Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மதியின் மாதவன்!: இரு தேசத்தின் நாடி!
மதியின் மாதவன்!: இரு தேசத்தின் நாடி!
மதியின் மாதவன்!: இரு தேசத்தின் நாடி!
Ebook433 pages2 hours

மதியின் மாதவன்!: இரு தேசத்தின் நாடி!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

About the book:
மதியின் மாதவன்!' என்றத் தலைப்புக் கொண்ட இந்தப் புத்தகம் கதை உருவம் கொண்டு எழுந்தது மிகுந்த நிறைவானது. மதியழகி அவள் கொண்டுள்ளக் காதல், மற்றும் அவள் வாழ்வில் சந்திக்கும் இன்னல் என்பதை அறிய நாம் குறைந்தது நூற்றாண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டி இருந்தது. மன்னராட்சிக் காலத்தில் நடைபெறுவதாக இருக்கும் இந்தக் கதையில் இடம் பெரும் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் கருபனையானவை மற்றும் அவர்களின் சிக்கல்கள் சித்தரிக்கப்பட்டவை. சில வர்ணனைகள் மனசங்கடங்களை ஏற்படுத்தலாம்! வாசகர்கள் விவேகத்துடன் செயல்படுவது நிறைவுக்குரியது! முகம் சுளிக்கும் வண்ணம் அமையும் வர்ணனைக்கு வருந்துகிறோம்!


About the author:
கபிலன் பாண்டியன் என்னும் புனை பெயரால் அருன்பண்டியனும், அவர் நண்பர் சதாம்உசேன் உம் இணைந்து எழுதிய முதல் புத்தகம் இது. இந்த முயற்சி வெற்றியில் வெற்றி பெரும் முனைப்பு அவர்களிடம் உள்ளது. இந்தப் புத்தகம் தமிழ் ஆற்றில் விழுந்த சிறிய இலை! அதுக் கடலோடு வந்து சேர்வதும், மொண்டுக் குடிக்கும் குடத்தோடு வந்து விழுவதும் நம் காலத்தின் கட்டாயம்! கதைகள் சமூகத்தை நேரியாக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு மிகுந்திருந்தது மட்டும்தான் இந்த முயற்சிக்கு அவர்களைத் தூண்டியது. மேலும் இதுப் போன்ற முயற்சிகள் செய்ய உங்களின் ஆதரவை என்றும் எதிர்நோக்கி இருக்கும் அவர்கள் கண்கள்!

Languageதமிழ்
PublisherPencil
Release dateJul 11, 2022
ISBN9789356108547
மதியின் மாதவன்!: இரு தேசத்தின் நாடி!

Related to மதியின் மாதவன்!

Related ebooks

Related categories

Reviews for மதியின் மாதவன்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மதியின் மாதவன்! - கபிலன் பாண்டியன்.

    மதியின் மாதவன்!

    இரு தேசத்தின் நாடி!

    BY

    கபிலன் பாண்டியன்.


    pencil-logo

    ISBN 9789356108547

    © Kabilan Pandiyan 2022

    Published in India 2022 by Pencil

    Contributors:

    Co-Author: Sadham Hussain

    Editor: Syed Nilama

    A brand of

    One Point Six Technologies Pvt. Ltd.

    123, Building J2, Shram Seva Premises,

    Wadala Truck Terminal, Wadala (E)

    Mumbai 400037, Maharashtra, INDIA

    E connect@thepencilapp.com

    W www.thepencilapp.com

    All rights reserved worldwide

    No part of this publication may be reproduced, stored in or introduced into a retrieval system, or transmitted, in any form, or by any means (electronic, mechanical, photocopying, recording or otherwise), without the prior written permission of the Publisher. Any person who commits an unauthorized act in relation to this publication can be liable to criminal prosecution and civil claims for damages.

    DISCLAIMER: This is a work of fiction. Names, characters, places, events and incidents are the products of the author's imagination. The opinions expressed in this book do not seek to reflect the views of the Publisher.

    Author biography

    வாசகர் வணக்கங்கள்!

    இந்தப் புத்தகம் எழுத்தாளராக நினைக்கும் ஒரு வாலிபனின் பேனாவில் உதித்தக் கதை. கபிலன் பாண்டியன் என்னும் புனைப் பெயரால் அருண் பாண்டியன் என்னும் வாலிபனால் உதித்தக் கதை. கலைக்கு வயது வரம்பு இல்லை என்பதை அறிய விரும்பிப் புனையப்பட்டக் கதை. இந்தக் கதையை படைத்து எடுக்க எடுத்துக் கொண்ட அவகாசம் கொஞ்சம் நிரம்பக் கண்டோம்! இந்த முயற்சி ஓடும் ஆற்றில் விழுந்த ஒற்றை போல! கடலை சேர்ந்தாலும் சரி! நிரம்பும் குடத்தில் சேர்ந்தாலும் சரி! நல்லவை நடக்கும் என்ற நம்பிக்கையோடு மேலும் தொடர்வோம்! 

     நன்றி!

    Contents

    1. நித்திரை சொப்பனம்!

    2. நீராடல் களம்!

    3. நுண் செவிகள்!

