Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Moondravathu
Moondravathu
Moondravathu
Ebook637 pages3 hours

Moondravathu

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

கதையின் நாயகனான உமாசங்கர் கௌரவமான குடும்பத்தை சேர்ந்தவர். அவரது 21ம் வயதில் பரம்பரை சொத்தில் பாகம் பிரித்து கொடுக்கப்படுகிறது. உமாசங்கரின் சொத்தை அபகரிக்க சிலர் திட்டம் போட்டுகொண்டிருக்கின்றனர். இதற்குகிடையில் ஜீவா என்ற பெண்ணை சந்திக்கும் அவனின் நட்பு, மோதலில் முடிவடைகிறது. ஜீவாவின் அண்ணன் ராஜமூர்த்தியோ உமாசங்ககருடன் நெருங்கி பழக முயற்சிக்கிறான். பல குழப்பங்களுடன் இருக்கும் திகழும் உமாசங்கருக்கும் மூன்றாவதாக அழகி என்ற பெண்ணின் நட்பு எவ்வாறு உதவப்போகிறது? ராஜமூர்த்தியின் உண்மை முகம் என்ன? உமாசங்கர் தன் சொத்தை எவ்வாறு பாதுகாத்துக்கொண்டன் என்பதையெல்லாம் எஸ். ஏ. பியின் சுவரசியமான நடையில் வாசியுங்கள்.
Languageதமிழ்
Release dateNov 6, 2020
ISBN6580136705916
Moondravathu

Read more from S.A.P

Related to Moondravathu

Related ebooks

Reviews for Moondravathu

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Moondravathu - S.A.P

    http://www.pustaka.co.in

    மூன்றாவது

    Moondravathu

    Author:

    எஸ். ஏ. பி.

    S.A.P

    For more books

    http://www.pustaka.co.in/home/author//s-a-p

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. உங்களுடையதுதானா அந்தக் கார்?

    2. ஆறே கால் இலட்சம்

    3. மாதவர அழகி

    4. பறக்கும் தட்டு மகன்

    5. அக்காவின் தடுமாற்றம்

    6. பியூர் பிஸினஸ்

    7. புரிந்ததா ஜீவா?

    8. 'ரிஷி'யின் உபதேசம்

    9. சீட்டுக்குருவியின் இறகு

    10. வேறு வழியில்லை

    11. குறுக்கே வந்த சோமசேகரன்

    12. கடவுளே!

    13. நானாக இருந்தால்...

    14. பிடித்தே ஆக வேண்டும்

    15. ரிஷி மூலம்

    16. கே. கே. க்கு என்ன பதில்?

    17. இரண்டல்ல, ஐந்து

    18. டேக் டௌவன்!

    19. சீடையும் முறுக்கும்

    20. சோமுவுக்கு ஒரு வேலை

    21. அழகிய குப்பை

    22. யார் நீ?

    23. இரண்டு ரோஜாக்கள்

    24. சீட்டுக் குலுக்கிப் போட்டால்?

    25. பம்பாயில் புரட்சி

    26. ஜீவா சொல்படி....

    27. பெரிய மனிதரென்றால் பெரிய மனிதர்தான்!

    28. பூஜை அறையில்

    29. காதலுக்குக் கூலி

    32. மீனம்பாக்கத்தில் ஜீவா

    31. துண்டு சிகரெட்

    32. புறப்படுங்கள் நர்ஸரிக்கு

    33. எனக்கும் நர்ஸரிக்கும் என்ன சம்பந்தம்?

    34. மர்மப் புன்னகை

    35. கடிதமா, கவிதையா?

    36. கிழவி! கிழவி!

    37. ஏன் இந்தக் கொண்டாட்டம்?

    38. நிலவில், ஓட்டலில்...

    39. சொல்லிவிட்டீர்களா?

    40. சந்திப்பு

    41. சோடாப் புட்டி

    42. புது முகமா?

    43. விருந்து முடிந்தது

    44. கேள்வியைக் கவனி!

    45. இரண்டு புகைப்படங்கள்

    46. நெஞ்சில் ஒரு வேதனை

    47. பை எங்கே போகிறது?

    48. படுக்கை அறை

    49. புவனா! எங்கே போகிறாய்?

    50. போர்வைக்குக் கீழே

    51. உமாசங்கருக்கு ஓர் ஊதுகுழல்

    52. உடன்படிக்கை

    53. இரத்தம் கொதிக்கிறது

    54. அழகியின் கல்யாணம்

    55. அழகிக்கு நீச்சல் உடை

    56. குருவும் சீடனும்

    57. ஸித்தலிங்கய்யா சொப்பனம்

    58. அவனா இவன்!

    59. மண் குதிரை

    60. சோமு, உஷார்!

    61. குட்டிப் பையன் அழைத்தான்

    62. பங்கு வேண்டும், பங்கு!

    63. வரவேற்பு

    64. மறக்க முடியாத உதவி

    65. தூணுக்குப் பெயர் ஸித்தலிங்கய்யா

    66. கோடைக்கானலில் சில நிமிடம்

    67. இரசிகரின் ஏக்கம்

    68. ஸித்தலிங்கய்யா எங்கே?

    69. திரை கிழிந்தது

    70. எலுமிச்சம்பழ சர்பத்

    71. ஒட்டு வேலை

    72. ஜனார்த்தனத்தின் புன்சிரிப்பு

    73. திருப்பு முனை

    74. மூன்றாவது

    1. உங்களுடையதுதானா அந்தக் கார்?

    சத்யஜித் என்றால் சத்யஜித்துத்தான்.

    வெறும் டைரக்டரா அவன்? கவிஞனய்யா கவிஞன்.

    தண்டக் கருமாந்தரண்டா.

    தோட்டத்து ஊஞ்சலில் உட்கார்ந்துகொண்டு, அவன் கவிதை எழுதுவதைக் குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருக்கிறாளே அந்தக் காட்சி-ஆகா! நானும் ஒரு வங்காளியாய்ப் பிறந்து...

    ஏய், ஏய்! எல்லா வங்காளிப் பெண்களும் மாதவி முகர்ஜி மாதிரி இருப்பாள் என்று நினைத்துவிட்டாயா? அங்கமுத்துகளும் அங்கே உண்டுடா.

    நேரம் போனதே தெரியவில்லையப்பா.

    ஆமாமா. நான் எழுப்பின பிறகுதானே மணி என்ன என்று கேட்டாய்?

    ஞாயிற்றுக்கிழமை காலை. படம் முடிந்ததும் முடியாததுமாய்க் கூட்டம் கலையும் நேரம். ஒரே நெருக்கடி, திணறடி, சந்தடி.

    மிஸ்டர்!

    இந்த மாதத்துப் 'பாக்கெட் மணி' நூறு ரூபாயும் பத்தாம் தேதி பிறப்பதற்குள் பறந்து விட்டதே என்ற கவலையில் மூழ்கினவனாய், ஸஃபயர் தியேட்டரின் ஓய்வுக் கூடத்தில் நின்று குளிர்பானம் அருந்திக்கொண்டிருந்த உமாசங்கரின் பு மேயும் செவியை அந்தப் பெண் குரல் துளைக்கத் தவறிவிட்டது.

    மிஸ்டர்!

