Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bharath, Bharath, Bharath
Bharath, Bharath, Bharath
Bharath, Bharath, Bharath
Ebook87 pages1 hour

Bharath, Bharath, Bharath

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

கதிர்வேல் என்பவன் திறமைசாலி. இவன் ஷேர் மார்கெட்டில் அதிக ஈடுபாடு கொண்டவன் மற்றும் டைனமிக் பர்சன். இவன் பணம் சம்பாதிக்கும் ஆசையில் அக்பர் என்ற பழம் பொருள் குதிரையைக் கடத்த திட்டம் போடுகிறான். கதிர்வேல் குதிரையைக் கடத்தினானா? அக்பர் குதிரையின் ரகசியம் என்ன? வாசித்து அறிவோம்…

Languageதமிழ்
Release dateAug 27, 2022
ISBN6580100908093
Bharath, Bharath, Bharath

Read more from Pattukottai Prabakar

Related to Bharath, Bharath, Bharath

Related ebooks

Reviews for Bharath, Bharath, Bharath

Rating: 5 out of 5 stars
5/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    G o o o d s t o r y

Book preview

Bharath, Bharath, Bharath - Pattukottai Prabakar

http://www.pustaka.co.in

பரத், பரத், பரத்

Bharath, Bharath, Bharath

Author :

பட்டுக்கோட்டை பிரபாகர்

Pattukottai Prabakar

For more books

https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

1

சக்கர வண்டி நிலக்கடலை ஆசாமி போல சூரியன் மக்களை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தான். செருப்பில்லாத மனிதர்கள் நிழல் பார்த்து பதுங்கி நடந்தார்கள்.

சாலைகளில் தூரத்தில் பொய்த் தண்ணீர். அந்நியநாட்டு குளிர்பானங்கள் சக்கைபோடு போட்டன. ஆருயிர்க் காதலிகள் ‘ஒரு பாட்டில் இரண்டு ஸ்ட்ரா பிஸ்னெஸ் எல்லாம் வேண்டாம்; தனியாக எனக்கொன்று வேண்டும்’ என்றார்கள்.

நடந்து முடிந்த தேர்தலின் கொஞ்சமான அடையாளங்கள் அங்கங்கே அறுந்த தோரணங்களில், கட்சிக்காரர்களின் விட்டுச் சுவர்களில், தார்ச்சாலை மாக்கோலங்களில் இருந்தன.

செய்தித்தாள்களில் வழக்கம்போல கத்திக் குத்திக்கொண்டவர்களை அம்புக்குறி போட்டுக் காட்டியிருந்தார்கள். கியாரண்டியாக ஒரு கள்ளக்காதலிக்கு அல்லது காதலனுக்கு அரிவாள் வெட்டு. ஒரு ஏழுபக்கத்திற்கு லாட்டரி முடிவுகள்.

தேவராஜ் மெமோரியல் ஹால் வாசலில் சின்ன கார்களை பெரிய கார்கள் அடைகாத்துக் கொண்டிருந்தன.

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கிரே கலர் ஸஃபாரி சூட்டில் மரிக்கொழுந்து சென்ட் மணக்க அந்த எக்ஸிபிஷனை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தபோது சத்தம் வராமல் மென்மையாக கைதட்டினார்கள்.

வெல்கம் சார் என்றாள் சரோஜினி யாதவ்.

பார்த்ததும் திருவாரூர் தேரை நினைவூட்டின சரோஜினிக்கு எம்.ஆர்.எஃப், டன்லப் என்று எல்லா டயர்களும் இருந்தாலும் பயமுறுத்துவதற்காகவே லோ ஹிப்பில் காஞ்சி காட்டன் சேலை கட்டியிருந்தாள். பாப் செய்த தலை. கரேர் என்று டை அடித்திருந்தாள். தங்க ஃபிரேம் கண்ணாடியில் தங்கச் சங்கிலி கோர்த்து கழுத்துக்குச் சென்றது. அரை இஞ்ச் மேக்கப், செர்ரி சிகப்பில் டார்க் லிப்ஸ்டிக், கழுத்தில், காதில், கைகளில் கன் மெட்டல் ஆபரணங்கள். கொலுவில் ஒரு வித்தியாசமான பொம்மை மாதிரி இருந்தாள்.

