Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Puthir Pootha Nandhavanam
Puthir Pootha Nandhavanam
Puthir Pootha Nandhavanam
Ebook86 pages1 hour

Puthir Pootha Nandhavanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateDec 12, 2016
ISBN6580100901638
Puthir Pootha Nandhavanam

Read more from Pattukottai Prabakar

Related to Puthir Pootha Nandhavanam

Related ebooks

Reviews for Puthir Pootha Nandhavanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Puthir Pootha Nandhavanam - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    புதிர் பூத்த நந்தவனம்

    Puthir Pootha Nandhavanam

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    புதிர் பூத்த நந்தவனம்

    - பட்டுக் கோட்டை பிரபாகர்

    1

    சவேரா ஹோட்டலின் கான்ஃபெரன்ஸ் ஹாலில் அவர்கள் கூடியிருந்தார்கள். பெண்கள் பெரும்பாலும் நாற்பதைத் தொட்ட பெண்கள். ஆனால் முப்பதாகக் காட்டிக் கொள்ள எல்லா வகைகளிலும் முயன்றிருந்த பெண்கள். கிட்டதட்ட அத்தனை பேருக்கும் வாசலில் கார்கள் காத்திருந்தன.

    நிர்மலா ஜெயராமன், நம்மை இழிவாக எழுதிய அந்தப் பத்திரிக்கைக்கு நாம் ஏதாவது ஒரு நூதனமான வகையில் நம் கண்டனத்தைத் தெரிவித்தே ஆக வேண்டும் என்று சொல்லி அடுத்ததாக நமது மரியாதைக்குரிய தலைவி திருமதி அர்ச்சனா துரைராஜ் அவர்களைப் பேச அழைக்கிறேன். என்றதும்...

    அர்ச்சனா துரைராஜ் தன் நாற்காலியை விட்டு எழாமல், தன் முன்னால் இருந்த மைக்கை ஒரு தரம் தட்டிப் பார்த்துக் கொண்டாள்.

    எனதினியே தோழிகளே, வணக்கம். இது அவசரமாகக் கூட்டப்பட்டுள்ள ஒரு கூட்டம். ஒரு முன்னணி வார இதழில் பெண்களைக் கேவலப்படுத்துகிற விதமாக ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்கள். அதைப் படிக்காதவர்களுக்காக அதைப் பற்றிச் சற்று விரிவாக முதலில் சொல்லி விடுகிறேன்.

    என்று பேசத் துவங்கின அர்ச்சனாவுக்கு வயது முப்பத்தி நான்கு. டெபுடி கமிஷனர் ஆஃப்போலீஸ் துரைராஜின் மனைவி. இரண்டு குழந்தைகள். ப்ரீதி, வயது பதினாலு ப்ரசாத். வயது எட்டு.

    ஆனால் அர்ச்சனா தன்னைப் பதினாறும் நிறையாத பருவ மங்கையாகத்தான் பாவித்துக் கொண்டு அலங்கரித்து கொண்டிகிறாள். ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் முதுகில் ஓடம் கட்டிங். பியூட்டி பார்லரில் தலையின் முன்னுச்சி முடிகளையும், பின்புறமும் ஸ்டைலாகக் கத்திரித்திருக்கிறாள். மெலிதான மைசூர் சில்க், பிரசவம் பரிசளித்த வரிகள் லேசாகத் தெரிந்தாலும் பரவாயில்லை என்று அபாயகரமான லோ-ஹிப். கண்களுக்கு மஸ்காரா, உதடுகளுக்கு லிப்ஸ்டிக்,கன்னங்களுக்கு ரூஜ் தடவாமல் அர்ச்சனா தன் அறையை விட்டு வெளியே வருவதில்லை.

    இனி அர்ச்சனாவின் பேச்சை கவனிக்கலாம்.

    பத்திரிக்கையில் வெளிவந்த செய்தியை அப்படியேப் படிக்கிறேன். காலம் கெட்டுப் போச்சு! நீங்கள் வாட்டசாட்டமான வாலிபரா? நமது கடற்கரைக்கு வந்து சும்மா நின்று கொண்டிருந்தால் போதும். சொகுசான கார் வந்து உங்கள் அருகில் நிற்கும். காருக்குள் பணக்கார வீட்டு லேடி இருப்பாள். உங்களைப் பார்த்து காருக்குள் பணக்கார வீட்டுலேடி இருப்பாள். உங்களைப் பார்த்து கண்ணடிப்பாள். ‘வாங்களேன், ஐஸ் க்ரீம் சாப்பிடலாம்’ என்பாள். ‘இல்லைங்க, இப்பதான் காபி சாப்பிட்டேன்’ என்று சொன்னால் நீங்கள் அசடு. உங்களை விட்டு விட்டுக் கார் போய் விடும்.’ஓ, சாப்பிடலாமே’ என்று சொல்லிவிட்டு நீங்கள் உற்சாகமாக காரில் ஏறிக் கொண்டால், அதன் பிறகு அன்று முழுக்க உங்களுக்கு ஐஸ்க்ரீம் தவிரவும், என்னென்னவோ கிடைக்கும். புறப்படும்போது கற்றையாய் பணமும் கிடைக்கும். கரும்பு தின்னக் கூலி! உங்களுக்கு ஆச்சரியம். ஆனால் இந்த ஃபாஷன் இப்போது நகரத்தில் பெருகி வருகிறது. நமது நிருபரின் பல நாள் கண்காணிப்புக்குப் பிறகே இதை எழுதியுள்ளோம். இந்த மன்மத லீலைகளில் ஈடுபடுபவர்கள் முழுக்க பணக்கார வீட்டுப் பெண்கள் அதிலும் திருமணமாவர்கள். பெரிய பெரிய அதிகாரிகளின் மனைவிகள்! இந்த இரவுக் கூத்தில் வாலிபர்களே, எச்சரிக்கையாக இருங்கள்! எந்தப் புற்றில் எந்த பாம்பு இருக்குமோ!... எந்த ஐஸ்க்ரீம் எய்ட்ஸ் இருக்குமோ!.... இது தான் பத்திரிக்கையில் வந்துள்ள செய்தி!

    கூட்டத்தில் இருந்த அத்தனைப் பெண்களும் ஒரே நேரத்தில் ஷேம்! ஷேம் ஈ அவர் ஜெண்டர்! என்றும் இதைக் கண்டிச்சே ஆகனும் என்றும் கத்த, நடுவில ஒரு குரல், எழுதின பொறுக்கியை நடு ரோட்ல நிக்க வெச்சி செருப்பால அடிக்கணும் என்று கத்தியது.

    கையமர்த்தி அவர்களை அமைதிப்படுத்திய அர்ச்சனா. "கொஞ்சம்

    Enjoying the preview?
    Page 1 of 1