Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bramhachari
Bramhachari
Bramhachari
Ebook266 pages1 hour

Bramhachari

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் எதிர்பாராத பல திருப்பங்களை கொடுப்பது போல மோகனுக்கும் வாழ்வில் சில லட்சியங்களையும், கடமைகளையும் கொடுத்திருந்தாலும் நடுவில் அவனுக்கு வரும் காதல் அவனது வாழ்க்கையில் என்னென்ன திருப்பங்களை கொடுத்தது என்று தெரிந்துகொள்ள இந்த நாவலை படித்து பாருங்கள்!

Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580136705912
Bramhachari

Read more from S.A.P

Related to Bramhachari

Related ebooks

Reviews for Bramhachari

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bramhachari - S.A.P

    http://www.pustaka.co.in

    பிரம்மசாரி

    Bramhachari

    Author:

    எஸ். ஏ. பி.

    S.A.P

    For more books

    http://www.pustaka.co.in/home/author/s-a-p

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. டிர்-ர்-ரிங், டிர்-ர்-ரிங்

    2. தர்ம சங்கடம்

    3. கார் மோதிற்று!

    4. அதிர்ச்சி

    5. அவள் யார்?

    6. போலீஸ்! போலீஸ்!

    7. இண்டோ - சிலோன் எக்ஸ்பிரஸ்

    8. என்னையா!

    9. காதல் காணிக்கை

    10. சந்திப்பு

    11. முக்கியமான விஷயம்

    12. அன்னையும் தெய்வமும்

    13. சீ! துரோகி!

    14. இடிந்த கோட்டை

    15. ராக்கப்பன் விஜயம்

    16. பங்கஜம்மாளின் கடிதம்

    17. காலி டம்ளர்

    18. ரகசியம்

    19. குப்! குப்!

    20. அகப்பட்டுக் கொண்டாள்!

    21. பிள்ளையார் கோவில்

    22. முக்காடு

    23. திண்டிவனத்தை நோக்கி

    24. றா

    25. சதி

    26. போலீஸ் ஸ்டேஷனில்

    27. நரக வேதனை

    28. இது சத்தியம்

    29. கிரீச்ச்ச்!

    30. ஒரு சந்தேகம்

    31. மூன்று எச்சரிக்கைகள்

    32. மணிபர்ஸ்

    33. சரணாகதி

    34. பிரம்மசாரி

    1. டிர்-ர்-ரிங், டிர்-ர்-ரிங்

    உடலோடு ஒட்டிக் கொண்டிருந்த ஈரச் சட்டையைக் கழற்றி எறிந்துவிட்டு நாற்காலியில் தொப்பென்று விழுந்தான் மோகன்.

    அவ்வளவு களைப்பு!

    அவனது சுருண்ட கேசம் வியர்வையால் நனைந்திருந்தது. வேகமாகச் சுழன்று கொண்டிருந்த மின்சார விசிறியை நன்றியறிதலோடு பார்த்துவிட்டு அவனுடைய கண்கள் இலேசாக மூடிக்கொண்டன. எதிர்த்தாற் போலிருந்த ஸ்டூல்மீது கால்களைத் தூக்கிப்போட்டபடி, தன் அங்கங்களை யெல்லாம் தளர்த்தி, ஒரு பத்து நிமிடத்திற்கு ஹாயாக இருக்க ஆயத்தம் செய்தான் மோகன். ஓர் அமைதியான வனப்பு முகத்தில் படர, ஆழ்ந்த சுவாசத்தால் அவனுடைய அகண்ட மார்பு மெதுவாகப் புடைத்துத் தாழ, ஹைக்கோர்ட்டுக் கட்டிடம், சட்டப் புத்தகம், கேஸ் கட்டு ஆகியவற்றின் பிடியிலிருந்து நழுவ அவன் முயன்றான். ஆனால் அவன் மனத்தை ஆட்கொண்டிருந்த குதூகலம் குறுக்கே நின்றது.

