Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maaya Vanathil Vinotha Ilavarasargal
Maaya Vanathil Vinotha Ilavarasargal
Maaya Vanathil Vinotha Ilavarasargal
Ebook199 pages1 hour

Maaya Vanathil Vinotha Ilavarasargal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பழந்தமிழ் நாட்டில் வாழ்ந்த இரண்டு இளவரசர்கள் பற்றிய சிறுவர் கதை இது.

பிறப்பால் வினோதத் தோற்றங்களுடன் பிறக்கும் இரண்டு இளவரசர்கள் சளைக்காமல் போராடி வாழ்க்கையில் ஜெயிக்கும் கதை. கல்வி, மாயாஜாலம், போர்த்திறன் அனைத்தையும் குருகுலத்தில் கற்ற பிறகு அனுபவ அறிவைப் பெற அற்புதங்கள் நிறைய மாயவனத்தில் புகுந்து சாகசங்கள் செய்கிறார்கள் இளவரசர்கள். பூக்களின் உலகு, காய், கனிகளின் உலகு, பறவைகள், விலங்குகள், பூச்சிகள் இவற்றின் உலகங்களையும் பற்றி, இந்தக் கதையில் இளவரசர்களுடன் சேர்ந்து நாமும் தெரிந்து கொள்ளலாம்.

மாயாஜாலங்கள் நிறைந்த ஃபேண்டஸி ஸ்டோரியான இந்தக் கதையைப் படித்து இரசியுங்கள்.

Languageதமிழ்
Release dateApr 29, 2023
ISBN6580144609576
Maaya Vanathil Vinotha Ilavarasargal

Related to Maaya Vanathil Vinotha Ilavarasargal

Related ebooks

Reviews for Maaya Vanathil Vinotha Ilavarasargal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maaya Vanathil Vinotha Ilavarasargal - Puvana Chandrashekaran

    A picture containing icon Description automatically generated

    http://www.pustaka.co.in

    மாய வனத்தில் வினோத இளவரசர்கள்

    Maaya Vanathil Vinotha Ilavarasargal

    Author :

    புவனா சந்திரசேகரன்

    Puvana Chandrashekaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/puvana-chandrashekaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 1

    விசித்திரபுரி என்ற ஒரு சிறிய நாடு. நிறைய வனங்களும், வயல்களும், ஆறுகளும், அருவிகளும், மலைகளும் சேர்ந்த வளமையான நாடு. இயற்கை அன்னையின் அருளை முழுமையாகப் பெற்ற நாடு. அந்த நாட்டின் அரசர் விஜயேந்திரர். அவரது மனைவி மந்தாகினி.

    அரசரும், அரசியும் மக்களிடம் மிகுந்த அன்பும், அக்கறையும் கொண்டவர்கள். அதேபோல் மக்களுக்கும் தங்களது பிரியமான அரசகுடும்பத்தின் மேல் அதீத பக்தி. அன்பும் கூட. அரசகுடும்பத்திற்கு ஏதாவது இடையூறு என்றால் உயிரையும் கொடுக்கத் துணியும் பாசக்கார மக்கள்.

    அவர்கள் அனைவருக்கும் வருத்தம் தருகின்றது ஒரே விஷயம்தான், அரசருக்கு வாரிசு இன்னும் உருவாகவில்லை. கோயில்களிலும் விசேஷபூஜைகள், வழிபாடுகள் இதற்காகவே நடந்து வந்தன. ஆண்டவன் இந்த விஷயத்தில் இன்னமும் கண் திறக்கவில்லை. அந்த நாட்டின் முக்கிய மந்திரி சிவநேசர். அவர் அரசர் விஜயேந்திரருக்கு உற்ற நண்பரும் கூட.

    சிவநேசரின் தந்தை அரசர் விஜயேந்திரரின் தந்தை மகேந்திரரின் குரு. அவரிடம் விஜயேந்திரர் சிறு குழந்தையாக இருந்தபோது கலைகள் எல்லாம் கற்றுக் கொண்டார். அவ்வாறு கற்றுக் கொண்ட சமயத்தில் ஏற்பட்ட நட்பு, அவர்கள் இருவரும் வளர வளர நன்றாக வளர்ந்து வந்தது.

    சிவநேசரின் மிக அதிகமான புத்திசாலித்தனத்தால் ஈர்க்கப்பட்ட விஜயேந்திரர்தான் மன்னனாக முடிசூட்டிக் கொண்டவுடன் அவரைத் தனது முக்கிய மந்திரியாக நியமித்து விட்டார். அவரும் நல்ல ஆலோசனைகள் வழங்கி நாட்டைப் பரிபாலனம் செய்வதில் அரசருக்கு உறுதுணையாக இருந்து வந்தார்.

