Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Iniyavaley Iranthu Po!
Iniyavaley Iranthu Po!
Iniyavaley Iranthu Po!
Ebook110 pages56 minutes

Iniyavaley Iranthu Po!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

புகை நமக்கு பகை. பழமொழிக்கேற்ப மதுமிதா சிகரெட்டினால் மயக்கப்பட்டு தவறான வழிக்கு சென்று காணாமல் போகிறாள். டிடெக்டிவ்ஸ் ஆன பரத்-சுசி மதுமிதாவை கண்டுபிடிப்பார்களா? வாருங்கள் நாமும் சேர்ந்து மதுமிதாவை கண்டுபிடிப்போம்.

Languageதமிழ்
Release dateJan 21, 2023
ISBN6580100908212
Iniyavaley Iranthu Po!

Read more from Pattukottai Prabakar

Related to Iniyavaley Iranthu Po!

Related ebooks

Reviews for Iniyavaley Iranthu Po!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Iniyavaley Iranthu Po! - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    இனியவளே இறந்து போ!

    Iniyavaley Iranthu Po!

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    இனியவளே இறந்து போ!

    PERSONAL MEMORANDA - சுய குறிப்புகள்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    இனியவளே இறந்து போ!

    சதா இந்த ரௌடி நட்சத்திரங்கள் என்னை சைட் அடிப்பதோடு, கமெண்ட்டும் அடிக்கின்றார்கள் என்று நிலா புகார் செய்ததன் பேரில் வான போலீஸ் லாரி லாரியாய் மழை மேக கான்ஸ்டபிள்களை அனுப்ப...

    ரௌடிகள் காணாமல் போனார்கள்... என்று வழக்கமான இயற்கை வர்ணனையுடன் இந்த ஒலிபரப்பு ஆரம்பமாவதில் ஒருவித அலுப்பு ஏற்படவில்லை?

    அதனால், இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக ஆரம்பிக்கலாமா?

    அப்படியென்றால் நீங்கள் ஒரு தப்பான காரியம் செய்யத் தயாராய் இருங்கள்.

    பக்கத்து வீட்டு ஜன்னல் வழியாக வரும் உரையாடல்களில் காதைத் தீட்டி கவனம் செலுத்தியதுண்டா? நீர்பரப்போரமாக அந்தப்பெண் ஏற்றிக்கட்டின பாவாடையுடன் சோப்பு தேய்ப்பதைப் பார்த்து முடிப்பதற்கு முன் நீங்கள் பயணம் செய்த பஸ் அல்லது ரயில் கடந்து போய்விட்டதற்கு வருத்தப்பட்டதுண்டா? நண்பருக்கு வந்த கடித உறையின் மேல் ‘பர்சனல்’ என்று எழுதியிருக்கும்போது, அவர் வருவதற்கு முன்பு அவசரமாக எடுத்து அனுப்பியவர் முகவரியைப் பார்த்ததுண்டா? எதிர்வீட்டுப் பையனை உட்காரத்தி வைத்து, ‘நேத்து என்ன ஒரே சத்தம்? அம்மாவுக்கும், அப்பாவுக்கும் சண்டையா?’ என்று விசாரித்ததுண்டா? ‘கண்ணடிப்பதில் புகழ்பெற்ற நடிகரும், முதல் படத்தில் வில்லியாக நடித்துப் பிறகு கதாநாயகி அந்தஸ்து பெற்ற நடிகையும் இப்போது காதல் வயப்பட்டிருக்கிறார்களாம்’ போன்ற செய்திகளை ஆர்வமாகப் படிப்பதுண்டா?

    இதில் ஒரு கேள்விக்காவது ஆமாம் என்று பதிலைச் சொன்னீர்களா?

    எனில், நீங்கள் அந்த தப்பான காரியம் செய்யத் தயார்.

    காரியமாவது...

    அடுத்தவரின் டைரியைப் படித்தல்!

    அந்த அடுத்தவர்: திருநிறைச்செல்வி. மதுமிதா.

    1967-ம் வருடம் பங்குனி மாதம் பதினான்காம் தேதி, சதுர்தசி திதியில், பூரட்டாதி நட்சத்திரத்தில், ரிஷப லக்னத்தில் இந்தப் புவியுலகில் அவதரித்த மதுமிதாவின் இந்த டைரி,

    அழகாய் இருக்கிறது. அவளைப்போல.

    சிகப்பாய் இருக்கிறது. அவளைப்போல.

    வழவழப்பாய் இருக்கிறது அவளைப்போல.

    புரட்டச்சொல்கிறது. அவளைப்போல.