    மோகனின் அசாதாரணமான நிலைக்குக் காரணம் இல்லாமலில்லை. அவனுடைய ‘ஸீனியர்’ பூமிநாதன், ராமமூர்த்தி என்ற மற்றொரு ஜூனியர், மோகன் - ஆகிய மூவரும், கடிகாரத்தையோ காலண்டரையோ கண்ணெடுத்தும் பாராமல் பாடுபட்டுத் தயார் செய்த ஒரு நான்கு லட்ச ரூபாய் அப்பீல் வழக்கு அன்றுதான் முடிவடைந்திருந்தது.

    அன்று மாலை கோர்ட்டில் நடந்த அந்தக் காட்சியை நினைவுபடுத்திக் கொள்ளாமலிருக்க முடியவில்லை மோகனால்.

    தீர்ப்பைப் பிறகு தெரிவிப்பதாக அறிவித்துவிட்டு நீதிபதிகள் எழுந்து சென்றதும், பூமிநாதனைச் சூழ்ந்து கொண்டது ஒரு ‘கறுப்பு-அங்கிக்’ கும்பல். சிலர் அவரது கையைப் பிடித்துக் குலுக்கினார்கள். புன்னகை மூலம் தம் பாராட்டைத் தெரிவித்தனர் பலர்.

    சக்கைப் போடு போட்டாரையா பூமிநாதன்!

    தீர்ப்பைப் பற்றி இம்மியளவு கூடச் சந்தேகமில்லை! வெற்றி பூமிநாதனுக்குத்தான்!

    ஹார்ட்டி காங்கிராசுலேஷன்ஸ்!

    மிஸ்டர் பூமிநாதன்! யு கேன் பி பிரௌட் ஆப் தி ஜாப் யு டிட் டுடே!

    இப்படியாகப் பல குரல்கள் பல சுரங்களில் எழுந்தன.

    எதிர்க் கட்சிக்கு ஆஜரான ராகவாச்சாரியின் மூஞ்சியை... என்று ஒருவர் ஆரம்பிக்க, ...பார்க்க சகிக்கவில்லை! என்று மற்றொருவர் ரத்தினச் சுருக்கமாக முடித்ததும் எல்லோரும் கலகலவென்று சிரித்தார்கள்.

    அப்போது பூமிநாதன் நடந்துகொண்ட முறையை நினைத்து மோகன் பெருமைப்பட்டுக்கொண்டான்.

    மேகமுடி தரித்த ஓர் உயர்ந்த சிகரத்தைப் போல் எவ்வளவு கம்பீரமாகக் காணப்பட்டார் அவர்! சக வக்கீல்களின் பாராட்டுக்களில் அவர் மயங்கக்கூடியவரல்ல என்பது மோகனுக்குத் தெரியும். யாருடைய உதடுகள் தம் முடைய புகழை உற்சாகமாகப் பாடிக் கொண்டிருக்கின்ற னவோ, அதே நபர்களின் உள்ளங்கள் பொறாமையால் பொசுங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை பூமிநாதன் அறியாதவரா என்ன? ‘சிரமப்பட்டு உழைத்தோம்; ஜெயிக்கப் போகிறோம்’ என்ற பெருமைதான் அவரை ஆனந்தத்தில் ஆழ்த்தியிருந்தது.

    உயர்ந்து நிற்கும் கோபுரத்தை அண்ணாந்து பார்த்து எல்லோரும் ஆச்சரியப்படுவது இயற்கை. ஆனால் பூமிக்குள் புதைந்து கிடக்கும் அதன் அஸ்திவாரத்தை யாராவது போற்றுவதுண்டா?

    வெற்றிக்களை ததும்பும் பூமிநாதனின் தோற்றத்தையே கவனித்துக் கொண்டிருந்த வக்கீல்களின் கண்களை, சற்று ஒதுக்குப்புறமாக நின்றுகொண்டிருந்த அந்த 24 வயது இளைஞன் கவராதது ஆச்சரியமல்ல.