    4. கனவு பலித்தது!

    5. ஒருதலைக்காதலன்...

    6. கோட்டைக் கூரைக்குள்ளே!

    7. பிறந்தான் சூரியன்!

    8. ஜாதகம் சாதகமா !

    9. ஆற்றங்கரையிலே...

    10. சுடுகாட்டுத் தம்பி!

    11. விஜயபிரபாகரன்!

    12. நாட்டின் மோகத்தில் விஜயன்!

    13. குறும்புக்கார மதியழகி!

    14. பவித்ரன் அறிமுகம்!

    15. உதவி செய்யுங்கள்!

    16. வரம் கொடுப் பவித்ரா!

    17. இதயம் தொலைகிறதே!

    18. பதில் மனு அனுப்புவோம்!

    19. சொல்லிவிட வேணும்!

    20. முகமூடிக் கொள்ளையர்!

    21. நீங்களா...!

    22. வைகறை வரை!

    23. கருங்குதிரை சிக்கல்!

    24. பாட்டிசைக்கும் தென்றல்!

    25. மாட்டிக் கொண்டார்கள்!

    26. யானைப்போர் தோழன்!

    27. கவியரசி - வீரசேகரன்!

    28. இந்திரன் ஆலயம்!

    29. மதி சொல்லியக் கதை!

    30. தியாகியின் ரகசியம்!

    31. செய்திக் கொண்டு வந்தப் பூக்கள்!

    32. சந்திரவர்மன் வருகை!

    33. சங்கமித்தப் பெற்றோர்!

    34. சீவலப்பேரிகன்!

    35. யாரந்தக் காவியத்திலகன்

    36. துரோகிகள் சூழ்ந்த தேசம்!

    37. அத்தை!

    38. தளபதி!

    39. யாரந்த குரு!

    40. தீஞ்சகுனம்!

    41. மறைந்தான் சூரியன்!

    42. மாமன்னன் சந்திரவர்மன்!

    43. தூதுப் போகிறேன்!

    44. சிந்தாமணியும் செத்தொழிந்தாள்!

    45. திடுக்கிட வைத்த தகவல்!

    46. அதிர்ஷ்டம் துணை நிற்கும்!

    47. சிறைச்சாலையில் அன்றிரவு!

    48. ரகசியம் சொன்னார்கள்!

    49. காடும் கரையும்!

    50. ராஜேந்திரன் வார்த்தைகள்!

    51. உறவுகள் தேடப்படும்!

    52. போருக்குத் தயாராக வேண்டும்!

    53. கொல்லரை அணுகினர்!

    54. தேவிப்பட்டினத்திலே...

    55. படையும் - பாதுகாப்பும்!

    56. காவலன் - காதலி!

    57. கொல்லரின் யோசனை!

    58. பசுபதியின் ஆட்டம்!

    59. வருணதேவன் திருவிழா!

    60. கலவரம் எப்படி...

    61. நானும் வருவேன்!

    62. தவறு செய்கிறேன்!

    63. நாட்டினிலே அந்தக் காட்சி!

    64. போர்!

    65. நீட்சி!

    66. இப்படிக்குக் காலம்!

    67. பட்டமளிப்பு!

    1. நித்திரை சொப்பனம்!

                    அற்புதமான  அந்திமாலைப் பொழுது. ஆதவன் அஸ்தமித்துக் கொண்டிருக்கிறான். கடற்கரை மணலில் இருந்த வெப்பம் மெல்ல மெல்ல தாளத் துவங்கியது, அந்த மணல் பரப்புக்கு வாட்டிடும் காதலுக்கு ஒப்பான அந்த வெப்பத்தில் இருந்து விடுதலைத் தந்ததுப் போல ஆனது. கடல் நீரில் தன் சாயத்தைக் கதிரவன் கரைத்துச் சென்றதால் அந்த ஆழி சிவப்பாகப் போகிறதும் அந்த குங்குமக் கரைசல் போலத் தரும் காட்சியும் அழகிய நிகழ்வு. நண்டுகள் நிகழ்த்திய நாட்டியமும் வண்டுகள் விடுத்த ரீங்காரமும் அடடா! பலவண்ணப் பட்சிகள் வானில் கானம்பாடி தாந்தம் கூடு நோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றன. வானத்தின் கருப்பு சாயம் ஏறத் துவங்கியது. வானவள் விரித்த சேலையோ அது! மேகத்தைக் காதல் செய்யும் தென்னை, மணலை மணம் புரிந்துக் கொண்டு படுக்கைக்குச் செல்லாமல் நெடிதோங்கி நிற்கிறது. உப்புக் காற்றுக்கு மத்தியிலும் அந்தியில் பூத்துக் குலுங்கும் தாழம்பூ நறுமணம் மூக்கைத் துளைக்கிறது. இப்படியாக அந்த நெய்தல் நிலம் பூலோகத்தில் ஒரு தேவலோகம் என்றுக் காட்சி அளித்தது. தேவலோகத்தை நாமாரும் நேரில் கண்டதில்லை என்பதால் இந்த வர்ணனை ஏற்புடையதா என்று நமக்கு ஒருக் குழப்பம்.