    யாரோ யாரையோ கூப்பிடுகிறார்கள் என்ற உணர்வு தனது கவனத்தின் பின்னணியில் இலேசாகப் பதிவாக, சில்லென்ற கலரை மெல்ல உறிஞ்சிக்கொண்டிருந்தான் அவன்.

    உங்களைத்தான், மிஸ்டர்!

    குரல் வெகு அண்மையில் கேட்கவே அவன் சிறிது சந்தேகத்துடன், ஆனால், வாயினின்று ஸ்டிராவை எடுக்காமலேயே, தலையைத் திருப்பிப் பார்த்தான்.

    கெலுகெலுவென்று கத்தி போலிருந்த ஓர் அழகியல்லவா இந்நேரம் அவன் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்திருக்கிறாள்! உமாசங்கர் வியப்புற்றான். மஞ்சள் கரையிட்ட சிவப்பு பனாரஸ் புடைவையும் படகுக் கழுத்து ரவிக்கையும் அணிந்திருந்த அந்த மங்கையை அவன் அதற்கு முன் சந்தித்ததில்லை.

    அந்தக் கார் உங்களுடையதா? என்றாள் அவள்.

    உதடு சற்றுச் சின்னதாக இருந்திருந்தால் இன்னும் கவர்ச்சியாக அமைந்திருக்கும் என்றாலும், மோவாயின் கூர்மை அந்தக் குறையைத் தாராளமாக ஈடுசெய்து விட்டிருந்ததை உமாசங்கரின் வாலிபக் கண்கள் குறிப்பு எடுத்துக்கொள்ளத் தவறவில்லை. செதுக்கிய மூக்கும், வளைத்து வரைந்தாற்போன்ற மெல்லிய புருவமும், நீண்ட கழுத்தும் அவளைக் கர்வம் பிடித்தவள் என்று பறை சாற்றினாலும், அந்தக் கர்வத்தினூடே கொஞ்சம் குறும்புத்தனமும் பதுங்கியிருப்பதை அவளது விழிகளின் மினுமினுப்பு காட்டிக் கொடுத்தது.

    இந்த இடத்தில் உமாசங்கர் ஒரு தவறு செய்துவிட்டான். அவளது வனப்பின் விமரிசனத்தை முடிக்கும் வரை கலர் குடிப்பதை ஒத்தி போட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், அழகையும் பானத்தையும் ஏக காலத்தில் பருக வேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது. புட்டி காலியாகி விட்டது என்றும், தொடர்ந்து உறிஞ்சினால் சிலபல ஓசைகள் வெளிப்படும் என்றும் அவனுக்குப் புரிந்திருக்கும்.

    நாதசுரம் வாசித்தது போதும். நான் கேட்பதற்குப் பதில் சொல்லுங்கள் என்றாள் அவள்.

    புட்டியை வாங்கிக்கொண்ட கலர்க்காரன் எவ்வளவோ கஷ்டப்பட்டுத்தான் பார்த்தான். புன்னகையைப் புறங்கையால் அழித்துவிடுவது அவ்வளவு எளிதான சாதனையாக இருக்கவில்லை.

    கவனியாதவன் போல், காற்சட்டைப்பையிலிருந்து பர்ஸை எடுத்தபடி, அவளை நோக்கி, நீங்கள் ஒன்று சாப்பிடுங்களேன்? நன்றாக இருக்கிறது, என்று உபசரித்தான் உமாசங்கர்.

    மேலும் கீழுமாக அவனைப் பார்த்தாள் அவள். பிறகு, உங்களதுதானே அந்தக் கார்? என்றாள்.

    அவள் சுட்டிக் காண்பித்த திசையில் ஒரு பூந்தொட்டியும், அதற்கு அப்பால் கண்ணாடி அடைப்புந்தான் இருந்தன.

    எந்தக் காரைச் சொல்கிறீர்கள்? என்றான்.

    நம் இரண்டு பேர் காரைத் தவிர மற்றதெல்லாம் போய் விட்டன. வாருங்கள் சொல்கிறேன், என்று அவள் வழி காட்டினாள். அவன் தன் நெஞ்சுப்பட்டியில் செருகியிருந்த கூலிங் கிளாஸை எடுத்து மாட்டிக்கொண்டு படியில் இறங்கும்போது, காவற்காரப் பையன் நிற்பது தெரிந்தது. அவன் தான் அவளுக்குத் தன்னைச் சுட்டிக் காட்டியிருக்க வேண்டும் என்று உமாசங்கர் ஊகித்தான்.

    பையன், நான் அப்பவே சொன்னனே, சார்? என்றான்.

    அவன் எப்போது சொன்னான், என்ன சொன்னான் என்பது உமாசங்கருக்கு நினைவில்லை. அவன் முகத்தைப் பார்க்கும்போது, அவன் என்ன சொல்லியிருந்தாலும் அது குறிப்பிடத்தக்க பொன்மொழியாக இருந்திருக்க முடியாது என்றும் தோன்றிற்று.

    இதுதான் உங்கள் காரோ? என்றாள் அவள்.

    ‘நீர்தான் ஜான்ஸன் துரை என்பவரோ?' என்பது போலிருந்தது தொனி. பக்கத்திலிருந்தது அவள் வண்டி என்று புரிந்துகொண்டான் உமாசங்கர். என்னதான் அவளது 2345 இலக்கமிட்ட கார் தடபுடலாக இருந்தாலும், அதற்காகத் தன் காரை அவள் காயலான் கடைச் சரக்குப் போல் அருவருப்புடன் பார்த்தது உமாசங்கருக்குப் பிடிக்கவில்லை.

    ஆனாலும் அவள் ரவிக்கையின் வெட்டு மிகவும் பிடித்து விட்டிருந்ததால், ஆமாம், என்றான்.

    நீங்கள்தான் ஓட்டிக்கொண்டு வந்தீர்களா? என்றாள்.

    அதுவாக வந்திருக்க முடியாதல்லவா? என்றான்.

    கேள்விக்குப் பதில், என்றாள்.

    அவள் பாட்டி ஒரு பள்ளிக்கூட ஆசிரியையாக இருந்திருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு, நான்தான் ஓட்டி வந்தேன். நான்தான் இங்கே நிறுத்தினேன், என்றான்.

    ஓட்டி வந்தது நீங்கள் தான், இங்கே நிறுத்தினது யார்? என்றாள்.

    அதுதான் சொன்னேனே? என்றான்.

    கேள்விக்குப் பதில், என்றாள் அவள். அதாவது, அவள் கேட்ட பிறகுதான் பதில் சொல்ல வேண்டும் என்பதும், அடுத்து வரக்கூடிய கேள்வியை ஊகித்துச் சொல்லப்படும் பதில் கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படாது என்றும் புரிந்தது.

    நான்தான் நிறுத்தினேன்.

    மண்டையில் மூளை உள்ளவர்கள் யாரும் இந்த மாதிரி நிறுத்துவார்களா? என்றாள் அவள்.

    பின்னால் நினைத்துப் பார்க்கும் போதுதான், அவள் எவ்வளவு கடுமையாகப் பேசினாள் என்பது உமாசங்கருக்குத் தெரிந்தது. ஆனால், அந்த நேரத்தில், அவனுக்குக் கோபம் வரவில்லை.

