரீஃப்கேஸைத் திறந்து ஃபைல்கள் சிலவற்றையும், மடக்கப்பட்ட சில புளூ ப்ரிண்ட் காகிதங்களையும் மேஜை மேலிருந்து எடுத்து உள்ளே வைத்து மூடினான்.

    சிகரெட் எடுத்து உதட்டில் வைத்து, பாக்கெட்டுகளில் லைட்டர் தேடினான்.

    இங்கே இருக்கு என்று தூக்கிப் போட்டுப் பிடித்தபடி வந்தாள் அனிதா.

    அதை நீ ஏன் எடுத்தே? கொண்டா.

    நோ! நேத்து எத்தனை சிகரெட் சார்?

    உன் கோட்டாப்படி நாலே நாலுதான் அனிதா.

    எங்கே, உன் சிகரெட் கேஸைக் கொடு, பார்க்கலாம்.

    என்ன நீ, வக்கீல் மாதிரி விசாரிச்சுக்கிட்டு... சொன்னா நம்பணும்.

    நத்திங் டூயிங் பிரதர் என்று அனிதாவே அவன் பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு சிகரெட் கேஸ் எடுத்து திறந்து பார்க்க, அதில் ஒரே ஒரு சிகரெட் இருந்தது. அவன் உதட்டில் வைத்திருந்த சிகரெட்டைப் பிடுங்கி அதில் வைத்தாள். நேத்து பத்து சிகரெட் இருந்திச்சி. இப்ப ரெண்டு தான் இருக்குது. ஸோ, எட்டு பிடிச்சிருக்கே. உனக்கு ரேஷன் செய்யப்பட்டிருக்கிறது நாலு. ஏன் எக்ஸ்ட்ராவா நாலு பிடிச்சே?

    அது... வந்து... நான் நாலுதான் பிடிச்சேன் அனிதா. நம்ம பாண்டியன் இல்லை. அவனுக்கு ஒவ்வொரு தடவையும் நீட்டினேனா, அவன் எடுத்துக்கிட்டானா... அதான் இன்னொரு நாலு குறையுது.

    அனிதா குமரேஷின் காதைப் பிடித்து லேசாகத் திருகி, யார்கிட்டே ரீல் விடறே? டூப் மாஸ்டர், பாண்டியன் சிசர்ஸ் தவிர வேற எந்த சிகரெட்டையும் தொட மாட்டார்ன்னு எனக்கு நல்லாத் தெரியும் என்றாள்.

    அசட்டுச் சிரிப்பு சிரித்த குமரேஷ், ரொம்ப முக்கியமா அதையெல்லாம் தெரிஞ்சி வச்சிக்கிட்டிருக்கியாக்கும். சரி, ஸாரி. போதுமா? லைட்டரைக் கொடு.

    லைட்டர், சிகரெட் கேஸ் இரண்டையும் முதுகுக்குப் பின்னால் வைத்துக் கொண்ட அனிதா, நஹி, நஹி! இன்னைய கோட்டாவை நேத்தே நீ முடிச்சுட்டதாலே இன்னிக்குப் பூரா ஒரு சிகரெட் கூடப் பிடிக்கக் கூடாது. ஓக்கே?

    ஏய்! ஏய்! இது அநியாயம்!

    இல்லை! நியாயமான தண்டனை.

    சரின்னு சொல்லிட்டு ஆபீஸ்போய் வாங்கி பத்த வெச்சா உனக்கு எப்படித் தெரியும் அனிதா?

    மாட்டே. அப்படி நீ செய்யமாட்டே. என் வார்த்தைக்கு மதிப்பு கொடுப்பே. எனக்கு உன்னைத் தெரியும்.

    சிரித்து, செல்லமாக அவள் தலையில் குட்டி, எப்பவும் நீ ஜெயிச்சுடறே அனிதா. ஓக்கே... உனக்காகவே இன்னிக்குப் பூரா நான் சிகரெட் பிடிக்கலை. திருப்தியா? என்றான் குமரேஷ்.

    அன்புக்கோர் அண்ணன்... வாழ்க! அண்ணனுக்கு ஜே!

    ரைட். நான் புறப்படறேன். அந்த கார் சாவியை எடு.

    பீரோவில் இருந்து எடுத்துக் கொடுத்துக் கொண்டே, அம்மா உன்கிட்டே ஏதோ பேசணும்னு சொன்னாங்க. கேட்டுட்டுப் போ! அப்புறம்... இன்னிக்கு ஈவினிங் உன் ஃபிரண்ட் பாண்டியனுக்கு நம்ம வீட்ல சிம்ப்பிளா ஒரு பார்ட்டி ஏற்பாடு செஞ்சிடலாமா? என்றாள்.

    பார்ட்டியா? என்ன கிழிச்சான் அவன் இப்ப பார்ட்டி கொடுக்கறதுக்கு?

    சொல்லலையா அவரு? இன்னிக்கு அவருக்கு பர்த் டே

    அப்படியா? சொல்லலையே அவன்.

    இங்கே யார் இருக்கா அவருக்கு... பாவம்! என்ன, பார்ட்டி ஏற்பாடு பண்ணட்டுமா?

    அயிட்டம்ஸ் நீயே தயாரிக்கப் போறியா?

    ய்ய்யா! என்றாள் தலையை சிலுப்பிக் கொண்டு.

    அப்படின்னா அதுக்குப் பேரு பார்ட்டி இல்லை.

    பின்னே?

    தண்டனை!

    போண்ணா! என்று அனிதா சிணுங்க...

    "ஓக்கே... நீ ரெடி செஞ்சி வையி. நான் கண்டிப்பா

    Enjoying the preview?
    Page 1 of 1