Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mahangalin Vazhkaiyil 100 Athisaya Nigazhchigal
Mahangalin Vazhkaiyil 100 Athisaya Nigazhchigal
Mahangalin Vazhkaiyil 100 Athisaya Nigazhchigal
Ebook204 pages1 hour

Mahangalin Vazhkaiyil 100 Athisaya Nigazhchigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாசகர்களுக்கு வணக்கம்.

மகான்களில் வாழ்க்கையில் 100 அதிசய நிகழ்ச்சிகள் என்ற இந்த நூலை உங்களுக்கு வழங்குவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நம் இந்திய தேசத்தில் தோன்றி வாழ்ந்த மகான்கள் ஏராளம். அவர்களின் வாழ்க்கை முறை நம் வாழ்க்கை முறையைக்காட்டிலும் வித்தியாசமானது. அவர்கள் நம்மிலிருந்து முற்றிலும் வேறுபட்ட பிறவிகள் என்பதை உணர்த்த அவ்வப்போது பல அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட 100 அதிசய நிகழ்ச்சிகளைத் தொகுத்து இந்த புத்தகத்தை உருவாக்கியுள்ளேன்.

இந்த நூலை சிறந்த முறையில் மின்னூலாக வெளியிட்டிருக்கும் புஸ்தகா நிறுவனத்திற்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.

Languageதமிழ்
Release dateJul 17, 2021
ISBN6580138807258
Mahangalin Vazhkaiyil 100 Athisaya Nigazhchigal

Read more from R.V.Pathy

Related to Mahangalin Vazhkaiyil 100 Athisaya Nigazhchigal

Related ebooks

Reviews for Mahangalin Vazhkaiyil 100 Athisaya Nigazhchigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mahangalin Vazhkaiyil 100 Athisaya Nigazhchigal - R.V.Pathy

    https://www.pustaka.co.in

    மகான்களின் வாழ்க்கையில் 100 அதிசய நிகழ்ச்சிகள்

    Mahangalin Vazhkaiyil 100 Athisaya Nigazhchigal

    Author:

    ஆர்.வி. பதி

    R.V. Pathy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rv-pathy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    எரிச்சலை ஏற்படுத்திய சந்தனம்

    பழங்களாக மாறிய மாமிசம்

    அறியாமை தந்த பரிசு

    இறந்த குழந்தை பிழைத்த அதிசயம்

    காவி உடை அதிசயம்

    பஞ்சம் நீக்கிய மந்திரம்

    திவான் ஆன பக்தர்

    மந்திரத்தால் பிழைத்த மரம்

    மூன்றுமே மெய்தான்

    மந்திரவாதியை வென்ற மகான் விஜயீந்திரர்

    வாழை நார் அதிசயம்

    காவி உடை ஏன்?

    அறியாமை அகன்றது

    முட்டாள்களிடம் பேசுவதில்லை

    அதிசய ஆற்றல்

    அதிசய நினைவுத் திறன்

    இராமபிரானை மீட்க புறப்பட்டவர்

    அதிசய விருந்து

    நான்காவது நபர்

    தங்கமழை பொழ்ந்த அதிசயம்

    ஆற்றில் நடந்த சீடர்

    வீட்டருகே ஓடிய ஆறு

    விழுங்க வந்த முதலை

    பற்றி எரிந்த கழுமரம்

    பட்டினத்தார் மறைந்த அதிசயம்

    நரிகள் குதிரைகளான அதிசயம்

    பிட்டுக்கு மண் சுமந்த சிவன்

    உணவளித்த இறைவி

    ஒரே ஒரு மனிதன்

    மனதை மாற்றிய பாடல்

    ஆணவம் அழிந்தது

    விளையாட்டு வினையானது

    அதிசய சக்தி

    பாம்பின் மரணம்

    உணவு வளர்ந்த அதிசயம்

    ஓரே நேரத்தில் இரண்டு இடங்களில்

    தண்ணீர் பெருகிய அதிசயம்

    கட்டுப்பட்ட பாம்பு

    லிங்கமாக மாறிய மண்

    வழக்கை வென்ற வள்ளலார்

    காற்றில் கரைந்த வள்ளலார்

    தண்ணீர் விளக்கு

    சாயிபாபா ஏற்றிய அதிசய விளக்கு

    அதிசய மலர்கள்

    மகான் விரட்டிய காலரா நோய்

    அதிசய ஊஞ்சல்

    அதிசய யோகம்

    நிலவரையும் நான்கு அகல்விளக்குகளும்

    ஏன் இரத்தம் வழிகிறது?