    அன்று காலை அரசர் ஆலோசனை மண்டபத்தில் தனது மந்திரி சிவநேசருடன் முக்கிய ஆலோசனையில் இருந்தார்.

    அரசருக்கு வணக்கம். வாழ்க அரசர் பல்லாண்டு! விசித்திரபுரியின் புகழும், பெருமையும் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்க!

    சிவநேசர் அரசரை வாழ்த்திவிட்டு, தான் பேச வேண்டிய முக்கியமான விஷயம் பற்றிப் பேச ஆரம்பித்தார்.

    அரசே, நமது அரசின் கிழக்கு எல்லையில் அமைந்திருக்கும் மாயவனத்தின் அருகே ஒரு புகழ் வாய்ந்த மருத்துவரின் ஆசிரமம் அமைந்திருப்பது உங்களுக்குத் தெரியும். அவர் மருத்துவர் மட்டுமல்ல. பல கலைகள், மாய மந்திர ஜாலங்கள், ஜோதிடம் எல்லாம் கற்ற பேரறிஞர். அவருக்குத் தெரியாத எந்தத் துறையும் இருக்க முடியாது. தன்னலம் பார்க்காமல் தன்னைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குப் பெருஞ்சேவை செய்து வருகிறார். அவரிடம் சென்று அரசியாரின் குழந்தைப் பேறு பற்றி ஒரு தடவை பேசிப் பார்க்கலாமா? பணிவாகக் கேட்டார் சிவநேசர்.

    கண்டிப்பாகக் கேட்கலாமே!? அவரை இங்கு அழைப்பதை விட நாமே நேரில் போய்ப் பார்த்து வருவது தான் மரியாதை. நாளையே கிளம்பலாம்.

    நன்று மன்னா. நான் சென்று பயணத்திற்கான ஏற்பாடுகளை கவனிக்கிறேன்.

    சிவநேசர் வணங்கி விடைபெற்றார்.

    அடுத்த நாள் காலை மன்னர் விஜயேந்திரர்,

    அரசி மந்தாகினி மற்றும் சிவநேசர் மாயவனத்தின் திசையில் பயணம் தொடங்கினர். அரசரும், சிவநேசரும் தமது புரவிகளில், அரசி பல்லக்கில் பயணம் செய்தனர். அவர்களுடைய உதவிக்காக மிகக் குறைந்த அளவில் வீரர்கள் புடைசூழ அவர்களது பயணம் தொடங்கியது.

    மாயவனம் என்பது பெயருக்கேற்றாற்போல் பற்பல மாயங்களைத் தன்னுள் அடக்கிய விசித்திரமான ஒரு வனம். அந்த வனத்தைப் பற்றி சரியாக அறியாதவர் யாராவது உள்ளே சென்று விட்டால் வெளியே வழி கண்டு பிடித்து வருவது மிகவும் கடினம். அந்த வனத்தைப் பற்றிப் பல கதைகள் பேசப்பட்டன. அதனால் அச்சத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் யாரும் அந்த வனத்திற்குள் செல்வதில்லை. அதை நம்பாமல் உள்ளே புகுந்து ஆராய்ச்சி செய்யப் போன யாரும் வெளியே திரும்பி வந்ததும் இல்லை.

    இந்தக் காரணத்தால் இயற்கையான ஓர் அரணாக அந்த வனம் அவர்களுடைய நாட்டிற்கு அமைந்திருந்தது. விசித்திரபுரிக்கு அப்படி ஒன்றும் எதிரி நாடு எதுவும் இல்லை. அக்கம் பக்கத்தில் இருந்த சிறு நாடுகளுக்குள் நல்ல நட்பு நிலவி வந்தது.

    அதனால் போர் பற்றிய கவலையும் மக்களுக்கு அவ்வளவாக இல்லை. இரண்டு நாட்கள் பயணம் செய்த அரசரின் குழு ஆசிரமத்தை நெருங்கியது. ஆசிரமத்தின் நுழைவாயிலில் காத்துக் கொண்டிருந்த சீடர்கள் அரசர், அரசி மற்றும் முக்கிய மந்திரியை சகல விதமான மரியாதைகளுடன் வரவேற்றுத் தங்களது குருவிடம் அழைத்துச் சென்றனர்.

