Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Roja Malare... Rajakumari
Roja Malare... Rajakumari
Roja Malare... Rajakumari
Ebook101 pages38 minutes

Roja Malare... Rajakumari

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. At the same time he has penned lot of novels in all other genres like love, social, comedy. He has also worked as screenplay and dialogue writer for more than 25 tamil movies. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan. First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil. Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.
Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580100903690
Roja Malare... Rajakumari

Read more from Pattukottai Prabakar

Related to Roja Malare... Rajakumari

Related ebooks

Reviews for Roja Malare... Rajakumari

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Roja Malare... Rajakumari - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    ரோஜா மலரே... ராஜகுமாரி

    Roja Malare Rajakumari

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    ஜோதிராமனை குறுக்கெழுத்துப் போட்டி போல மேல் இருந்து கீழாகப் பாருங்கள். வலம் இருந்து, இடமாகப் பாருங்கள். பக்த மீராவின் சகோதரன் என்று சொல்லத் தோன்றுகிறதா? கவுதம புத்தரின் கொள்ளுப் பேரனா என்று கேட்கத் தோன்றுகிறதா? பாத்திரம் எடுத்து வந்து, முகத்தில் இருந்து வடிகிற பாலை சேகரிக்கத் தோன்றுகிறதா?

    எனில், நிச்சயம் நீங்கள் 10 ரூபாய்க்கு நாலு பேனா வாங்கி ஏமாறுகிறவர்களில் ஒருவர், வீட்டுக்கு வந்தபின் உங்கள் மனைவி சொல்லிய பிறகுதான்... வாங்கிய பழம் அழுகல் என்று உணர்பவர்களில் ஒருவர், சட்டையைக் கிழித்து விட்டுக்கொண்டு வந்து விதவை அக்கா- ஊமைத் தம்பி- வாழாவெட்டித் தங்கை- குடிகார அப்பா என்று கதை, வசனம் சொன்னால் கண் கலங்கி காசு கொடுப்பவர்களில் ஒருவர்.

    உங்களுக்கு மட்டுமாவது ஜோதிராமனின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை அறிமுகப்படுத்தியாக வேண்டும்!

    இவனது மூளையில் ஒரு விரிசல் இருக்கிறது. வெளியில் தெரியாத விரிசல். அப்பா ஹரிராமன் ஏற்படுத்திய விரிசல்.

    இன்றைக்கு முப்பத்தி இரண்டு வயதான ஜோதிராமனுக்கு அன்றைக்கு வயது இருபத்தி நாலு. என்றைக்கு...?

    மைதிலியை மாய்ந்து மாய்ந்து காதலித்தானே... அன்றைக்கு.

    இரட்டை ஜடை மைதிலி. பக்கத்து வீட்டு மைதிலி. ஊட்டச்சத்து நிறைந்த- மாதா மாதம் 'ஜாக்கெட்’டில் ‘டக்கு’ பிரித்துவிட்டுக்கொண்ட மைதிலி. படித்து முடித்துவிட்டு, வீட்டுக் கூட்டத்தில் வந்து உட்காரும் மாப்பிள்ளைக்கு ‘வரவீணா' பாடிக் காட்டக் காத்திருக்கும் மைதிலி. மொட்டை மாடியில் துணி உலர்த்த வந்து உடற்பயிற்சி செய்யும் ஜோதிராமனைப் பார்த்துவிட்ட மைதிலி.

    அவனும் நோக்கினான்; அவளும் நோக்கினாள். அவன் சிரித்தான். தன் கற்பழிந்து போனது போலப் பதறி அவள் ஓடினாள். மறுநாள் சிரிக்க முயற்சித்தாள். மூன்றாம் நாள் பாதி சிரித்தாள். நான்காம் நாள், 'என் பேரு மைதிலி' என்று கேள்விக்கு பதில் சொன்னாள்.

    ஜோதிராமன் ஒரு வாரம் கழித்து அவள் மேல் காகித அம்பு விட்டான். அதில், 'மைதிலி, உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு. உனக்கும் என்னைப் பிடிச்சிருந்தா சாயங்காலம் ராயல் பூங்கா வாசல்ல அஞ்சு மணிக்குக் காத்திருக்கும் என்னை வந்து பாரு’ என்று காதலையும், அழைப்பையும் எழுதி இருந்தான்.