                        மேற்சொன்ன நிகழ்வுகள் நடந்துக் கொண்டிருக்கும் வேளையில் மேலும் அழகூட்டும் ஒருப் புடவை. இளஞ்சிவப்பு வண்ணச் சேலைக்கு மத்தியிலே மஞ்சள் வண்ண நூலிடை. தலையில் ஒருப் பானை நீரை சுமந்துக் கொண்டு வருகிறாள் அவள். நிச்சயம் அவள் ஒரு இந்திரலோகத்து மங்கைதான். இல்லை! இல்லை! வானத்து நிலவுதான் தரை இறங்கி வந்திருக்கோ? உண்மையில் அந்த தேகமும் முகமும் அப்படிப் பொலிவுடன் இருக்கிறது. அப்படிப்பட்ட அந்த அழகியின் பெயர் மதியழகி. நெடுந்தொலைவு சென்று வந்திருப்பாள் போல. புடவை மாராப்பு நனைந்துள்ளது. முத்து முத்தான வியர்வைத்துளிகள் தேகமெங்கும் ஓடையாய் ஓடியது. ஆபரணமாய் மின்னியது. சந்தனக் கரைசல் மேல், பன்னீர் துளிப் போலவும் தெரிந்தது.

                         இன்னும் கொஞ்சத் தொலைவு சென்றால்தான் அவளது ஊரானப் புங்கைப்பட்டினம் செல்ல முடியும் என்பதால் எதிர்வருந் தொலைவினை வேடிக்கைப் பார்த்த வண்ணம் நடந்தாள். அந்தக் கயல் பார்வைக்கு ஏங்கிய மரக்கிளைகள், அவளுக்காகப் பூப் பூத்துக் காத்துக் கிடக்கிறது. அப்போது அவளது இடதுப் பக்கத்தில் கிடந்த ஒரு பட்டுப்போன மரத்தின் தண்டையும், மண்டியப் புதரின் இலைகளையும் இணைத்து வலைப் பின்னிக் கொண்டிருந்த ஒரு சிலந்தியைக் கண்டாள்.அந்த சிலந்திக்கு அத்தனை வசீகரம் எங்கிருந்தோ வந்தது உண்மை. அவள் கண்ணில் விழுந்துவிட்டது. மறுமுனையில் மற்றுமோர் சிலந்தி ஆடிக் கொண்டிருப்பதையும் கண்டாள். இவை மதியழகியின் சிந்தனையை மாற்றியது. அதனை நெருங்கி சென்று மெல்ல அவற்றை நோக்கினாள். காதல் சுயம்வரமா? காத்திரு! காத்திரு! என்றாள். அவள் பின்னால் இருந்துக் கலீர் என்ற சிரிப்புச் சத்தம். மதியழகியின் துடிக்கும் இதயம் இருநொடி நின்றுத் துடித்ததை உணர்ந்தாள். திரும்பிப் பார்த்த வேளையில் இவளைப் போலவே தலையில் மண்பாண்டத்துடன் மூன்று மங்கையர் நின்றுக் கொண்டிருந்தனர். அந்த நங்கையர் கொண்ட வளைந்த இடைகள் ததும்பிக் கொட்டியநீரில் 

    குளித்திருந்தன. அவர்கள் மதியழகியின் ஊரில் வசிக்கும் அவளது உற்றத் தோழிமார்கள்தான்.

             ஏனடி எல்லோரும் சிரித்தீர்கள்? என்றுத் தானே வினவினாள் மதி. மையத்தில் இருந்த மஞ்சள் வண்ணப் புடவைக் காரி, பின்னென்ன மதி? சிலந்திக்கு சுயம்வரம் நிகழ்த்தும் பெண்ணைக் கண்டால் சிரிப்புதானே வரும்? என்று சொல்ல, மற்ற இருவரும் நகைத்தனர். ‘நாம் சத்தமின்றி சொன்னது இவர்கள் காதுகளில் எப்படி விழுந்தது?’ என்று யோசனையில் இருந்தாள் மதி. பெண்களின் காதுகள் பாம்பினது என்று ஒருப் பழமொழி உண்டு. அது இவர்கள் விஷயத்தில் உண்மையானது. உன்னைத் தான் மதி! என்ன சிந்தனை? என்றுக் கேள்வியை நீட்டினாள் அந்த மஞ்சள் சேலைக்காரி. அவளதுப் பெயர்தான் மணிமேகலை. அவர்களது கேலிச் சிரிப்பு அவளை வேகமேடுக்கச் செய்தது. அந்த வேகத்திலும் நீர்த் ததும்பிக் கொட்டவில்லை. என்னதான் நளினமோ அந்த நடையில்! பிரம்மிக்க வைத்தது.

                    ஊர் வந்து சேந்தனர். பட்டிணம் வந்து சேர்ந்தனர் என்று சொல்வதுதான் சரி. அவரவர் வீட்டுத் திண்ணையில் தலையில் இருந்தப் பானைகள் இறங்கின. மதியழகித் தன் முந்தானையால் முகத்தைத் துடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள். மங்கயர்கென்று சில வேலைகள் அக்காலத்தில் வரையறுக்கப் பட்டது. குடும்பக் கடமைகள் என்று அதனைக் குறிப்பிடுவது சிறப்பானதாக இருக்கும் என்று எண்ணுகிறோம். உணவுத் தயாரிப்பு, தூய்மைக் காத்தல், இறைவழிபாடு என வரையறுக்கப்பட்டிருந்தவை, இன்றளவும் நம் நாட்டில் புழக்கத்தில்தான் உள்ளது. 