    மோகனின் புத்திசாலித்தனமான ஒத்துழைப்பு இல்லா விடில் வழக்கின் போக்கே வேறு விதமாக இருந்திருக்கும் என்பதைப் பலர் அறியமாட்டார்கள். தேவையான ஆதாரங்களைத் தேடிக் கொடுக்கவும் நுணுக்கமான விவரங்களை ஞாபகம் வைத்துக் கொள்ளவும், தமது மற்றொரு ஜூனியரும் அனுபவசாலியுமான ராமமூர்த்தியைத்தான் பூமிநாதன் நம்பியிருந்தார். ஆனால், வெண்ணெய் திரளும்போது தாழி உடைந்தாற்போல், வழக்கு ஆரம்பமாகும் சமயத்தில் ராமமூர்த்தி ஜுரத்தில் விழுந்துவிட்டார். தன் சாமர்த்தியத்தை வெளிப்படுத்த மோகனுக்குக் கிடைத்த முதல் சந்தர்ப்பம் அதுவே. அதை அவன் எவ்வளவு தூரம் பயன்படுத்திக்கொண்டிருந்தான் என்பதற்குப் பூமிநாதனின் முகமலர்ச்சியே நற்சாட்சிப் பத்திரமாக விளங்கிற்று.

    பூட்ஸுகளைக் கழற்றி, ஸாக்ஸுகளை அவற்றிற்குள் திணித்துவிட்டு, மோகன் மறுபடியும் சாய்ந்து கொண்டான். அவன் உடல் ஓய்வை நாடிற்று. உள்ளம், பூமிநாதனின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

    விசிறி தாலாட்டுப் பாட, வியர்வை வெள்ளம் வடிய, கட்டைபோல் கிடந்தான் மோகன். ஓய்வின் அருமை தெரிந்த கடும் உழைப்பாளிகளுக்கு மட்டுமே ஏற்படக்கூடிய ஓர் இன்ப உணர்ச்சி அவன் உள்ளங்காலிலிருந்து உச்சந்தலைக்கு ஏறிற்று,

    அப்போது –

    டிர்-ர்-ரிங், டிர்-ர்-ரிங்...

    மோகன் விழித்துக்கொண்டான்.

    டிர்-ர்-ரிங், டிர்-ர்-ரிங்...டிர்-ர்-ரிங், டிர்-ர்-ரிங்...டிர்-ர் ரிங், டிர்-ர்-ரிங்...

    அடா-அடா-அடா-அடா! அந்த டெலிபோனிற்குத் தான் என்ன அவசரமோ!

    அடுத்தாற்போலிருந்த ஆபீஸ் அறையை நோக்கி நடந்தான் மோகன்.

    ரிஸீவரைக் கையிலெடுத்து, ஹலோ!... இது அட்வகேட் பூமிநாதனின் ஆபீஸ்; அங்கே யார் பேசுகிறது? என்றான்.

    மறுகோடியிலிருந்து வந்த குரல் அவனுடைய அலுப்பையும் அசிரத்தையையும் பறக்கடித்துவிட்டது.

    ...ஆமா சார், மோகன்தான் பேசுகிறேன்... நான் வந்து பத்து நிமிஷத்துக்கு மேல் இருக்காது... கிளார்க்கா? அவர் இங்கே இல்லையே... வரவில்லை. கோர்ட்டிலிருந்து நேரே வீட்டுக்குப் போய்விட்டார் போலிருக்கிறது...உம்... உம்...சரி... சொல்லியனுப்புகிறேன்... இப்போதே சொல்லியனுப்பி விடுகிறேன் சார்.

    ரிஸீவரைக் கீழே வைத்ததும் மோகன் வெளியே வந்து பார்த்தான். காப்பி வாங்கிவரப் போன வேலைக்காரப் பையன் முத்துவை இன்னும் காணோம். தோட்டக்காரனும் கண்களில் தட்டுப்படவில்லை.

    கால் முகம் கழுவி, வேறு சட்டை அணிந்துகொண்டு, வக்கீலின் வீட்டுக்குப் புறப்பட்டான் மோகன்.

    இந்நேரம் அவன் உட்கார்ந்திருந்தது, வக்கீலின் ஆபீஸ் அடங்கிய அவுட்-ஹவுஸில். அங்கிருந்த ஓர் காலி அறையில் குடியிருக்க அவன் பூமிநாதனால் அனுமதிக்கப்பட்டிருந்தான். அவுட்-ஹவுஸிற்குச் சுமார் அறுபதடி தள்ளி வக்கீலின் வீடு இருந்தது.