    இருக்கிற வேலையை எல்லாம் விட்டுவிட்டுத் தன்னோடு அவள் சண்டை பிடிக்கிற மாதிரி அப்படி என்ன குற்றம் செய்துவிட்டோம் என்று அவன் கார்களை ஆராய்ந்தான். இடப்பக்கமிருந்த அவன் காருக்கும், வலப்பக்கமிருந்த அவள் காருக்குமிடையே இடைவெளி குறைவாக இருந்தது என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. இதற்கா இவ்வளவு பிரமாதப்படுத்துகிறாள்?

    இதற்குள் சிறிய கூட்டம் ஒன்று கூடிவிட்டது.

    கொஞ்சம் ஒட்டி நிறுத்திவிட்டேன். அவ்வளவு தானே? அதற்காக நீங்கள் கன்னாபின்னாவென்று பேசுவது அழகாயில்லை, என்று ஆட்சேபித்தான் உமாசங்கர்.

    'உங்களுக்கு அழகில்லை,' என்று அவன் சொல்லி விட்டாற்போல் அவள் முகம் சுருங்கிற்று.

    அவன் தொடர்ந்து, இடித்துவிடும் என்று பயப்படுகிறீர்களா? தைரியமாக எடுங்கள். உடனே திருப்பிவிடக்கூடாது, அவ்வளவுதான். ஓர் ஐந்து அடி நேரே வந்து, அப்புறம் இடப்பக்கம் ஒடியுங்கள், என்று ஸ்டியரிங்கைப் பிடிப்பதுபோல் சைகை செய்து காண்பித்தான்.

    எப்படி எப்படி? என்றாள் அவள், அவன் மாதிரியே கையை வைத்துக்கொண்டு. நேரே வந்து...

    ஐந்தடி வந்து அப்புறம் திருப்ப வேண்டும்.

    அதற்கு முன்னாடி திருப்பிவிடக்கூடாது, இல்லையா?

    கரெக்ட், என்றான் அவன், பதினெட்டு வயது வடிவத்துக்குள், ஆறு வயது மூளையை வைத்த ஆண்டவனை நொந்துகொண்டவனாய்.

    அவள் தன் முகத்தை நிமிர்த்தி, கண்களைப் பாதி மூடியபடி, செயற்கைப் புன்னகை ஒன்றை வரவழைத்துக் கொண்டு, முதலில் நீங்கள் எடுத்துக் காண்பியுங்களேன். உங்கள் வண்டியை? என்றாள்.

    அந்தக் குரலில் தென்பட்ட சவால் அவனுக்குப் புதிராக இருந்தது. இவ்வளவு சாதாரண விஷயத்தை இப்படிப் பெரிதுபடுத்துகிறாளே என்ற வியப்பும், சவால் விடுகிறாள் என்றால் அதில் ஏதோ சிக்கல் இருக்கத்தான் வேண்டும் என்ற சந்தேகமும் ஒருங்கே உதித்தன.

    சாவியை எடுத்துக்கொண்டு தன் காரை நோக்கி நகர்ந்தவன், அப்படியே நின்றான்.

    காரின் முன்பக்க வலக்கதவை அவன் திறந்தாக வேண்டும். கொஞ்சம் திறந்தாலே, பக்கத்துக் காரில் இடிக்கும். எப்படி உள்ளே ஏறி உட்காருவது?

    தலையைச் சாவியாலேயே சொறிந்தபடி அவன் நின்று கொண்டிருந்த போது, தன் முதுகை இரண்டு பரிகாசக் கண்கள் துளைப்பதை உமாசங்கரால் உணர முடிந்தது.

    என் வண்டியை முதலில் எடுக்க முடியாது போலிருக்கிறதே... என்று இழுத்தான்.

    அப்படியென்றால் என் வண்டியையாவது கொஞ்சம் எடுங்களேன், ன்றாள் அவள்.

    கொடுங்கள் சாவியை, என்று கையை நீட்டினான்.

    உங்களுக்குக் காரை நிறுத்தத்தான் தெரியாது என்று நினைத்தேன். படிக்கக்கூடத் தெரியாது போலிருக்கிறதே! என்றாள் அவள், தனது காரின் பம்பரில் பொருத்தப்பட்டிருந்த சிவப்பு அறிவிப்பைச் சுட்டிக்காட்டியபடி.

    அதில், 'எச்சரிக்கை. லெஃப்ட் ஹாண்ட் டிரைவ்' என்று பொறிக்கப்பட்டிருந்தது.

    உள்ளம் தொய்ய, உமாசங்கர் சற்றுப் பின்னால் வந்து இரண்டு கார்களையும் நிமிர்ந்து பார்த்தான்.

    எல்லாக் கண்ணாடிகளும் ஏற்றப்பட்டு இரண்டு கார்களும் அடுத்தடுத்து, சுவரைப் பார்த்தாற்போல் நின்றிருந்தன அவனது காரின் பூட்டு வலப்பக்கமுள்ள முன் கதவுப் பிடியிலும் அவளது காரின் பூட்டு இடப்பக்கமுள்ள முன் கதவுப் பிடியிலும் அமைக்கப்பட்டிருந்தன. இரண்டு கதவில் எதையுமே திறக்க முடியாது என்ற ஞானோதயம் ஏற்பட்டதும், உமாசங்கர், இப்போது என்ன செய்கிறது? என்றான்.

    இப்போது என்ன செய்கிறது? என்று அலைக்கழித்தாள் அவள்.

    அவனுக்கு வியர்த்துக் கொட்ட ஆரம்பித்துவிட்டது. காரை நிறுத்தும்போது கவனிக்காமல் போய்விட்டோமே என்ற வருத்தம் அவனுக்கு இப்போதுதான் ஏற்பட்டது. சார் சார்! கோடு மேலே இருக்கு சார் வண்டி. ரிவர்ஸ் எடுத்துச் சரியா நிறுத்துங்க, சார்! இப்படியிருந்தா நீங்கள் இறங்கக்கூட முடியாது சார், என்று காவற்காரப் பையன் அவனிடம் மன்றாடியதும் நினைவுக்கு வத்தது ஏன் இறங்க முடியாது? என்று கேட்ட உமாசங்கர் கையை வெளியே நீட்டி, சாவியைப் பிடியில் பொருத்தித் திருகிய பின், இடப்பக்கமாக இறங்கி, எல்லாக் கதவுகளுக்கும் கண்ணாடி ஏற்றிப் பூட்டிவிட்டுத் தியேட்டருக்குள் போய் விட்டான். பக்கத்துக் கார் இடப்பக்கம் ஸ்டீயரிங் உள்ளது என்று அவனுக்கு அப்போது தெரியாமல் போய்விட்டதே!

    கூடியிருந்தவர்கள் ஆளுக்கொரு யோசனை சொல்ல ஆரம்பித்தார்கள். பக்கத்தில் ஏதோ பட்டறை இருப்பதாகவும், அங்கே மெக்கானிக் கிடைப்பான் என்றும் ஒரு சைக்கிள்காரர் சொன்னார். இஞ்ஜினில் கோளாறு இருந்தால் நீ சொல்வது சரி. இதற்கு மெக்கானிக் வந்து என்னய்யா செய்வான்? என்று பக்கத்திலிருந்த ஓர் அரை வழுக்கை வாதாடவே. உமாசங்கரையும் அவளையும் மறந்துவிட்டு, அவர்கள் தம் சொந்தச் சர்ச்சையில் இறங்கி விட்டனர். யாரேனும் சின்னப் பையன் அகப்பட்டால் அவனை விட்டுத் திறக்கச் சொல்லலாம் என்றார் மற்றொருவர். வாட்டசாட்டமாக இருந்த ஒரு புண்ணியவான், ஓர் அரைச் செங்கல்லை எங்கிருந்தோ எடுத்து வந்து, ஏதாவது ஒரு பக்கத்துக் கண்ணாடியை உடைத்து விட்டால் கையை உள்ளே விட்டுப் பிடியைத் திருப்பலாம் என்று பளிச்சென்று யோசனை சொன்னார்.

