Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mannikkavum Veru Vazhi Illai
Mannikkavum Veru Vazhi Illai
Mannikkavum Veru Vazhi Illai
Ebook107 pages1 hour

Mannikkavum Veru Vazhi Illai

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

வேலை கிடைக்காத விரக்தியில் சுற்றி திரியும் நாராயணன். பெண்கள் வெறும் நான்கு சுவருக்குள் மட்டுமே அடைபட வேண்டும் என்ற மூர்க்கத்தனமான எண்ணம் கொண்டவன்.

அவனால் உயிரிழக்கப்படும் பல துறையில் பணிபுரியும் பெண்களை மையமாக கொண்ட கதை… மேலும் அவன் மூர்க்கத்தனத்தால் ஏற்படும் விளைவுகளை கதையோடு பயணித்து அறிவோம்…. வாருங்கள்

Languageதமிழ்
Release dateSep 28, 2021
ISBN6580100906676
Mannikkavum Veru Vazhi Illai

Read more from Pattukottai Prabakar

Related to Mannikkavum Veru Vazhi Illai

Related ebooks

Related categories

Reviews for Mannikkavum Veru Vazhi Illai

Rating: 5 out of 5 stars
5/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    G o o o d s t o r y

Book preview

Mannikkavum Veru Vazhi Illai - Pattukottai Prabakar

https://www.pustaka.co.in

மன்னிக்கவும் வேறு வழியில்லை

Mannikkavum Veru Vazhi Illai

Author:

பட்டுக்கோட்டை பிரபாகர்

Pattukottai Prabakar

For more books

https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

அத்தியாயம் 14

அத்தியாயம் 15

அத்தியாயம் 16

அத்தியாயம் 17

அத்தியாயம் 18

1

கெட்ட மனிதர்களும், கெட்ட மனிதர்களாகப் போகிறவர்களும் உலவும் - வெள்ளமும், வறட்சியும் வருடத்திற்கு தலா ஒரு கோல் போடுகின்ற சென்னை

வெளிச்சத்தைத் தின்று கொண்டிருந்தது மாலை, இருட்டுக்கு எதிராக மின்சாரம் போர் முரசை ஒலிக்கத் துவங்கியது. தியான் விளக்குகள் அணைந்து, சுடர்ந்து விளம்பரத்தைத் துவக்கின.

அலுவலகங்கள் பிரசவித்தன.

பஸ்கள் கர்ப்பமுற்றன.

சத்தம்! சத்தம்!

நிறைய பேர் பாக்கெட்டுக்குள் சில்லறை இல்லாமலும், செய்வதற்கு காரியம் இல்லாமலும் வாய் வழிய பேசிக்கொண்டு நடந்தார்கள்.

நேர்மேலே மிதந்த ஒரு மேகம் அழட்டுமா என்று சிணுங்க.. காற்று அதனை சமாதானம் செய்து கொண்டிருந்தது.

சாலையில் விபத்து முனையில் அவசரக் கார்கள்.

பாதையோரத்தில் காதைப் பிடித்திழுக்கிற வர்த்தக விளம்பரம்.

பால் பாய்ண்ட் பேனா ரெண்டு ஒரு ரூபா.

மல்லிகைப் பூ வாங்கிட்டுப் போ சாரு.

இந்த சோப்புத்தூள் வாங்கினா பிளேடு ஃப்ரீ.

ஒரு கோடி உங்களுக்குத்தான், ஒரு சீட்டு வாங்குங்க.

அவன் விரைவில்லாமல் நடந்து கொண்டிருந்தான்.

ஹலோ நாராயணன் என்று அடி வயிற்றை எக்கி கத்தி அழையுங்கள். திரும்ப மாட்டான். அவன் காதுகளில் விழாது. வேறு கிரகத்து நபர் மாதிரி, கூர்மையான மார்புகளுடன் சேலை கட்டிக் கொண்டிருக்கும் பொம்மைகளைப் பார்க்கிறேன், கடை வாசலில் கையேந்தும் பிச்சைக்காரனின் தாடியை என்னமோ வைரம் மாதிரி கிட்டே போய் குளோசப்பில் பார்க்கிறான், நடந்து, ஊனமுற்றோருக்கான டெலிபோன் பூத் அருகில் நின்று போன் செய்ய நிற்கிற க்யூவை வித்தியாசமாய் பார்க்கிறான்.

மறுபடி நடக்க...

அடுப்பில் பால் வைத்திருக்காத பெண்களும், அலுவலகத்திற்கு நேரமாகாத ஆண்களும் ஒய்வாய் இருந்தால் என்னோடு வாருங்கள், அவனைத் தொடரலாம்.

நாராயணன் உயரமாய் இருந்தான், மூக்கின் நுனியில் கண்ணாடி வைத்திருந்தான். செல்லமாய் ஒரு சோம்பேறி தாடி. அவனது ஜீன்ஸ் பாண்ட் ஞாபகார்த்தமாக சில இடங்கள் மட்டும் தன் பழைய நிறத்தை வைத்திருந்தது. இடுப்பைப் பற்றி லூசாக மிதந்த சட்டை கோடுகோடாக ஒரு முரட்டுத் துணியில் தைக்கப்பட்டிருந்தது. முதுமை தட்டிப் போயிருந்த ஷுக்கள் பிசிறு பிசிறாய் எதிர்ப்பு காட்டியிருந்தது.

