Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

India Thozhan
India Thozhan
India Thozhan
Ebook103 pages1 hour

India Thozhan

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

கோபால்தாஸ் என்பவர் ஒரு அரசு ஊழியர். இவர் வெளியுலகில் தான் ஒரு நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர் என்று காட்டிக்கொள்பவர். இவர் ஒரு தவறான தொழிலை செய்து வருகிறார். தன் குடும்பத்திற்கே தெரியாமல் இவர் செய்யும் திருட்டு வேலையை ஒரு சி.ஐ.டி. குழு கண்டுபிடிப்பதற்கான பணியில் இறங்குகிறது. அந்த சி.ஐ.டி. குழு கோபால்தாஸின் திருட்டு வேலையை கண்டுபித்தனரா? இல்லையா? வாசிக்கலாமா…

Languageதமிழ்
Release dateJul 17, 2021
ISBN6580100906990
India Thozhan

Read more from Pattukottai Prabakar

Related to India Thozhan

Related ebooks

Related categories

Reviews for India Thozhan

Rating: 5 out of 5 stars
5/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    V e r y g o o d s t

Book preview

India Thozhan - Pattukottai Prabakar

https://www.pustaka.co.in

இந்தியத் தோழன்

India Thozhan

Author:

பட்டுக்கோட்டை பிரபாகர்

Pattukottai Prabakar

For more books

https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

1

கொள்கை அளவில் மத சார்பற்ற, ஆனால் மதக்கலவரங்கள் வெடிக்கின்ற, அமைதி விரும்புகின்ற, ஆனால், காந்தி, இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி என்று தேசத் தலைவர்களை ஜீரணம் செய்த பினபும் வன்முறை அரக்கனுக்கு பசியடங்காமல் தலைவிரித்தாடுகின்ற, உலகம் முழுவதற்கும் கணிதத்திற்கு அடிப்படையான ஜீரோவை கண்டுபிடித்த, ஆனால் கணக்கு வழக்கில்லாமல் ஊழல்கள் நடக்கின்ற, ஜாதி பேதம் பார்க்காத, ஆனால் ஜாதியை வைத்து அரசியல் பண்ணுகிற, நாடெங்கும் ஆயிரம் நதிகளும் தேவையான மழையும் கொண்ட, ஆனால் அந்தத் தண்ணீரை பயன்படுத்திக் கொள்ள துப்பில்லாமல் வறட்சி நிவாரணம் வசூலிக்கிற, பொருளாதார ரீதியாக முன்னேறுகிற, ஆனால் ஒரு நாட்டையும் விட்டு வைக்காமல் கடன் வாங்குகிற, ஆயிரக்கணக்கான சிறந்த அறிவாளிகள் நிறைந்த, ஆனால் அத்தனை பேரும் வாய் மூடி மௌனிகளாக சுய முன்னேற்றத்தில் கவனம் செலுத்துகிற, பத்திரிகை சுதந்திரம் முழு அளவில் உள்ள, ஆனால் பயந்து கொண்டே தலையங்கம் எழுதுகிற, பிரமாதமான விளையாட்டுத் திறமை கொண்ட வீரர்கள் நிறைந்த, ஆனால் அவர்கள் எல்லாம் தேசிய டீமின் தேர்வுக் குழுக்களால் நிராகரிக்கப்படுகிற, சிந்திக்கத் தெரிந்த நல்ல ஜனங்களை ஏராளமாகக் கொண்ட, ஆனால் தனி மனித துதி பாடி சுய சிந்தனையை தொலைக்கிற அதைவிட ஏராளமான ஜனங்களைக் கொண்ட, மிகச் சிறந்த மருத்துவ நிபுணர்களும், கட்டிடக் கலைஞர்களும், தொழில்நுட்ப வல்லுனர்களும் பிறந்த, பிறக்கிற, ஆனால் அவர்களில் பாதி பேர் வெளிநாடுகளில் செட்டில் ஆகிவிடுகிற, ஏராளமான சுற்றுலா தளங்களைக் கொண்ட, ஆனால் சுற்றுலா பயணிகளை சுலபமாக போற்றுகிற கும்பல்களையும் கொண்ட நம் தேசம் என்கிற ஒற்றுமை உணர்வு மிகுந்த, ஆனால் அங்கங்கே தனி மாநிலப் பிரிவினை கோரிக்கைகளுடன் போராடுகிற…

இந்தியாவின் தலைநகரான புதுடெல்லி. மாலை ஆறு முப்பதுக்கு முற்றிலும் இருட்டிப் போய் சாலைகளில் வாகனங்கள் உருட்டி விட்ட நெல்லிக்காய் மூட்டை போல எல்லா திசைகளிலும் தீயணைக்கும் அவசரத்துடன் விரைந்து கொண்டிருந்தன.

