Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Udhayan Engey?
Udhayan Engey?
Udhayan Engey?
Ebook146 pages49 minutes

Udhayan Engey?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'உதயன் எங்கே?' என்ற இந்த நாவலில் வரும் மார்கரேட் அம்மையார், பிறர் துன்பம் சகியாத பண்பட்ட இதயம் கொண்டவர். அந்தக் குளிர் நிலவின் தண்ணொளியில் பொல்லாத மனங்களும் கனிந்து பொன்போலாகின்றன. அவரிடம் அடைக்கலம் தேடிவரும் அனாதைச் சிறுவர்களான உதயனும், மனோகரனும், காளிமுத்துவும் வேறுபட்ட சூழல்களில் பிறந்து, மாறுபட்ட குணங்களோடு இருப்பவர்கள். அவர்களுக்குள் நிகழும் உணர்ச்சிப் போராட்டமே கதையின் உயிர்நாடி. வாருங்கள் வாசித்து அறிந்துகொள்வோம்...!

Languageதமிழ்
Release dateApr 6, 2024
ISBN6580160510482
Udhayan Engey?

Read more from W.R. Vasanthan

Related to Udhayan Engey?

Related ebooks

Reviews for Udhayan Engey?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Udhayan Engey? - W.R. Vasanthan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உதயன் எங்கே?

    Udhayan Engey?

    Author:

    வி.ர. வசந்தன்

    W.R. Vasanthan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/wr-vasanthan

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. புயல் வலுத்தது

    2. அப்பாவின் ஆசை

    3. மற்றொரு நண்பன்

    4. பாலில் கலந்த நஞ்சு

    5. அலைமோதும் நெஞ்சங்கள்

    6. அன்பு மனம்

    7. தோளில் விழுந்த கை

    8. அறையில் கிடைத்த சாவி

    9. புதிய இலைகள்

    10. முளைவிட்ட நச்சு விதை

    11. நிழலின் அருமை

    12. கண்ணீரே சாட்சி!

    முன்னுரை

    எந்த உயிர்களிடத்தும் இல்லாத சிறந்த குணம் ஒன்று மனிதர்களிடத்தில் உண்டு அதுதான் பரிவு. பிறரது துன்பம் காண்கையில், இயல்பாகவே தோன்றும் இந்த மெல்லுணர்வு மனித இதயங்களுக்கு மட்டுமே சொந்தமானது.

    ஆயினும், வாழ்வில் சந்திக்கும் கரடு முரடான சூழ்நிலைகளும், கசப்பான அனுபவங்களும், தன்னலப் பெருக்கும் இந்த அன்பு நீரூற்றைப் பெரும்பாலும் வற்றிப்போக வைத்துவிடுகின்றன.

    ஈரம் வறண்டு, மண் பாலையாகும்போது அதில் கள்ளிச் செடிகளும், கருவேல மரங்களும், காட்டாமணக்கும் வளர்ந்து காடு மண்டுவது போல, அன்பு தேயும்போது நெஞ்சத்தைப் பொறாமையும், பேராசையும் வெறுப்பும் ஆக்ரமித்துக் கொள்கின்றன. அன்பு மழை மட்டும் பெய்து கொண்டிருந்தால் மனம் என்றும் பசுஞ்சோலைதான்.

    வாழ்வில் தனக்கு ஏற்பட்ட துன்பங்கள், பிறருக்கு நேரலாகாது என்று எண்ணும் மனங்கள் தெய்வம் வாழும் இல்லங்களாகும். பல்லாயிரத்தில் அல்லது இலட்சத்தில் ஓர் இதயத்தால் மட்டுமே, அத்தகைய கனிவுணர்ச்சியைப் பிறரிடம் காட்ட முடிகிறது. அந்த நெஞ்சங்களை வரலாறு என்றும் நினைவில் வைத்திருக்கும்.

    ‘உதயன் எங்கே?’ என்ற இந்த நாவலில் வரும் மார்கரெட் அம்மையார் பிறர் துன்பம் சகியாத பண்பட்ட இதயத்துக்குச் சொந்தக்காரராக இருக்கிறார். அந்தக் குளிர் நிலவின் தண்ணொளியில் பொல்லாத மனங்களும் கனிந்து பொன் போலாகின்றன.

    அவரிடம் அடைக்கலம் தேடிவரும் அனாதைச் சிறுவர்களான உதயனும், மனோகரனும், காளிமுத்துவும் வேறுபட்ட சூழல்களில் பிறந்து, மாறுபட்ட குணங்களோடு இருப்பவர்கள். அவர்களுக்குள் நிகழும் உணர்ச்சிப் போராட்டமே கதையின் உயிர்நாடி.

