Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aamam / Illai
Aamam / Illai
Aamam / Illai
Ebook90 pages8 minutes

Aamam / Illai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்புள்ள உங்களுக்கு,

வணக்கம்.

இந்தப் புத்தகத்தை விலைக்கு வாங்கி இந்த வரியைப் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஸ்பெஷல் வணக்கம். எடுத்ததுமே இரண்டு கைகளையும் உயரே தூக்கிக் கொண்டு சொல்லி விடுகிறேன், நான் ஒரு கவிஞன் அல்ல! எனக்கு கவிதைக்கான இலக்கணமும் தெரியாது. கவிதை சாயலில் சில வரிகள் முயன்றதுண்டு.

கல்லூரி நாட்களில் வைரமுத்து, மு.மேத்தா, அப்துல்ரகுமான், புவியரசு இவர்களின் கவிதைகள் எனக்கு மனப்பாடம். பிறகு வண்ணதாசன், கலாப்ரியா, அறிவுமதி, வஸந்த் செந்தில், மகுடேஸ்வரன், மனுஷ்யபுத்திரன், கனிமொழி, நா.முத்துகுமார், லலிதானந்த் என்று பலரின் கவிதைகளை ரசித்து வந்தாலும்... கவிதை எழுதுவதில் எனக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டதில்லை.

பத்திரிகை ஆசிரியர்களுக்கு அவ்வப்போது சுவாரசியமான யோசனைகள் தோன்றும். கதைக்கு படம் வரையும் ஓவியரை கதை எழுதச் சொல்வார்கள். எழுத்தாளனை படம் கிறுக்கச் சொல்வார்கள். அந்த மாதிரி சில சமயம் சில பத்திரிகைகள் என்னிடம் ஆள் மாறாட்டக் குழப்பத்துடன் தவறிப் போய் கவிதை எழுதச் சொல்வார்கள். நானும் நம் குழந்தை மீசை வரைந்து கொண்டு தோளில் துண்டு போட்டுக் கொண்டு கையில் ஸ்கேல் எடுத்துக் கொண்டு பள்ளி வாத்தியார் மாதிரி விளையாடுமே, அந்த மாதிரி கவிஞன் வேடம் போட்டுக் கொண்டு எழுதித் தந்ததுண்டு.

தவிரவும் எனது கதைகளின் அத்தியாயத் துவக்கத்தில் உள்ளே இழுக்கிற உத்தியாகவும், கேள்வி பதில் பகுதியிலும், கதைக்குள் கவிதை எழுதுகிற கதாப்பாத்திரத்தின் சிந்தனையாகவும் ஆங்காங்கே கவிதை முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன். இவற்றையெல்லாம் தொகுத்து வெளியிடலாமே என்கிற அசாத்தியமான, அநியாய நம்பிக்கையுடனான யோசனை தோன்றியதற்காக ரம்யா ப்ரியா கிரியேஷன்சை பிரமிக்கிறேன். ஆகவே.கவிதை ரசிகர்கள் தயவு செய்து இந்தத் தொகுப்பில் உள்ள படைப்புகளை சகிப்புத்தன்மையுடன் வாசித்து பார்டரில் பாஸ்மார்க் வாங்கியாவது தேறுகிறேனா என்று சொல்லுங்கள்.

பிரியங்களுடன்,
பட்டுக்கோட்டை பிரபாகர்

Languageதமிழ்
Release dateOct 4, 2019
ISBN6580100904573
Aamam / Illai

Read more from Pattukottai Prabakar

Related to Aamam / Illai

Related ebooks

Reviews for Aamam / Illai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aamam / Illai - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    ஆமாம் / இல்லை

    Aamam / Illai

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ஆலங்கட்டிகள்

    கடலின் ஆழ ஆழத்தில் படுத்திருக்கும் மலைகள் தூக்கம் விழித்துச் சோம்பல் முறிக்கிற அழகுகளில் தாம் தொடங்குகின்றன மழை அசைவுகள். மழை அசைவுகள் - மலை அசைவுகள் எப்படி எழுதினும் பிழையில்லை. மழை - மலை இரண்டின் தூரங்கள் என்பவை வேர் - கிளை என்பவற்றிற்கிடையில் தாம். வேர் வேறு கிளை வேறா? பூக்களின் காம்பை வேர் வரை நீட்டிப் பார்க்கும் நீர்மைக்குள் இருக்கிறது மழையின் பனிக்குடம்! பனிக்குடம் உடைத்து மழையள்ளித் தாலாட்ட வாய்த்தவர்களுக்குத்தாம் வாய்க்கும் கதை

    Enjoying the preview?
    Page 1 of 1