அலங்கார கடைகளில் அவசியத்திற்கு வாங்குபவர்கள் சீக்கிரம் என்று அவசரப்பட்டார்கள். ஆடம்பரத்திற்கு வாங்குபவர்கள் நின்று நிதானமாக நிறம், டிசைன் என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த அடுக்கு மாடி கட்டிடத்தில் ஏழாவது மாடி ஃபிளாட் நம்பர் 73-ல் வசிக்கின்ற கோபால், தாஸ் உங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டிய நபர்.

கோபால்தாஸ் தற்சமயம் அலுவலகத்தில் இருந்து திரும்பி தனது பஜாஜ் ஸ்கூட்டரை அண்டர்கிரவுண்ட் பார்க்கிங் பகுதியில் நிறுத்திப் பூட்டி, பெட்ரோல் டியூபை மூடிவிட்டு காலையில் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்ற லன்ச் பேகையும், ஒரு சிறிய லெதர் பேகையும், சின்னப் பையனுக்கு வாங்கிய பெயிண்ட்டிங் வாட்டர் கலர் பாக்ஸையும் எடுத்துக் கொண்டு லிஃப்டில் மேலே வந்து, கதவு திறந்த மனைவி பார்கவிக்கு களைப்புப் புன்னகை சிந்திவிட்டு, பெரிய மகள் கல்லூரியில் இருந்து வந்துவிட்டாளா என்று விசாரித்துவிட்டு, மூன்று சக்கரம் ஓட்டிய கடைசி மகனை வழி மறித்து வாட்டர் கலர் பாக்ஸ் கொடுத்து கன்னத்தில் முத்தம் வாங்கிக் கொண்டு, ஒன்பதாவது படிக்கிற இரண்டாவது மகள் தன் ஃபிரண்ட் வீடு வரை சென்றுவர கேட்ட தன் ஸ்கூட்டர் சாவியைக் கொடுத்துவிட்டு, அதில் காற்று கம்மியாக இருக்கிறது என்று எச்சரித்துவிட்டு...

தன் அறைக்கு வந்து ஷூ, டை, சட்டை, பேண்ட் கழற்றி ஜட்டியோடு பாத்ரூம் சென்று குளித்துவிட்டு 'பார்கவி துண்டு!' என்று கத்தித் துடைத்துக் கொண்டு நான்கு முழ வேட்டியும், கை இல்லாத பனியனும் அணிந்து லிவிங் ஹாலில் அமர்ந்து, பார்கவி கொடுத்த ஸாண்ட்விச்சைக் கடித்தபடி டெலிவிஷன் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

கோபால் தாஸுக்கு சொந்த மாநிலம், வள்ளுவனை உலகினுக்கேத் தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு, சொந்த ஊர் மன்னை என்று சுருக்கெழுத்தில் அழைக்கப்படுகிற மன்னார்குடி,

கும்பகோணம் கலைக் கல்லூரியில் இவர் படித்த டிகிரி ஹிஸ்டரிக்கு வீடு தேடி வந்து ஜில்லா கலெக்டர் உத்தியோகம் தர வேண்டுமென்று இவர் அப்பாவின் அநியாயமான எதிர்பார்ப்பு காரணமாக (அப்பாவின் தோற்றம்: 1931 - மறைவு: 1989) உதவாக்கரை, வேலை இல்லாத தீவட்டி, வெட்டி ஆபீசர், கால் காசுக்கு பிரயோஜனம் உண்டா, எதுக்குத்தான் நீ லாயக்கு, கொஞ்சமாவது சொரணை இருக்கா, உன்னைப் பெத்ததுக்கு ஒரு மாங்கொட்டையை பெத்திருந்தாலாவது மரம் வளர்க்கலாம்- போன்ற சொற்றொடர்கள் தாங்காமல் வீட்டில் கிடைத்ததைத் திருடிக் கொண்டு சின்ன இரயிலில் சென்னை வந்து சுற்றியலைந்து, டெல்லி போனால் நிச்சயம் பெரிய ஆளாய் வரலாம் என்று சகலரும் சொல்ல, பெரிய இரயிலில் டெல்லி வந்து...

கொஞ்ச நாள் ஊதுபத்தி விற்று, கொஞ்ச நாள் புக் பைண்டிங் செய்து, கொஞ்ச நாள் பூச்சி மருந்து குடோனில் கிளார்க்காக இருந்து... கிடைக்கிற நேரத்தில் டைப்ரைட்டிங், ஷார்ட் ஹேண்ட், கம்ப்யூட்டர் கோர்ஸ் கற்று... ஹிந்தி கற்று... டிரைவிங் கற்று...

மத்திய சர்க்காரின் பாதுகாப்புத் துறையின் கம்யூனிகேஷன் பிரிவில்

Enjoying the preview?
Page 1 of 1