    ஒருத்தரும் தொந்தரவு பண்ணாதீர்கள். மிஸ்டர் கொஞ்சம் மூளையைக் கசக்கிக்கொள்ளட்டும், என்றாள் இட ஸ்டியரிங்குக்காரி.

    அந்தப் பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தா விட்டால் ஒன்றுமே ஓடாது போல் உமாசங்கருக்குத் தோன்றவே, தயவுசெய்து ஒன்று செய்யுங்கள். உங்கள் முகவரியைக் கொடுத்துவிட்டு, டாக்ஸியில் போய் விடுங்கள். இன்னும் அரை மணி நேரத்தில் உங்கள் காரை உங்கள் வீட்டில் கொண்டுவந்து சேர்க்க நானாயிற்று, என்று கேட்டுக்கொண்டான்.

    டாக்ஸி கட்டணம் கொடுப்பது யார்? உங்கள் தாத்தாவா? என்று தெரிந்துகொள்ள விரும்பினாள் அவள்.

    நல்ல காலம், சம்மதித்தாளே என்ற நிம்மதியுடன், பேரன், நான் இருக்கிறேன். தாத்தா எதற்கு என்று கேட்டுவிட்டுப் பர்ஸை எடுத்துத் திறந்தான்.

    டாக்ஸிபற்றிய யோசனையைச் சொல்லும்போது அவனுக்கு நினைவில்லை. நான் இருக்கிறேன், என்று பெருந்தன்மையாக முன்வந்தபோதும் அவனுக்கு ஞாபகம் வரவில்லை. பர்ஸை எடுத்துத் திறக்கும் போதுதான், தன் மானத்தைப் கப்பல் ஏற்றவிருக்கும் உண்மை அவன் உணர்வைப் பளீரென்று தாக்கிற்று.

    கலர்க்காரனிடம் கொடுத்தானே அதுதான் அவனிடத்திலிருந்த கடைசி ஒரு ரூபாய் நோட்டு.

    தலை சுற்றுகிறதா? என்ன விஷயம்? என்ற அவள் கேள்வி, வெகு தூரத்திலிருந்து கேட்கிறாற்போலிருந்தது.

    உள்ளபடிக்கே அவனுக்குத் தலை சுற்றத்தான் செய்தது.

    அவமானம் அவன் உள்ளத்தைக் கொறிக்க, இப்படியொரு இக்கட்டில் சிக்கிக்கொண்டோமே என்ற வேதனை அவன் கால்களைத் தள்ளாட வைத்தது. என்ன செய்வதென்று புரியாமல், அருகிலிருந்த மரத்தைப் பிடித்துக் கொண்டு உமாசங்கர் நின்றபோதுதான் நம்பமுடியாத லாகவத்துடன், அந்த அரை வழுக்கைப் பேர்வழி சிக்கலை நொடியில் அவிழ்த்து விட்டார்.

    வேடிக்கை பார்க்கும் கும்பலோடு கார்களைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தவர், தற்செயலாக அந்தப் பெண்ணுடைய காரின் கைப்பிடியைத் திருப்பினார்.

    அடுத்த விநாடி-

    ஒரே ஆரவாரம். கைதட்டல்.

    வலப்பக்கக் கதவு திறந்துகொண்டுவிட்டது!

    கண்ணாடியை மட்டும் ஏத்தியிருந்திருக்காங்க. கதவைப் பூட்டவே இல்லை! என்று விமரிசனம் செய்தது கும்பல்.

    அந்தப் பெண்ணுக்கு ஒரே குதூகலம். தாங்க் யு. மிஸ்டர்! தாங்க் யு! என்று அரை வழுக்கைக்காரருக்கு ஆயிரம் நன்றி சொல்லிவிட்டு, அவள் பாட்டுக்குக் காரில் ஏறிக்கொண்டு போய் விட்டாள்.

    நம்மளவருக்கு டாக்ஸி சார்ஜ் மிச்சம்! என்றான் ஒரு கிழிந்த சொக்காய்.

    இன்னொருவன், காரே இவருதுதானாண்ணு டவுட்டா இருக்குடா! பர்ஸை ஜம்பமா எடுத்தாரே, காசு வெளியே வந்துதா பார்த்தியா? என்று 'கிசுகிசு'த்தான்.

    உமாசங்கரின் முகம் கறுத்தது. முந்தின நாள் நடந்த லைட்ஹவுஸ் சம்பவமும் நினைவுக்கு வரவே, உள்ளம் குமுறிற்று.

    2. ஆறே கால் இலட்சம்

    மவுண்ட்ரோடில் தெற்கு நோக்கிச்சென்ற உமாசங்கரின் கார், கிட்டத்தட்ட இரண்டு மைல் கடந்ததும், 'சந்திரகலா நர்ஸரி,' என்று பெரியதொரு பெயர்ப்பலகை தாங்கிய வெளிவாசலுக்குள் நுழைந்தது. தோட்டப் பண்ணையில், வண்ண வண்ணப் பூக்கள் செறிந்த பல வகைச் செடிகள் கண்ணுக்கு எட்டியவரை மண்டிக்கிடந்தன.

    வலப்பக்கம் திரும்பிய கார் காம்பவுண்டுச் சுவரை ஒட்டிச் சிறிது தொலைவு சென்று, ஒரு பெரிய வீட்டை அணுகிற்று. போர்ட்டிகோவில் ஏற்கெனவே நிறுத்தப்பட்டிருந்த ஓர் இரட்டைக் கலர் வண்டியைத் துடைத்துக் கொண்டிருந்த டிரைவர் தண்டபாணி முட்டி விடுகிறாற் போல் விரைவாக வந்து, உமாசங்கர் சரக்கென்று பிரேக் போட்டு நிறுத்துவதைக் கண்டு பதறினவனாய், வேண்டாமுங்க. பிரேக் பிடிக்காம போச்சுன்னா ஆபத்துங்க, என்று எச்சரிக்கப் போனவன், சின்ன எஜமானர் கதவைச் சாத்தும் வேகத்தைப் பார்த்ததும் தன் வாயையும் சாத்திக்கொண்டுவிட்டான்.

    கூலிங்கிளாஸை உருவிச் சட்டையில் செருகியவாறே, மடமடவென்று உமாசங்கர் வீட்டில் நுழைவதற்கும், 'அப்பா கேட்டுக்கொண்டே இருக்கிறார். காலையிலிருந்து இந்தத் தம்பி எங்கே போய்விட்டது, காணோம்,' என்று கவலைப்பட்டவாறு இருப்புக்கொள்ளாமல் தவித்துக்கொண்டிருந்த கோமதியக்கா-அவனது பெரியப்பா பெண்-வாசலில் எட்டிப் பார்ப்பதற்கும் சரியாக இருந்தது.

