Million Dollar Unmai
5/5
()
About this ebook
சூர்யா ஒரு அழகான பணக்காரப் பெண். கிருஷ்ணகுமார் என்பவர் பத்திரிக்கையில் பிரபல எழுத்தாளர். இருவரும் காதலிக்கின்றனர். ஒரு நாள் கிருஷ்ணகுமார் மண்ணெண்ணை ஊற்றி எரிக்கப்படுகிறார். யார் எரித்தது? சூர்யாவின் மனம் எப்படி இருக்கும்? மில்லியன் டாலர் உண்மை என்ன? திடுக்கிடும் கதையை வாசிப்போம் வாருங்கள்.
Read more from Pattukottai Prabakar
Bharath And Pattampoochi Rating: 5 out of 5 stars5/5Bharath VS Susila Rating: 4 out of 5 stars4/5Kaadhalna Enna Prakash? Rating: 0 out of 5 stars0 ratingsBharath Rajyam Rating: 5 out of 5 stars5/5Thottal Thodarum Rating: 4 out of 5 stars4/5Oor Urangum Velai Rating: 5 out of 5 stars5/5September, October, Christopher! Rating: 5 out of 5 stars5/5Thappikka Thadaiyillai Rating: 5 out of 5 stars5/5Narukkendru Naalu Varthai Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Vidum Neram Rating: 5 out of 5 stars5/5Puthi Munai Vithai Rating: 5 out of 5 stars5/5Iravu Pathu Rating: 0 out of 5 stars0 ratingsPushpa Rating: 5 out of 5 stars5/5Ini... Iniya... Rating: 5 out of 5 stars5/5Varuvean! Velvean! Rating: 0 out of 5 stars0 ratingsUyirodu Vendum… Rating: 5 out of 5 stars5/5Yaarukkum Mugam Illai Rating: 0 out of 5 stars0 ratingsKuttra Surangam Rating: 0 out of 5 stars0 ratingsKuttram, Puthiya Kuttram! Rating: 0 out of 5 stars0 ratingsTick... Tick... Lipstick! Rating: 5 out of 5 stars5/5Ner Meley Nila Rating: 5 out of 5 stars5/5
Related to Million Dollar Unmai
Related ebooks
Iniyavaley Iranthu Po! Rating: 0 out of 5 stars0 ratingsIthu Bharath Utharavu Rating: 0 out of 5 stars0 ratingsAtho Ange Aarambam Rating: 5 out of 5 stars5/5Vithaithal Vilaiyum! Rating: 5 out of 5 stars5/5Thrill Thrill Dynamite Rating: 0 out of 5 stars0 ratingsThats All Your Honour... Rating: 0 out of 5 stars0 ratingsIni Avan Iranthavan Rating: 0 out of 5 stars0 ratingsSuzhal Narkaali Rating: 5 out of 5 stars5/5Sollathey Sei! Rating: 5 out of 5 stars5/5En Kaadhal Mannavaney Rating: 0 out of 5 stars0 ratingsImaikkum Nerathil Rating: 5 out of 5 stars5/5Singapore Sathi Rating: 0 out of 5 stars0 ratingsIppadithan Aarambikkirargal Rating: 5 out of 5 stars5/5Ethirukal Thevai Rating: 5 out of 5 stars5/5Mannikkavum Veru Vazhi Illai Rating: 5 out of 5 stars5/5Ragasiyam Ramyamanathu Rating: 5 out of 5 stars5/5Suttuvidu Suseela Rating: 0 out of 5 stars0 ratingsBathilukku Bathil Rating: 5 out of 5 stars5/5Itho... En Ilavarasi! Rating: 5 out of 5 stars5/5Vettu Kuthu... Kanne, Kaadhali! Rating: 5 out of 5 stars5/5Unmayai Thirudu Rating: 5 out of 5 stars5/5Innum Sila Nimidangalil... Rating: 5 out of 5 stars5/5Nil..! Kavani..! Kaathiru..! Rating: 0 out of 5 stars0 ratingsApril Raathiri Rating: 0 out of 5 stars0 ratingsBombay Panthayam Rating: 0 out of 5 stars0 ratingsOndrum Ondrum Moondru...! Rating: 0 out of 5 stars0 ratingsThotravan Theerpu Rating: 5 out of 5 stars5/5Suseelavukku Oru Salute Rating: 0 out of 5 stars0 ratingsIthu Puthu Sugam Rating: 5 out of 5 stars5/5Veebareethaththirku Oru Visa! Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Million Dollar Unmai
1 rating0 reviews
Book preview
Million Dollar Unmai - Pattukottai Prabakar
https://www.pustaka.co.in
மில்லியன் டாலர் உண்மை
Million Dollar Unmai
Author:
பட்டுக்கோட்டை பிரபாகர்
Pattukottai Prabakar
For more books
https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
1
உங்கள் வீட்டில் டெலிவிஷன் இருக்கிறதல்லவா? நேற்று மாலை செய்திகள் பார்த்தீர்களா?
ஆம் என்றால் உங்களுக்கு கிருஷ்ணகுமாரை அறிமுகம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் நாலு வரி கழித்துக் கதையில் சேர்ந்து கொண்டால் போதுமானாது.
அறுபது நாட்களுக்கு முன்னால் கடந்து போன, கிறிஸ்துவுக்குப் பின்னால் வந்த 1995-ன் சிறந்த பத்திரிகையாளன் என்று தேர்ந்தெடுக்கப்பட்டவன்.
‘உங்கள் குரல்’ என்னும் சார்பில்லாத, ஆனால் அரசியலைக் கடைந்து வெண்ணெய் எடுத்துக்கொள்ளும் துப்பறியும் பத்திரிகையின் ஆஸ்தான பேனாக்காரன்.
