Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Angey! Ingey! Engey?
Angey! Ingey! Engey?
Angey! Ingey! Engey?
Ebook128 pages1 hour

Angey! Ingey! Engey?

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

பிரதீப் வளர்ந்து வரும் லாயர். இவர் ரூபா என்னும் பெண்ணின் புது வரவால் ஈர்க்கப்பட்டார். ரூபா தன் கேமராவை கண்டுபிடிக்கச் சொல்லி பிரதீபிடம் சொல்ல, அதனால் இருவருக்கும் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? கேமிராவை கண்டுபிடித்தார்களா? அதில் என்ன இருக்கிறது? அவர்களோடு சேர்ந்து நாமும் தேடுவோமா? அங்கே! இங்கே! எங்கே? என்று...

Languageதமிழ்
Release dateAug 9, 2021
ISBN6580100906991
Angey! Ingey! Engey?

Read more from Pattukottai Prabakar

Related to Angey! Ingey! Engey?

Related ebooks

Related categories

Reviews for Angey! Ingey! Engey?

Rating: 5 out of 5 stars
5/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    Super ok thanks ??????????? rfgghjuuyrresdgiio reoookmncssesiper Super ok thanks for

Book preview

Angey! Ingey! Engey? - Pattukottai Prabakar

https://www.pustaka.co.in

அங்கே! இங்கே! எங்கே?

Angey! Ingey! Engey?

Author:

பட்டுக்கோட்டை பிரபாகர்

Pattukottai Prabakar

For more books

https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

அத்தியாயம் 14

அத்தியாயம் 15

அத்தியாயம் 16

அத்தியாயம் 17

அத்தியாயம் 18

அத்தியாயம் 19

அகத்தின் அசைவில் அரும்பிய அன்பு (பூ)...!

அன்புள்ள உங்களுக்கு,

வணக்கம்.

அங்கே, இங்கே, எங்கே? எனது முதல் நாவலாகும்.

எந்த ஒரு 'முதல்' விஷயங்களிலும் நிறைய சந்தோஷம் ஏற்படுவதுண்டு. இல்லையா? இந்த நாவல் வெளியான தினம் காலை பேப்பர் கடையில் கட்டு பிரிப்பதற்கு 'அட, சீக்கிரமய்யா' என்று அலுத்துக் கொண்டது நினைவு இருக்கிறது. காம்ப்ளிமெண்ட்ரி காப்பிகளுக்காகக் காத்திருக்கப் பொறுமை இல்லை. வீட்டிற்கு வந்து எல்லோரிடமும் திட்டு வாங்கினேன். அட்டை எப்படிப் போட்டிருக்கான்னுகூட காட்ட மாட்டேங்கறான். இவன் எழுதினதை இவனே உக்காந்து படிக்க ஆரம்பிச்சுட்டான்' என்று

அந்த சுகம் அந்த சுவாரசியம் என்னைப் போன்று என் படகில் பயணம் செய்பவர்களாலும் உணர முடிகிற ஒன்று.

இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிற என் முதல் நாவல் மற்றும் தோழா, தோற்றுப் போ நாவலும் ‘மோனா' மாத இதழில் (அப்போது மாத இதழ்!) வெளி வந்தவை.

என் எழுத்தில், என் வளர்ச்சியில் என்றும் ஆர்வம் காட்டி வரும் ஆசிரியர் திரு.சாவி அவர்களுக்கு நான் பட்டுக்கொண்டிருக்கும் அன்புக் கடன் வளர்ந்துக் கொண்டே போகிறது கூட்டு வட்டியில்.

பிரியங்களுடன்,

பட்டுக்கோட்டை பிரபாகர்.

30, தலையாரித் தெரு,

614 601.

1

பையில் சூடாய் கடலை.

பார்வையில் சூரிய அஸ்த்தமனம்.

நான் நடந்து கொண்டிருந்தேன்.

அலைகள் அடிக்கடி அபாரமாய் எழுந்து அல்பாயுசில் இறந்து கொண்டிருந்தன. என் சட்டையின் காலர், சட்டையை விவாகரத்து செய்துவிட்டு ஓடிப்போகத் துடித்துக் கொண்டிருந்தது.

வெளிச்சம் கற்பூரமாய்க் கரைய கரைய

படகுகளின் இருட்டில் வளையல்கள் இசை அமைக்கத் துவங்கின.

ஸ்... ஸ்... சும்மா இருங்க.

நான்கு சுவர்கள் கிடைக்காத ஜென்மங்கள்!

லைட்ஹவுசை நோக்கி நடந்து கொண்டிருந்தேன்

நான் ஒரு வக்கீல். வக்கீல் என்பதைவிட, லாயர் என்றால் மதிப்பு அதிகம் தெரிகிறதென்றால்... நான் லாயர், கிரிமினல். கொஞ்ச காலம் ஒரு சீனியரிடம் அசிஸ்டெண்ட்டாக இருந்துவிட்டு தனியாக போர்டு போட்டேன். ஒருவனும் கிட்டே வரவில்லை. யோசித்துப் பார்த்து ‘பிரைவேட்டிடெக்டிவ்' என்று சமீபத்தில் போர்டு மாற்றியிருக்கிறேன்.

போலீசுக்குப் போக முடியாத கறுப்புப் பணத் திருட்டு கேஸ் இரண்டு வந்தது. போராடினேன். பலன் நஹி, நஹி! இதுவரை சாதனை செய்வதற்கு ஒரு கேசும் வரவில்லை. காத்திருக்கிறேன்.

ஸார்! திரும்பிப் பார்த்தேன்.

இன்னொரு ஸார்.

நின்றேன். அந்த ஸாரி காற்றில் பறந்து... பறந்து... என்னை நெருங்கி... ஏற்ற இறக்கத்துடன் மூச்சு வாங்கி...

