Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Jameen Kottai
Jameen Kottai
Jameen Kottai
Ebook160 pages56 minutes

Jameen Kottai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆதிரையன் என்ற ஒரு சிறுவன். நாகரிக உலகத்திலிருந்து ஒதுங்கி வாழ்ந்தாலும் நல்லவனாக இருக்கிறான். சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்ட அவன் தாத்தா, அவனுக்கு நல்ல சிந்தனைகளைப் போதிக்கிறார். காளியப்பன் என்ற சமூகவிரோதியோடு போராட சக்தியில்லாமல் துவண்டுகிடந்த தன் மலைக்கிராமத்தை அவன் விவேகமான, சாதுரியமான நடவடிக்கைகளினால் எவ்வாறு காப்பாற்றுகிறான் என வாசிப்போம்.

Languageதமிழ்
Release dateFeb 18, 2023
ISBN6580160509416
Jameen Kottai

Read more from W.R. Vasanthan

Related to Jameen Kottai

Related ebooks

Reviews for Jameen Kottai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Jameen Kottai - W.R. Vasanthan

    A picture containing icon Description automatically generated

    http://www.pustaka.co.in

    ஜமீன் கோட்டை

    Jameen Kottai

    Author :

    வி.ர. வசந்தன்

    W.R. Vasanthan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/wr-vasanthan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. மலையில் எரிந்த நெருப்பு

    2. காட்டில் ஒரு நண்பன்

    3. குறிசொல்லும் கல்

    4. மோகினி மண்டபம்

    5. நெருப்பில் தோன்றிய பேய்கள்!

    6. பிரியா விடை

    7. இந்திய தேசியப் படை

    8. துப்பறியும் புலி

    9. அப்பாவின் அனுமதி

    10. தூக்கம் திருவிழா

    11. பாதாளத்தில் ஒரு பாதை

    12. ஜமீன்கோட்டை!

    13. ஐவரல்ல, இனி அறுவர்!

    முன்னுரை

    மனிதன் மனதால் வாழ்பவன். மனசாட்சி என்பது மனிதனுக்கு மட்டுமே உண்டு. அதை அவன் எப்படிப் பயிற்றுவிக்கிறானோ அதன்படியே அவனது குணம் அமைகிறது.

    நேர்மையான சிந்தனைகளால் உருவாக்கும்போது புடமிட்ட பொன்னாகிறது. அதே நேரத்தில் துர்ச்சிந்தனைகளினால் நிறைக்கும்போது அழித்தொழிக்கும் விஷமாகிறது.

    இந்த இரண்டினுடைய வெளிப்பாடும் நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ சமுதாயத்தில் செல்வாக்குச் செலுத்துகின்றன. ஏனென்றால் எண்ணங்களின் வெளிப்பாடுதான் செயல்கள்.

    ‘ஜமீன்கோட்டை’ என்ற இந்த நெடுங்கதையில் ஆதிரையன் என்ற ஒரு சிறுவனை நீங்கள் சந்திப்பீர்கள். நாகரிக உலகத்திலிருந்து அவன் ஒதுங்கி வாழ்ந்தாலும் நல்லவனாக இருக்கிறான். சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்ட அவன் தாத்தா, அவனுக்கு நல்ல சிந்தனைகளைப் போதித்துகிறார். காளியப்பன் என்ற சமூகவிரோதியோடு போராட சக்தியில்லாமல் துவண்டுகிடந்த தன் மலைக்கிராமத்தை அவன் விவேகமான, சாதுரியமான நடவடிக்கைகளினால் காப்பாற்றுகிறான்.

    அவனுடைய மௌனப் போராட்டத்திற்குச் செயல் வடிவம் தரும் நண்பர்களாக மனோகரனும், சுந்தரவதனமும் வருகிறார்கள். அவர்களோடு இணைந்து காளமேகம், வரதன் மற்றும் குணசேகரன் ஆகிய நண்பர்களும் உதவுகிறார்கள்.

    விளையாட்டும் வேடிக்கையும் கலகலப்புமாகச் செல்லும் இக்கதையில் நுண்ணறிவால் காரியங்களை எடையிட்டு உணரும் கூர்மதியும் செயலாற்றலுமே முக்கிய இடம் வகிக்கின்றன. தங்கள் அறிவை மட்டும் பயன்படுத்தி இச்சிறுவர்கள் பெரிய காரியத்தைச் சாதித்துவிடுகிறார்கள்.

    சுதந்திரப் போராட்ட காலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் இந்திய தேசிய ராணுவம் நிறுவப்பட்ட நோக்கமும் அதன் செயல்பாடுகளும் இந்தக் கதையில் பின்னணியாக ஏழாம் அத்தியாயத்தில் இடம்பெறுகிறது. சுதந்திரப் போராட்டத்தின் இன்னொரு முகத்தை நீங்கள் புரிந்துகொள்ள இது உதவியாக இருக்கும்.