    இறைவன் இல்லாத இடம் எது?

    அம்மன் அளித்த பரிசு

    ஒரேநாளில் உருதுமொழி

    அமாவாசை அன்று பௌர்ணமி

    கையில் தோன்றிய கட்டி

    கைக்கு வந்த பட்டம்

    காணாமல் போன தங்கத்தட்டு

    கறுப்பு நெல்

    நிறம் மாறிய பூக்கள்

    பிறர் மனதில் உள்ளதை அறிந்த மகான்

    பிரமிக்க வைத்த மகான்

    அன்னை பராசக்தியின் காட்சி

    ஜெயராம்பாடியில் ஒரு பெண்

    கடவுள் தந்த மருந்து

    அற்புத நிகழ்வு

    மகான்களுக்கு மரணமில்லை

    அதிசய மாம்பழம்

    இராமனுஜரை காப்பாற்றிய திருமால்

    உடைந்த முட்டை ஒன்று சேர்ந்தது

    பணிந்த பாம்பும் புலியும்

    வானில் தோன்றிய அரசஇலைகள்

    அதிசய தவம்

    தந்தி அதிசயம்

    முருகன் கொடுத்த பாதக்குறடு

    வாயுதேவனின் அவதாரம்

    பணக்காரரான வியாபாரி

    தேடிவந்த கங்கை

    தேவலோக சிற்பி வடித்த சிலை

    மூக்குத்தி அதிசயம்

    சூடிக்கொடுத்த அதிசயம்

    அதிசய திருமணம்

    பாணர் செய்த பாக்கியம்

    முருகப்பெருமானின் திருக்காட்சி

    கிளியாக மாறிய மகான்

    அதிசய குழந்தை

    மனக்கோயில்

    குளத்தில் விழுந்த சங்கப்புலவர்கள்

    அதிசய வரம்

    உலகோர் உணர்ந்த மகான்

    பூம்பாவை உயிர்பெற்ற அதிசயம்

    இறந்தவன் உயிர் பெற்ற அதிசயம்

    இறைவன் அருள்விளக்கு

    கண் தந்த கடவுள்

    நெல்மலை

    உயிர் பிழைத்த அதிசயம்

    சிவன் அளித்த பொற்காசு

    கதவு திறந்த அதிசயம்

    தீயில் எரியாத சுவடி

    பனைமர அதிசயம்

    கீழே இறங்கி வந்த பொற்கிழி

    முதலை விழுங்கிய சிறுவன் பிழைத்த கதை

    வாசகர்களுக்கு வணக்கம். மகான்களில் வாழ்க்கையில் 100 அதிசய நிகழ்ச்சிகள் என்ற இந்த நூலை உங்களுக்கு வழங்குவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நம் இந்திய தேசத்தில் தோன்றி வாழ்ந்த மகான்கள் ஏராளம். அவர்களின் வாழ்க்கை முறை நம் வாழ்க்கை முறையைக்காட்டிலும் வித்தியாசமானது. அவர்கள் நம்மிலிருந்து முற்றிலும் வேறுபட்ட பிறவிகள் என்பதை உணர்த்த அவ்வப்போது பல அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட 100 அதிசய நிகழ்ச்சிகளைத் தொகுத்து இந்த புத்தகத்தை உருவாக்கியுள்ளேன்.

    இந்த நூலை சிறந்த முறையில் மின்னூலாக வெளியிட்டிருக்கும் புஸ்தகா நிறுவனத்திற்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.

