Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Jarigai Medai
Jarigai Medai
Jarigai Medai
Ebook164 pages1 hour

Jarigai Medai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. At the same time he has penned lot of novels in all other genres like love, social, comedy. He has also worked as screenplay and dialogue writer for more than 25 tamil movies. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan. First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil. Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.
Languageதமிழ்
Release dateJun 17, 2020
ISBN6580100905479
Jarigai Medai

Read more from Pattukottai Prabakar

Related to Jarigai Medai

Related ebooks

Related categories

Reviews for Jarigai Medai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Jarigai Medai - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    ஜரிகை மேடை

    Jarigai Medai

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    செல்லச் சிணுங்கல் செய்த அழகான மழையை மின்னல் எட்டிப் பார்த்துவிட்டுப் போக... கைதட்டிப் பரிகாசம் செய்தது இடி. சாலையின் கறுப்பு மறைத்து போர்த்திய கம்பளமாக பழுப்பு நீர் மழைத்துளிகளின் வட்டச் சிதறல்களுடன் ஓடியது. தேங்கித் தயங்கி நிற்க இடம் தேடியது தெர்மாக்கோல் அட்டை ஒன்று. மின்சாரம் விடுப்பு எடுக்க யோசித்தது.

    நெட்வொர்க் வலிமையாக இல்லாத சமயம் நிகழும் டவுன் லோடிங் நீலக்கோடு போல வாகனங்கள் மில்லி மில்லி மீட்டராக நகர - தன் ஆத்திரத்தை ஹாரனில் காட்டினான் முகில்.

    அரை மணி நேரத்துக்கு முன்னாடியே புறப்படலாம்னு சொன்னேன்.

    முன் கார்க்காரன் எரிச்சலாகித் திரும்பி,அறிவிருக்காடா உனக்கு? முன்னால் வண்டி நிக்குதுல்ல... கிளியரானா போக மாட்டனா? எதுக்கு லூசு மாதிரி ஹார்ன் அடிக்கிறே? என்கிற கேள்வியை உள்ளடக்கிய சைகையை கைகளால் செய்ய முயற்சித்தான்.

    பதில் சொல்லாமல் தன் மொபைலில் கவனம் வைத்திருந்த காமினி மிர்ஸாவை எரிச்சலுடன் திரும்பிப் பார்த்தான் முகில்.

    உங்கிட்டதான் பேசிட்டிருக்கேன். நீ மூஞ்சி தெரியாத எவனோ ஒருத்தனுக்கு லைக் போட்டுக்கிட்டிருந்தா என்ன அர்த்தம்?

    சண்டை போடற மூடுல நான் இல்ல முகில்... ப்ளீஸ்...

    இது அடக்கம் இல்ல! அடங்காப்பிடாரித்தனம்! சைலண்ட் கில்லிங்!

    என்ன செய்யணும்ங்றே? மேகத்துக்கு மெசேஜ் அனுப்பி நான் தான் மழைக்கு ஏற்பாடு செஞ்சனா?

    ஆனா... அவ்வளவு பவர் இருக்கறதா நினைப்பு!

    மொபைலை அணைத்து காரின் பின்சீட்டில் வீசினாள். கையைக் கட்டிக்கொண்டாள். அவன் பக்கம் திரும்பினாள். வழுக்கிய ஸாரியை சில விநாடிகள் தாமதித்து சரிசெய்து கொண்டாள்.

    போதும் காமினி. நீ மயக்கினதும், நான் மயங்குனதும் போதும்.

    போதும்னா... மழையோட லாயர் ஆபீசுக்குப் போலாம்! மிட் நைட்ல அவரசமா ஃபாஸ்ட் ட்ராக்ல டிவோர்ஸ் வாங்க முடியுமான்னு கேளு.

    உடனே ஏன் எக்ஸ்ட்ரீம் எண்ட்டுக்குப் போறே? கொஞ்ச நஞ்சம் இருக்கற நம்பிக்கையையும் பலவீனப்படுத்தறே காமினி.

    இப்ப போதும்னு சொன்னது நானா இல்ல நீயா முகில்? உன் கோபம் மழை மேல இல்ல! டிராஃபிக் மேலயும் இல்ல! போகலாம்னு சொன்னப்ப நான் உடனே புறப்படாததும் இல்ல!

    அதான்! வேற என்ன?

    எனக்குத் தெரியும். நான் சொல்ல விரும்பலை.

    ஸோ... சண்டை போடற மூடுக்கு இப்ப நீ வந்துட்டே!

    இன்னும் இல்லை. விளிம்புல தான் நிக்கிறேன். உள்ளே இன்வைட் பண்ணாதேன்னு சொல்றேன்.

