Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vilagi Nerungi Vilagi
Vilagi Nerungi Vilagi
Vilagi Nerungi Vilagi
Ebook139 pages1 hour

Vilagi Nerungi Vilagi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு திரைப்படம் வாழ்க்கையில் நல்ல எண்ணங்களை விதைக்க வேண்டுமே தவிர, மனிதர்களின் வாழ்க்கையைப் பாழ்படுத்தி விடக்கூடாது. அருண் என்பவன் யார்? அவன் வாழ்க்கையில் திரைப்படத்தினால் ஏற்பட்ட விளைவுகள் என்ன? துரைப்பாண்டியன் பைத்தியம் ஆவதற்கு காரணம் யாது? போன்ற பல திருப்பங்களை கொண்ட சுவாரஸ்யம் மிகுந்த கதை வாசித்து அறிவோம்...

Languageதமிழ்
Release dateApr 23, 2022
ISBN6580100908051
Vilagi Nerungi Vilagi

Read more from Pattukottai Prabakar

Related to Vilagi Nerungi Vilagi

Related ebooks

Reviews for Vilagi Nerungi Vilagi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vilagi Nerungi Vilagi - Pattukottai Prabakar

    https://www.pustaka.co.in

    விலகி நெருங்கி விலகி

    Vilagi Nerungi Vilagi

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar
    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    இந்திய தண்டனைச் சட்டம் 375ன்படி...

    கீழ்க்கண்ட ஐந்து சூழ்நிலைகளில் ஒரு பெண்ணோடு கொள்ளப்படும் உடலுறவுகள் - கற்பழிப்பாகக் கருதப்படுகின்றன.

    1. பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக...

    2. பெண்ணின் சம்மதம் இல்லாமல்...

    3. மிரட்டல் மூலம் சம்மதிக்கச் செய்யும்போது...

    4. தன் வருங்காலக் கணவன் இவன்தான் என்கிற நம்பிக்கையில் பெண் சம்மதிக்கும் போது...

    5. சம்மதம் இருந்தாலும், இல்லாவிட்டாலும்... பெண்ணின் வயது 16 வயதுக்குக் கீழே இருக்கும்போது...

    1

    போர்க்கால பயிற்சி நடவடிக்கையாக வானம் ‘பிளாக் அவுட்’ செய்திருக்க... நட்சத்திரங்கள் பதுங்கியிருந்தன.

    அவன் மழைக்கோட் அணிந்திருந்தான். நீரை அனுமதிக்காத பீக் வைத்த தொப்பி பாதி முகத்தைத் தொலைத்திருந்தது. மீதியில் உதட்டு சிகரெட்டின் சிவப்பு வட்டம் அணிந்திருந்த கண்ணாடியில் பிரதிபலிக்க...

    சீரான ஓட்டத்தில் அவனுடைய பைக் ஓடிக் கொண்டிருந்தது.

    அந்த உயர்ந்த ஓட்டலின் வாட்ச்மேன், அவனுடைய வண்டியை நிறுத்த வேண்டிய இடத்தைக் காட்டினான்.

    நிறுத்தி, நடந்து... மூடியிருந்த குப்பைத் தொட்டியின் பெடலைக் காலால் அழுத்தித் திறந்து சிகரெட் மிச்சத்தை அதில் சுண்டிவிட்டு உள்ளே நடந்தான்.

    நிதானமாக, சிப்சிப்பாகக் குடித்தான். மாண்டலின் சீனிவாசனின் புதிய கஜல் இசைக்கு மெலிதாகக் கால்களால் தாளம் போட ஆரம்பித்தான். தீரத் தீர 555 சிகரெட் கொளுத்திக் கொண்டான். நடுவில் ஒரு தரம் வாட்சைப் பார்த்துக் கொண்டான்.

    அரை மணி கழித்து, தொப்பி, பைக் சாவியைச் சேகரித்துக் கொண்டு, கணிசமாய் டிப்ஸ் வைத்து, லேசான தள்ளாடலுடன் எழுந்தான். பற்களை அதிக சப்தம் வராமல் கடித்துக் கொண்டான்.