எக்ஸ்க்யூஸ்மி, நீங்கதானே பிரதீப் குமார்?

அவள் குரலில் ஃபைவ் ஸ்டார் கலந்திருந்தது. உள்ளே அணியாமல் என்னைத் துன்புறுத்தினாள். பாதி இருட்டில் வளைவுகள் என்னை பர்னரில்லாமல் சூடாக்கியது.

ஆமாம் என்றேன்.

ஆபீஸ் போயிருந்தேன். பூட்டியிருந்திச்சி. பக்கத்திலே விசாரிச்சேன். பீச்ன்னாங்க. உங்களை உங்களுக்குத் தெரியாம பார்த்திருக்கேன். வந்தேன்... கண்டுபிடிச்சிட்டேன்!

நீங்க தந்தி ஆபீஸ்ல வேலை பார்க்கறிங்களா?

சிரித்தாள்.

என் ஸ்கூட்டரை விற்று அந்தக் காசை அந்தச் சிரிப்புக்குத் தந்திருப்பேன். என்ன செய்வது? என்னிடம் ஸ்கூட்டர் இல்லை.

என்ன விஷயம் மேடம்? நீங்க பேரைச் சொல்லாத வரைக்கும் நான் அப்படித்தான் கூப்பிட வேண்டியதாயிருக்கும்.

ரூபா என்றாள்.

உங்க தங்கை பேரு...

பைசா இல்லை. இப்போ ஒரு முக்கியமான விஷயம்.

வெய்ட். அதுக்கு முன்னாடி சுய அறிமுகத்தை முழுசா முடிங்க. எங்கே இருக்கிங்க நீங்க?

உங்க நுங்கம்பாக்கத்திலேயே, உங்க தெருவிலேயே கடைசியா...

அட! நான் பார்த்ததேயில்லையே உங்களை?

நல்ல பிள்ளை. நான் உங்களை, உங்க போர்டை பார்த்திருக்கேன்.

அப்பா என்ன பண்றார்?

கரன்சி என்றார். எக்கச்சக்கமான அருமையான ஷேர் வச்சிருக்கார். நாலு கார் இருக்கு.

வெரிகுட்... இப்போ என்ன ப்ராப்ளம்?

ஒரு சிக்கல்ல மாட்டிக்கிட்டிருக்கேன்... நீங்க விடுவிக்கணும். இன்னொரு விஷயம். என்னால ஒரு பைசாகூட உடனடியாத் தர முடியாது.

வினோதமான கிளையண்ட்! எப்போதான் கொடுப்பிங்க? நாலு கார்... கரன்சி... ஷேர்ஸ்?

அதெல்லாம் அப்பாவோட தெய்வங்கள். தொட முடியாது... ரொம்ப ஸ்ட்ரிக்ட். நேத்து வாங்கின பத்து ரூபாய்க்கு கணக்கோட இருபத்தி எட்டு பைசா பாக்கியைக் காலைல திருப்பித் தந்தேன். உங்க ஃபீஸை சந்தர்ப்பம் கிடைக்கிறப்போ பின்னால தருவேன்.

என் ஓய்வு காலத்திலையா? பென்ஷன் மாதிரியா?

ஸாரி. உங்களால முடிஞ்சா செய்யுங்க. இல்லாட்டா நான் போறேன். இது பெரிய ஊரு... நிறைய லாயர்கள் இருக்காங்க.

ஆனா எவனும் கடனுக்கு வரமாட்டான். என் ஏரியா, என் தெரு, என்னை நிறைய தடவை பார்த்திருக்கிங்க. அதனால நான் ஃபீஸ் மெதுவா வாங்கிக்கறேன். கமான், சொல்லுங்க. என்ன பிரச்னை?

இரண்டு முழு டிம்மி ஷீட் சொல்லணும். இது சரியான இடமில்லை. வேற தனியான இடமா...'

ஹோட்டல்?

போகலாம். போனோம்.

அவள் ஜாக்கெட்டின் கழுத்தில் கத்தரிக்கோல் வள்ளலாக இயங்கியிருந்ததால், நான் அடிக்கடி எச்சில் விழுங்க வேண்டியிருந்தது.

ஏர்கண்டிஷன்ட் அறையில் ஆறு மேஜைகளில் நாலுகாலி, நாங்கள் எதிரெதிராய் ஸ்பூனால் ஐஸ்கிரீம் கலக்கிக் கொண்டிருந்தோம்.

மேஜைக்கு மட்டும் வட்ட வெளிச்சம்.

சொல்றீங்களா? என்றேன்.

நான் பி. ஏ. முடிச்சிட்டு வீட்ல ஸ்விம்மிங் பூல்ல நீந்திக்கிட்டிருக்கேன்.

அதிலே நான் என்ன செய்யணும்?

ப்ளீஸ் லிசன், பொழுது போகாம ஃபோட்டோகிராஃபி கத்துக்கிட்டிருக்கேன். வீட்லயே டார்க் ரூம் இருக்கு. ரெண்டு நாள் முன்னாடி ஃபிரண்ட்ஸோட மகாபலிபுரம் போயிருந்தேன். ஃபோட்டோ எடுத்தேன். மத்தியானம் கொண்டுபோன ஸ்நாக்ஸை சாப்பிட்டுட்டு கார்க்குப் பக்கத்திலே எல்லாரும் கார்ட்ஸ் விளையாட ஆரம்பிச்சாங்க. எனக்கு ரம்மி விளையாடத் தெரியாது.

நான் வேணா சொல்லித் தர்றேன்.

யு ஆர் நாட் எ குட் லாயர்,'

"தாங்க் யு. வேற குட்

Enjoying the preview?
Page 1 of 1