Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Agmark Thorogam
Agmark Thorogam
Agmark Thorogam
Ebook84 pages47 minutes

Agmark Thorogam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2017
Agmark Thorogam

Read more from Rajeshkumar

Related to Agmark Thorogam

Related ebooks

Related categories

Reviews for Agmark Thorogam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Agmark Thorogam - Rajeshkumar

    22

    1

    விஷயற்காலை ஐந்து மணி.

    அலாரம் கிணுகிணுத்த விநாடியில் போர்வையும் தன் உடம்பினின்று இழுபட ஜஸ்டீஸ் பரத்வாஜ் தூக்கம் கலைந்து விழிகளை மலர்த்தினார். எதிரே மகள் விஷ்ணு ப்ரியா ஒரு பூவாய் சிரித்துக் கொண்டு நின்றாள்.

    "குட்மார்னிங்... என் ப்ரியமான அப்பாவே...!’’

    "குட்மார்னிங்...’’

    போர்வையை உதறிக் கொண்டு கட்டிலினின்றும் கீழே இறங்கி சுவரோரமாய் விட்டிருந்த ஹவாய் சப்பல்களை மாட்டிக் கொண்டு பாத்ரூம் பக்கமாய் நகர அவருடைய நைட் கவுனைப் பிடித்து இழுத்தாள் விஷ்ணுப்ப்ரியா.

    எங்கப்பா நழுவறீங்க...? இன்னிக்கு உங்களை எழுப்பினது நான்தான்... போடுங்க நிறுத்தாம பத்து தோப்புக்கரணம்...

    அம்மா... ராத்திரி ஒரு ஜட்ஜ்மெண்டை எழுதி முடிச்சுட்டு படுக்கையில் விழும்போது மணி எவ்வளவு தெரியுமா?

    எவ்வளவு...?

    ஒண்ணு நாப்பது...

    நோ... எக்ஸ்க்யூஸ் டாடி...

    பத்துல ஒரு அஞ்சை குறைச்சுக்கோம்மா...

    சரி போடுங்க...

    காதுகளை பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போட்டார் பரத்வாஜ். போட்டு முடித்ததும் மூச்சு வாங்கினார். விஷ்ணுப்ரியா தன் மணிக்கட்டில் இருந்த

    வாட்சை பார்த்தபடி சொன்னாள். சரியா அஞ்சே கால் மணிக்கு ஹால்ல இருக்கணும்... லேட்டாகிற ஒவ்வொரு நிமிஷத்துக்கும் ஒவ்வொரு தோப்புக்கரணம்...

    அஞ்சு பத்துக்கே வந்துருவேன்...

    சொல்லிக் கொண்டே அவர் டாய்லெட்டுக்குள் போக விஷ்ணுப்ரியா கீழே இறங்கி ஹாலுக்கு வந்தாள். சோபாவுக்கு கீழே படுத்திருந்த பாமரேனியன் நாய் அவளைப் பார்த்ததுமே மேலே தாவி செல்லமாய் சினுங்கியது.

    என்ன லாலு... பசியா...? பால் இன்னும் வரலை...! ரெண்டு பிஸ்கட் தர்றேன்... சாப்பிட்டுக்கறியா...? சொல்லிக் கொண்டே அலமாரிக்குப் போய் பிஸ்கட் டின்னை எடுத்த விநாடி -

    அறையிலிருந்த டெலிபோன் கூப்பிட்டது. போய் ரிஸீவரை எடுத்தாள். ஹலோ...

    டீ... விஷ்ணுப்ரியா... குட்மார்னிங்... நான் கலா பேசறேன்...

    குட்மார்னிங்... என்னடி இவ்வளவு காலையில் போன்...? என்ன விஷயம்...?

    ‘‘உன்னோட டர்க்கி ஃபினிஷ்ட் சூட்கேஸ் எனக்கு வேணும்."

    எதுக்கு...?

    வீட்ல அப்பா, அம்மா, நான்... இன்னும் ஒரு மணி நேரத்துல ஊட்டிக்குப் புறப்பட்டுப் போறோம். ஒரு வாரம் அங்கே ஹால்ட். என்னோட சூட்கேஸ்ல ரெண்டு லாக்கும் சரியா இல்லை... நீதான் உன்னோட சூட்கேஸைக் குடுத்து ஒரு வாரத்துக்கு அருள் பாலிக்கணும்.

    எடுத்து வெக்கிறேன் வர்றியா? நானும் டாடியும் இன்னும் கொஞ்ச நேரத்துல வாக்கிங் கிளம்பப்போறோம்.

    நீ சூட்கேஸை எடுத்து வை. இப்ப வந்துடறேன்.

    சீக்கிரமா வா ரிஸீவரை வைத்துவிட்டு திரும்பினாள். நாய் அவளுடைய முகத்தை அண்ணாந்து பார்த்து சிணுங்கியது. விஷ்ணுப்ரியா டின்னை எடுத்து இரண்டு பிஸ்கட்டை எடுத்து நாய்க்குப் போட்டாள்.

    வாசலில் –

    காலிங்பெல் ‘டிடிங்’ என்றது.

    பால் வந்தாச்சு... லாலு...

    டீபாயின் மேல் தயாராய் வைத்திருந்த பாத்திரத்தை எடுத்துக் கொண்டு கதவை நோக்கிப் போனாள்

    இன்னிக்கு இவ்வளவு லேட்? லாலு தவிச்சு போச்சு தெரியுமா? இனிமே... இ... இப்படி...

    விஷ்ணுப்ரியாவின் பேச்சு சட்டென்று நின்றது. வெளியே இருட்டான வாசற்படியில் நின்றிருந்த இரண்டு பேர் கைகளில் ரிவால்வர்களோடு முரட்டுத்தனமாய் அவளைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள்."

    ஏ... ஏ... ஏய்... நீங்க யாரு...? - விஷ்ணுப்ரியா திணறலாய் கேட்டுக் கொண்டிருக்கும் போதே ஒருவனுடைய ரிவால்வர். அவளுடைய கழுத்தில் பதிந்தது. இன்னொருவன் கதவைத் தாழிட்டான். "சத்தம் போட்டே... குரல்வளை சிதறிடும்.’’

    விஷ்ணுப்ரியா உடனே வியர்த்து மலங்க மலங்க அவர்களைப் பார்த்தாள். இருவருமே இளைஞர்கள். பராமரிக்கப்படாத மீசை தாடியோடு பழுப்பு நிற பேண்ட் சர்ட்டில் வியர்வை நெடியோடு தெரிந்தார்கள். கழுத்தில் வெள்ளிச் செயின் மாதிரி எதுவோ மிணுமிணுத்தது. கறைபடிந்த பற்களைக்காட்டி இருவருமே மெல்லச் சிரித்தார்கள்.

    எங்கே உன்னோட பிரியமான அப்பா?

    கேக்கறது காதுல விழலை?

    "மா... மாடியில் இருக்கார்.’’

    தூங்கறாரா?

    இ... இல்லை.

    "பின்னே?’’

    "டாய்லெட்ல இருக்கார்.’’

    சரி அப்படி உட்கார். - ஒருவன் அவளை

    Enjoying the preview?
    Page 1 of 1