Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

April Raathiri
April Raathiri
April Raathiri
Ebook100 pages1 hour

April Raathiri

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateFeb 26, 2020
ISBN6580100905040
April Raathiri

Read more from Pattukottai Prabakar

Related to April Raathiri

Related ebooks

Related categories

Reviews for April Raathiri

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    April Raathiri - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    ஏப்ரல் ராத்திரி

    April Raathiri

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    ராவ், இது நல்லதில்லை. கொஞ்சம் குறைச்சுக்கணும் நீ

    குறை நிலா மேகத்தை சல்லாத் துணியாகப் போர்த்தியிருந்தது. நட்சத்திரங்கள் முறை வைத்து மின்னிக் கொண்டிருந்தன. சென்னை துறை முகத்தில் நங்கூரம் பாய்ச்சியிருந்த கப்பல்களின் வெளிச்சங்கள், கடலில் 'வைரங்கள் கொட்டப்பட்டதைப் போல' என்று உவமானம் யோசிக்க வைத்தன.

    சரம் சரமாக விளக்குகள் போட்டு, மண்டை, மண்டையாக மைக்குகள் கட்டி சுற்று வட்டாரக் குடியிருப்புகளில் யாரையும் தூங்க விடாமல், 'எதிர்க்கட்சி நண்பர்களுக்கு' மைக்கில் தேர்தல் சவால்கள் விட்டுக் கொண்டிருந்தார்கள்.

    போன் ஒலித்த போது ராவ் சங்கடப் பட்டான். அலட்சியப்படுத்தினான்.

    போன் அடிக்குது சார் என்றாள்.

    தெரியுது தன் முன் வழுக்கையில் பூத்திருந்த வியர்வையை புடவை முனையால் துடைக்க வந்த அவளைத் தடுத்து, கை நீட்டி ரிசீவரை எடுத்தான். இன்னொரு கையை அவள் கழுத்துக் கடியில் கொடுத்து அருகில் இழுத்துக் கொண்டான். ராவ் என்றான்.

    கிரண் பேசறேன்.

    என்னடா?

    சலிப்பா வருதே குரல்? தூக்கக் கலக்கமா?

    இல்லை என்ற ராவ் அவளின் வளையல் அணிந்த ஒரு கையை டெலிபோன் அருகில் அசைத்து வளையலை சப்தப்படுத்தி விட்டு புரியுதா?

    இன்ட்டெர்வெலா, க்ளைமாக்ஸா ராவ்?

    இப்பத்தான் டைட்டில்ஸ். முழுசா சேலையோட இருக்கா.

    வரணுமே நீ

    எங்கே?

    என் வீட்டுக்கு. அலெக்ஸ் வந்துட்டான்.

    மணி என்ன ஆகுது?

    பதினொண்ணே கால் என்று அவள் சொன்னாள், தன் வாட்ச்சைப் பார்த்து.

    கிரண்! நீயும், அலெக்சும் ஒரு கேம் செஸ் விளையாடுங்க. அதுக்குள்ளே நான் வந்துடுவேன். ஐநூறு ரூபா வேஸ்ட் ஆகக் கூடாது பாரு.

    ராவ் இது நல்லதில்லை. கொஞ்சம் குறைச்சுக்கணும் நீ.

    அடுத்த வெள்ளிக்கிழமையிலேர்ந்து குறைச்சிடறேன். அட்வைஸ் பண்ற நேரமா இது? சீக்கிரம் நீ போனை வைச்சாதான் நான் சீக்கிரம் அங்கே வர முடியும்.

    கிரண் எதிர் முனையில் சிரித்து விட்டு வைத்ததும், ராவ் ரிசீவரை வைத்து விட்டுத் திரும்ப... போர்வைக்குள் அவள். இப்போது போர்வை மட்டும் ஆடையாக இருந்து, கண்ணடித்து, அவசரமா எங்கயோ போகணும்னு நினைக்கிறேன் என்றாள்.

    எனக்குப் பொண்டாட்டி இருந்தாக் கூட இப்படிப் புரிஞ்சி நடந்துப்பாளான்னு தெரியலை என்ற ராவ் தன் சட்டையின் பட்டன்களைக் கழற்றத் தொடங்கினான்.