                    மெல்ல மெல்ல இருள் சூழ்ந்த வானில், தாமதமாய் வந்தது வெண்ணிலவு. தேய்பிறை காலம் என்பதால்தான் வானத்தில் காலத்தாமதம் நடக்கிறது. நட்சத்திரங்கள் மின்னி மின்னி மறைந்து மறைந்து கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது. மொட்டவிழ்த்த தாழம்பூ வாசனை கமகமத்துக் கொண்டிருந்தது. அந்த வாசனைக்கு மயங்கிப் போய்விட்ட மரங்கள், தலையை ஆட்டிக் கொண்டிருக்க, அதனைத் தாலாட்டு என்றெண்ணி பட்சிகள் உறக்கம் கொண்டுள்ளன.  இதனைக் கண்டு ரசிக்க நேரம் வேண்டுமே! ரசிக்க எண்ணாத இதயம்தான் உண்டா? தோழிமாறும் அதற்கு விதி விலக்கல்ல.

                     கோரைப்பாய் விரித்து மத்தியிலே ஒரு விளக்கு வைத்து, ‘புங்கை மரக் காற்று வீசி அணைத்திடுமோ?’  என்ற எண்ணத்தால் அதனை சூழ்ந்து அமர்ந்துக் கொண்டனர். பெண்கள் ஒன்று சேர்ந்தால் அங்கு அமைதிக்கு என்ன அர்த்தம்? சிரிப்புக்கென்னப் பஞ்சம்? ஒரே கேலியும், நகைச்சுவையும், சிரிப்பும், கும்மாளமும்தான் இருந்தது. அங்கிருந்த ஒரு முதியவள் குறுக்கிட்டு, என்னப் பெண்பிள்ளைகள்? வேளையான வேளையில் இப்படி சிரிப்பாய் சிரித்துக் கொண்டு? என்றாள். அது வேறாரும் அல்ல. மதியின் மற்றுமொறுத் தோழியான மல்லிகாவின் பாட்டிதான்.

             என்ன பாட்டி? நாம் மட்டும் தானே இருக்கிறோம்? ஆண்பிள்ளைகள் வரத்தான் விடிந்திடுமே? என்றாள்மல்லிகா.

             அவளிடம் பேச்சுக் கொடுக்காதே மல்லி! அப்பறம் எங்க காலத்துல என்று ஆரம்பித்து விடுவாள்! என்று அவளைத் தடுத்து விட்டாள் மற்றொருத் தோழி, கவியரசி.  அதனை ஒப்புக் கொண்டு அமைதி ஆகினர் அனைவரும். சற்று பொறுங்கள்! ‘ஆண்பிள்ளைகள் வரத்தான் விடிந்திடுமே?’  என்று அவர்கள் சொல்லக் காரணம் என்ன?

                    முன்னொருக் காலத்தில் கடலும் கடல் சார்ந்த பகுதியிலும் வாழ்ந்த மக்களை நெய்தல் நிலத்தார் என்றுத் தமிழில் வரையறுக்கப் பட்டுள்ளது என்பதை நாமனைவரும் ஏதோ ஒரு வகையில் அறிந்ததே. அவர்கள் மீன் பிடிப்பதையும், உப்பு விளைவித்தலையும், பவளம் சேகரிப்பதையும், முத்துக் குளிப்பதையுமே முக்கியத் தொழிலாக வைத்திருந்தார்கள் என்பதும் அந்த வரையறையில் இடம்பெற்றுள்ளது. அவர்கள் சமயங்களில் கையாண்ட நுட்பம் தான் இந்த இரவுநேர மீன்பிடிப்பு. இரவில் படகைக் கடலுக்குள் செலுத்தி, ஒருத் தீப் பந்தம் கொளுத்தி வைத்து காத்திருப்பர். அந்த பந்த வெளிச்சத்தைத் தேடி சிறியப் பாசித் துகள்களும், அதனை இறையாக்க சிறிய மீன்களும், சிறிய மீன்களை வேட்டையாடும் உருமீன்களும் வந்து மனிதர் விரித்த இந்த வலையில் விழுந்து அவர்கட்கு விருந்தாகும். இந்த நுட்பத்தை அவர்கள் எப்போதாவதுக் கையாண்டதுண்டு.

                   மல்லிகாவும் கவியரசியும் மணிமேகலையில் காலை சுரண்டினர். என்னடி? என்று சினிங்கிக் கேட்டாள். மதியழகியை கவனிக்கும்படி செய்கைக் காட்டினர். மதியழகியோ எரியும் தீபத்தின் ஒளியைக் கண்டுக் கொண்டிருக்கிறாள். அது வரை இருந்த சத்தம் அவளுக்கு சுகம் அளித்தாலும், இப்போதிருக்கும் இந்த அமைதி அவளுக்குத் தொந்தரவாய்ப் போனது. விழித்துக் கொண்டதைப் போல முழித்தாள்.பெண்ணொருத்தி ஒரு பொருளை உற்று நோக்கினால் அவள் மனம் கலைந்துப் போயுள்ளது என்றே அர்த்தமாகும். பெண்ணின் மனம் பெண்ணறிவாள் என்பதை மெய்பித்தது அந்த சூழல்.

