Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nurse Madhavi
Nurse Madhavi
Nurse Madhavi
Ebook193 pages1 hour

Nurse Madhavi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிந்திப்பதற்கும், செயல்படுவதற்கும் எத்தனையோ விஷயங்கள் நம்மிடையே இருக்கின்றன. உலகில் உள்ள மக்களின் சிந்தனைகளும் ஒன்றுபோல இருப்பதில்லை என்பதுதான் இந்த உலகத்தின் விந்தை. ஆனால் ஒரு சில விஷயங்கள் மட்டும் இறைவன் மனிதனிடம் இயற்கையாகத் தோற்றுவித்துள்ளான். அதில் ஒன்றுதான் ஆணைப் பெண் ஈர்ப்பதும், பெண்ணை ஆண் ஈர்ப்பதும். இந்தச் சங்கமத்தின் புனிதத்தில்தான் உயிர்ப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன ஆனால் இந்த ஈர்ப்பால்தான் எத்தனை சங்கடங்கள்...

பெண்ணுக்குக் கத்தி மேல் நடப்பது போன்ற சோதனைகள்...

காதலனின் சந்தேகம் என்ற பேய் அன்பின் கட்டிடத்தில் நின்று கூத்தாடும் பொழுது காதலி வெந்து உருகிப்போவது சமுதாயத்தின் சகஜ சாத்தியமாகிறது. காதலனுக்கு ஆகட்டும், கணவனுக்கு ஆகட்டும் “பொஸஸிவ்னெஸ்” இருந்தால்தான் குடும்பம் என்ற கூடு கால வெள்ளத்தின் ஓட்டத்தில் கலகலத்துப் போகாமல் நிற்க முடியும்.

நர்ஸ் மாதவி இங்கே கத்தி மேல் நடக்கிறாள். மூளை கலங்கியவனுக்குச் செய்யும் சேவைகூட காதலனின் கண்களுக்குக் காமாலை மஞ்சளைப் பூசுகிறது. அன்பினால் பலப்பட்டவர்களுக்குச் சந்தேகம்கூட ஊடலாக ஆனபின்பு—வாழ்க்கை சுவை கூடும் என்னும்போது நவரசங்களும் வாழ்வில் இருக்க வேண்டும் அல்லவா? அன்பை யாசித்து நிற்கும் பொழுது அது பெண்ணின் தோல்வி என்றும் பலவீனம் என்றும் சொல்லுவார்கள்.

யாசித்து தன்னை நிரூபித்து வெற்றி கொள்ளும் பெண்ணினம்--ஆண்மையை அடக்கியாள்கிறது என்பதுதான் நிதர்சனமான நிரூபணம்!

நானே எல்லாவற்றையும் சொல்லி விட்டால் எப்படி? நீங்கள் நர்ஸ் மாதவியைப் படிக்க வேண்டாமா!

‘பூக்கள் மென்மையானவை’ படித்து முடித்து என் அன்பு ரசிகர்களே 'நர்ஸ் மாதவியும்’ ஒரு அனிச்சம் மலர்தான் என்பதனைப் படித்துப் பார்த்து உணர்வீர்கள் என்றுதான் உங்கள் கைகளில் சமர்ப்பிக்கிறேன்.

- லட்சுமி ராஜரத்னம்

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580115704534
Nurse Madhavi

Read more from Lakshmi Rajarathnam

Related to Nurse Madhavi

Related ebooks

Reviews for Nurse Madhavi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nurse Madhavi - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    நர்ஸ் மாதவி

    Nurse Madhavi

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    என்னுரை

    சிந்திப்பதற்கும், செயல்படுவதற்கும் எத்தனையோ விஷயங்கள் நம்மிடையே இருக்கின்றன. உலகில் உள்ள மக்களின் சிந்தனைகளும் ஒன்றுபோல இருப்பதில்லை என்பதுதான் இந்த உலகத்தின் விந்தை. ஆனால் ஒரு சில விஷயங்கள் மட்டும் இறைவன் மனிதனிடம் இயற்கையாகத் தோற்றுவித்துள்ளான்.

    அதில் ஒன்றுதான் ஆணைப் பெண் ஈர்ப்பதும், பெண்ணை ஆண் ஈர்ப்பதும். இந்தச் சங்கமத்தின் புனிதத்தில்தான் உயிர்ப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன ஆனால் இந்த ஈர்ப்பால்தான் எத்தனை சங்கடங்கள்...

    பெண்ணுக்குக் கத்தி மேல் நடப்பது போன்ற சோதனைகள்...