    தமக்கையை ஏறெடுத்துப் பார்க்க வேண்டிய தேவை உமாசங்கருக்கு இருக்கவில்லை. ஒப்புக்கு ஒரு தரம் மிதியில் காலணியைத் தேய்த்துவிட்டு மிடுக்குடன் மாடிப்படியேறும் போது, நீதானம்மா போய்ப் போய்த் தம்பி தம்பியென்று கொஞ்சுகிறாய். மாமா உன்னைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை, பார், என்று பத்து வயது 'ஸ்டைல்' புவனா தன் தாயிடம் புகார் வாசிப்பது அவன் காதில் விழத்தான் செய்தது. 'ஸ்டைல்' என்பது, கோமதியக்காவின் பெண்ணுக்கு உமாசங்கர் சூட்டியிருந்த கிண்டல் பெயர்.

    எல்லாம் எங்களுக்குத் தெரியும். நீ முதலில் மாடிக்குப் போய் மாமாகிட்டே சொல்லு, தாத்தா கூப்பிட்டாரென்று, என்று கோமதியக்கா கட்டளையிடுவதற்குள் உமாசங்கர் தன் அறையை நோக்கி நடந்தான்.

    ஆகவேதான், நாடாக்களைக்கூடத் தளர்த்தாமல் ஷூக்களை உதறி எறிந்துவிட்டு, சட்டையைக் கழற்றி அலட்சியமாக அவன் வீசியபோது, ஏன் மாமா, என்னைக் கோட் ஸ்டாண்டு என்று நினைத்துக்கொண்டீர்களா? என்று கேட்டுக்கொண்டே ஸ்டைல் புவனா நுழைய நேரும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.

    தன்மேல் விழுந்த சட்டையை அருவருப்புடன் பிய்த்துப் போட்டாள் அவள். பிறகு, எங்கேயோ நோக்கியவளாய், யந்திரம்போல், அம்மா உன்னிடம் சொல்லச் சொன்னார்கள். தாத்தா உன்னைப் பார்க்க வேண்டும் என்றாராம். நீ போய்ப் பார், என்று ஒப்பித்துவிட்டு, காதைக் காட்டிக் கொண்டு நின்றாள்.

    ‘நீங்கள்' என்று மரியாதைப் பன்மையைப் பயன்படுத்தாமல், 'நீ' என்று அவனை அவள் ஒருமையில் குறிப்பிடும் ஒவ்வொரு தடவையும், பாய்ந்து சென்று அவள் காதைத் திருகித் தண்டனை வழங்குவது உமாசங்கரின் பழக்கம்.

    ஓடிப்பிடிக்கும் உடற்பயிற்சியை இன்று மாமாவுக்குத் தரவேண்டா என்று பெருந்தன்மையுடன் அவள் தானாகவே காதை நீட்டிய போதிலும், அவன் வேறு ஏதோ நினைப்பில் இங்குமங்கும் உலாவுவதைக் கண்ட ஸ்டைல் புவனாவுக்கு முதலில் வியப்பாகவும் பிறகு மகிழ்ச்சியாகவும் இருந்தது.

    அதைத் தெரிவிக்கும் வகையில், வருகிறேன் மாமா. 'நீங்கள்' தாத்தாவைப் போய்ப் பாருங்கள், என்று கூறி விட்டு, மகத்தான தியாகம் ஒன்றைச் செய்த திருப்தியுடன் அவள் வெளியேறினாள்.

    சந்திரகலா நர்ஸரியின் அதிபர் சௌந்தரபாண்டியனும், காலம் சென்ற அவரது சகோதரனின் ஒரே பிள்ளை உமாசங்கரும் ஒரே வீட்டில் உண்டு உயிர்த்து உறங்கிய போதிலும், அடிக்கடி சந்தித்துக்கொள்ளும் பழக்கம் உடையவர்கள் அல்ல. அவர் நாள் பூரா தோட்டத்தில் இருப்பார் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, அடுத்து என்ன செய்வது என்று இன்னும் தீர்மானமாகாத இரண்டுங்கெட்டான் நிலையில் மிதந்துகொண்டிருந்த உமாசங்கரோ பணம் பெருத்த புள்ளிகளின் வாரிசுகளோடு நகர்வலம் வந்துகொண்டிருப்பான்.

    பெரியப்பா கூப்பிடுகிறார் என்றதும், ஏதோ முக்கியமான விஷயமாக இருக்க வேண்டும் என்று அவன் ஊகித்துக் கொண்டான். அவர் கூப்பிட்டனுப்பாமல் இருந்திருந்தால், அவனாகவே போயிருப்பான் என்பதில் சந்தேகமில்லை. 'பாக்கெட் மணி போதாது,' என்று போராட வேண்டிய நிலைக்கு அவனது காலி பர்ஸ் அவனைக் கொண்டுவந்து விட்டிருந்தது.

    எழுந்தான். வேறு நிறத்தில் புதியதொரு டெரிலின் சட்டையை அணிந்துகொண்டான். சௌந்தரபாண்டியனின் அறைக் கதவண்டை நின்றபடி பெரியப்பாவைப் பார்த்ததும் என்ன காரணத்தாலோ அவன் மனம் படபடவென்று அடித்துக்கொள்ள ஆரம்பித்தது.

    அவர் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். மேஜைமீது குவிந்திருந்த கணக்குப் புத்தக அடுக்குகளையும், ஃபைல்களையும், காகிதங்களையும் காண உமாசங்கருக்கு ஆச்சரியமாக இருந்தது.

    சௌந்தரபாண்டியனுக்கு எதுவுமே ஒழுங்காக, சீராக, அதனதன் இடத்தில் இருக்க வேண்டும். தூசு தும்பு என்றால் அவருக்கு அறவே பிடிக்காது. வேண்டாத காகிதமாக இருந்தாலும் அதை அழகாக மடித்த பின்னர்தான் குப்பைக் கூடையில் எறிவார். அவரது மேஜையா இன்று இப்படிக் கசாமுசாவென்று கிடக்கிறது?

    உமாசங்கர் ஒருமுறை தொண்டையைக் கனைத்துக் கொண்டான்.

    அவர் நிமிர்ந்து பார்க்கவில்லை. அவரது கையிலிருந்து பென்சில் தத்தித் தத்தி நகர்ந்த விதத்திலிருந்து, மேலிருந்து கீழாகச் சில எண்களைக் கூட்டியபின் கீழிருந்து மேலாக எண்ணிச் சரி பார்க்கிறார் என்பது புரிந்தது.

    பெரியப்பா, என்றான்.

    அவரது பென்சில் நின்றது.

    பார்க்க வேண்டும் என்றீர்களாம். அக்கா சொன்னார்கள்.

    இப்படி வா. உட்கார், என்றார் அவர்.

    உட்கார்ந்து பேச வேண்டிய விஷயமா? மாடிப்படியில் கோமதியக்கா மெல்ல ஏறி வருவது உமாசங்கருக்குத் தெரிந்தது. 'உள்ளே போயேன்!' என்று அவள் ஜாடை காட்டினாள்.

    எதற்கு இந்த ஆயத்தமெல்லாம் பண்ணுகிறார்கள் கதவின் குமிழைப் பிடித்தபடி, பரவாயில்லை...பாக்கெட் மணி சம்பந்தமாக உங்கள்கிட்டே பேசவேண்டுமென்று.... ரொம்ப நாள்களாக... என்று இழுத்தான்.