              என்ன ஆச்சு மதி? தீப ஒளி உனக்கு சொல்லும் ரகசியம்தான் என்ன? என்றுக் கேட்டாள் மணிமேகலை. மதியழகியின் சிந்தை ஏதோ சிந்தனைக்கு சென்றது. சொல்லடியம்மா! என்ன யோசனை? என்று அதற்கொரு முட்டுக் கட்டையிட்டாள் கவியரசி. அப்போது மதியழகியை நாணம் வந்துக் கவ்விக் கொண்டது.

             அடடா! இந்த வெட்கம் வரக் காரணம் என்னவோ? என்றுச் செல்லமாய்க் கேட்டாள் மல்லிகா.’ரகசியமாகவே வைத்துக் கொள்!’ என்றது ஒரு மனம். ‘மறைப்பது சரியாகாது! சொல்லித் தொலைத்துவிடலாம்!’ என்றது மறுமனம். ரெட்டை உள்ளத்துக்கும் ஒரு போட்டி நடத்தினாள். முடிவும் வந்தது. தன் வெட்கத்திற்கு விடுமுறைத் தந்தாள். இந்த வேட்கத்துக்குக் காரணம் நான் நித்திரையில் கண்ட சொப்பனம்தான்!என்றாள். 

             சொப்பனமா? என அதிசயித்தனர் நட்புறவுகள்.

    2. நீராடல் களம்!

             ஆம்! சொப்பனம் தான்!

             அதற்கு ஏன் தீப ஜோதியை நோக்க வேணும்? என்கையில், காதல் கனவா என்ன? சீக்கிரம் சொல்லேன்! என்று ஆர்வத்தால் பீரிட்டாள் கவியரசி. அது அனைவர் கவனத்தையும் தன்பால் ஈர்த்ததாய் உணர்ந்தாள். காதல் கனவா? என்று யதார்த்தமாய்த் தான் கேட்டேன்! என்று ஒரு வகையாய் மழுப்பினாள் கவியரசி. 

             அப்படித் தெரியவில்லையே கவி!

             சரி! சரி! ஒத்துக் கொள்கிறேன்! காதல் கனவாய் இருந்தால் சுவாரஸ்யம் அதிகம் இருக்கும் என்று நினைத்தேன்!

             ஆகப் பொழுதுப் போக்கிக் கொள்ளப் பார்க்கிறாய்? அப்படித்தானே?

             எனக்காக மட்டுமில்லைக் கலை! நம் அனைவர் மனதிற்காகவும்தான் அப்படிக் கேட்டேன்! தவறென்ன? 

             நம்பிவிட்டேனடி அம்மா! என்று இவர்கள் இருவருக்கும் இடையேயான சம்பாஷனை நடக்கும்போது மல்லிகா குறுக்கிட்டாள். 

             போதும்! போதும்! உங்கள் உதவாக்கரை விவாதம் இவளைத் தூங்கவே செய்துவிட்டது! என்றாள். உண்மையாகவே மதியழகி உறங்கித்தான் போனாள். அந்த உறக்கம் கணப்பொழுதில் அவளுக்கு எப்படி வந்தது என்று யாருக்கும் தெரியாது. அவளையும் சேர்த்துதான். அவன் காத்திருப்பான் என்றுத் தூங்கப் போயிருப்பாளோ? என்றத் தன் கேலிப் பேச்சைத் தொடர்ந்தாள். எவன்? என்றாள் கலை.

             அவன்தான்! மதியின் கனவுக் காதலன்! என்றதும், அவள் உச்சியில் குட்டினாள். ‘ஆவ்!’ என்றுத் தலையைத் தேய்த்துக் கொண்டாள். திடீரென அவர்களுக்குப் பின்னால் புதர்மண்டியப் பகுதியில் இருந்து ஒரு சலசலப்புக் கேட்டது. பயந்துபோய் திரும்பிப் பார்த்தனர். கடந்த சில நாளாய் அட்டூழியம் செய்யும் மலைச்சிங்கம் தான் வந்துவிட்டதுப் போல! என்றுத் தன் மனதில் வந்ததை சொன்னாள் மல்லிகா. அதெல்லாம் ஒன்றும் இல்லை! திரும்பிப் பார்! உன் பாட்டியைக் காணோம்! என்றதும் மீண்டும் ஒரு சிரிப்பு. இப்போது எதை எண்ணிச் சிரித்தனரோ, அது அவர்களுக்குதான் வெளிச்சம்.

              சரி! நேரமாகிறது! நான் படுக்கப் போறேன்! என்று எழுந்தாள் மல்லிகா. அவள் கைகளைப் பிடித்து நிறுத்திய மணிமேகலை, நாங்களும்தான் வரப் போகிறோம்! இரு! என்றாள். சரி! வாருங்கள்! போவோம்!