சரோஜினிக்கு ஊர் டெல்லிப் பட்டணம். கணவர் யாதவ் ஏழு நிறுவனங்களுக்கு மேனேஜிங் டைரக்டர். வாரத்தில் ஒரு ஐந்து நிமிடம் "ஹலோ, சரோ, ஹவ் ஆர் யு டார்லிங்? மணிலாலேர்ந்து பேசறேன். நாளைக்கு டோக்யோலேர்ந்து பேசறேன். பை! என்பவர். சரோஜினியோ டெல்லியில் உயர்தட்டு மாந்தர்களுக்கான ஒரு கிளப்விட்டு வைக்காமல் உறுப்பினி.

ஒரேப் பெண் நியுயார்க்கில் சரோஜினி அடிக்கடி பெயர் மறந்துபோகும் ஏதோ ஒரு கோர்ஸ் படித்துக்கொண்டிருந்தாள்.

நேரத்தையும், பணத்தையும் வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று புரியாமல் தத்தளித்தபோது பத்து வருடம் முன்பாக ‘படிப்பவர்களின் ஜீரணத்திற்கு’... என்கிற ஆங்கில இதழில் ஒரு ஜெர்மன் லேடி பற்றி கட்டுரை படித்தாள் சரோஜினி.

அந்த லேடி மகா கோடீஸ்வரியாம். உலகத்தில் உள்ள பல மதிப்பு வாய்ந்த பழம் பொருள்களை சேகரித்து வைத்திருக்கிறாளாம். அவளின் சேகரிப்புகளில் மொத்த இந்திய மதிப்பு எழுநூற்று எழுபது கோடியாம்.

சரோஜினிக்கு தீக்குச்சி உரசின மாதிரி பற்றிக்கொண்டது ஒரு யோசனை. இந்த ஜெர்மன் மாது போல் நாமும் ஏன் ஒரு சிறந்த ஆன்டிக்வேரியனாக... அதாவது பழம்பொருள் சேகரிப்பாளராக மாறக்கூடாது என்கிற அந்த எண்ணத்தை செயல்படுத்த ஆரம்பித்தாள்.

ஜெர்மனிக்குப் போய் அந்த மாதுவை சந்தித்தாள். அவளுடைய சேகரிப்புகளைப் பார்த்து பிரமித்தாள். அவளிடம் ஆலோசனைகள் கேட்டாள். அது தொடர்பான புத்தகங்கள் படித்தாள். பலநாட்டு மியூசியங்கள், தனியார் நடத்தின கண்காட்சிகள் போனாள். கோடி கோடியாய்ப் பணத்தைக் கொட்டினாள்.

இன்றைக்கு சரோஜினியாதவ் இந்தியாவில் உள்ள பழம்பொருள் சேகரிப்பாளர்களில் முக்கியமானவர். உலகளவில் பலர் பொறாமைப்பட்டுக் கொள்ளும் அளவிற்கு பல அபூர்வமான பொருள்களை தன் சேகரிப்பில் வைத்திருக்கிறாள்.

இதற்கெனவே டெல்லியில் தனியாக வீடு வாங்கி அந்தப் பொருள்களை வைத்து, அவற்றை பராமரிக்க பணியாளர்கள், சூபர்வைசர், மேனேஜர் என்ற தனது பொழுதுபோக்கையே ஒரு அலுவலகப் பணியாக நடத்தி வருகிறாள்.

ஒரு வருடமாகத்தான் சரோஜினிக்கு தன் சேகரிப்புகளை பொதுமக்களுக்கு பார்வைக்கு வைக்க வேண்டும் என்ற ஆசை வந்தது... டெல்லியில் மிகப் பிரமாதமாக பத்து நாட்கள் கண்காட்சி நடத்தினாள். ஏற்கனவே பிரபலமான பெண்மணி என்பதால் ஒரு பத்திரிகை

Enjoying the preview?
Page 1 of 1