    அன்புடன்

    ஆர்.வி.பதி

    13-01-2021

    எரிச்சலை ஏற்படுத்திய சந்தனம்

    ஸ்ரீஇராகவேந்திரர் சந்நியாசம் பெறுவதற்கு முன்னர் அவரது வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி இது. அப்போது ஸ்ரீ இராகவேந்திரரின் திருப்பெயர் வெங்கடபட்டர். ஒரு சமயம் யாகம் நடத்தி பிராமணர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வறுமையின் காரணமாக தன் மனைவியுடன் அன்னதானம் பெறச் சென்றார் வெங்கடபட்டர். யாகத்தை நடத்திக்கொண்டிருந்த சாஸ்திரிகள் வெங்கடபட்டரின் அருமை பெருமையை உணராமல் அவரது வறுமைக் கோலத்தைக் கண்டு அவரை சாதாரணமாய் எடைபோட்டுவிட்டார். இதன்காரணமாக அவரிடம் வந்திருக்கும் பக்தர்களுக்கு சந்தனத்தை அரைத்துத் தரும்படி உத்தரவிட்டார். சாஸ்திரிகளின் உத்திரவை மதித்து வெங்கடபட்டர் சந்தனத்தை அரைத்து வந்திருப்போருக்கு விநியோகித்தார்.

    வெங்கடபட்டர் அளித்த அந்த சந்தனத்தைப் பூசிய அனைவரின் உடலும் நெருப்பாய் கொதிக்க ஆரம்பித்தது. உடல் எரிச்சலில் அனைவரும் தவித்துப் போனார்கள். சந்தனத்தை அரைக்கும் வேளையில் வெங்கடபட்டர் ஏதோ மந்திரங்களை முணுமுணுத்தவாறு சந்தனத்தை அரைத்தது சாஸ்திரிகளின் நினைவிற்கு வந்தது. உடனே சாஸ்திரிகள் வெங்கடபட்டரை அழைத்து அவரிடம் இதைப்பற்றி கேட்டார். அதற்கு வெங்கடபட்டர் கீழ்கண்டவாறு பதிலுரைத்தார்.

    சாஸ்திரிகளே. அக்னி பகவானை நினைத்துக் கொண்டு அக்னி மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே சந்தனத்தை அரைத்தேன். அதனால்தான் அச்சந்தனத்தைப் பூசியவர்களுக்கு உடல் எரிச்சலைத் தருகிறது. நான் இப்போது வருண பகவானை நினைத்து வருண மந்திரத்தை உச்சரிக்கிறேன். உடல் எரிச்சல் உடனே நீங்கி விடும்

    வெங்கடபட்டர் வருண பகவானை நினைத்து மந்திரத்தை பிரயோகிக்க உடனே அனைவரின் உடல் எரிச்சலும் நீங்கியது. இந்த நிகழ்ச்சி சாஸ்திரிகளுக்கு வெங்கடபட்டர் ஒரு மகான் என்பதை புரிய வைத்தது.

    பழங்களாக மாறிய மாமிசம்

    ஸ்ரீ இராகவேந்திரரின் சிஷ்யர்களுள் ஒருவர் திவான் வெங்கண்ணபட்டர் என்பவர். அவர் திவானாக இருந்த ஊருக்கு ஸ்ரீ இராகவேந்திரர் ஒருமுறை விஜயம் செய்தார். இதன்காரணமாக மிக்க மகிழ்ச்சி அடைந்த வெங்கண்ணபட்டர் தனது நவாப்பிடம் சென்று ஸ்ரீ இராகவேந்திரரின் மகிமைகளை அவரிடம் எடுத்துரைத்து மகானை தரிசிக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் நவாபிற்கு ஸ்ரீ இராகவேந்திரர் மீது நம்பிக்கை பிறக்கவில்லை. எனவே அவரை சோதித்துப் பார்க்க விரும்பினார்.

    நவாப் வெங்கண்ணபட்டரிடம் தான் ஸ்ரீ இராகவேந்திரரை சந்திக்க விரும்புவதாகச் சொன்னதும் வெங்கண்ணபட்டர் அதற்கான ஏற்பாடுகளை மிக்க மகிழ்ச்சியுடன் செய்தார். நவாப் மாமிசங்களை சமைக்கச் செய்து அவற்றை ஒரு பாத்திரத்தினுள் வைத்து மூடி எடுத்துக்கொண்டு சென்று ஸ்ரீ இராகவேந்திரரை சந்தித்தார். ஸ்ரீ இராகவேந்திரரிடம் தாம் பழங்களை கொண்டு வந்திருப்பதாகவும் அவற்றை ஏற்று அருளும்படியும் நவாப் கேட்டுக்கொண்டார்.