    ஒரு வழியாக ஆரம்பித்தாயிற்று. 'கேட்கலாமா, வேண்டாமா?' என்று ஒரு தீர்மானத்துக்கும் வர முடியாமல் தடுமாறிய கட்டத்தைத் தாண்டியாகிவிட்டது. இனி விஷயத்தைத் திறந்து சொல்ல வேண்டியதுதான் என்று உற்சாகத்துடன் தொடரப் போனவன், சற்றுத் தயங்கினான். பெரியப்பாவுக்குத் தெரியாதபடி அவன் அருகே நின்றிருந்த கோமதியக்காவின் முகம் ஏன் அப்படி வெளிறிப் போகவேண்டும்?

    மூக்குக் கண்ணாடியைக் கழற்றி, அதன் பிளாஸ்டிக் கூட்டுக்குள் செருகினார் பெரியப்பா.

    நூறு ரூபாய் உன் பற்று எழுதி வந்திருக்கிறானே கைலாசம். மாதாமாதம்? என்றார்.

    'நூறு ரூபாய்' என்ற சொற்களை அவர் சற்று அழுத்திச் சொன்னாற்போல் தோன்றவே, உமாசங்கருக்குச் சுருக்கென்றது. வருடாவருடம் வருமானவரிக்கு ஆயிரக் கணக்கில் அழுது தொலைக்கும் 'சந்திரகலா நர்ஸரி' உரிமையாளர் சௌந்தரபாண்டியனுக்கு, நூறு ரூபாய் ஒரு பிரமாதமா? என்று நேற்று அவன் நண்பன் மாதவன் குத்தலாகச் சொன்னது நினைவுக்கு வந்தது.

    மாதம் இருநூறு ரூபாயாவது வேண்டும் எனக்கு, என்றான் அழுத்தம் திருத்தமாக. நூறுக்கு மேல் ஓர் இருபத்தைந்து போட்டுத் தருமாறு கேட்கத்தான் முதலில் நினைத்திருந்தான். நாக்கு அவனை முந்திக்கொண்டு விட்டது. அத்துடன், விண்ணப்பமாகச் சமர்ப்பிக்க வேண்டியதை உரிமைக் குரலாக முழங்கிவிட்டது. அதற்காக அவன் வருத்தப்படவில்லை.

    கோமதியக்கா கையைப் பிசைந்துகொள்வதும், ஏதோ அவனிடம் சொல்ல முயல்வதும் உமாசங்கருக்குத் தெரியாமல் இல்லை. வாழாவெட்டியாக, தன் பத்து வயதுப் பெண்ணுடன் தந்தை வீடே கதியென்று கிடக்கும் கோமதியக்காவுக்கு, இருபத்தொரு வயது இளைஞன் ஒருவனுடைய உள்ளம் எங்கே விளங்கப் போகிறது? உள்ளங்கையில் அடங்கிவிடக்கூடிய அவளது குறுகிய உலகத்துக்கு, தந்தையின் முகச்சுளிப்பே வடக்காகவும், அவரது கண்டனமே கிழக்காகவும், அவரது அதிருப்தியே தெற்காகவும், அவரது கோபமே மேற்காகவும் இருக்கலாம். உமாசங்கரின் உலகம், ஐந்தறைப் பெட்டிக்குள் போட்டு மூடிவிடக்கூடிய உலகம் அல்ல. அது பரந்த உலகம் பணக்கார உலகம். அவனது நண்பர்கள் எல்லோரும் பெரிய இடத்துப் பிள்ளைகள். ஒருவன், தமிழ்நாட்டின் மிகப்பெரிய பஞ்சாலை அதிபரின் கடைக்குட்டி. இன்னொருவன், குடகிலே கணக்கற்ற காப்பித் தோட்டங்களை வைத்திருக்கும் கோடீசுவரரின் பேரன். அத்தகையவர்களோடு சம அந்தஸ்துடன் பழகும் உமாசங்கர், பி. ஏ. கேவலம் பூச்செடி விற்கும் ஒரு தோட்டப் பண்ணையாருக்குப் பயப்படுவான் என்று எதிர்பார்க்க முடியுமா?

    பூஜை அறைக்குப் போய்ச் சுவாமி கும்பிட்டு வா, என்றார் பெரியப்பா.

    அவனுக்கு ஆத்திரமாக இருந்தது. அவன் இதுவரைக்கும் இவ்வளவு வெளிப்படையாகப் பணம் வேண்டும் என்று கேட்டதில்லை. அதை அவர் மதிக்கவில்லையே! பாக்கெட் மணியைக் கூட்டித் தாருங்கள் என்று கேட்டால், பூஜை அறைக்குப் போகச் சொல்கிறாரே பெரியப்பா! பூஜை அறையிலா பணம் வைத்திருக்கிறார்?

    எல்லாம் காலையிலேயே கும்பிட்டாயிற்று, என்றான்.

    மத்தியானம் ஒருதரம் கும்பிடக்கூடாது என்று சாஸ்திரமா? என்றார் அவர்.

    பெரியப்பாவுடன் அவன் தொடுக்கும் முதல் போராட்டம் இது. அதில் இவ்வளவு சுலபமாகத் தோற்றுப்போக அவனுக்குச் சம்மதமில்லை.

    கைலாசத்திடம் சொல்லி எனக்கு மாதம் இருநூறு ரூபாய் கொடுக்கச் சொல்லுங்கள். அதற்குக் குறைத்துத் தருவதாக இருந்தால் எனக்குத் தேவையில்லை, என்றான்.

    இதற்குள் கோமதியக்கா பதறியபடி வந்து அவன் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு பூஜை அறை எதிரே கொண்டு போனாள்.

    உள்ளே விளக்கேற்றி வைத்திருந்தார்கள். ஊதுவத்தி வாசனை கமகமவென்று வந்துகொண்டிருந்தது.

    பூஜை அறைக்கு நீயும் உன் அப்பாவும் ஒரு நாளைக்கு ஒன்பது தரம் போய்க் கும்பிடுங்கள். எனக்கு வேறு வேலை இருக்கிறது, என்றான் அவன்.

    கோமதியக்காவின் கண்களில் நீர் மல்கிற்று. காரணத்தோடுதான் சொல்கிறேன் போய்க் கும்பிடு, என்றாள்.

    உமாசங்கருக்கு எரிச்சல் தாளவில்லை. கோமதியக்கவின் கண்ணீர் அவனது கோபத் தீயைத் தூண்டிவிடும் எண்ணெயாயிற்று.

    என்னை விடுங்கள், என்று திமிறினான்.

    ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு. இங்கே வா, என்ற கோமதியக்கா, அவனை உள்ளே அழைத்துச் சென்றாள். ஒரு சிறிய மேசைமேல் வைத்திருந்த ஃபைலை எடுத்தாள்.

    இன்றோடு உனக்கு இருபத்தொரு வயது பூர்த்தியாகியிருக்கிறது. பெரியப்பா உனக்குப் பாகம் பிரித்துக் கொடுத்திருக்கிறார். அது சம்பந்தமான கணக்கெல்லாம் இதிலே இருக்கிறது. அவள் ஃபைலைத் திறந்தாள். அதிலிருந்து ஒரு நீளமான உறையை எடுத்து, ஒரு செக்கை உருவினாள். ஆறேகால் இலட்ச ரூபாய்க்கு ஒரு செக். உன் பங்கு. அதை நீ என்ன பண்ணிக்கொள்ள வேண்டுமோ பண்ணிக்கொள்."