    வீட்டு முகப்பண்டை வந்து நின்ற மோகன் சுற்றுமுற்றும் பார்த்தான். சூரியன், பகல் நேரத்தில் தான் காண்பித்த கோபத்திற்கு மன்னிப்புக் கேட்பது போல், அந்த விசாலமான தோட்டத்தை அழகுபடுத்திக் கொண்டிருந்த புல் தரை, பூஞ்செடி இவற்றோடு கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தது.

    முன்புற ஹாலின் மத்தியில், நான்கு கால்களையும் பரக்க விரித்துக்கொண்டு, ‘பயங்கரமாக’ வாயைப் பிளந்தபடி ஒரு ‘மாஜி’ புலி காவல் காத்துக் கொண்டிருந்தது.

    ஆள் நடமாட்டமே இல்லை. பூமிநாதன் அனுப்பிய அவசரச் செய்தியை அவர் பெண்ணுக்கு எப்படித் தெரிவிப்பது?

    ராணியை டிரஸ் பண்ணிக்கொண்டு வீட்டிலேயே இருக்கும்படி சொல்லியனுப்பு. நமக்கு வேண்டியவர் ஒருவருடன் அவளைச் சினிமாவுக்கு அழைத்துக்கொண்டு போவதாக இருக்கிறேன். என்ன? இப்போதே சொல்லியனுப்பி விடுகிறாயா? என்று அவள் தந்தை காஸ்மாபாலிடன் கிளப்பிலிருந்து போனில் அடித்தடித்துக் கூறினாரே...

    மோகன் சற்று நிதானித்தான்.

    பிறகு ஒரு தீர்மானத்துக்கு வந்தவனாக, மாடிப் படிகளில் ஏறலானான். படிகளில் விரிக்கப் பட்டிருந்த மெத்து மெத்தென்ற ஜமுக்காளத்தில் அவன் கால்கள் பதிந்தெழுந்த போது, ஆவல் நிறைந்த அவன் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. ராணியை அவன் தனியே சந்தித்தது கிடையாது. அவள் கல்லூரிக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கும் சமயங்களில் ஓரிரு தடவை தூரத்திலிருந்து கவனித்திருந்தான். விடுமுறை நாட்களில், தேன் மொள்ளும் பட்டாம்பூச்சிபோல் அவள் தோட்டத்தில் வட்டமிடுவதை எப்போதாவது காண்பதுண்டு. அவ்வளவுதான்.

    கோடி அறையில் யாரோ மெதுவாகப் பாடிக் கொண்டிருந்தது கேட்டது. அந்தத் தீங்குரல் மோகனுக்கு வழி காட்டிற்று.

    அறைக் கதவு இலேசாகத் திறந்திருக்கவே, மோகன் எட்டிப்பார்த்தான்.

    அடுத்த வினாடி, தேளால் கொட்டப் பட்டவன் போல் விருட்டென்று தலையை இழுத்துக் கொண்டுவிட்டான்.

    அவன் முகம் குப்பென்று சிவந்தது.

    பத்து நிமிடம் கழித்து வருவதே கண்ணியம் என்று முணுமுணுத்தது அவன் மனச்சாட்சி. ஆனால்... ஆனால்... அது தலையெடுப்பதற்குள் தான் மண்டைப் போடாகப் போட்டு அதை மடக்கிவிட்டதே அவனுடைய யௌவனம்!

    நெஞ்சு திக் திக் என்று அடித்துக் கொள்ள, பந்தைப் போன்ற ஏதோ ஒரு பொருள் தொண்டையை அடைக்க,

    மறுபடியும் கதவிடுக்கு வழியாக அவனால் பார்வையை ஓட்டாமலிருக்க முடியவில்லை.