    அரச குடும்பத்தை அன்புடன் வரவேற்றார் அருள்மொழி சித்தர். பார்க்க மிக எளிமையான தோற்றம். ஆனால் முகத்தில் ஒரு கம்பீரமும், தேஜஸும் அவரைப் பார்த்தவுடன் கைகூப்பித் தொழ வைத்தன.

    அரசர் தாம் கொண்டு வந்த அன்புக் காணிக்கைகளை அவருக்கு அளித்து வணங்கினார். ஆசிரமத்தில் இருந்த சீடர்கள் அரச பரிவாரத்திற்கு கனிகளும், இயற்கை உணவும் கொடுத்து உபசரித்தனர்.

    அதன் பின்னர் சிவநேசர் பணிவுடன் சித்தரிடம் தாங்கள் அவரைப் பார்க்க வந்ததற்கான காரணத்தை எடுத்துச் சொல்ல ஆரம்பித்தார். கைகளை உயர்த்தி அவரை நிறுத்திய சித்தர் தானாகவே பேசினார்.

    நீங்கள் பேசவந்த விஷயம் அரசரின் வாரிசு பற்றித்தானே? கூடிய விரைவில் அரசர், அரசியின் இச்சை நிறைவேறும். நல்ல அறிவாளிகளான திறமைசாலிகளான புத்திரர் அவதரிப்பர். சில சோதனைகளும் இடையூறுகளும் வரலாம். இறுதியில் எல்லாம் நல்லதாகவே முடியும் என்று கூறத் திகைத்துப் போயினர். தங்களது மனத்தில் இருக்கும் எண்ணங்களையே படிக்க முடிந்த இவர் உண்மையில் பெரிய சித்தர்தான் என்று அரசரும் சிவநேசரும் எண்ணினர்.

    நான் நாளை காலை எனது நித்திய பூஜைகளை முடித்து உங்களுக்கு எனது பிரசாதங்களை வழங்குகிறேன். காலை பூஜை முடிந்ததும் உணவு அருந்தி விட்டு நீங்கள் கிளம்பலாம். என்று கூறி உள்ளே சென்று விட்டார்.

    அன்று அவர்கள் தங்கத் தற்காலிகமாகச் சில கூடாரங்கள் அமைக்கப்பட, அங்கு துயின்று ஓய்வு எடுத்துக் கொண்டனர்.

    காலை எழுந்து அனைவரும் குளித்துத் தயாரான பின்னர் பூஜையில் கலந்து கொண்டனர். ஆழ்ந்த தியானத்தில் இருந்த அருள்மொழி சித்தர், தியானம் முடிந்தபின் அங்கிருந்த பெரிய இறைவனின் சிலைக்கு மலர் மாலைகள் சூட்டி மலர்களால் அர்ச்சனை செய்தார். பூஜை முடிந்த பின்னர் மீண்டும் இறைவனை வேண்டிக் கொண்டு இரண்டு பழங்களை அரசிக்கு அளித்தார்.

    இந்த இரண்டு கனிகளும் இறைவனின் பிரசாதம். அரண்மனையை அடைந்த பின் இந்தப் பழங்களை அரசியார் காலை உணவிற்கு முன்னர் எடுத்து உண்ணவேண்டும். இரண்டும் வெவ்வேறு கனிகள். இரண்டையும் சரி பாதியாக்கி இரண்டு நாட்கள் உண்ணவேண்டும் என்று சொல்லி இறைவனை வேண்டிக்கொண்டு இரண்டு கனிகளை அரசியின் கைகளில் ஆசிகளுடன் வழங்கினார். ஒன்று மாங்கனி போல் சற்று பெரியதாகவும் ஒன்று நெல்லிக் கனி போல் சிறியதாகவும் இருந்தன. பக்தியுடன் அரசி வாங்கிக் கொள்ள அனைவரும் அங்கிருந்து கிளம்பினர்.

    அரண்மனை அடைந்த பின்னர் அரசி அந்தக் கனிகளை உண்ணும் சமயம் மறதியாக ஒரு தவறு செய்தார். முதல் நாள் ஒரு கனியை முழுதாகவும் அடுத்த நாள் மற்றொரு கனியையும் உண்டார். சித்தர் சரிபாதியாக உண்ணச் சொன்னதை மறந்தே விட்டார்.

