Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Varum Varai Kaathiruppean
Varum Varai Kaathiruppean
Varum Varai Kaathiruppean
Ebook117 pages1 hour

Varum Varai Kaathiruppean

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அண்ணன், தங்கை இருவரின் பாசப் போராட்டம். தன் தங்கையின் தற்கொலை வழக்கு மேல் அதிகாரியின் தலையீட்டால் டெலிட் செய்யப்பட்ட, கேஸ். தன் அண்ணன் கோபாலகிருஷ்ணன் பத்திரிக்கை நிருபராக மாறி, இதில் ஏதோ ஒன்று மறைக்கப்படுகிறது என்று ஆராயத் தொடங்குகிறான். அந்த ஆராய்ச்சியில் பல்வேறு மர்மங்களை கண்டுப்பிடிக்கிறான். அந்த மர்மங்கள் என்ன? அவை மாதவியின் மரணத்தோடு தொடர்புடையதா? யார் தான் அவளை கொலை செய்தவன்? விறுவிறுப்பான திருப்பங்கள் நிறைந்த பகுதிகளை வாசிப்போம்…

Languageதமிழ்
Release dateSep 13, 2021
ISBN6580100906673
Varum Varai Kaathiruppean

Read more from Pattukottai Prabakar

Related to Varum Varai Kaathiruppean

Related ebooks

Reviews for Varum Varai Kaathiruppean

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Varum Varai Kaathiruppean - Pattukottai Prabakar

    https://www.pustaka.co.in

    வரும்வரைக் காத்திருப்பேன்

    Varum Varai Kaathiruppean

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    சிதறும் சில துளிகள்

    அன்புள்ள உங்களுக்கு, வணக்கம்.

    நலமா? (தெரிஞ்சி ஒண்ணும் பண்ணப் போறதில்லை. இதெல்லாம் சும்மா சம்பிரதாயப் பம்மாத்து)

    நம் இரண்டு பேருக்கும் பொதுவாய் பேச என்ன, என்ன இருக்கிறது? எனக்கு இலக்கியப் படைப்புகளைப் பற்றி விவாதிக்கப் பிடிக்கும். பார்த்தீர்களா, முகம் சுளிக்கிறீர்கள். வேண்டாம். தொழில் வளர்ச்சியில் இந்தியா என்று நாட்டு நடப்பு பேசலாமா? அலோ, ஏதோ தெரியாத்தனமா கேட்டுட்டேன், அதுக்காக புத்தகத்தை மூடிடலாமான்னு யோசனை செய்றது தப்பு. என்னைப் பத்திப் பேசலாம்னா அது சுயபுராணம். உங்களைப் பத்திக் கேக்கலாம்னா... உங்களை எனக்குத் தெரியாது. வேற என்ன பேசலாம்? அட! மறந்தாச்...! நம்ம தமிழ் சினிமா இல்லையா பேச?

    நம்ம தமிழ் சினிமால ஒரு சிறப்பம்சம் இருக்கு. ஒரு சினிமால ஹீரோவும் ஹீரோயினும் மதம் மாறி காதலிச்சு கடைசில செத்துப் போய்... நம்ம மதர் டேங்க் எல்லாம்... ஐ மீன்.... தாய்க்குளம் - ஸாரி தாய்க் குலம் எல்லாம்

    முந்தானையை வாயில பொத்தி விம்மி... படம் பிச்சுக்கிச்சின்னா… உடனே இந்த தீம் ஜலதோஷம்மாதிரி பரவும். வரிசையா எல்லா படத்திலேயும் மதம் மாறிக் காதலிப்பாங்க. (குறிப்பா ஒரு இந்து - ஒரு கிறிஸ்டியன்) ஒரு கொலைப் படம் பணம் பார்த்துட்டா... வரிசையா கத்தி, கப்டாவோட நூறு வயலின் சத்தத்திலே பாதி இருட்ல பாழடைஞ்ச மண்டபத்திலே (உங்க ஊர்ல அப்படி எதுவும் உண்டா?) கதாநாயகியைத் தொரத்துவாங்க,

    அதுமாதிரி…

    1985-ல் நம்ம சினிமாவுக்கு புது சீன். போலீஸ்காரங்களை மோசக் கும்பலா - அநியாயம் பூரா இவங்களே செய்ற மாதிரி காமிக்கிறது - இல்லைன்னா அயோக்ய அரசியல்வாதியைத் தோலுரிச்சிக் (வாழைப்பழமா, என்ன?) காட்றது... வரவர இது அதிகமாகிட்டு வருது. (ஹி... ஹி... நாங்களும் செய்றதுண்டு சமயத்ல) என் வரையில்... கூடுமான வரைக்கும் போலீசின் திறமைகளை வெளிப்படுத்த அதிகம் விரும்புவேன். இதிலும் முயன்றிருக்கிறேன்.