    காதலனின் சந்தேகம் என்ற பேய் அன்பின் கட்டிடத்தில் நின்று கூத்தாடும் பொழுது காதலி வெந்து உருகிப்போவது சமுதாயத்தின் சகஜ சாத்தியமாகிறது.

    காதலனுக்கு ஆகட்டும், கணவனுக்கு ஆகட்டும் பொஸஸிவ்னெஸ் இருந்தால்தான் குடும்பம் என்ற கூடு கால வெள்ளத்தின் ஓட்டத்தில் கலகலத்துப் போகாமல் நிற்க முடியும்.

    நர்ஸ் மாதவி இங்கே கத்தி மேல் நடக்கிறாள். மூளை கலங்கியவனுக்குச் செய்யும் சேவைகூட காதலனின் கண்களுக்குக் காமாலை மஞ்சளைப் பூசுகிறது. அன்பினால் பலப்பட்டவர்களுக்குச் சந்தேகம்கூட ஊடலாக ஆனபின்பு—வாழ்க்கை சுவை கூடும் என்னும்போது நவரசங்களும் வாழ்வில் இருக்க வேண்டும் அல்லவா?

    அன்பை யாசித்து நிற்கும் பொழுது அது பெண்ணின் தோல்வி என்றும் பலவீனம் என்றும் சொல்லுவார்கள்.

    யாசித்து தன்னை நிரூபித்து வெற்றி கொள்ளும் பெண்ணினம்--ஆண்மையை அடக்கியாள்கிறது என்பதுதான் நிதர்சனமான நிரூபணம்!

    நானே எல்லாவற்றையும் சொல்லி விட்டால் எப்படி? நீங்கள் நர்ஸ் மாதவியைப் படிக்க வேண்டாமா!

    ‘பூக்கள் மென்மையானவை’ படித்து முடித்து என் அன்பு ரசிகர்களே 'நர்ஸ் மாதவியும்’ ஒரு அனிச்சம் மலர்தான் என்பதனைப் படித்துப் பார்த்து உணர்வீர்கள் என்றுதான் உங்கள் கைகளில் சமர்ப்பிக்கிறேன்.

    லட்சுமி ராஜரத்னம்

    நர்ஸ் மாதவி

    மாலை நேரம் தன் ஒளியைக் குறுக்கிக் கொண்டு வந்த பொழுது, அது கடற்கரைப் பிரதேசம் ஆதலால் பனித்திரை ஜில்லென்று இறங்கிக்கொண்டு வந்தது. கடல் நீர் வெள்ளம் தளதளத்து அடித்துக் கொண்டு வெண்நுரைகளைக் கரை மேல் புரள வைத்து வடித்துக்கொண்டு திரும்பியது. இதென்ன ஆர்பரிக்கும் கொண்டாட்டம்! கட்டிளங்கன்னி ஒருத்தியின் சுகமான அணைப்பின் மென்மை தெரிகிறதோ, என்னவோ?

    இயற்கைக்குத்தான் அந்த உண்மை தெரியும். காலை மடித்துத் தொலைவில் உட்கார்ந்து நீர் பரப்பையே பார்த்துக் கொண்டிருந்த மாதவி தன்னை மறந்து லயித்திருந்தாள். இயற்கையை ரஸிப்பதில் ஈடுபாடு அதிகம்.

    பிரபலமாகிக் கொண்டு வரும் அந்த நகரம்தான் கல்பாக்கம். அணு ஆராய்ச்சிகளுக்கு இன்று இடம் கொடுத்து நாளைய வழிகாட்டியாக விளங்கி பல விஞ்ஞானிகளைத் தன்னகத்தே அமர்த்திக் கொள்ளும் பெருமை வாய்ந்தது. தென்னிந்தியாவின் அணு ஆராய்ச்சியைப் பற்றிக் காலங்காலத்திற்கும் ஒரு சரித்திரமாக விளங்கப் போகும் பெருமையை வளர்த்துக் கொண்டிருக்கும் அழகான நகரம் பார்க், மருத்துவமனை, பள்ளிக்கூடம் என்று எத்தனை வசதிகள்...

    சட்டென்று அமைதி கவிழ்ந்து கொள்ளும் மாலை நேரங்களில், குளிர் காரணமாக அதிக நடமாட்டம் இருப்பதில்லை. மாதவிக்கோ அமைதியும், ஏகாந்தமும் ரொம்பப் பிடிக்கும். கடல் நன்றாகத் தெரியும் மேட்டில், மண் குவியலில் உட்கார்ந்து கொண்டு இயற்கையுடன் அவள் பேசும் கதைகள் மற்றவர்களுக்குப் புரியாத ஸப்ஜெக்ட்!