    உள்பக்கம் இழுக்கவேண்டிய கதவை மறுபடி மறுபடி வெளிப்பக்கம் தள்ள முயன்று. ஓடிவந்து உதவிய ஓட்டல் சேவகனுக்கு நன்றி சொல்லாமல் வெளியேறினான்.

    உதைத்த உதையில் பயந்து போய் முதல் தடவையிலேயே ஸ்டார்ட் ஆனது பைக், ஆடு, மாடு உள்ளே வராமல் இருப்பதற்காகப் பாதையின் குறுக்கே பதிக்கப்பட்டிருந்த இரும்புக் கம்பிகளின் மேல் பைக்கைத் தவழ்த்தி, சாலை வந்ததும் கியர் மாற்றி வேகம் கூட……

    கோட்டின் காலர்கள் துடித்தன.

    மேல்வரிசைப் பற்கள் கீழுதட்டைக் கடிக்க.

    ***

    பட்டை பிரேமில் கண்ணாடி அணிந்த, நெற்றியில் விபூதி வைத்த, கையில் வைர மோதிரம் அணிந்த, உயரமான அந்த நீதிபதி...

    ‘இந்த வழக்கு என் முன்னிலையில் 1996 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இருபதாம் நாள் முடிவான விசாரணைக்கு எடுக்கப்பட்டு, வாதிக்காக வழக்கறிஞர் பப்ளிக் பிராசிகியூட்டர், திரு. கணேசராமனும், எதிர்வாதிக்காக வழக்கறிஞர் திரு. ஜி. பார்த்தசாரதியும் ஆஜராக, இருதரப்பு வாதப் பிரதிவாதங்களைக் கேட்ட பிறகு, பரிசீலனைகளுக்குப் பிறகு இன்று இம்மன்றம் இயம்பும் தீர்ப்புரை!’

    ***

    ப்ளடி ஷிட்! என்று அவன் உதடுகள் முணு முணுத்தன.

    அண்ணா சாலையில் இணைந்து மேம்பாலம் நோக்கி பைக் பயணம் செய்ய, நியான் விளக்குகள் ஓயாமல் நிறுவன முதலாளிகளுக்கு விசுவாசமாய் விளம்பரங்களை உமிழ்ந்து கொண்டிருந்தன. ஒரு டெலிபோன் பூத்துக்குள் நுழைந்தான்.

    மழைக் கோட்டின் ஜிப்பை மார்புவரை இறக்கி, உள்ளே கை செலுத்தி பாக்கெட்டிலிருந்து காகிதம் எடுத்து எண் பார்த்துக் கொண்டு சுழற்றினான்.

    யெஸ் என்றது ஒரு பெண்.

    மேடம், உங்க பங்களால ராஜ் புரொடக்ஷன்ஸ் படம் இப்போ ஷுட் ஆகிட்டிருக்கா?

    ஆமாம். யூனிட் எல்லாம் வந்து எல்லாம் செட் பண்ணிகிட்டு இருக்காங்க. நீங்க யார்கூட பேசணும்?

    நடிகை பிரேமா இருக்காங்களா?

    நீங்க யாரு?

    பிரெஸ்,

    வச்சிடட்டுமா?

    லேட் நைட் வரைக்கும் ஷூட்டிங் உண்டா?

    எப்படியும் ராத்திரி ரெண்டு மணிக்குள்ளே பேக்கப் செஞ்சிடறோம்னு சொல்லிருக்காங்க.

    தாங்க்ஸ் வைத்துவிட்டு வாட்சைப் பார்த்தான். பதினொன்று. பைக்கை ஸ்டார்ட் செய்தான்.

    ***

    நீதிபதி நடுவில் ஒருதரம் தண்ணீர் குடித்துக் கொண்டார்.