    ***

    ராஜா அண்ணாமலைபுரத்தில் ராவின் கறுப்பு அம்பாஸிடர் அந்த சந்தில் திரும்பிய போது, ஒரு கையில் டீ கிளாசுடன் சுவரில் 'உங்கள் ஓட்டு' என்று எழுதிக் கொண்டிருந்தவன் முகத்தில் வெளிச்சம் பட்டு, அவன் கண் கூசி திரும்பிப் பார்க்க... கார் அவனைக் கடந்து சென்றதும், மீண்டும் எழுதத் துவங்கினான்.

    ராவ் காரை நிறுத்தினான்.

    பொன்மணி பிரிண்டர்ஸ் என்று ஆங்கிலத்திலும், தமிழிலும் நீள சைஸ் போர்டு இருந்தது. இரட்டை ஸ்பிரிங் கேட்டுகள் சும்மா இழுத்து விடப்பட்டு காக்கிச் சட்டையணிந்த வாட்ச்மேன் உள்புறம் நாற்காலியில் உட்கார்ந்திருந்த நிலையில் பாதித் தூக்கத்தில் இருந்தான். வெளியே நான்கைந்து சைக்கிள்கள் நிற்க... உள்ளே ஒரு அச்சு இயந்திரம், தாள சுதியோடு இயங்கிக் கொண்டிருக்க...

    என்ன? என்றான் வாட்ச்மேன் இவனை.

    மேல் வீட்டுக்குப் போகணும். கிரண் ஃப்ரெண்டு நான்.

    போங்க ஸ்பிரிங் கதவைத் தள்ளி விலக்கி வழி செய்த வாட்ச்மேன், ராவ் உள்ளே வந்ததும் மீண்டும் இழுத்து மூடினான். சும்மாதான் சாத்தியிருக்கேன். ரெண்டு மணிக்குப் பூட்டிடுவேன்.

    ராவ், உள்ளே நடந்து பேப்பர் பண்டல்கள் அடுக்கியிருந்த ஒரு சின்ன ஹாலைக் கடந்து மாடிப்படிகளை அடைந்தான். ஏறி மேலே வந்தான்.

    அழைப்பு மணியை அழுத்தினான். வினாடிகளில் கதவு திறக்கப்பட்டது.

    எவ்வளவு நேரம் வெய்ட் பண்றது ராவ்? என்றான் அழகாகக் கத்தரித்து விடப்பட்ட தாடியுடன், ஸ்லீவ்லெஸ் பனியனில் TODAY MY DAY என்ற வாசகங்களுடன் அலெக்ஸ். சாம்பல் நிறத்தில் ஸ்ட்ரெட்ச் ஜீன்ஸ். கையில் சிகரெட்.

    என்ன பண்றது அலெக்ஸ்? கேஸட்ல ஒரு பாட்டு கேக்கறே. உனக்க ரொம்பப் பிடிச்சிப் போகுது. ரீவைண்ட் பண்ணி ஒன்ஸ் மோர் கேக்கறதில்லையா?

    ராவ் உள்ளே வந்து கதவைச் சாத்தினான். இருவருமாக அந்த ஹாலைக் கடந்து கதவு தள்ளி அந்த பெரிய ஏ.சி. அறைக்குள் வந்தார்கள். மேஜையில் செஸ் போர்டில் காய்கள் பாதி விளையாட்டில் இருக்க, கன்னத்தில் கை தாங்கி யோசித்துக் கொண்டிருந்த கிரண், வந்தாச்சா? என்று எழுந்தான்.

    ஒவ்வொரு தடவை வர்றப்பவும் அந்த வாட்ச்மேன் தாத்தாவுக்கு பதில் சொல்லிட்டுத்தான் உள்ளே வரவேண்டியிருக்கு கிரண். வேற வீடு மாத்திடு நீ.

    "ஒண்டிக் கட்டைன்னாலே வீடு தர யோசிக்கிறான். என்ன தொழில்னு கேக்கறான். கொள்ளையடித்தல்,

    Enjoying the preview?
    Page 1 of 1