    செக்கையும் ஃபைலையும் அவன் கையில் திணித்து விட்டு, கோமதியக்கா போய் விட்டாள்.

    ஒன்றும் புரியாமல், அவன் பூஜை அறைக்குள்ளேயே நின்றான்.

    குத்து விளக்கின் சுடர், காற்றிலே நடுங்கிற்று.

    3. மாதவர அழகி

    மாதவரம் பால் பண்ணையில், பாலுக்கு அடுத்தபடி வெண்மையான பொருள் ஒன்று உண்டு. அதுதான். பண்ணைக்குக் கடன்பட்டுப் பதினைந்து மாட்டு லைஸன்ஸ்காரர் ஆகியிருந்த திருவாளர் அய்யாசாமியின் தலைமுடி.

    ஆனால் அந்த உண்மை, அவருக்கும் அவர் மனைவி வடிவாம்பாளுக்கு மட்டுமே தெரிந்த இரகசியமாக இருந்ததென்றால், அதற்கு அவர் பயன்படுத்தி வந்த உயர்ந்த ரக மையே காரணம். தமது இதயத்தின் மேல்பகுதியைத் தம் ஒரே மகள் அழகிக்கும், கீழ்ப்பகுதியை அந்த அபூர்வ மைக்கும் அவர் ஒதுக்கி வைத்திருந்தார் என்று சொன்னால் மிகையாகாது.

    கடைசிக் குப்பியும் தீர்ந்துவிட்டதே, மெட்ராசுக்குப் போய் வாங்கி வர வேண்டுமே என்று அவர் நெஞ்சுக்கு மேல் வேட்டி கட்டிக்கொண்டு, பால் புட்டி வடிவத்தில் நெடிதுயர்ந்து நின்ற தண்ணீர் டாங்கைப் பார்த்தபடி உலவிக்கொண்டிருந்தபோதுதான் ஆத்திரமூட்டும் வகையில் ஒரு கிண்ணத்தில் எண்ணெய் காய்ச்சிக்கொண்டு வந்து வைத்தாள் வடிவாம்பாள்.

    ஏற்கெனவே வேரில் வெள்ளை தெரிய ஆரம்பித்திருப்பதைத் துப்பறிந்து மனமொடிந்து போயிருந்தவர், எண்ணெயைப் பார்த்ததும் மிரளத் தொடங்கியதில் வியப்பில்லை.

    ஏய்! என்ன இது? என்றார்.

    எண்ணெய் தேய்த்துக் குளித்த மாத்திரத்தில் அய்யாசாமியின் குட்டு உடைந்து போய்விடக் கூடும் என்ற அச்சம் சிறிதும் இல்லாதவளாய், வெந்நீர் தயாராயிருக்கிறது, என்று சொல்லிப்போன மனைவியின் முதுகைப் பார்த்துத் தம் தங்கப் பல்லை நறநறவென்று கடித்தார் அவர்.

    அழகியை எங்கே அனுப்பினாய்? வண்ணான் உருப்படியை எங்கே வைத்திருக்கிறாளோ தெரியவில்லை, என்று முணுமுணுத்து விட்டு, கட்டிலில் உட்கார்ந்து கொண்டவருக்கு. 'ஓ.கே.' தீவனம் வாங்கித் தங்கள் ஆள் வசம் ஷெட்டில் சேர்த்துவிட்டுத் திரும்பிய மகளின் உருண்ட முகத்தில் வியர்வை துளிர்த்திருப்பதைக் கண்டதும் கோபம் வந்துவிட்டது.

    சட்டையில்லாமல் உட்கார்ந்திருந்தவர், சமையலறையை நோக்கி, ஏன் வடிவு, எல்லாவற்றுக்கும் அழகி தான் அகப்பட்டாளா? கறவையைப் பார்ப்பதற்குத்தான் நாலு மணிக்கெல்லாம் உசுப்பி விட்டுவிடுகிறாய். தீவனம் வாங்குவதற்காவது நீ போகக்கூடாதா? என்றவர் போய்ப் பலகாரம் சாப்பிடு, என்று அழகியிடம் உள்ளே செல்லும்படி கைகாட்டினார்.

    அப்பா, என்றாள் அழகி.

    என்னம்மா?

    ஜீவா எழுதியிருக்கிறாள், அப்பா. எட்ட இருந்தபடியே ஒரு கார்டைக் காட்டினாள் அவள்.

    எங்கே பார்க்கலாம்? அவர் கையை நீட்டினார்.

    கார்டை அவரிடம் கொடுக்காமலே, உங்களுக்கு. உடம்பு குணமாகிவிட்டதா என்று விசாரித்திருக்கிறாள், அப்பா, என்றாள்.

    என்னதான் ஜீவாவும் அழகியும் பழைய பள்ளித் தோழிகளானாலும், அந்த இலட்சாதிபதி வீட்டுப் பெண் தம்மை நினைவு வைத்துக்கொண்டிருக்கிறாள் என்ற விஷயம் அய்யாசாமிக்கு இதமாக இருந்தது.

    அவள் நல்லா இருக்கிறாளாமா? அவள் அண்ணன் நல்லா இருக்கிறாராமா? என்று அவர் கேட்பதற்குள், என்ன அங்கே வளவளவென்று பேச்சு? இன்னும் எண்ணெய் தேய்த்துக் கொள்ளவில்லையா நீங்கள்? என்று உள்ளேயிருந்து வடிவாம்பாளின் குரல் குறுக்கிட்டது.

    ஜீவாவைப் பார்க்க வேண்டும் போல் ஆசையாக இருக்கிறது, அப்பா. இன்றைக்கு அவளுக்குக் கல்லூரி விடுமுறை. நான் சென்னைக்குப் போய்விட்டு, விடிகாலை முதல் பஸ்ஸில் திரும்பிவிடுகிறேன். ஏன் அப்பா? என்று அழகி மன்றாடியதும், அய்யாசாமி ஒரு கணம் யோசித்தவராய், கொஞ்சம் இரம்மா, என்று மெல்ல எழுந்து, மூலையிலிருந்த மேசைக்குச் சென்று, ஒரு பழைய செய்தித்தாளில் ஓர் ஓரத்தைக் கிழித்து, ஏதோ ஒரு பெயரை எழுதி அழகியிடம் நீட்டினார்.

    இந்த மருந்தில் இரண்டு புட்டி வேண்டும். கட்டாயம் வாங்கி வந்துவிடவேண்டும். என்ன? இந்தா, என்று பணம் எடுத்துக் கொடுத்ததோடு அவர் நிற்கவில்லை.

    வடிவாம்பாளுடன் சண்டை போட்டு அனுமதியும் வாங்கிக் கொடுத்தார். வயசுப் பெண்... அந்நியர் வீடு.... ராத் தங்கல்... என்று வடிவாம்பாள் பல முனைகளில் எதிர்ப்பு எழுப்பினாலும், கணவருடன் வாதாட முடியாமல் கடைசியாகப் பின்வாங்கியபோது, 'ஜீவாவுக்குப் பிடிக்கும்,' என்று சொல்லி, அழகியின் வசம் கொஞ்சம் பால்கோவா கிளறிக் கொடுத்தனுப்பத் தவறவில்லை.