    ராணி எப்போதுமே ஓர் அழகிதான். அன்றோ, சூழ்நிலை அவள் சௌந்தரியத்தை மிகைப்படுத்திக் காட்டிற்று. மாசு மறுவில்லாத அவள் மேனியின் பொன்னிறம், பருவத்தின் பூரிப்பு, மின்சார விளக்கொளியில் ஜொலித்த ஆபரணங்கள், கருவண்ணக் கூந்தல் எல்லாம்... அது ஒரு பத்து வினாடிதான். அதற்குள் சேலைத் தலைப்பைத் தோள் மீது லாகவமாகப் போட்டுக்கொண்டு, அலமாரியைச் சாத்திப் பூட்டிவிட்டு, சாவியை டிராயரில் போடுவதற்காக டிரெஸ்ஸிங் டேபிளை நெருங்கினாள் ராணி.

    மோகன் அப்போதாவது தன்னைச் சமாளித்துக் கொண்டிருக்கக் கூடாதா? ஊஹும்.

    புத்திசாலித்தனமாக என்னென்னவோ செய்திருக்கலாம். ஆனால் அவன் எதையும் செய்யவில்லை. வந்த சுவடு தெரியாமல் ‘அந்தர் தியானம்’ ஆகவில்லை. அப்போது தான் வந்தவன் போல் காலால் ஓசைப்படுத்தியோ, வினயமாக இருமியோ ராணியின் கவனத்தைத் கவரவில்லை. மேற்கத்திய பாணியில் கதவைத் தட்டவுமில்லை.

    பூமியில் நிற்கிறோமா, இல்லை வானத்தில் பறக்கிறோமா என்ற நினைவே இல்லாமல் பூமிநாதனின் வீட்டு மேல் மாடியிலேயே அவன் வேர்விட்டு நின்றான்.

    அலங்காரத்தைக் கடைசி முறையாகச் சரி பார்ப்பதற்காக ராணியின் கண்கள் கண்ணாடியை நாடின.

    அவ்வளவுதான். அரைகுறையாக அதில் தெரிந்த மோகனின் உருவத்தைத் திடீரென்று கண்டதும் பயத்தால் ‘கீச்’ சென்று கத்திவிட்டாள்.

    கலாசாலை ஓட்டப் பந்தயங்களில் பங்கெடுத்துக் கொண்டதன் உபயோகத்தை மோகன் அப்போதுதான் உணர்ந்தான். இருந்தாலும் பயிற்சியை விட்டுச் சிலகாலம் ஆகிவிட்டதல்லவா? ஆகவே, அவுட்ஹவுஸின் வாசலுக்கு வந்த பிறகும் அவனுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது.

    அமாவாசை கழித்து வந்த புரோகிதரைப் போல் அப்போது வந்து சேர்ந்தான் முத்து – இங்கே நல்ல காப்பி கிடைக்காதுன்னு ஒரு மைல் நடந்து போய் உங்களுக்காக ஸ்பெஷலாக வாங்கிட்டு வந்தேன் சார்!, என்று குழை யடித்தபடியே.

    பையன் நீட்டிய கிளாஸை வாங்கக்கூடத் திராணியில்லை மோகனுக்கு.

    உடம்புக்கு என்னங்க? ஏன் மூசு மூசுன்னு இளைக்குது? என்று உண்மையான கவலையோடு முத்து கேட்ட கேள்வி, மோகனுக்கு நொந்த புண்ணில் வேலை விட்ட மாதிரி இருந்ததில் ஆச்சரியமில்லை.

    ‘இவன் ஒருத்தன்! கூத்திலே கோமாளி வந்தமாதிரி!’ என்று கடிந்து கொள்வதற்காக அவன் திறந்த வாயை, மறுபுறத்திலிருந்த கேட் வழியாக நுழைந்து வீட்டு வாசலில் வந்து நின்ற ஒரு பெரிய கார் அடைத்து விட்டது.

    ‘சின்ன வக்கீலின்’ உடல் நிலையைப் பற்றிய கவலையை மூட்டை கட்டி வைத்து விட்டு, காரை நோக்கி ஓடினான் வேலைக்காரப் பையன்.

