Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Miss Manjulavin Mudivurai
Miss Manjulavin Mudivurai
Miss Manjulavin Mudivurai
Ebook106 pages56 minutes

Miss Manjulavin Mudivurai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெரும் பணக்காரராக பேரும், புகழோடும் திகழும் எம்.கிருஷ்ண குப்தாவின் ஒரே மகன் திலீப். அனைத்துவிதமான தீய பழக்கங்களின் இருப்பிடம் அவன். அவன் மஞ்சுளாவின் மீது கொண்ட ஆசையால் அவளை திருமணம் செய்ய ஆசைப்பட்டான். அவனின் ஆசை நிறைவேறியதா? பணத்தால் எதையும் வாங்க முடியும் என்று நினைத்தவர்களின் முடிவுரையைப் படிப்போம்.

Languageதமிழ்
Release dateNov 1, 2022
ISBN6580100908102
Miss Manjulavin Mudivurai

Read more from Pattukottai Prabakar

Related to Miss Manjulavin Mudivurai

Related ebooks

Reviews for Miss Manjulavin Mudivurai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Miss Manjulavin Mudivurai - Pattukottai Prabakar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மிஸ் மஞ்சுளாவின் முடிவுரை

    Miss Manjulavin Mudivurai

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    காரை நிறுத்திவிட்டு இறங்கினான் திலீப்.

    இங்கேயே திலீப் பற்றி ஒரு சிறு குறிப்பு வரைந்து விடலாமா?

    அரசாங்க கோழி முட்டை குடியானவன் வீட்டு அம்மிக் கல்லை உடைக்கும் என்று பழமொழி உண்டு. திலீப் ஒரு கோழிப் பண்ணையே வைத்திருக்கும் முதலாளியின் செல்லப் பிள்ளை செல்வப்புத்திரன்.

    பழமொழி புரியாதவர்களுக்கு தந்தி மொழியில் விளக்கி விடுவோம். உங்களுக்கு எல்.கே.ஜி. யு.கே.ஜி. என்றால் புரியும். நாட்டு நடப்பு அறிந்தவருக்கும் தினசரி படிப்பவருக்கும் எம்.கே.ஜி. என்றால் புரியும்.

    எம். கிருஷ்ணன் குப்தாவின் செல்லமான அழைப்புச் சுருக்கம் தான் எம்.கே.ஜி. இவர் ஒரு தொழிலதிபர். ‘உங்களுக்கு என்னென்ன தொழில்கள் இருக்கின்றன?’ என்று இவரிடம் கேள்வி கேட்டுவிட்டு இவர் பதில் சொல்லி முடிப்பதற்குள் நீங்கள் இந்த நாவலைப் படித்து முடித்து வாசகர் கடிதம் எழுதி போஸ்ட் செய்துவிட்டு வந்து விடலாம்.

    எம்.கே.ஜி. அரசியல்வாதி அல்ல. ஆனால் எல்லா அரசியல்வாதிகளுக்கும் வேண்டப்பட்டவர். ஆளுங்கட்சியாக யார் வந்தாலும் சரி பதவியேற்பு விழாவுக்கு முன்பாக பெரியார், அண்ணாவுக்கு மாலை போட்ட கையோடு எம்.கே.ஜி. வீட்டிற்கு வந்து வாழ்த்து பெற்றுக்கொண்ட பிறகு தான் தலைமை செயலகத்துக்கு கார்கள் செல்லும்.

    அரசியல் திருவிழா தேர்தல். அந்த தேர்தல் சமயத்தில் சில்லறை செலவுகளுக்காக எம்.கே.ஜிக்கு போன் செய்வார்கள். அவர் மறுத்ததே கிடையாது. மறுக்கவும் முடியாது. சகடை சுழன்றால்தான் வாளியில் தண்ணீர் இறைக்க முடியும் என்பது அவருக்குத் தெரியும். ‘சரி, வரச் சொல்லுங்கள்’ என்பார். வருபவர்களிடம் பணத்தைப் பெட்டியில் அடுக்கிக் கொடுத்துப் பழக்கமில்லை. சாக்கு மூட்டையில் கட்டிக் கொடுத்தனுப்பித்தான் பழக்கம்.

    எம்.கே.ஜி.யின் ஏக வாரிசு திலீப். வயது 27. மாநிறம். சற்றே பழுப்பேறிய கண்கள். டூத் பிரஷ்போல முள்ளுமுள்ளாக மீசை. மெலிந்த தேகம். 5.9 உயரம். திலீப்புக்கு தொழில், பொழுதுபோக்கு எல்லாமே ஒன்றுதான். அது; உல்லாசமாக இருப்பது. உல்லாசம் என்கிற வார்த்தையை எந்தெந்த செயல்களில் பொருத்த முடியுமோ அத்தனையிலும் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம்.