    அந்த ஊர் மருத்துவமனையில் தேர்ந்த நர்பாக அவள் பணி புரிகிறாள். டெட்டால், குளோரின் மருந்துகளின் நெடியும், ஓ.பி. வார்டின் கூச்சுலும் நோயாளிகளின் பயம் கலந்த கேள்விகள்—அவள் கூற வேண்டிய பொய் சமாதானங்கள் அதற்கு அவள் பதிலும்கூட ஒரு மருந்தாகவே அமைந்துவிடும். அவள் நோயாளிகளைக் கடிந்து கொள்வதில்லை. குழந்தைகள் அழுதால் முகம் சுளித்துக் கொள்வதில்லை.

    இந்த மருத்துவமனையில் நம் பொறுமையின்மை தான் பெரிய நோய்" என்று அவள் தன் சக நர்ஸுகளிடம் கூறுவாள்.

    சிவந்த வட்டக் குங்குமத்துடன் போட்டியிடும், சிவந்த அதரங்களின் சிரிப்பு எப்பொழுதுமே குன்று மணியாக ஒளிரும். அதிலும்கூட நோயாளிக்கு ஆறுதல் அளிக்கும் தனியான குழைவு எப்பொழுதும் வாடியதில்லை.

    முதல் வாரம்—

    ப்ராக்சர் என்று ஒரு வாலிபனைக் கொண்டு வந்து சேர்த்தார்கள். கட்டுமஸ்தான இளைஞன் என்பது கரணை கரணையாகத் திரண்டு நின்ற தோள்களின் திரட்சியிலிருந்து தெரிந்தது. காடாக வளர்ந்த தலைமுடி இளந்தாடி, மீசை, கிருதா என்று இணைந்து கிடந்ததால் முகத்தின் பரப்பையே தேடித்தான் கண்டு பிடிக்க வேண்டியிருந்தது.

    தெரிந்த ஒருவரின் வீட்டிற்குப் போனபொழுது தொங்கும் சடைகள் முகத்தை மறைக்க, கண்களைத் திறக்க முடியாமல் அலைந்த உயர் ஜாதி நாயின் நினைவு தான் எழுந்தது, அவளைப் பார்த்ததும், அவள் நர்ஸ்! இப்படி எல்லாம் கேலியாகச் சிரிக்கக்கூடாது. அதனால் அடக்கிக் கொண்டாள்.

    அவள்தான் அவனை கவனித்துக் கொண்டாள். காலைத் தூக்கி வைத்துக் கட்டியிருந்தார்கள். அவன் அசையக் கூடாதென்று பக்கத்திலேயே இருந்து அவள் கவனித்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம். அவனைச் சாய்த்து, நிமிர்த்தி, உடம்பைத் துடைத்துவிட்டு, உடை மாற்றிப் பொறுப்பாகச் செய்தாள். முதல் இரண்டு தினங்கள் கத்தி ஆர்பாட்டம் செய்துவிட்டான். பிறகு வலி குறைந்த நிதானம். சுற்றுப்புறத்தை கவனித்தான்.

    மிஸ், என் பெயர் முரளி. உங்க பெயர்?

    என் பெயர் மாதவி. என்னை மிஸ் என்றோ, மாதவி என்றோ அழைக்கக்கூடாது. ‘ஸிஸ்டர்'னு - அழைக்க வேண்டும்.

    அவன் சிரித்துக் கொண்டான். சாத்துக்குடிப் பழங்களைப் பிழிந்து பழரசம் தயாரித்துக் கொண்டிருந்த அவள் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

    மாதவி—சங்க காலத்துப் பெயர், அதை நினைத்துச் சிரித்தேன். கோவலனின் நினைவும் என்னையறியாமல் வருகிறது.

    இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது? எனக்கென்று கோவலனும் இல்லை. எந்தக் கோவலனையும் நான் மாலையிட்டு அழைக்கவும் இல்லை. பழத்தைச் சினத்துடன் அழுத்திப் பிழிந்தாள்.

    நான் அப்படிச் சொன்னேனா? நான் சொன்ன சங்க காலத்து மாதவியை...

    அவள் பேசாமல் போய்விட்டாள். எதற்காக இவன் இப்படி எல்லாம் வம்பு பேசுகிறான்? மருத்துவத் துறையில் இதெல்லாம் சகஜம் தான் என்றாலும்... அவன் அழைப்பதில் குறைச்சல் இல்லை. கணீரென்று மணியடிப்பது போன்ற குரலில் மாதவி என்று தொட்டிலிட்டுப் பெயர் வைத்தது போல்தான் அழைப்பான். இதென்ன உரிமை? அவள் அதட்டிப் பேசி, முறைத்துப் பார்ப்பதற்கெல்லாம் அவன் மசிவதில்லை.