    காரின் முன் ஸீட்டிலும், பின் ஸீட்டிலுமாக ஆறேழு இளம் பெண்கள் அடைந்துகிடப்பதை மோகன் கவனித்தான். டிரைவர் இடத்தில் உட்கார்ந்திருந்த பெண் இருமுறை ஹார்னை அழுத்தினாள். ராணியின் சினேகிதிகள் அவர்கள் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

    இந்தப் படையெடுப்புக்குக் காரணம் எதுவாக இருக்கும் என்று மோகன் ஊகிப்பதற்குள், ராணியை முத்து அழைத்து வந்துவிட்டான்.

    என் பிரெண்ட்ஸோடு வெளியே போய்விட்டு வருகிறேன். அப்பா கேட்டால் சொல்லு! என்று முத்துவிடம் உத்தரவு கொடுத்துவிட்டு, காரில் ஏறிக்கொண்டு விட்டாள் ராணி.

    மோகனுக்குத் ‘திக்’ கென்றது. ஸீனியர் போனில் சொன்ன தகவலைத் தெரிவிப்பதற்குள்... கார் கிளம்பி வேகமாக அவுட்ஹவுஸைக் கடந்து சென்றது. அது எந்தத் திக்கில் போகிறது என்பதைக் கூடக் கவனிக்க இயலாமல், சிலையாய்ச் சமைந்து நின்றான் மோகன்.

    மல்லிகை மணம், பவுடர் வாசனை, வளையல் ஒலி, கலகலவென்ற சிரிப்பு எல்லாம் மறைந்து ஐந்து நிமிஷம்கூட ஆகியிருக்காது. பூமிநாதன் வந்து விட்டார். காரிலிருந்து இறங்கும்போதே, என்ன மோகன், ராணி தயாராக இருக்கிறாளா? என்று விசாரித்துக் கொண்டே, விடுவிடென்று அவர் வீட்டிற்குள் நுழைந்தபோது, வியர்த்துக் கொட்டிற்று மோகனுக்கு.

    இரண்டு நிமிடத்தில் திரும்பி வந்துவிட்டார் பூமிநாதன்.

    சினத்தைப் பற்றி இலக்கியத்தில் மோகன் வாசித்திருந்தான். சிற்சில சமயங்களில் அவனுக்கும் அது வருவதுண்டு. ஆனால் அப்போது பூமிநாதனின் முகம் இருந்த மாதிரியைப் பார்த்த பிறகே கோபம் என்றால் என்ன என்பதை அவனால் பூரணமாகத் தெரிந்துகொள்ள முடிந்தது.

    மோகன்!

    ... ஸார்! என்றான் மோகன், ஈனசுரத்தில்.

    நீ ராணிக்கு ஒன்றுமே சொல்லி அனுப்பவில்லையா?

    இல்லை...வந்து... வந்து... என்று மென்று விழுங்குவதைத் தவிர அவனால் எவ்விதமான சாக்கும் கூற முடியவில்லை.

    காரின் கதவு திறக்கப்பட்டது... இந்நேரம் அதனுள் மௌனமாக உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு வாலிபன், தன் ஆடைகளின் மடிப்புக் கலையாமல் நாசூக்காக இறங்கினான். அன்று முடிவடைந்திருந்த வழக்கில், அவனுக்காகத்தான் பூமிநாதன் ஆஜராயிருந்தார்.

    என்ன மிஸ்டர் பூமிநாதன், இஸின்ட் ராணி ரெடி.?

    வக்கீல் அவன் பக்கம் திரும்பினார். மன்னித்துக் கொள்ளுங்கள் சுரேஷ். அவள் தன் சினேகிதிகளோடு இப்போது தான் வெளியே போனாளாம்."

    ஓ...அப்படியானால்...நம்மோடு சினிமாவுக்கு வருவதில் அவளுக்கு... சுரேஷின் முகம் கடுகடுத்தது.

    சேச் சே! நீங்கள் தப்பாக எடுத்துக்கொண்டு விட்டீர்கள். எல்லாம் இந்தப் பிரகஸ்பதியால் வந்த வினை. நான் அனுப்பிய போன் மெஸேஜை இவன் அவளுக்குத் தெரிவிக்கவில்லை போலிருக்கிறது.

    சுரேஷ், புழுவைப் பார்ப்பதுபோல் உதாசீனமாக மோகனை நோக்கினான், "யு

    Enjoying the preview?
    Page 1 of 1