    இந்தக் கதை 'கோகுலம்' பத்திரிகையில் (1996-97) தொடராக வெளிவந்தபோது ஏராளமான சிறுவர்களும், சிறுமியரும், பெற்றோரும், ஆசிரியர்களும் இதழுக்கு இதழ் பாராட்டி கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தனர்.

    கதைத் தொடர் முடிவடைந்ததும் மனம் ஒன்றிக் கலந்த உறவினர்களையும், நண்பர்களையும் பிரியும் ஏக்கத்தோடு அவர்கள் வரைந்த கண்ணீர் மடல்களுக்கு என் நன்றி.

    இந்தக் கதை ‘கோகுல’த்தில் வெளிவருவதற்குப் பல ஆண்டுகள் முன்பே, திருநெல்வேலியிலிருந்து பிரசுரமாகும் ‘ஞான தீபம்’ என்ற சிற்றிதழின் பன்னிரண்டு இதழ்களில் (1985-86) ‘இருளில் உதித்த வெளிச்சம்’ என்ற பெயரில் ஒரு குறுந்தொடராக வெளிவந்தது. அந்த மூலக் கதையில் வேண்டிய மாற்றங்களும், சம்பவ ணைப்புகளும் செய்யப்பட்டு மறுவடிவம் பெற்றதே இந்நாவல்.

    சிறுவர்களுக்காகக் சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்த அந்த நாட்களில், தொடர் எழுதும்படி வற்புறுத்தி, ‘ஞான தீபம்’ இதழ்களிலும் அதை வெளியிட்டு ஊக்குவித்த அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய பெரிய வர்களான ‘ஞான தீபம்’ சித்தர் தம்பதியினரை நான் என்றும் மறப்பதற்கில்லை.

    கருத்தாழமும், மனிதநேயமும் மிக்க இந்தக்கதை நிச்சயம் உங்கள் இதயங்களைப் பண்படுத்தும் கருவியாகத் திகழும் என நம்புகிறேன்.

    வி.ர.வசந்தன்

    1. புயல் வலுத்தது

    சீறி எழுந்து வந்த கடல்அலைகள் பேரிரைச்சலோடு பொங்கிப் பாய்ந்து, கரையோரப் பாறைகளில் படீரென்று மோதி, பல்லாயிரம் நீர்த்திவலைகளாகச் சிதறி விழுந்தன. மணல் பரப்பின் மீது வெண்நுரையாய்ப் படர்ந்த அலை வெள்ளத்தில் மிதந்து வரும் மீன்களைக் கொத்திக்கொண்டு பறந்த கடல் நாரைகளும், காகங்களும் அருகே கிடந்த கட்டுமரங்களில் அமர்ந்து நிதானமாக அவற்றை உண்ணலாயின.

    வானம் புகைபடிந்த கண்ணாடிபோல் மேகங்கள் நிறைந்து மப்பும் மந்தாரமுமாக இருந்தது. மணல்வெளிக்கு அப்பால், தென்னந்தோப்புகளுக்குள் சிதறிக் கிடந்த ஆழிக்குப்பத்தின் குடிசைகளில் உட்கார்ந்திருந்த மீனவர்கள், கடலையே வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தனர். எல்லோர் முகங்களிலும் சோர்வும், கவலையும் அதிகமாகக் காணப்பட்டது. கடலுக்கு அவர்கள் மீன் பிடிக்கச் சென்று அன்றோடு மூன்று நாட்களாகி விட்டன.

    மேகம் மூடிக் கிடந்த வானத்தைக் கவலையோடு உற்றுநோக்கிய நல்லையா, தன்னருகே உட்கார்ந்திருந்த உதயனிடம் மூணு நாளா வானம் மூடிக் கிடக்கு... ‘புயல் வரும் வரும்’னு சொல்றாங்க... ஆனா புயலையும் காணோம். வாயில்லா ஜீவன்களுக்குக் கூட உணவு தந்து காப்பாத்தற கடலம்மா, சில நேரம் நம்மை இப்படித்தான் பட்டினி போட்டுச் சோதிச்சுடறா என்றார் சோர்வுடன்.

    ***

    மூன்று நாட்களாகச் சரியாகச் சாப்பிடாததால் சோர்ந்திருந்த உதயன் தன் தகப்பனாரைப் பார்த்து, இயற்கை யாருக்கும் பாரபட்சம் காட்டறதில்லேப்பா... இந்த மாதிரி நிலைமைகளை யோசிச்சு, நாமதான் முன்ஜாக்கிரதையாக இருந்திருக்கணும்... என்றான்.