    முதல் நாள் மாலை பழரசத்தை வாயில் ஊற்றிய அவள் கரத்தை அப்படியே பற்றிக்கொண்டான். கையைத் திருப்பிப் புறங்கையில் ஒரு முத்தத்தைப் பதித்தான்.

    உங்களுக்கு யார் மாதவி என்ற பெயரைத் தந்தார்கள்?

    அவள் திக்குமுக்காடிப் போனாள். அடுத்த கணம் சமாளித்துக் கொண்டாள். யார் கொடுக்க வேண்டுமோ, அவர்கள் தந்தார்கள் என்று வெகு நிதானமாகப் பதிலளித்தாள்.

    ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் மறு பிறவி எடுத்து வந்து விட்டாள் என்றுதான் நான் நினைக்கிறேன். மாதவி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

    அவளுக்குத் துணுக்கென்றது இந்தப் பேச்சு, அவனைக் கூர்ந்து பார்த்தாள். குழந்தைத்தனம் கூத்தாடும் கண்கள் முகம் முதிரவில்லை, கன்னத்துச் சதைகள்கூட பால்சதைகளாகக் கொழுப்பிக் கிடந்தன. பார்வையை மறைக்கும் ரோமக் கற்றைகளை ஒதுக்கிக்கொண்டு அவளைப் பார்த்தான்.

    நைட்டிங்கேலுடன் அவள் அழகை ஒப்பிட்டுப் பேசுகிறானா? அல்லது ஆயுள் பூராவும் தொண்டு செய்தே கழித்த என் நைட்டிங்கேலுடன், திருமணம் ஆகாமல் நர்ஸாகப் பணிபுரியும் தன் நிலைமையை ஒப்பிட்டுப் பார்க்கிறானா?

    நீங்க என்ன நினைக்கிறீர்கள்? சொல்ல மாட்டீர்களா?

    முரளி, நீங்கள் தெரிந்துதான் பேசுகிறீர்களா? அன்றைக்கு மாதவி என்றதும், சங்க காலம் நினைவுக்கு வருகிறது என்கிறீர்கள். இன்றைக்கு நைட்டிங்கேலுடன் ஒப்பிட்டுப் பேசுகிறீர்கள். உங்கள் கற்பனைக்குப் பொருளாக நான்தான் கிடைத்தேனா?

    அவன் தலையணையை உயர்த்திக் கொண்டு வசதியாகச் சாய்ந்து கொண்டான். கற்பனைக்கு வடிவம் யாரிடமிருந்து வேண்டுமானாலும் பிறக்கலாம். அதற்கு நேரம் காலம் கிடையாது மாதவி.

    முரளி, என்னை 'ஸிஸ்டர்' என்று அழையுங்கள் என்று எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன்?

    அவளால் தன் உள்ளத்து ஊறலை அடக்கிக் கொள்ளவே முடியவில்லை. விருட்டென்று எழுந்து வெளியே போனாள். நண்பன் வீட்டிற்கு வந்த பொழுது ஏற்பட்ட பிராக்சர். அஸ்திவாரம் இல்லாமல் எழுப்பப்படும் வீட்டைப் போல அவளை வைத்துக் கொண்டு சுற்பனைகளைப் பின்னி, அவளிடமே சொல்லிச் சிரிக்க வைக்கிறான்!

    ஆனால் இரவு மருந்து கொடுக்க வந்த பொழுது குழந்தைத் தன்மையுடன் ஸாரி, மாதவி என்றான்.

    அவள் அவனைப் பார்த்தாள். அந்தக் கண்கள் அவளிடம் இறைஞ்சின; ஸாரி, மாதவி என்றான்.

    அவள் சிரிக்கவே இல்லை, மீண்டும் இப்படி ஒரு தப்பு ஏற்படவே ஏற்படாது மாதவி. நான்தான் ஸாரி சொல்லி விட்டேனே. சிரிக்கக் கூடாதா?

    இப்பொழுது அவள் சிரித்து விட்டாள்.

    இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. குறும்புத்தனமானவன். அவன் தங்கியுள்ள நண்பர் வீட்டினர் அவனைப் பற்றிக் குறைபட்டுக் கொண்டதையும் அவள் மறக்கவில்லை. தாயைக் காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பு சிறிதும் இல்லாதவன். விளையாட்டுத்தனமும், துறுதுறுப்பும்தான் பிராக்சர் ஆகக் காரணம்.