    - (அப்பாடா! முன்னுரைக்கென ஒதுக்கப்பட்ட ரெண்டு பக்கங்களை நிரப்பியாகி விட்டது!)

    பிரியங்களுடன்,

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    20, தலையாரித் தெரு,

    பட்டுக்கோட்டை,

    சுதந்திர மாதம், 85.

    1

    நான் ஒரு நாளைய குற்றவாளி.

    ஒரு மணிக்கட்டில் மல்லிகைப் பூவைச் சுற்றி, மற்றொன்றில் கைக்குட்டை கட்டி, ஜிப்பாவுக்கு மேல் லுங்கியைக் கட்டி, தோளில் தாய்த்து வைத்து, நெற்றியோரத்தில் வெட்டுத் தழும்புடன் ஜிப்பா பையில் மாக்ட்வல் பிராந்தி வைத்து... என்னைக் கற்பனை செய்யாதீர்கள் என் தோற்றம் அப்படி அல்ல.

    நான் செய்யப்போவது ஒரே ஒரு குற்றம்.

    அதுகூட நம் நாட்டின் தடியான சட்டப் புத்தகத்தின் படிதான் குற்றம்.

    என் மனசாட்சிப்படி அது ஒரு செயல். கையில் கடித்த கொசுவை அடிப்பது போல - காலில் கொட்டிய தேளை சிதைப்பது போல - படம் எடுத்த பாம்பை நசுக்குவது போல - பயிர் நடுவே விளைந்த களையை அறுப்பது போல -

    என் செயலுக்கு என்னிடம் நியாயம் இருக்கிறது.

    இந்த நியாயத்தைத் தூக்கிக்கொண்டு போய் காவல் துறையிடம் காட்டி என் செயலில் தர்மம் இருப்பதற்கு சான்றிதழ் வாங்க முடியாது. ஏனென்றால், அங்கே எல்லாம் அடிபட்டுப்போகும். என் நியாயத்தின் மேல் சில நூறு ரூபாய் நோட்டுக்களை அடுக்கிப் புதைத்துவிடுவான் அவன்.

    அவனைப் பற்றி அப்புறம். முதலில் என்னைக் கொஞ்சம் ஆழமாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

    கோபாலகிருஷ்ணன் என்று ஒவ்வோர் எழுத்தும் தெளிவாய் தெரியும்படி கையெழுத்துப் போடுவேன் நான். முக்கால்வாசியை வெட்டியெறிந்துவிட்டு கோபி என்று தான் அழைக்கப்படுகிறேன். இப்போது யாராவது முழுப் பெயரையும் சொல்லி அழைத்தால்தான் வித்தியாசமாகப்படுகிறது.

    பி. எஸ். சி. கணிதம் படித்தேன். எம். ஐ. டிக்கு முயன்றேன். நான் முற்பட்ட வகுப்பு என்பதால் - எப்படியாவது முன்னுக்கு வந்துவிடுவேன் என்று கணித்து என்னை நிராகரித்தார்கள். நேராய் போட்டோ ஸ்டுடியோ சென்று, அவன் காட்டின கோட்டுகளில் வியர்வை நாற்றம் அதிகம் வராத ஒரு கோட்டைத் தேர்ந்தெடுத்துப் போட்டுக்கொண்டு, டையின் முடிச்சை எப்படிப் போடுவது என்று போட்டோகிராபர் என் கழுத்தில் போடுகையில் கற்றுக் கொண்டு, கொஞ்சமாகச் சிரித்து படம் எடுத்துக் கொண்டேன்.

    என் எதிர் வீட்டுக்காரர் என்னைக் கடுகுப் பார்வை பார்த்துக் கொண்டே ஆங்கிலத் தாளை நீட்டுவார். எல்லாப் பதவிகளுக்கும் மனு செய்தேன். நுழைவுத் தேர்வுகள் எழுதப் போகையில் நிறைய நண்பர்கள் கிடைத்தது தான் மிச்சம். தவிர, ஒரு பேட்டியின் போது ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட சின்னச் சின்ன குருத்து இலைகள் தோன்றின. அடி வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டு தாடி வளர்த்தேன். என்ன உலகம், ச்சை! என்று வானொலி பழுது பார்க்கும் கடையில் சேர்ந்து ஆறு மாதம் உருட்டினேன்.

    இரண்டு ஆண்டு கழித்து இப்போது நான் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த உருப்படியான வேலை கிடைத்தது

    ராகம் அட்வர்டைசிங் கோவில் லே அவுட் ஆர்டிஸ்டு.

    கடைசியில் பாருங்கள். படித்த படிப்பெல்லாம் உதவவில்லை. பள்ளி வாழ்க்கையில் செய்த அல்பத்தனங்கள் உதவின. தோழர்கள், கெமிஸ்டிரி மிஸ்,

    Enjoying the preview?
    Page 1 of 1