    நீ சொல்றது உண்மைதான். ஆனால் என்னதான் மீன்பிடிச்சாலும், அது வாய்க்கும் வயிற்றுக்கும் போதமாட்டேங்குதே... அலைமேல போராடற நமக்கு ஓய்வு ஒழிச்சல் இல்லாம வாழ்க்கையோடேயும் போராடும்படி ஆகிப்போச்சு! நீயாவது நாலெழுத்து படிச்சு நல்லாயிரு. நித்தம் நித்தம் செத்துப் பிழைக்கிற பிழைப்பு உனக்கு வேண்டாம்பா என்றபோது நல்லைய்யாவின் குரலில் வேதனையும், விரக்தியும் சேர்ந்திருந்தன.

    பசியினால் உதயனின் முகம் வாடியிருப்பதைக் கவனித்தவர், தன் மடியை அவிழ்த்து ஓர் ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் நீட்டினார். நாலு ரோட்டுக்குப்போய் டீயும் பன்னும் வாங்கிச் சாப்பிட்டுட்டு வா என்றார் பரிவுடன்.

    அதை வாங்கிக் கொண்ட உதயன், நீங்களும் வாங்கப்பா. ரெண்டு பேரும் போகலாம், உங்களுக்கும் பசிக்குமே? என்றான்.

    எனக்குப் பசிக்கலை. நீ போய்ச் சாப்பிட்டுட்டு வா... வானம் வெளிவிழுந்த மாதிரி இருக்கு. சாயங்காலத்துக்குள்ளே நல்லா வெறிச்சுடும்.

    அப்போது ஆழிக் குப்பத்திலுள்ள மீனவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து கும்பலாக வந்தனர். அவர்களில் ஒருவன், நல்லைய்யா, வானம் நல்லா வெறிச்சிருக்கு. கடல்ல இறங்கறதா நாங்க முடிவு பண்ணிட்டோம்... மீன் பிடிக்கப் போகாம குழந்தை குட்டியெல்லாம் வயிறு காஞ்சு கிடக்கு. நீ என்ன சொல்றே? என்று கேட்டான்.

    உதயன் பதற்றத்துடன் தன் தகப்பனாரைப் பார்த்தான். பிறகு, இன்னும் இருபத்து நாலு மணி நேரத்துக்கு புயல் அபாயம் இருக்குன்னு நேற்றைக்கு சாயங்காலம் ரேடியோவில் சொன்னாங்க என்று எச்சரிக்கும் தொனியில் சொன்னான்.

    நல்லைய்யா பதிலளிப்பதற்குள் ஒருவன் குறுக்கிட்டு, அதுதான் மூணு நாளா சொல்லிக்கிட்டு இருக்கானுங்களே? இப்படி எத்தனையோ தடவை சொல்லிச் சொல்லி கடைசியில ஒண்ணுமில்லாம போயிருக்கு? இதுக்கெல்லாம் பயந்தா நம்ம பிழைப்பு ஆகுமா? நீ என்ன சொல்றே நல்லைய்யா? என்று கேட்டான்.

    நல்லைய்யா உதயனைத் தயக்கத்துடன் பார்த்தார். உதயா! நீ போய்ச் சாப்பிடு. வானம் நல்லா வெறிச்ச மாதிரித்தான் இருக்கு. புயலெல்லாம் இன்னிக்கு வராது. பயப்படாதே என்று அவனைச் சமாதானப்படுத்தும் தோரணையில் சொன்னார்.

    அவர்களுடைய திட்டம் உதயனுக்கு சற்றும் பிடிக்கவில்லை. தன் தகப்பனாரைத் தடுக்கும் பொருட்டு நீங்க இன்னைக்குக் கடலுக்குப் போக வேண்டாம். இன்னும் ஒருநாள் பசியைப் பொறுத்துக்கிட்டா ஒண்ணும் ஆயிடாது என்று திண்ணையில் அமர்ந்து கொண்டான்.

    அவன் சொன்னதைக் கேட்ட மீனவர்கள், என்னலேய்! கிளம்பும்போதே அச்சானியம் புடிச்சமாதிரி பேசற? எப்ப புசல் வரும். எப்ப வராதுன்னு இத்தனை வருஷமா மீன் புடிக்கிற எங்களுக்குத் தெரியாதா? ரேடியோக்காரன் பேச்சைக் கேட்டுகிட்டு எத்தனை நாள் வயிறு காஞ்சு கிடக்க முடியும்? நீ வேலையைப் பாப்பியா? என்று அவன்மீது பாய்ந்தனர்.

    நல்லைய்யா

    Enjoying the preview?
    Page 1 of 1