    ‘ஆகவே இருதரப்பு வாதங்களையும், சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களையும், பரிசீலனை செய்து வழக்கெழு வினாக்கள் ஒன்றிலிருந்து ஆறுவரை விடை கண்ட வகையில் முடிவாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் துரைபாண்டியன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது சரிவர நிரூபிக்கப்பட்டிருக்கும் காரணத்தால் அவர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் செய்த குற்றங்களைப் பரிவோடு ஆராய வேண்டியிருப்பதால் அவருக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தீவிரமான மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட வேண்டும் என்கிற கோர்ட்டின் சிபாரிசையும் அளிப்பதோடு துரைபாண்டியனின் மனநிலை பாதிக்கப்பட்டதற்கு மூலக் காரணமாக அவரது வழக்கறிஞர் கூறிய விவரங்களை இந்த வழக்கில் ஆராய வேண்டியது அவசியமற்றது என்றும் கோர்ட் கருதுகிறது.’

    ***

    உதட்டைக் கடித்திருந்த பற்கள் மேலும் அழுத்த அவன் நெற்றியருகே நரம்புகள் புடைத்து நின்றன. கண்ணாடிக்குள்ளே கண்களில் மேலும் சிகப்பு கூடியிருந்தது.

    எதிரே வந்த சைக்கிள்காரன் பைக்கின் வேகத்துக்குப் பதறி அவசரமாகக் கீழே இறங்கிக் கொண்டு, கையை நீட்டி சென்னைத் தமிழில் திட்டினதை எல்லாம் அவன் காதுகள் கேட்கவில்லை.

    ***

    கோர்ட் வாசலில் சொந்தக் கருத்து பகிர்ந்து கொண்டு மக்கள் தூறலுக்காகக் குடைகளை விரித்துக் கொண்டனர். அவர்களில் இவர்கள்:

    துரைபாண்டியன் தப்பிக்க நினைச்சிருந்தா தப்பியிருக்கலாம். சம்பவம் நடந்து ரெண்டு மணி நேரம் கழிச்சுதான் சியாமளாவோட பையன் வீடு திரும்பியிருக்கான். அவன் திரும்பி வந்தப்போ பொணத்துக்குப் பக்கத்தில் உக்காந்து அழுதுகிட்டே இருந்தானாம் துரைபாண்டியன். பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் பிடிச்சு இழுக்கலைன்னா சியாமளாவோட பையன் அவனைக் கொலையே செஞ்சிருப்பான்.

    சியாமளாவோட பையனா, அவன் யாரு?

    நல்ல பேருப்பா. இரு சொல்றேன்... ம்... அருண்.

    ***

    பாரிலிருந்து புறப்பட்ட மழைக்கோட் அணிந்த அருணின் பைக் அஷோக் நகரை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.

    2

    வெளிச்சப் பூக்களின் நடுவே விமான நிலையம்.

    ஸ்பீக்கர்கள் பட்டுக் கத்தரித்தன.

    பெங்களூரில் இருந்து சென்னை வருகின்ற விமானம் முப்பது நிமிடங்கள் தாமதமாக வரும். அது சென்னையை ஒன்பது நாற்பதுக்குத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அசௌகரியங்களுக்கு மன்னிக்கவும்.

    விஷ்ணு எரிச்சலாய் அந்த ஹாலைவிட்டு வெளியே வந்தான் இன்னும் அரை மணி நேரம் இருக்கிறது. நேராய் அந்தச் சிவப்பு மாருதியை அடைந்தான்.

    அருகே மூக்குப் பொடி போட்டுக் கொண்டிருந்த டிரைவர், என்ன சார்?

    அரை மணி நேரம் லேட். நீ டேப்பைப் போடு கேட்டுக்கிட்டே சின்னதா தூங்கப் போறேன். அரை மணி கழிச்சு சரியா எழுப்பிவிடு.

    பின்சீட்டில் கால் நீட்டிப் படுத்துக் கொண்டான்.

    Enjoying the preview?
    Page 1 of 1