             போவோமென்றால்? எப்படி? மலைசிங்கம் வந்து இவள் மேல் பாய்ந்துக் கொன்றுவிடட்டும் என்று விட்டுவிடவா? என்றுத் தூங்கிக் கொண்டிருக்கும் மதியைத் தட்டி எழுப்பினாள். மதி… மதி… எழுந்து உள்ளேப் போம்மா! என்றதும், விழித்துக் கொண்டவள், தான் உறங்கிப் போனதைஉணர்ந்தாள்.

    என்ன எண்ணினாளோ, பிறந்துக் கண் விழித்த மான்கன்றுப் போலத் துள்ளிக் குதித்து ஓடினாள். கல் விட்டெறிந்ததும் கலையும் தேன்கூடுப் போலக் களைந்து சென்றனர் அவர்கள். ஊரே நிசப்தமானது. அடை மழை அடித்து ஓய்ந்தது போல என்பார்களே… அந்த அளவுக்கு!

                    மதியழகிக்கு அந்த இரவு மிக நீண்டதாக இருக்கிறது. புடவை முந்தானையை மெத்தையாய் மாற்றிக்கொண்டு, அதில் தலை சாய்த்து படுத்துக் கொண்டாள். புரண்டுப் புரண்டுப் படுத்துப் பார்த்தாள், கண்களை இறுக்கமாக மூடிப் பார்த்தாள், சுவரோடு சுவராய் சாய்ந்துப் பார்த்தாள், குப்பறவும் கவிழ்ந்துப் பார்த்தாள். எதுவும் பலன் தரவில்லை. இரவு உறக்கம் இல்லாமல் கரைந்துப் போனது. வானத்து மாமன்னன் கண்திறக்க இருப்பதை பெரிதும் எதிர்நோக்கிக் காத்திருந்தாள். கூவுஞ்சேவல் தூது செல்ல வேண்டினாள். பொறுமைக்கு நெஞ்சம் இல்லை. இரவின் கொடுமையும் கொஞ்சமில்லை. விடியலும் வந்தது.

                    வேக வேகமாக வேலைகள் நடக்கிறது. பாத்திரத்தில் இருந்த நீரை வாசலில் தெளித்து மண்ணின் புழுதி அடக்கி, வாசனையைக் கிளப்பினாள். ஒருத் தேங்காய் சிரட்டையில் இருந்த அரிசிமாவால் புள்ளிகள் வைத்து, அதனைக் கோடுகளால் இணைத்துக் கோலமாக்கினாள். அந்த அரிசிமாவை உண்டுவிட படை எடுத்து வந்தன எறும்புகள். அதனைக் கண்ட மதிக்கு, ‘அந்த எறும்புகளிடம் சொல்லிவிட்டாலென்ன?’ என்று எண்ணித் தன் குமுறலை நான்கு வரிக் கவிதையில் வினவினாள்.

                                       எறும்புகளே! சிறு எறும்புகளே!

                                       சிவந்த என்விழிக் கண்டீரோ!

                                       நித்திரைக் கொள்ளாது நான் போக

                                       நித்திரை ஆனதோக் காரணமாய்?

    என்றாள். ஆனால், அந்த எறும்புகள் அவள் வார்த்தைக்கு செவி சாய்க்காமல், சேகரிப்பில் மட்டுமே நாட்டம் காட்டியதாய்தான் இருந்தது. ‘பசியாற்றியவளின் சோகத்தை வாங்காத நன்றிக் கெட்ட உயிரினமோ அது?’ என்று எண்ணத் தோன்றுகிறது. அதனை மதியழகிப் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. சிந்தையில் பதிந்திருந்த மயக்கம் அவளை சிந்திக்க விடவில்லை.

                    அவளுக்குப் பின்னால் அவள் தோழியர் வருவதை உணர்ந்தாள். திரும்பிப் பார்த்தாள். அவர்கள் கைகளில் உள்ள மாற்றுடையும், முகத்தில் இருந்த அசடும், கலைந்த சிகையும் அவர்கள் நீராடத்தான் போகிறார்கள் என்று மிகத் தெளிவாய் உணர முடியும். உடனே மதித் தன் வீட்டுக்குள் ஓடிச் சென்று, அலமாரியில் இருந்த மெல்லிய, கட்டங்களுடன் கூடிய பஞ்ச வண்ணப் புடவையை எடுத்துக் கொண்டுத் தானும் அவர்களோடு சேர்ந்துக் கொண்டாள்.

             என்ன சொன்னதடி உன் நேற்றைய சொப்பனம்?

             சொப்பனமா? அவளது சிவந்தக் கண்ணையும் கலையாது வாரப்பட்டக் கூந்தலையும் கண்டாலேத் தெரியுதே! அவள் தூக்கம் தொலைந்துள்ளது என்று! எனப் பட்டென உடைத்தாள் கலை. அது இருக்கட்டும்! இன்றொருநாள் மட்டும் நாம் சென்றுக் கடலில் நீராடலாமா? என்று வினவ, அனைவரும் அதிர்ந்தே போயினர். உனக்கு மதி என்றுப் பெயர் வைத்தது யாரோ? என்றாள் மணிமேகலை.

