Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kalinthiyin Kanneer
Kalinthiyin Kanneer
Kalinthiyin Kanneer
Ebook41 pages17 minutes

Kalinthiyin Kanneer

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்தக் கதை பிரதிலிபி நடத்திய போட்டியில் பரிசு பெற்ற கதை. நான் வசிக்கும் தில்லியில் யமுனை நதியின் இன்றைய நிலையைக் கண்டு மனவருத்தத்துடன் எழுதிய கதை. இயற்கை நமக்கு அளித்திருக்கும் நீர்வளத்தை மாசுபடுத்தாமல் பாதுகாக்க வேண்டிய சமூக அக்கறையை இந்தக் கதையின் மூலமாக வலியுறுத்த விழைகிறேன்.

Languageதமிழ்
Release dateNov 1, 2022
ISBN6580144609198
Kalinthiyin Kanneer

Read more from Puvana Chandrashekaran

Related to Kalinthiyin Kanneer

Related ebooks

Reviews for Kalinthiyin Kanneer

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kalinthiyin Kanneer - Puvana Chandrashekaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    காளிந்தியின் கண்ணீர்

    Kalinthiyin Kanneer

    Author:

    புவனா சந்திரசேகரன்

    Puvana Chandrashekaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/puvana-chandrashekaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 1

    சூரிய தேவனின் மகளும், யமனின் சகோதரியாகவும் புராணக் கதைகளில் பேசப்படும் புண்ணிய நதி யமுனா. மாயக் கண்ணனின் லீலைகள் பற்பல இந்த நதியின் கரையில் தான் அரங்கேறின.

    கிருஷ்ணன் மதுராவில் சிறையில் பிறந்ததும் இடி, மின்னல், மழையுடன் கூடிய இரவில் தலையில் கூடையில் வைத்துக் கொண்டு வசுதேவர் யமுனையைக் கடக்கும் போது கிருஷ்ணரின் கால்களை வருடிய மகாபாக்கியம் பெற்ற யமுனா நதியில், நீராடுவதாலும் மற்றும் அவளை வழிபடுவதாலும் கிருஷ்ணரின் அருளைப் பெறலாம் என்றும், யமனின் சகோதரியான யமுனையை வழிபடுவதால் யமபயம் அதாவது மரணபயம் நீங்கும் என்றும் புராணங்கள் சொல்கின்றன.

    இத்தனை சிறப்புக்களைக் கொண்ட யமுனையின் இன்றைய நிலை என்ன? தூய்மையை இழந்து மாசு பட்டு நிற்கிறாள். உலகிலேயே அதிக மாசுபட்ட நதிகளில் ஒன்றாகவும், இந்தியாவிலும் மிகவும் அதிகமாக மாசுபட்ட நதிகளில் ஒன்றாகவும் இன்று யமுனா நதி கருதப்படுகிறது.

    இனி கதைக்குள் செல்வோம்.

    நிர்மல் குப்தா அன்று நண்பனின் தந்தையின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்வதற்காக வந்த போது தான் யமுனை ஆற்றங்கரையில் நின்று கொண்டு யமுனையை மிக அருகில் பார்த்தான்.

    நிர்மல் குப்தா வெற்றிகரமான இளம் பிஸினஸ்மேன். ஐ.டி. நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறான். இளைஞர்களின் பெரிய பட்டாளம் அவனுடைய வெற்றிக்குக் காரணமாக அவன் பின்னால் நிற்கிறது.

    இன்ஃபோடெக் இன்ஃபினிட்டி( Infotech Infinity) என்ற நிறுவனத்தை, தனது சொந்த முயற்சியில் எடுத்து நிறுத்தி, தர வரிசையில் பார்சூன் பிப்ஃடி( fortune 50)யில் தனது

    Enjoying the preview?
    Page 1 of 1