நாராயணன் நிறுத்தப்பட்டான்.

சார், டைம் என்ன?

என்றவளை முறைத்தான். அவள் சைடில் திரும்பி இரண்டு விரலை குறுக்கே வைத்து சிகப்பாய் துப்பிவிட்டுத் திரும்பி, சரிய விட்டு, டிஸ்ப்ளே செய்து, நிமிர்ந்தபோது... தூரமாய் நடந்து கொண்டிருந்தான்.

சட்டைப் பையில் துளாவி இடுப்பொடிந்த சிகரெட்டை எடுத்தான். எதிரே வந்தவளை நிறுத்தி எச்சில் நெருப்பு வாங்கிக் கொண்டான். முதுகுக்குப் பின்னால் ஆட்டோவின் ஹாரன் உதைத்தது. பதறி விலகி ஆட்டோ டிரைவரின் அம்மாவை சம்மந்தப்படுத்தி திட்டினான்.

பஸ் ஸ்டாப் வந்து, வந்து நின்ற பஸ்சில் ஏறிக்கொண்டான்.

சார், சிகரெட்டை கீழே போட்டுடுங்க,

முறைத்தான்.

உங்களைத்தான். கீழே போடுங்க.

மறுபடி முறைத்துவிட்டு இறங்கிக் கொண்டான்.

உதடுகள் வெறுப்பாய் முணுமுணுக்க நடந்தான். சுரங்கப் பாதையைப் பார்த்ததும் படிகளில் மெல்ல இறங்கி எதிர்ப் புறத்தை நோக்கி நடந்தான்.

அதிக வெளிச்சமில்லை. அதிக நடமாட்டமும் இல்லை.

சட்டென்று பாதையின் ஒரு சுவர் ஓரமாக சாய்ந்து உட்கார்ந்து கால்களை நீட்டிக் கொண்டான். சாம்பலைத் தட்டி விட்டு நெருப்பைச் சுடரச் செய்தான்.

கடந்து போனவர்களில் ஒன்று இரண்டு பேர் சில வினாடிகள் ஒதுக்கி இவனைப் பார்த்து, பின் விட்ட இடத்திலிருந்து பேசிக்கொண்டு நடந்தார்கள்.

நாராயணன் கண்களை அழுத்தமாக மூடிக்கொண்டான். கழுத்தில் வியர்வை கொஞ்ச வெளிச்சத்தில் மின்னியது. நெற்றிக்கு அருகே ஒரு நரம்பு மெல்ல ஸ்கிப்பிங் விளையாடிக் கொண்டிருந்தது. - எச்சில் விழுங்கினான். தொண்டையின் நெல்லிக்காய் ஏறி இறங்கியது.

சட்டென்று வலது கையின் விரல்களை மடக்கி ஓங்கி ஒருமுறை தன் தொடையில் குத்திக்கொண்டான்.

சட்டைப் பையிலிருந்து ஒரு மடக்கப்பட்ட காகிதத்தை எடுத்தான். விரித்தான். கண்களைக் குறுக்கிப் பார்த்தான். பத்து பதினைந்து வரிகள் டைப் செய்யப்பட்டிருந்தன.

திடீரென்று ஹாஸ்யம் கேட்டவனாய் சிரித்தான். எதிரொலித்தது.

மொடமொட என்று சேலைகட்டி நடந்த பெண் காதலனின் கையை அவசரமாகப் பிடித்துக்கொண்டு நாராயணனைப் பார்த்தாள். சுத்தமாய் சவரம் செய்து அருகில் நடத்தவன், வா, பிரேமா… யாரோ பைத்தியம் என்றான்.

நாராயணன் தலையை நிமிர்த்திப் பார்த்தான்.

தரையில் அந்தக் காகிதத்தை வைத்து, தன் கண்ணாடியைக் கழற்றி அதற்கு பேப்பர் வெய்ட்டாக வைத்துவிட்டு எழுந்து, நடக்க எத்தனித்த அவர்களை நெருங்கி விறைப்பாய் நின்றான்.

வாங்க, போய்டலாம் என்றாள் லேசான உதறலுடன்.

என்னடா பார்க்கறே? என்றான் காதலன்

அவன் பாக்கெட்டிலிருந்து தலையை நீட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சிகரெட் பெட்டியை வெடுக்கென்று எடுத்தான் நாராயணன். ஒரே ஒரு சிகரெட் எடுத்துக்கொண்டு, பாண்ட் பின் பாக்கெட்டில் விரல்களைச் செலுத்தி அகப்பட்ட ஐம்பது பைசாவை எடுத்து அவன் பாக்கெட்டில்

Enjoying the preview?
Page 1 of 1