    மருந்தை மறந்துவிடாதே, என்று பல தடவை நினைவுபடுத்தி மகளை அனுப்பிவிட்டு, எண்ணெய் தேய்த்துக் குளிக்காமலிருக்க வேறு என்ன வழி செய்யலாம் என்று சிந்தித்துக்கொண்டிருந்த அய்யாசாமியை, மாமா! மை டியர் மாமா! என் லவ் லெட்டர் கிடைத்ததா? என்ற கேள்வி அயர வைத்தது.

    காதளவு கிருதாவும், பற்றாத கால்சட்டையுமாக வந்து, ஒரு பிரயாணப் பையைக் கட்டில் மீது வைப்பவன் தமது மைத்துனர் மகன் சோமசேகரன் தான் என்பது உறுதியானதும், ஏண்டா, லவ் லெட்டர் கிடைக்கும் வயதா, எனக்கு? அப்படியே இருந்தாலும், போயும் போயும் உன்கிட்டேயிருந்து தான் கிடைக்க வேண்டுமா? என்றார் அய்யாசாமி, விளையாட்டாக.

    தப்பாகப் புரிந்துகொண்டுவிட்டீர்கள். போகட்டும், என்று உட்கார்ந்துகொண்டான் சோமசேகரன். லவ்வுக்கும் வயதுக்கும் என்ன சம்பந்தம்? நிஜமாகத்தான் கேட்கிறேன். அவன் அவரைப் பார்த்துப் பொருட்செறிவுடன் கண் சிமிட்டினான்.

    பிறகு, ஒரு மாதிரியாகச் சிரித்தபடி, என்கிட்டேயிருந்து மறைக்கப் பார்க்காதீர்கள். எனக்கு ஆயிரம் கண் இருக்கிறது, என்றான்.

    இருக்கிற இரண்டு கண்ணை வைத்துக்கொண்டு நீ சரியாகப் பாரடா, போதும், என்று அறிவுறுத்தினார் அவர்.

    பார்த்துக்கொண்டுதானே இருக்கிறேன்.

    என்ன பார்க்கிறாய்?

    அவன் ஐந்து விரல்களையும் மடித்து, குழாய்போல் கண்ணுக்கருகே வைத்துக்கொண்டு, மாந்தோப்பு," என்றான்.

    உம்?

    அதிலே ஒரு குடிசை.

    மேலே சொல்லு.

    குடிசையிலே ஓர் அழகான கிழவி.

    அடி சக்கை! கிழவியில், அழகான கிழவி வேறேயா?

    கேளுங்கள். அவளோடு ஒரு லைஸன்ஸ்காரர் பேசிக் கொண்டிருக்கிறார்.

    கிழவியோட பேசக்கூட லைஸன்ஸா?

    என்ன பேசுகிறார், தெரியுமா?

    அதையும் நீயே சொல்லிவிடேன்!

    காதல்.

    கிழவியின் காதலா?

    ஆள் எப்படி இருக்கிறார் தெரியுமா? அவன் கிண்டலாக அவரது தொப்பையில் கிச்சுகிச்சு மூட்டினான்.

    எப்படி?

    நெஞ்சுக்கு மேலே வேட்டியும், வாயில் தங்கப் பல்லும் கட்டியிருக்கிறார்!

    அடி செருப்பாலே என்று சிரித்தார் அய்யாசாமி.

    பிறகு, வடிவு! இங்கே ஏதோ ஒன்று ரொம்ப நேரமாகக் குலைத்துக் கொண்டிருக்கிறதே, காதில் விழவில்லையா? என்று மனைவிக்குச் செய்தி சொன்னார்.

    அத்தை! என்று சமையலறைக்குள் தலையை நீட்டினான் சோமசேகர்.

    நீயா? என்றாள் வடிவாம்பாள், அசட்டையாக.

    அய்யாசாமி பெருமூச்சு விட்டபடி, சரிதான், உன்னை உபசரிக்க வேண்டிய பொறுப்பு என் தலை மேலே விழுந்து விட்டாற்போலிருக்கிறது. நீ எப்படியும் சாயங்காலத்துக்கு முன்னால் போக மாட்டாய், இல்லையா? என்றார்.

    சோமசேகரன் திடுக்கிட்டான். நீங்கள் பேசுவதைப் பார்த்தால், நான் வந்ததை நீங்கள் விரும்பவில்லையோ என்ற சந்தேகம் உண்டாகிறது.

    கேளடா, என்றார் அவர். சாயங்காலம்வரை என்னென்ன முழுங்க வேண்டுமோ, மோர், பால், பால்கோவா, முறுக்கு, சீடை எல்லாவற்றுக்கும் ஒரு லிஸ்டு போட்டுத் தா. ஒரேமுட்டாகக் கொண்டுவந்து வைத்து விடுகிறேன்.

    சோமசேகரன் புருவங்களை நெரித்தான். என்னை என்ன சாப்பாட்டுராமன் என்று நினைத்தீர்களா?

    ஒவ்வொன்றாய்த் தீர்க்கத் தீர்க்க, லிஸ்டிலே டிக் அடித்துக்கொண்டே வா.

    என் சந்தேகம் வலுப்பட்டுக்கொண்டே வருகிறது

    திண்ணையில் ஆனந்தமாகக் காற்று வரும். படுத்து நன்றாகத் தூங்கு. 5-30 க்கு ஒரு பஸ் இருக்கிறது..

    நான் உங்களைத் தேடி வரவில்லை, என்று எழுந்தான் சோமசேகரன். அழகி! அழகி!

    அழகியைத்தானே பார்க்க வேண்டும்? அதற்கு வழி இப்படி, என்று வாசலைக் காட்டினார் அய்யாசாமி. அவள் அப்போதே புறப்பட்டு மெட்ராசுக்குப் போய்விட்டாள்.

    என்ன! என்றான் சோமசேகரன். ஏமாற்றத்தால் முகம் துவண்டது. அப்படியானால் என் லவ் லெட்டர் அவளுக்குக் கிடைக்கவில்லையா? நெய்ல் பாலிஷ், லிப்ஸ்டிக் எல்லாம் வாங்கிக்கொண்டு வரப்போவதாக எழுதியிருந்தேனே?

    காலையில் அழகி எட்டத்தில் நின்றபடி கார்டைக் காட்டாமல் சமாளித்த காட்சி அய்யாசாமியின் கண்முன் தோன்றிற்று.

    சோமசேகரனிடமிருந்து தப்பவே, ஜீவாவிடமிருந்து கடிதம் வந்ததாகக் கதை கட்டி விட்டுச் சினேகிதியின் வீட்டுக்குப் புறப்பட்டிருக்கிறாள் என்று புரிந்துகொண்டவராய், சோமசேகரனின் காதிற்குள், நெய்ல் பாலிஷ், லிப்ஸ்டிக் எல்லாம் எதற்கடா? நரைக்குப் போடுகிறார்கள் அல்லவா மை, அதில் ஒரு டஜன் வாங்கி வாயேன்! என்றார்.

    ஆ! என்றான் சோமசேகரன், நூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்துக்குத் தயாராகிறவன் போல. அழகிக்கு எதற்கு, நரை மை?

    சத்தம் போடாதேடா முட்டாள்! என்றார் அய்யாசாமி. பிறகு, சுற்றுமுற்றும் பார்த்து விட்டு, உன் அத்தைக்கு,

    Enjoying the preview?
    Page 1 of 1