    ஒரு மனிதனைத் தட்டியெழுப்புவதில் புத்தகங்கள் நல்ல பங்கைக் கொண்டிருக்கின்றன. எனவே, புத்தகங்களைப் படிக்கும் வழக்கத்தை நீங்கள் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

    இந்த நெடுங்கதை உங்களை நிச்சயம் கவர்வதோடு, மனவளத்தைப் பெருக்கிக்கொள்ளவும் உதவும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. நாளைய சமுதாயத்தில் எதையும் ஆழமாகச் சிந்தித்துச் செயல்படுகிற நுண்ணறிவு மிக்கவர்களாக நீங்கள் திகழ வேண்டும் என்ற ஆசையோடு இப்புத்தகத்தை உங்களிடம் தருகிறேன்.

    ‘ஜமீன்கோட்டை’ என்ற இந்த நாவலை அழகிய புத்தகமாக அச்சிட்டு வெளியிட்டவர்க்கு என் மனமார்ந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்.

    -வி.ர. வசந்தன்

    1. மலையில் எரிந்த நெருப்பு

    தெள்ளத்தெளிவாக இருந்த நீலவானத்தில் அவிழ்த்துக் கொட்டிய பஞ்சுப்பொதிகளைப்போல், சிதறிக்கிடந்த வெண்மேகங்கள், வேகவேகமாக வானத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு நகர்ந்துகொண்டிருந்தன.

    அவை பிரிந்து கலைந்து மீண்டும் இணைந்து விண்ணில் நடத்திய மாயவித்தையை ரசித்தவாறு அந்த ஏரிக்கரையில் அமர்ந்திருந்தான் மனோகரன். அவன் கண்கள் அடிக்கடி ஏரியின் நீர்ப்பரப்பை ஆவலுடன் உற்று நோக்கின.

    அவன் அப்படி ஆர்வத்தோடு எதிர்பார்த்துக்கொண்டிருப்பது வேறு யாரையும் அல்ல. தன் அப்பாவைத்தான். வனத்துறை அதிகாரியான அவர் சோதனைக்காக, ஏரிக்கு அப்பால் காட்டுக்குள் ரோந்து சென்றிருக்கிறார். அவர் வருகைக்கு அவன் இவ்வளவு பொறுமையுடன் காத்திருப்பதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

    ஒரு வாரமாக அவனது நண்பர்கள், ஏரிக்கு மறுகரையில் இருக்கும் மூங்கில் பள்ளத்திற்கு சுற்றுலா சென்று வர வேண்டும் என்று அவனை வற்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு இயந்திரப் படகைப் பயன்படுத்த அப்பாவின் அனுமதி வேண்டும். அதற்காகத்தான் அவன் அங்கு காத்திருந்தான்.

    சூரியனை மறைத்து விளையாடிய மேகங்கள், அதன் கோபப்பார்வைக்கு அஞ்சியதுபோல் ஏரியின் மறுபுறம் கம்பீரமாக எழுந்து நின்ற கஜேந்திரமலைக்கு அப்பால் ஓடி ஒளிந்துகொண்டன.

    அந்தக் காட்சியை இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவனுக்குத் தன் தோழன் சுந்தரவதனத்தின் நினைவுதான் வந்தது.

    மற்றவர்களிடம் குறும்பு செய்து, வம்புக்கு இழுப்பது அவனோடு பிறந்த குணம். சில நேரம் விளையாட்டு பெரும் வினையாகிவிடுவது உண்டு. யார் கோபத்திற்காவது ஆளாகும்போது அவனும் இப்படித்தான், இந்தப் பொல்லாத மேகங்களைப்போல் எங்காவது ஓடி ஒளிந்துகொள்வான். பின் இரண்டொரு நாட்களுக்கு ஆளே கண்ணில் படமாட்டான்.

    நெடுநெடுவென்று நோஞ்சான்போலக் காட்சியளித்தாலும் மனதால் படுதைரியசாலி. கேலியும் கிண்டலுமாகப் பேசினாலும் பிறர் துன்பப்படுவதைப் பார்த்தால் அவனால் தாங்கிக்கொள்ளவே முடியாது.

    சுந்தரவதனத்தையும் அவன் செய்யும் குறும்புகளையும் நினைத்து, தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டான் மனோகரன். மூங்கில் பள்ளம் சுற்றுலாவுக்கு விதை போட்டவனே அவன்தான். அவனோடு அந்தப் ‘புலவன்’ காளமேகமும் ‘வம்புக்கார்’ வரதனும் ‘குணவான்’ குணசேகரனும் சேர்ந்துகொண்டு வற்புறுத்தியதால் மனோகரனால் மறுக்க முடியவில்லை. அப்பாவிடம் எப்படியும் அனுமதி வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையில் சரியென்று ஒப்புக்கொண்டான். இனி அனுமதியோடு செல்லாவிட்டால் அவர்களைச் சமாளிப்பது பெரும் கடினமாகிவிடும்.