    முகிலுக்கு பச்சையாக ஒரு கேள்வி கேட்க வேண்டும். வெளிர் பச்சையாகக் கூட கேட்கத் தயக்கம். என்ன கேட்பது? எப்படிக் கேட்பது? கேட்டாலும் நேர்மையான, உண்மையான பதில் வராது. இடக்கான சாமர்த்தியமான பதில் வரும். அல்லது குதர்க்கமான எதிர்க்கேள்வி வரும்!

    முகில் சிகரெட் எடுத்தான்.

    கண்ணாடியை இறக்கிவிட்டுட்டு பத்த வை.

    தெரியும். எல்.கே.ஜி. பையன் இல்ல. பாடம் நடத்தாதே டீச்சர்!

    ஜன்னலின் கண்ணாடியை இரண்டு இன்ச் இறக்க... காத்திருந்த திருப்பதி பக்தர்கள் போல திமுதிமுவென்று மழைச்சாரல் உள்ளே பாய்ந்து நனைக்க, மீண்டும் மூடினான்.

    சிகரெட்டை உதட்டில் வைக்க... அவள் பிடுங்கினாள்.

    மூடின காருக்குள்ள சிகரெட் பிடிக்கக் கூடாதுன்னு எல்.கே.ஜி. பையனுக்குக் கூடத் தெரியும்!

    ஐ நீட் இட் நவ்! குடு!

    முட்டாளா நீ? டேஞ்சர்.

    ஒரு நாள் சாகத்தானே போறேன்?

    காருக்கு டேஞ்சர்னு சொன்னேன்! நானும் எதுக்கு சாகணும்?

    ரொம்பப் பேசறே காமினி.

    ரொம்பப் பேச வைக்கிற முகில்.

    இடியட்ஸ்! எவனாச்சும் இறங்கி டிராஃபிக் கிளியர் பண்றதுக்கு ஹெல்ப் பண்றானா பாரு?"

    இதே மாதிரி இன்னொருத்தன் உன்னைத் திட்டிக்கிட்டிருப்பான்!

    முகில் சட்டென்று கதவைத் திறந்து இறங்கி உடனடியாக நனைந்து, எந்த வண்டியை எப்படி நகர்த்தினால் கிளியராகும் என்று பார்த்து தற்காலிக டிராஃபிக் கான்ஸ்டபிளாக மாறத் துவங்கினான்.

    காமினி பின் சீட்டிலிருந்து மொபைல் எடுத்து ட்விட்டருக்குச் சென்றாள்.

    ‘இன்று மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் 25வது படத்தின் பாடல் வெளியீட்டு விழா! மழையிலும் அவ்வளவு கூட்டம்! பாராட்டு மழை வேறு! ஜில் என்று இருக்கிறது மனசு. நடுவில் சொத்தைக் கடலை போல் டிராஃபிக்கில் மாட்டி உச்ச டென்ஷன்! போதாததற்கு... சண்டை! யாருடன், என்ன சண்டை என்று வேண்டாமே... இந்த விநாடி அழத் தோன்றுகிறது’- டைப் செய்து போஸ்ட் செய்தாள் காமினி.

    காமினியை உங்களுக்கு மிகத் தெரியும். குத்து மதிப்பாக எந்த சேனலுக்குப் போனாலும் மிகையாக மேக்கப்பும், கால் மேல் காலும் போட்டுக்கொண்டு முன்புறம் விழும் (விழ வைக்கும்) கூந்தல் கற்றையை ஒதுக்கியபடி பேட்டி கொடுத்துக் கொண்டிருப்பாள். பிறந்த நாளன்று மட்டும் முதியோர் இல்லத்திற்குப் போய் ஆப்பிள் கொடுத்துவிட்டு‘ஒரு நாள் வறுமை இல்லாத நாட்டை நாம் பார்க்கத்தான் போகிறோம்’என்று அசட்டுத்தனமாகப் பேசிவிட்டுப் போவதை மெனக்கெட்டு செய்தி போடுகிறார்கள். மஞ்சள் வெளிச்சத்தில் நீந்திக் கொண்டிருக்கிறாளே...

    சமீபத்து இன்கம் டாக்ஸ் ரெய்டில் அள்ளிச் சென்றதையும் மீறி பணம் கொட்டிக் கிடக்கிறது... பல ரூபங்களில், கொஞ்சம் நிலம், கொஞ்சம் தங்கம், கொஞ்சம் பங்குகள், கொஞ்சம் காற்றாலை. ஆனால் நிம்மதி... நிலவின் தேய்பிறையாக. அதுவும் சமீப காலமாக அதுவும் முகிலைத் திருமணம் செய்த பிறகு.