    மகான் ஸ்ரீ இராகவேந்திரர் நவாப்பின் செயலையும் நோக்கத்தையும் உணர்ந்து கொண்டார். அப்படியே ஆகட்டும் என்று கூறிய ஸ்ரீ இராகவேந்திரர் தனது கமண்டலத்திலிருந்து தீர்த்தத்தை எடுத்து நவாப் கொண்டு வந்த அந்த பாத்திரத்தின் மீது தெளித்தார். பின்னர் அப்பாத்திரத்தை திறக்கும்படி சொல்ல அப்பாத்திரம் திறக்கப்பட்டது. அப்பாத்திரத்தினுள் நவாப் சொன்னது போலவே நல்ல நல்ல பழங்கள் இருந்தன. நவாப் அதிர்ச்சி அடைந்தார்.

    ஸ்ரீ இராகவேந்திரரின் மகிமையை உணர்ந்து தனது திவான் வெங்கண்ணபட்டர் சொன்னது போலவே ஸ்ரீ இராகவேந்திரர் ஒரு மகான் என்பதை உணர்ந்து கொண்டார். தன் செயலுக்காக ஸ்ரீ இராகவேந்திரரிடம் மன்னிப்பும் கோரினார். ஸ்ரீ ராகவேந்திரருக்கு மஞ்சாலா எனும் கிராமத்தை பரிசாக அளித்து அவரை சிறப்பித்தார்.

    அறியாமை தந்த பரிசு

    ஒருமுறை இராகவேந்திரரின் சக்தியை சோதித்துப் பார்க்க விரும்பிய சிலர் ஒன்று கூடி ஒரு திட்டம் தீட்டினர். உயிரோடு இருந்த ஒருவரை இறந்து போய்விட்டது போல நடிக்கச் சொல்லி அவரை இராகவேந்திரரிடம் அழைத்து வந்தார்கள். அவரிடம் உயிர்பிச்சை கேட்டு நடித்தனர். அவர்களின் திட்டத்தை அறியாமல் ஏமாற அவர் என்ன சாதாரண மனிதரா? அவதாரபுருஷனல்லவா?

    இறந்தவன் அப்படியே கிடக்கட்டும் என்று திருவாய்மொழிந்தார் இராகவேந்திரர். அவர் இப்படிச் சொன்னதும் இறந்தவன் போல படுத்துக்கிடந்த அந்த ஆள் உண்மையிலேயே இறந்துபோனான். இராகவேந்திரின் சக்தியை சோதித்துப் பார்க்க நினைத்த அந்த கூட்டம் அதிர்ச்சியில் செய்வதறியாது திகைத்தது. பின்னர் இராகவேந்திரரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு இறந்தவனை உயிர்ப்பிக்கும்படி வேண்ட இராகவேந்திரரும் அம்மனிதனை தன் யோகசக்தியால் உயிர்ப்பித்தார்.

    இறந்த குழந்தை பிழைத்த அதிசயம்

    தேசாயி ரகுநாதராவ் எனும் இராகவேந்திர பக்தர் ஒருவர் பெரும் செல்வந்தர். ஒரு முறை இராகவேந்திரரின் தலைமையில் ஒரு யாகத்திற்கு ஏற்பாடு செய்தார். இராகவேந்திரர் பூஜைகளை முடித்து வந்திருந்த பக்தர்களுக்கு தீர்த்தம் கொடுக்கத் தொடங்கினார். அப்போது திடீரென பூச்சியொன்று தீர்த்தம் இருந்த பாத்திரத்தில் வந்து விழுந்தது. அந்த இடத்தில் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட இராகவேந்திரர் தேசாயை அழைத்து விஷயத்தைச் சொன்னார். சிறிது நேரத்தில் அந்த அசம்பாவிதம் என்னவென்று தெரிந்தது. பக்தர்களுக்கு தருவதற்காக

    Enjoying the preview?
    Page 1 of 1