    அப்பா வீட்டில் இருக்கும்போது கேட்கலாந்தான். ஆனால், அம்மா ஒரேயடியாக முட்டுக்கட்டை போட்டுவிட்டால் என்ன செய்வது? அம்மாவுக்கு எடுத்ததற்கெல்லாம் பயம். அப்பாவிடம் முதலில் அனுமதி பெற்றுவிட்டால், பின் அம்மாவை எளிதாகச் சமாளித்துவிடலாம்.

    சிந்தனையோடு அமர்ந்திருந்தவன், தொலைவில் படபடவென்று இயந்திரப்படகின் ஓசை கேட்கவே பரபரப்படைந்தவனாய் எழுந்து உற்றுப் பார்த்தான். பரந்து விரிந்து கிடந்த ஏரியின் நீர்ப்பரப்பைக் கிழித்துக்கொண்டு இயந்திரப் படகொன்று தொலைவில் விரைந்து வந்துகொண்டிருந்தது.

    சிவப்பு வர்ணமடித்த, அதன் கூரிய முன்புறம் தூக்கியிருக்க, ஒரு நீர்ப்பறவைபோல நீந்தி வந்த படகு, கரையை நெருங்கியது அவன் ஆவலுடன் எழுந்து அதனருகில் ஓடினான்.

    படகிலிருந்து கரையில் குதித்த அவன் தந்தை இராஜபாண்டியன் அவனைப் பார்த்து புன்முறுவலுடன் கையசைத்தார்.

    ஓடிச்சென்று அவர் கையைப் பற்றிக்கொண்ட மனோகரன், என்னப்பா, உங்க அதிரடி சோதனை வெற்றிதானே? என்று கேட்டான்.

    இராஜபாண்டியனின் முகத்தில் ஒரு கம்பீரப் புன்னகை தோன்றியது. அதற்கு அவர் பதில் சொல்வதற்குள், இன்னிக்குத் தப்பி ஓடிட்டானுங்க... ஆனா, எடுத்த காரியத்தை முடிக்காம ஐயா விட்டுருவாரா... என்னிக்கானாலும் அந்தக் காடுவெட்டி காளியப்பனும் அவன் கும்பலும் ஐயாகிட்ட மாட்டித்தான் ஆகணும் என்றவாறு தன் அடர்ந்த மீசையை வருடியவாறு, கையில் பெட்டியோடு இறங்கினார் படகோட்டி செங்கல்வராயன்.

    அவரைப் பார்த்ததும் மனோகரனின் முகத்தில் மகிழ்ச்சி தொற்றிக்கொண்டது. அடடே, டார்ஜான் அங்கிளா... அப்பாவுக்கு நிழல்போல நீங்க இருக்கும்போது, எதிரி எப்படித் தப்பிச்சான்...? ஆச்சரியமா இருக்கே என்று தோள்களை உயர்த்திச் சொன்னான்.

    சரியாச் சொன்னே என்று தன் மகனைத் தட்டிக்கொடுத்த இராஜபாண்டியன், செங்கல்வராயனிடமிருந்து தன் பெட்டியை வாங்கிக்கொண்டார்.

    ஆங்கிலப் படங்களில் வரும் காட்டுமனிதனைப்போல் பருத்துத் திரண்ட புஜங்களும் கரடுமுரடான தசைகளுமாக, முரட்டுத்தோற்றம் கொண்ட செங்கல்வராயன், தன் பெரிய உடல் குலுங்கச் சிரித்தவாறு, அப்பாவைத் தேடித் தம்பி இவ்வளவு தூரம் வந்ததுக்குக் காரணம் இருக்கணுமே... என்றார் கண்களில் குறும்பு ததும்ப.

    இராஜபாண்டியனும் நெற்றியைச் சுருக்கி என்ன விஷயம்? என்பதுபோல் தன் மகனைப் பார்த்தார்.

    மனோகரன் சற்றுத் தயக்கத்துடன், ஒண்ணுமில்லேப்பா... என்னோட ப்ரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து ஒரு சுற்றுலா போகணும்னு ஆசைப்படறாங்க என்றான்.

    அதுக்கென்ன, தாராளமா போயிட்டு வாயேன்... என்ற ராஜபாண்டியன், இதுக்குப் போயா இவ்வளவு நேரம் இங்க வந்து காத்துட்டு இருந்தே? இதை வீட்டிலேயே கேட்டிருக்கலாமே என்றார்.

    அதற்கு அவன் பதில் சொல்வதற்குள் குறுக்கிட்ட செங்கல்வராயன், வீட்டுல கேட்டா அனுமதி கிடைக்காதுன்னுதானே அவன் இங்க வந்திருக்கான்... அவங்க சுற்றுலா போக நினைக்கிற இடம் அப்படி... இல்லையா தம்பி! என்று ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தார்.

    எங்கே இடையில் புகுந்து இவர் காரியத்தைக் கெடுத்து விடுவாரோ என்று

    Enjoying the preview?
    Page 1 of 1