    முதலிரண்டு வருடங்கள் டார்லிங், கண்ணம்மா, செல்லம், புஜ்ஜி, ஸ்வீட்டி, டியர், டால்... என்று ஓவர் கொஞ்சல்களுடன்தான் காதல் படகு ஓடிக்கொண்டிருந்தது.

    எப்படா குழந்தை பெத்துக்கலாம் காமினி குட்டிம்மா?அந்தக் கேள்வில்தான் எல்லாப் பிரச்னைகளும் துவக்கம்.

    இப்ப என்ன அவரசம் டியர்?

    ரெண்டு வருஷம் ஆச்சி கண்ணம்மா.

    ரெண்டு வருஷம்தான் ஆச்சிப்பா.

    இல்லடா ஸ்வீட்டி... டாக்டர்ஸ் என்ன சொல்றாங்கன்னா...

    அவங்க கிடக்கறாங்க.

    லேட்டா பெத்துக்கிட்டா கஷ்டம்டா...

    முகில்... கரியர் இன்னும் இருக்குப்பா...

    இருபத்தஞ்சி படம் ஆச்சுடா.

    ஒரு இந்தி, ஒரு ஹாலிவுட், ஒரு அவார்ட் இந்தக் கனவெல்லாம் மிச்சம் இருக்கு. இப்பப் போயி குழந்தை பெத்துக்கிட்டா டி.வி. சீரியலுக்குக் கூப்ட்டுருவாங்க.

    நீ ஷூட்டிங் போயிடறே! எனக்கு போரடிக்குது.

    நீயும்தானே ஆஃபீஸ் போறே, மை டியர் லீடிங் ஆடிட்டர்?

    ஆறு மணிக்கு ஆஃபீஸ் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்தா நீ இருக்கமாட்டே. வீடு வெறுமையா இருக்கு. எதுக்கு வீட்டுக்கு வர்றோம்னு அர்த்தம் தெரியல.

    ஏன் ஆறு மணிக்கு வர்றே? ஸ்விம்மிங் போ! டென்னிஸ் ஆடு! சோஷியல் கிளப்ஸ் நூறு இருக்கு. ஃபிரெண்ட்ஸ் உனக்குக் கம்மி. அதான் உன் பிரச்சினை.

    தண்ணி அடிக்கக் கூப்புடறான். போகட்டுமா? தேவடியா வீட்டுக்குக் கூப்புடறான். போகட்டுமா?

    என்ன முகில் இது?

    பின்னே? எவ்வளவு நாள்தான் என் பொண்டாட்டி மாரை வேற ஒருத்தன் ரசிக்கிறதை பல்லைக் கடிச்சிக்கிட்டு சகிச்சிக்கிறது? ஒவ்வொரு பல்லா உடைஞ்சிட்டிருக்கு.

    டூ மச் முகில்! நாம லவ் பண்ண ஆரம்பிச்சப்பவும் நான் நடிகைதான். மைண்ட் இட்.

    என் கஷ்டம் என் ஷூவுல நின்னு பாத்தாத்தான் புரியும்! என் சந்தோஷமும், துக்கமும் உனக்கு முக்கியம் இல்லையா?

    முக்கியம். அது நியாயமானதா இருந்தா. அதுக்காக உன் ஆணாதிக்கத்தை அனுமதிக்க முடியாது! உன் பிரச்சினை இதுதான். உன் பொண்டாட்டி உன்னைவிட பாப்புலரா இருக்கா. உன்னைவிட அதிகம் சம்பாதிக்கிறா. அது காதல்ல இருந்தப்ப தெரியலை. காதல் குறைஞ்சதும் தெரியுது. உறுத்துது. தி ஹோல் ப்ராப்ளம் ஈஸ் யுவர் ஈகோ மேன்!

    நான் குழந்தையைப்பத்தி தான் பேசினேன்.

    என்னை முடக்கிப் போட ஒரு தந்திரம் அது! என் கண்ணைப் பாத்து பதில் சொல்லு. குழந்தைதான் உண்மையான காரணமா?

    யெஸ்! யெஸ்! யெஸ்!

    சரி, வா அனாதை இல்லம் போகலாம். ஆயிரம் குழந்தைங்க இருக்கு! ஒண்ணு இல்ல... ரெண்டு குழந்தை அடாப்ட் பண்ணி வளர்க்கலாம். நான் ரெடி, நீ ரெடியா?

    நோ! எனக்கு என் குழந்தை வேணும்.

    பார்த்தியா? இதான் ஆணாதிக்கம்! உன் குழந்தைன்னு ஒண்ணு சாத்தியமே இல்ல. நம்ம குழந்தைன்னு வாயில வருதா? இதான் ஆம்பளைத் திமிரு!

    "பேசி ஜெயிக்கிற

    Enjoying the preview?
    Page 1 of 1