துப்பறியும் என்றால் கௌபாய் படத்தில் போல, இரண்டு கைகளிலும் துப்பாக்கிகள் ஏந்தி, மார்பில் எக்ஸ் மாதிரி தோட்டாப்பட்டைகள் கட்டிக்கொண்டு, முதுகில் தொப்பி வைத்துக்கொண்டு...
நோ! அப்படியில்லை. சமுதாயத்தின் சுரண்டல் காரர்களையும், அரசியல் ஊழல்காரர்களையும் ஆதாரங்களோடு அம்பலப்படுத்தும் இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசத்துக்கு தோதாகத் துவங்கப்பட்டப் பத்திரிகை அது.
கிருஷ்ணகுமாரின் எழுத்தில் முள், மலர் இரண்டும் உண்டு. இவன் கட்டுரைகளில் மனதைப் பறிகொடுத்த வாசகர் கூட்டம் ஒன்று மதுரையில் போன வாரம் பேரவை துவங்கியுள்ளது.
கிருஷ்ணகுமாரின் கட்டுரைகளின் விளைவாக எத்தனையோ கிராமங்களுக்குக் குழாய் வந்திருக்கிறது.
பிரைமரி ஹெல்த் சென்ட்டர் வந்திருக்கிறது.
பாலம் வந்திருக்கிறது.
சில பிரமுகர்களுக்குத் தலைவலி வந்திருக்கிறது.
மக்கள், யார் இந்த கிருஷ்ணகுமார் என்று புருவம் உயர்த்திக் கேள்வி கேட்டுவிட்டு கியூவில் நின்று சினிமாவுக்கு டிக்கெட் வாங்கினார்கள். சிஸர்ஸ் கொளுத்திக் கொண்டு, ‘இந்த வாரம் கிருஷ்ணகுமார் கட்டுரை படிச்சியா’ என்று விசாரித்தார்கள். படிக்கவில்லை என்றால் ‘நீயெல்லாம் என்ன மனுஷன்’ என்று பார்த்தார்கள்.
‘உங்கள் குரல்’ சார்பாக கிருஷ்ணகுமார் உங்கள் மாவட்டத்திற்கு இத்தனாம் தேதி வருகிறார் என்று அறிவிப்புப் பார்த்து, அத்தனாம் தேதி குறை சொல்ல மனு எழுதி, கிழிந்த சட்டை போட்டுக் கொண்டு தயாரானார்கள்.
‘கிருஷ்ணகுமாரின் கட்டுரைகள் பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்று வேலூர் முத்து ஆனந்த், கும்பகோணம் மின்னொளி சீனிவாசன், சேலம் ரவிபாலாஜி, பெரம்பூர் உதயகண்ணன் போன்றவர்கள் கேள்வி-பதில் ஆசிரியர்களுக்குக் கார்டு போட்டார்கள்.
கிருஷ்ணகுமாரின் உழைப்பைப் பாராட்டிப் பத்திரிகை நிர்வாகம் தங்குவதற்கு வீடு தந்தது. பேசுவதற்கு டெலிபோன் தந்தது. ஓட்டுவதற்கு ஸ்கூட்டர் தந்தது. பேஜர் தந்தது.
கிருஷ்ணகுமார் இப்போது போய்க் கொண்டிருப்பது ஸ்கூட்டரில்தான்.
சிக்னலுக்காக நிறுத்திக் காலை ஊன்றி நிற்கிற கிருஷ்ணகுமாரைப் பச்சைத் தோன்றுவதற்குள் ஒரு கிளான்ஸ் பார்க்கலாம். அம்பாஸடர் மறைத்தால் எட்டி வந்து பாருங்கள்.
பிரௌன் நிறத்தில் கார்டுராய் பேண்ட், அதே நிறத்தில் ஸ்பன் முழுக்கை சட்டை லூசாக இன் செய்யப்பட்டு, பெல்ட் பக்கிள்சில் கழுகு, ஒல்லியான பிரேமில் குளிர் கண்ணாடி, தீவிரமான மூக்குக்குக் டை கீழே அதட்டி வைக்கப்பட்ட மீசை, நிக்கோடின் அறிமுகமில்லாத சிவப்பு உதடுகள். போன மாசத்தில் செய்யப்பட்ட ஷேவிங் கிரீம் போட்டு அசையாதே என்று நிறுத்தி வைக்கப்பட்ட மேலே தூக்கி வாறின பம்ம் தலை. கழுத்தில் குட்டியாக ஒரு தங்கச் செயின்...
பச்சை வந்து புறப்பட்டுவிட்டான்.
எக்மோர் வந்து, பாந்தியன் ரோடில் செலுத்தி, கன்னிமரா லைப்ரரியின் காம்பௌண்டிற்குள் நுழைந்து நிழலாய் வண்டியை நிறுத்தினதும் வந்த கன்னிமாறாப் பெண்ணுக்கு, குட் ஈவினிங்
என்றான் கிருஷ்ணகுமார்.
ஆச்சரியமா இருக்கு. இன்னைக்கு என்ன சொன்ன நேரத்துக்குக் கரெக்டா வந்துட்டிங்க?
என்றவள் சுடிதார் அணிந்த சூர்யா. ஹீரோயின் கிருஷ்ணகுமாரின் காதல்காரி, வேறொரு அத்தியாயத்தில் வர்ணிக்கப்படப் போகிறவள்!
என்னடா இது, லேட்டா வந்தாலும் கேள்வி. கரெக்டா வந்தாலும் கேள்வியா?
ஸ்டாண்ட்