    மாலை நாலே முக்காலுக்கு கன்னிப் பெண் மைதிலி தன் தாயிடம் வந்து, நாளைக்குக் கல்யாணத்துக்குப் போகணுமில்லே! என்னோட 'ஜாக்கெட்’- பாவாடையை 'அயர்ன்' பண்ணி வாங்கிட்டு வந்துடுறேன்ம்மா என்று சொல்லிவிட்டு பூங்காவுக்கு வந்தாள்.

    அங்கு ஆளுயரப் புதர்கள். அங்கங்கே வளையல் சப்தங்கள். சோழி எறிந்த சிரிப்புகள்.

    மிகவும் வியர்த்துப் போயிருந்த மைதிலியின் தாடையைப் பற்றி நிமிர்த்திய ஜோதிராமன், பிரான்ஸ் தேச கலாச்சாரத்தைக் கற்றுக் கொடுக்கும் சீரிய நோக்கத்துடன் அவளின் துடிக்கும் அதரங்களை தனது இதழ்களால் நெருங்கினான். முதல் காதல் முத்திரை. ஏழு ஜென்மமும் தொடர்ந்து ஞாபக அடுக்குகளில் அழுத்தமாகத் தங்கி, நித்திரையைக் கலைத்து துடிக்க வைக்கிற முதல் முத்தத்தின் அரங்கேற்றம். யாரும் தலைமை தாங்காமல், வாழ்த்துரைக்காமல் ராயல் பூங்காவின் பின்னணியில் நடந்தேறியது.

    ஜோதிராமனின் காதல் நாளொரு கடிதமும், பொழுதொரு முத்தமுமாக வளர்ந்தது. மொட்டை மாடி ‘டூ’ மொட்டை மாடி தாவி சாகசம் செய்து, அவளை மடியில் கிடத்தி சரசம் செய்தான். ஆகாய விமானம் கடந்து போகும் போதெல்லாம் பதறி விலகி, அங்கேருந்து யாராச்சும் பார்த்துடப் போறாங்க... என்றாள் காதலி.

    என்னோடு நீ நாளைக்குக் கல்யாணத்துக்கப்புறம் குடித்தனம் பண்ணப் போற ‘ரூமை' பார்க்க வேணாமா? என்றான், ஒரு ஞாயிற்றுக்கிழமை மத்தியானத்தில்...

    எப்படிப் பார்க்கறது?

    மொட்டை மாடி வழியா தாவி இந்தப் பக்கம் வந்துடு.

    உங்க அப்பா?

    ஊர்ல இல்லை! உங்க அம்மா?

    தூங்கறாங்க.

    அப்போ... வா.

    அவன் கை கொடுக்க, தாவி வந்தாள். படிகள் இறங்கி, ஜோதி ராமனின் அறை... 'கம்பெனி’ மாநாடு நடத்த இயலுகிற 'ஹால்' எல்லாம் ‘மெகா சைஸில்’! வருடுகிற செயற்கைக் குளிர். வாசமூட்டப்பட்டக் காற்று.

    மைதிலி திருப்பதி லட்டை அப்படியே திணிக்க இயலுகிற அளவுக்கு வாய் பிளந்து வியந்து போனாள்.

    ஜோதிராமன் அவளின் கைபிடித்து தன்னை நோக்கி இழுக்க, ஆதாரக் கம்பு உருவப்பட்ட கொடியாக சரிந்தாள் அவன் மார்பில். அங்கங்கே அங்கங்களின் அந்தரங்க விசாரணைகள்.

    ‘பிரஸ் பட்டன்’ போல் இதழ்களும் இதழ்களும் இணைய... 'சுவிட்ச்' இயக்கமாக இமைகள் குனிந்து கொண்டன. கைகள், உலாவும் கைகள், நகரும் கைகள், தங்கும் நகைகள், தவழும் கைகள், தவிக்கும் கைகள், தயங்கும் கைகள், தடுக்கும் கைகள், தடை மீறும் கைகள்,

    Enjoying the preview?
    Page 1 of 1