    பிள்ளையின் வசதிக்காக தந்தை பாம்பே, டெல்லி, ஊட்டி, பெங்களூர் என்று எங்கும் பங்களாக்கள் வாங்கிப் போட்டிருக்கிறார். ஒரு கார் ரிப்பேராகி விட்டால் அது சரியாகும் வரை திலீப் சிரமப்படுவானே என்று வகைக்கு ஒன்றாக அவனது உபயோகத்திற்கு மட்டும் ஐந்தே ஐந்து கார்கள் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

    திலீப் மூன்று பேர்கள் கொண்ட நண்பர்கள் குழு வைத்திருக்கிறான். மூன்று பேரும் அற்புதமான நண்பர்கள், ‘இந்த பூமி உருண்டை என்பது பொய். அப்படி இருந்தால் அது சுழலும் போது கடல் தண்ணீர் எல்லாம் கீழே கொட்டிவிடாதா?’ என்று திலீப் சொன்னால்...

    அட! இதை நாங்கள் யோசிக்கவே இல்லையே. பூமி உருண்டை என்பது மகத்தான பொய்தான். விஞ்ஞானிகள் நம்மை ஏமாற்றி விட்டார்கள் என்று மூவரும் கோரஸாக பெரிய சத்தத்தில்... ஜிங்... ச்சா!

    போன வாரம் ஹைதராபாத் போயிருந்தேன். ஹோட்டல்ல ஒரு காபரே பார்த்தேன். மோனிஷான்னு பேரு. அய்ய்ய்ய்யோ! பாம்பு நெளியற மாதிரி வயித்தை நெளிச்சாப் பாரு! ஒரு சேட்டு பத்து ரூபா கட்டைப் பிரிச்சி அவளுக்கு அபிஷேகமே செஞ்சான்.

    நிறுத்துடா! அவளுக்கு போன் பண்ணு ஃபிளைட் பிடிச்சி வரச்சொல்லு. போட் கிளப் பங்களாவுக்கு வரச்சொல்லு. ஆடச்சொல்லு. நூறு ரூபா நோட்டுக் கட்டு பிரிச்சி அபிஷேகம் பண்றேன்னு சொல்லு.

    மறுநாள் மோனிஷா இந்த நான்கு பேர்களுக்கு மட்டும் வந்து ஆடியிருக்கிறாள் அபிஷேகம் பெற்றிருக்கிறாள். பிறகு தனித்தனியாக தீபாராதனை.

    கதையின் முதல் வரியில் காரை நிறுத்திவிட்டு இறங்கின இந்த திலீப் அந்த நட்சத்திர ஹோட்டலின் முகப்பை நோக்கி நடந்தான்.

    மகாராஜா தலை குனிந்து கண்ணாடிக் கதவைத் திறந்து விட்டார்.

    பார்ட்டி நடக்கும் ஹால் மூன்றாவது மாடியில் இருந்தது. லிஃப்ட் வாசலில் நின்று பொத்தான் அழுத்தினான். ‘6-5-4-3-2-1-G’ என்று லிஃப்ட் இறங்கி வந்து கதவு திறந்தது.

    திலீப் உள்ளே நுழைந்து மூன்றாவது எண்ணை அழுத்தப்போன சமயம் எக்ஸ்க்யூஸ் மீ" என்று அழைப்பு கேட்டது.

    அவள் ஓடி வந்து உள்ளே நுழைந்து கொண்டாள்.

    தேர்ட் ஃப்ளோர் ப்ளீஸ்... என்றாள்.

    அவள் அழகாய் இருந்தாள் என்பதோடு வர்ணனையை முடித்துக் கொண்டால் அது அவளின் அழகை அவமானப்படுத்துவதாகும். வருடத்தின் 365 நாட்களில் குறைந்தது 300 பெண்களை அந்தரங்கமாக சந்திக்கிற திலீப்பிற்கே தன்னையறியாமல் புருவங்கள் உயர்ந்தன.

    அவள் டார்க் வய்லெட் நிறத்தில் சூரிதார் அணிந்திருந்தாள். அதில் ஜிகினா, ஜரிகை வேலைப்பாடுகள். தங்க கைகளில் மேட்ச்சாக

    Enjoying the preview?
    Page 1 of 1