    சில நாட்களில் அரசி மந்தாகினியார் கருவுற்றார். நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சி பொங்க ஆனந்த நடனம் ஆடினர். தமது நாட்டின் இளவரசரோ, இளவரசியோ யார் பிறக்கப் போகிறார்களோ என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

    அத்தியாயம் 2

    அரசி மந்தாகினியின் வயிற்றில் கரு வளர்ந்து வந்தது. அரசரின் ஆவலையும் நம்பிக்கையுடன் கூடிய நல்வாழ்த்துக்களையும் நாட்டு மக்களின் உற்சாகமான எதிர்பார்ப்புக்களையும் ஏற்றுக்கொண்டு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தது. பிரசவ நேரமும் நெருங்கிக் கொண்டிருந்தது.

    மக்கள் கோயில்களிலும் வழிபாட்டு ஸ்தலங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தித் தங்களது அன்பிற்குரிய அரச குடும்பத்தின் வாரிசிற்காக மனதார வேண்டிக் கொண்டிருந்தார்கள்.

    அதிகாலை நேரம் ஒரு நல்ல நாளில் நல்ல நட்சத்திரத்தில் இரட்டைக் குழந்தைகள் ஆண் குழந்தைகள் பிறந்தனர். அரசர் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டார். முரசறைந்து நகரம் முழுவதும் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் கொண்டாட்டம். ஆட்டம் பாட்டம். மகிழ்ச்சி வெள்ளத்தில் நாட்டுமக்கள் அனைவரும் திளைத்தனர். அரண்மனையில் வந்தோர்க்கெல்லாம் சிறப்பு விருந்து என்று ஏக தடபுடல்.

    அரசி மயக்கம் தெளிந்து தனது குழந்தைகளைப் பார்த்தார். அப்போதுதான் அரசரும் குழந்தைகளைப் பார்க்கும் ஆவலுடன் வந்திருந்தார். குழந்தைகள் கொஞ்சம் விசித்திரமாக இருந்தார்கள். இரண்டு குழந்தைகளுமே நல்ல அழகு. ராஜ களை முகத்தில். ஆனால் ஒரு குழந்தை மிகவும் சிறியதாக உருண்டையாக இருந்தது. இன்னொரு குழந்தை மிகவும் ஒல்லியாக நீளமாக இருந்தது.

    மருத்துவம் பார்த்த தாதி சில குழந்தைகள் பிறந்தவுடன் அப்படித்தான் இருப்பார்கள். வளர வளர சரியாகி விடுவார்கள் என்று சொன்னதும் மனம் மகிழ்ந்த அரசர் விஜயேந்திரர் அவளுக்கு முத்துமாலையைப் பரிசாக அளித்தார்.

    குழந்தையை வந்து அன்புடன் பார்த்து ஆசிகள் வழங்கிய பின்னர் சிவநேசர் அங்கிருந்து கிளம்பினார். அருள்மொழி சித்தரிடம் நேரில் சென்று நற்செய்தியைச் சொல்லி வருவதற்காக அரசரிடம் விடைபெற்றுக் கொண்டு தனது புரவியில் ஏறி விரைந்தார்.

    ஆசிரமத்துக்குச் சென்று சித்தரை வணங்கிய சிவநேசர், இளவரசர்கள் இருவர் பிறந்த நற்செய்தியைத் தெரிவிக்க சித்தரும் குழந்தைகளைப் பார்த்து ஆசிகள் வழங்குவதற்காக சிவநேசருடன் அரண்மனைக்குக் கிளம்பி வந்தார்.

    சித்தர் அரண்மனையில் நுழைந்ததும் மேளதாளங்கள், பூரண கும்பம் கூடிய மரியாதையுடன் அரசரே வந்து நேரில் வரவேற்று அவரைத் தகுந்த மரியாதைகளுடன் அரண்மனையின் உள்ளே அழைத்துச் சென்றார். கனிகளும், பானகமும் அருந்தி இளைப்பாறிய பின் சித்தர் குழந்தைகளைப் பார்க்க விழைந்தார். அரசியின் சேடிகள் குழந்தைகளை நன்றாகப் பட்டுத் துணியில் சுற்றிக் கொண்டு வந்தனர்.

    குழந்தைகளைக் கைகளில் வாங்கி ஆசிகள் வழங்கினார் சித்தர். குழந்தைகளைப் பார்த்தவுடன் அவரது முகம் சற்றே மாறியது. கண்களை மூடிக்கொண்டு ஏதோ தியானம் செய்தார். பின்னர் குழந்தைகளைத் தாயிடம் அனுப்பிவிட்டு அரசரிடம் தனிமையில் பேச விழைந்தார்.

    சேவகர்களை வெளியே அனுப்பிவிட்டு அறையில் மன்னர், மந்திரி சிவநேசர் மற்றும் அருள்மொழி

    Enjoying the preview?
    Page 1 of 1