    3. நுண் செவிகள்!

             ஏன்?

             பின்னென்ன மதி? நம்மூர் ஆண்கள் கரைத் திரும்பிக் கொண்டிருப்பார்கள். இந்த வேளையில் குளிக்கக் கடலுக்கு சென்றால், அந்நேரம் பார்த்து அவர்கள் வந்துத் தொலைத்தால் என்ன செய்வது? என்றால் மல்லிகா.

             அதுவும் சரிதான் மதி! அப்படி அவர்கள் வந்துவிட்டால் ஆடை மாற்றக் கூட அவகாசம் இருக்காது! என்று மணிமேகலை அதைத் தடுக்க, மதியழகியின் விழிகள் கொஞ்சம் கொஞ்சலாகப் பார்க்கிறது. கல்லையும் கரைக்கும் அந்தக் கண்களால் இந்தப் பெண்களைக் கரைக்க முடியாதா என்ன? கரைந்துதான் போயினர். நீரிலிட்ட உப்பு போலவும் கரைந்தனர், காற்றிலிட்ட கற்பூரம் போலவும் கரைந்தனர். சரி! போவோம்! அவர்கள் வராமல் இருந்தால் சந்தோஷம்! என்றதும் மீண்டும் முகம் பௌர்ணமி நிலவுப் போலப் பொலிவுப் பெற்றது.

                    வேக வேகமாகக் கடற்கரையை அடைந்தனர். அடடா! என்னக் காட்சி அது. அருணன் மேலேறி வந்து ஒளியூட்டிய வண்ணம் இருக்க, கூடுவிட்டுத் தொழிலுக்கு சென்றனப் பறவைகள். முத்துக்கள் கடலுக்குள் உள்ளதா? மேற்பரப்பில் மிதக்குதா? என்றுக் குழப்பும் அளவுக்கு அந்தக் காட்சி பிரமிப்பூட்டியது. முத்தா வைரமா என்றும் புரிவதில்லை.

             ‘நாள்தோறும் அழகாகத் தெரியுதே அம்மம்மா!’ என்றும், ‘கடலென்றால் கல்லிலும் காதல் மலராதோ?’ என்றும் தங்களுக்குள் எண்ணி மகிழ்ந்தனர். ‘என்ன புண்ணியம் செய்தோமோ மீனவப் பெண்ணாய் பிறப்பதற்கு!’ என்றும் உள்ளத்தில் எண்ணித் தங்களதுப் பிறப்பால் பேரின்பம் கொண்டனர். கண்ணுக்கேட்டியத் தொலைவு வரையில் நேர் கோடாக இருக்கும் ஆழியின் சமநிலையைக் கண்டுக் கண்விரித்தனர். தீண்ட வரும் தென்றலை அணைக்கக் கை விரித்தனர். தென்றல் கரைக்குக் கொண்டு வரும் நுரைப் புதைந்த அலைகளைக் கண்டு ஆர்பரித்தனர்.

             களித்ததுப் போதும்! குளிக்கலாமா? என்றுக் கேட்டதும், ஒப்புக் கொண்டு அனைத்து எட்டு மடிப்புக் சேலையும் உரிந்தன. களைந்தசேலைகள் அம்மணல் பரப்பில் விழுந்துப் புதுவண்ணம் கொண்ட வானவில்லை உருவாக்கியது. குடுகுடுவென நீருக்குள் ஓடினர்.நீராடும் 

    பெண்கள், நீருக்குள் செல்லாதத் தலை. 

             என்ன கனவு அது மதி? என்று மல்லிகா வினவிவிட, இதுவரை விடுப்பில் கிடந்த நாணம் மீண்டும் அவளிடம் வந்து சேர்ந்தது. வெட்கபடாதேயம்மா! சொல்! என்றாள் கவியரசி. சொல்லிவிடும் முடிவுக்கு வந்தவள், சொல்லவும் செய்தாள்.

             இதுப் போல நாம்! இல்லை… இல்லை… நான்! இதுப் போல நான் மட்டும் தனித்து கடலில் நீராடிக் கொண்டிருக்கும் போது, வானத்தில் உலாவித் திரிகின்ற வெண்மேகக் கூட்டத்தைப் போல வண்ணம் கொண்ட ஒருக் குதிரையின் மீது, ஒரு மாந்தேக ஆண்மகன் ஒருத்தன், கையில் ஈட்டியோடும், ஈட்டி முனையில் ரத்ததொடும், ஒருத் துளி சொட்டித் தரையில் விழுவதற்குள் கண்ணைவிட்டு மறையும் அளவுக்கு வேகத்தோடும் சென்றான். சுத்த வீரன் ஒருத்தன், பரிமேல் அழகன் ஒருத்தன் என் கனாவில் வந்துக் கலங்கடித்து என் மறுநாள் உறக்கத்தை ஊசலாடச் செய்துவிட்டான்! என்று ஏற்ற இரக்கத்தோடு சொன்னாள். அந்த மொழிநடை அவர்களுக்கு சலிப்பைத் தரவில்லை. சுவாரஸ்யமாகத் தான் கேட்டுக் கொண்டிருந்தனர் போலும்!