    இந்தாருங்கள்.

    ஒன்... டூ... த்ரீ! புரட்டலாம்.

    கதை? அதை அப்புறம் பார்த்துக்கொள்வோம்.

    PERSONAL MEMORANDA - சுய குறிப்புகள்

    Name: மிஸ். மதுமிதா சுந்தரேசன், (பி.எஸ்ஸி.)

    Office Address:

    Residential Address: 37, பர்கிட் ரோடு, தி.நகர், சென்னை-600 017,

    இந்தியா, உலகம்.

    Tel: Office... Resi: 841526. (வாரம் ஒருமுறை ரிப்பேராகும்)

    S.B. A/c. No: சேமித்தபின் பார்க்கலாம்.

    Height: போதுமான உயரம்.

    Weight: சுலபமாக தூக்கமுடிகிற எடைதான்.

    Car / Motor Cycle / Scooter No: தினம் ஒரு பஸ். எதை எழுத?

    Driving Licence No:.....

    Insurance No: சமீபத்தில் சாவதாய் இல்லை.

    வேறொன்றும் இல்லை. சுபம்.

    IN CASE OF EMERGENCY PLEASE INFORM

    அன்புள்ள மதுமிதாவுக்கு,

    அன்புள்ள மதுமிதா எழுதியது.

    டைரி எழுதுதல் நல்ல பழக்கம். ஆனால்...

    ஒரு வருடமாவது ஒழுங்காய் எழுதியுள்ளாயா?

    ஜனவரியில் 31 நாட்களும் எழுதுவாய். பிப்ரவரியில் ஒருநாள் விட்டு ஒருநாள். மார்ச்சில் நான்கோ, ஐந்தோ தினங்கள். ஏப்ரலுக்கப்புறம் காகிதங்கள் கன்னி கழியாமல் இருக்கும். இந்த 87-லிலாவது ஒழுங்காய் எழுது. எல்லா தினங்களும் நிரப்ப வேண்டுமென்பதில்லை. முக்கியமான நாட்களை, சம்பவங்களை விடாமல் உண்மையாய் எழுது. இது உன் அந்தரங்க டைரி. உன்னிடம் நீயே பொய் பேசலாமா? எனவே, நூறு சதவீதம் உண்மையாய் எழுது. மதுமிதா, உனக்கு என் புத்தாண்டு முத்தங்கள்.

    இப்படிக்கு,

    மதுமிதா.

    ***

    JANUARY 1 Thursday

    ஸ்பெஷல் கிளாஸ் செல்ல பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தேன்.

    தயங்கித் தயங்கி மனோகர் பக்கத்தில் வந்தான்.

    பூக்காகிதம் சுற்றின பார்சலை நீட்டி, உதடுகளை ஈரமாக்கிக்கொண்டு,

    ஹேப்பி நியு இயர். என் சின்னபரிசு என்றான்.

    நான் ஏன் வாங்கிக்கொண்டேன்? திமிர்தானே?

    நன்றியாவது சொன்னேனா?

    ஆனால் அவன் என் பதிலை எதிர்பார்க்காமல் நடந்துபோய் பைக்கில் ஏறிக்கொண்டு புகை பரப்பி மறைந்தான்.

    காலேஜ் மரத்தடியில் பார்ச்சலை பிரித்துப் பார்த்தேன்.

    அது - இப்போது நான் எழுதும் இந்த டைரி.

    முதல் பக்கத்தில் இனியவளே மதுமிதா, புத்தாண்டு வாழ்த்துக்களுடன், ‘உன்னவன் - உன் மன்னவன்’ - என்று கிறுக்கியிருக்கிறான்.

    எனக்கு சிலிர்க்கவும் இல்லை, புல்லரிக்கவும் இல்லை.

    அய்யோ, பாவமே... என்றுதான் இருக்கிறது.

    மனோகரா, மனோகரா, இது சரிப்பட்டு வராதப்பா என்று நாளைக்கு சொல்லிவிடலாமா? ம்கூம். சொல்லப்போவதில்லை.

    நான் அவனை நேசிக்கிறேனா என்பது வேறு விஷயம்.

    ஆனால் நேசிக்கப்படுவதில் ஒரு சுவாரசியம், குஷி, த்ரில், பெருமிதம். எல்லாமே இருக்கிறது.

    தொடரட்டும் இந்த கண்ணாமூச்சி. எங்கேபோய் நிற்கிறது என்றுதான் பார்க்கலாமே...

    ***

    JANUARY

    Enjoying the preview?
    Page 1 of 1