    நண்பனின் வீடு முதல் மாடி. விளையாட்டாக பாராபட் சுவரில் உட்கார்ந்து நண்பனின் குழந்தைக்கு விளையாட்டுக் காட்டப் போக, அது விபரீதத்தில் கொண்டு போய் விட்டு விட்டது. இரண்டு நாட்கள் தங்க வந்தவன், இரண்டு மாதங்கள் தங்க வேண்டியவனானான்.

    சுற்றிலும் இருள் பரத்திய விரிப்பில் ஆங்காங்கு பார்டர் கட்டிய விளக்கொளிச் சிதறல்கள். தினமும் மருத்துவமனையிலிருந்து நேராக அங்கு வந்து அமர்ந்த பிறகுதான் வீடு திருப்புவாள். செடி, கொடிகள் அடர்ந்த மண் மேடும், தூரத்தில் ஆரவாரம் செய்யும் கடலலைகளும் அவளுடைய ஏகாந்தத்திற்குத் துணை செய்யும்.

    ஆங்கிலக் கவிஞன் வேர்ட்ஸ் வொரித் ‘சாலிடரி ரீப்பரை’ ரஸித்தது போல—தாகூர் இயற்கையை நேசித்தது போல—அவளும் இயற்கையை ரஸிக்கிறாள். அறுவடை செய்யும் பெண் பாடிய பாடலின் தனிமை மோனத்தைக் கிழித்து அவன் உள்ளத்தில் ஒரு நினைவை உணர்த்தியது போல அவன் நெஞ்சிலும் தனியான ராகம் ஒன்று இழையோடுகிறது. அது துயரமா, மகிழ்வா என்று சொல்ல முடியாது. அதற்கு ஓர் உரிமையாளன் இன்னும் வரவில்லை.

    வீடு திரும்ப அவள் எழுந்த பொழுதுதான் அம்மா நேரத்தோடு வரச் சொன்னது நினைவுக்கு வந்தது.

    அன்று காலையில் —

    தலைமுடியை இரு பக்கமாகப் பிரித்து வகிர்ந்து கொண்ட கொண்டையில் வலையைப் பொறுத்து இறுக்கிக் கொண்டாள். மருத்துவமனைக்குப் போய் தலையில் வெள்ளை விரிப்பை புறாச் சிறகாக விரித்துக் கொண்டால் போதும் நகை எதுவும் இல்லாமல் ஒரு வெள்ளை கவுனில், மொழு மொழுவென்று தந்த பொம்மையாய் போவது அம்மாவுக்குப் பிடிப்பதில்லை.

    வாசல் பந்தலில் பூக்கும் நித்திய மல்லிகைப் பூச்சரத்தைச் சூட மருத்துவ விதிகள் அனுமதிப்பதில்லை. இது அம்மாவிற்குக் குறைதான். ஒரு வெள்ளி, செவ்வாய் கிடையாது. பெண்ணாய் பிறந்தவள் பூச்சூடாமல் இதென்ன வேஷம்? என்று புலம்புவாள்.

    அம்மாவைத் திருப்திபடுத்த வீடு திரும்பியதும், பூச்சரத்தைச் சூடி, ஒன்றிரண்டு நகைகளைப் போட்டுக் கொள்ளுவாள். அன்று காலை மருத்துவமனைக்குக் கிளப்பும் பொழுது அம்மா, மாதவி, இன்று அந்தப் பையன் வருகிறானே. நினைவிலிருக்காம்மா? என்று கேட்டாள்.

    அவள் புருவத்தை வளைத்தாள். யாரம்மா?

    அதாம்மா. அருணன் வருகிறான்.

    ஓ... வந்து விட்டுப் போகட்டுமே. அதற்கு நான் என்னம்மா செய்யவேண்டும்? அம்மா இருப்பதால் எந்தப் பொறுப்பையும் சுமக்காத பொறுமை இன்மை.

    என்ன மாதவி இப்படிக் கேட்கிறாய்? கனடா போய் விட்டு நம் கல்பாக்கம் ரியாக்டர் ரிஸர்ச் செண்டரில் பணிபுரிய வருகிறான். பாபா அடாமிக் ரிஸர்ச் செண்டரிலிருந்து அவனை இங்கே அனுப்பி வைத்திருக்கிறார்கள். நீ இலேசாக நினைக்காதே.

    மகள் அம்மாவின் தோளருகே நெருங்கி நின்றாள். "நீ பழைய அம்மாவோ இல்லை. ரொம்பவும் மாறிவிட்டிருக்கிறாய். திருவல்லிக்கேணியில்

    Enjoying the preview?
    Page 1 of 1