             மனம் சுகம்தானே? இல்லை… கவிதைப் புனைந்துக் கொலை செய்கிறதா? என்றுக் கேட்டாள் மணிமேகலை. 

             அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை கலை! கனவில் வரும் அத்தனையும் கவிதையாக வேணுமானால் இங்கு பலப் பலப் புலவர் வந்திருப்பார்! என்று உள்ளதை சொன்னாள்.

             சரி! என் கேள்விகளுக்கு கொஞ்சம் நீ விடைத் தர வேணும்! என்றுப் பணித்தாள் கவியரசி.

             ஆரம்பித்து விட்டாள்! என்று மல்லிகா சொன்னதும், அங்கு ஒரு கலகலப்பு. அதனை ஓயத்தாள் மதி. சரி! கேள் கவி!

             அவன் முகத்தைக் கனவில் கண்டாயா?

             இல்லை கவி… முழுதாய் இல்லை! ஏதோ அரைகுறையாகப் பார்த்தேன்!

             எங்கேனும் பார்த்ததுப்போல உணர்வு வந்ததா?

             கண்டால் பராவாயில்லை என்று எண்ணுகிறேன்!

             ஏதேனும் யூகம்?

             ம்ஹ்ம்

             அவனை சந்திக்க நேர்ந்தால்…?

             தெரியாது! என்ற ஒரு சொல் விடை.

               திடீரென அவர்கள் காதுகளுக்கும் மூளைக்கும் வேலை வந்தது. ‘டக்...டக்...டக்…’என்றுக் குதிரையின் குளம்புகள் தடம் பதிக்கும் சத்தம். சத்தம் அதிகமாகிக் கொண்டே போகிறது. மறைந்துக் கொள்ள கறையில் மரங்கள் இருக்கிறது. ஆனால் அந்தப் பெண்களுக்கு கடல் நீர்தான் உள்ளது. உடனே நீரில் மூழ்கிக் கொண்டனர்.குதிரையைக் காட்டிலும் மதியழகியின் மனம் வேகமாக இருந்தது. வெட்கம் வந்து அவளைக்கவர்ந்து நின்றது.கண்கள் தூசி விழுந்ததுப் போலக் கலங்கின. கண்கள் மட்டும் நீருக்கு மேல் மிதக்கையில், உப்பானக் கடல் நீருக்கு மேலும் இருத் துளிகளைப் பரிசாய் அளித்தது அந்த மீன் விழிகள். காரணம் அங்கு நடைபெறும் காட்சி.

    4. கனவு பலித்தது!

                    அவள் கண்டதாய் சொல்லியக் கனவு, அவள் கண்ணெதிரே நடக்கிறது. ஒரு வெள்ளைக் குதிரையோடு,  கருநிற தேகத்தோடு பொன்னாலான ஆபரணங்கள் சில அணிந்த ஒரு வீரன், தன் கைகளில் உதிரம் சிந்தும் ஈட்டியுடன் வேகமாக சென்றான். அவனது அந்த வேகமும் பாவனையும் வீரத்தின் உருவமாய் சென்றான் என்றே சொல்லத் தூண்டுகிறது. மின்னலோடுப் போட்டியிட்டு வெல்லும் அளவுக்கு அவன் வேகம் இருந்ததாய் அவர்களுக்கு எண்ணம். அவர்களின் கண்களை விட்டு மறையும் வரை நீரில் இருந்தவர்கள், திமிங்கலம் மூச்சு வாங்க மேலெழும்புவதுப் போல மேலே வந்து இளைப்பாறினர். கடல் கன்னிகள் நீரிலிருந்து எழுந்து தரிசனம் தந்ததுப் போலவும் இருந்தது. இப்போதுத் தெரியுதுன் மயக்கத்தின் காரணம்! இப்படி ஒருத்தனாய் இருந்தால்… என்றுப் பாதியில் நிறுத்திவிட்டாள் மல்லிகா. தனது இந்த வாக்கியம் அவர்களுக்கு மத்தியில் ஒரு கேலிப் பொருள் ஆகி இருக்கும் என்பதை அவள் உணர்ந்தாள்.

                    மதியை கவனித்தாள். மதியழகியின் வில் ஒத்தப் புருவம் நெறிந்தும், கயல் ஒத்தக் கண்கள் சுருங்கியும் இருந்ததுக் கண்டாள். மல்லிகாத் தன் நாக்கைக் கடித்துக் கொண்டாள். இந்த நடத்தையால் மேலும் கலீர் சிரிப்பு எழுந்தது. மல்லிகா ‘உஷ்’ என்று அமைதியாக்க முயற்சித்தாள். அப்போது, அதேப் போல மீண்டும் குதிரைகளின் குளம்பு சத்தம் தோடணிந்த எட்டு செவிகளிலும் விழுந்தது. உடனே மீண்டும் நீருக்குள் மூழ்கிக் கொண்டனர். அந்தக் கடலின் மணல் கொண்டப் பரப்பில்,

    Enjoying the preview?
    Page 1 of 1