Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kamarajar - Oru Punithanin Kathai
Kamarajar - Oru Punithanin Kathai
Kamarajar - Oru Punithanin Kathai
Ebook139 pages41 minutes

Kamarajar - Oru Punithanin Kathai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கர்மவீரர் என்ற சொல் காமராஜரைக் குறிக்கும்.நம்மிடையே நமது காலத்தில் வாழ்ந்த தேசத்தலைவர்களில் காமராஜர் மிகவும் எளிமையானவர்.அவரது திட்டங்கள் அனைத்தும் பலராலும் போற்றப்பட்டவை.தமிழகத்தில் இவர் காலத்தில் கல்வி சிறப்பான முறையில் வளர்ச்சி பெற்றது.

காமராஜர் பல பெரிய பதவிகளை வகித்திருக்கிறார்.இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்று சிறைக்குச் சென்றிருக்கிறார்.இவரது வாழ்க்கை வரலாறு இன்றைய மாணவ சமுதாயத்திற்கு மிகவும் பயன்படக் கூடிய ஒரு அரிய பொக்கிஷம்.

பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றையும் தமிழகத்திற்கு அவர் செய்த செயற்கரிய செயலையும் மிக எளிய முறையில் பள்ளி மாணவர்களும் மாணவியரும் புரிந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கத்தில் எழுதியுள்ளேன்.இந்த நல்ல நூலை தமிழ் மக்கள் அனைவரும் படித்து பயன் பெற வேண்டும் என்று விரும்புகிறேன்.தமிழக மாணவச் செல்வங்கள் இந்த பயனுள்ள நல்ல நூலை நிச்சயம் படிக்க வேண்டும்.

இந்நூலை மிகச்சிறப்பான முறையில் மின்னூலாக வெளியிட்டிருக்கும் புஸ்தகா நிறுவனத்திற்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.

Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580138806613
Kamarajar - Oru Punithanin Kathai

Read more from R.V.Pathy

Related to Kamarajar - Oru Punithanin Kathai

Related ebooks

Reviews for Kamarajar - Oru Punithanin Kathai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kamarajar - Oru Punithanin Kathai - R.V.Pathy

    https://www.pustaka.co.in

    காமராஜர் - ஒரு புனிதனின் கதை

    Kamarajar - Oru Punithanin Kathai

    Author:

    ஆர்.வி.பதி

    R.V.Pathy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rv-pathy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆகட்டும் பார்க்கலாம்

    காமராஜரின் பிறப்பு

    இளம்வயதில் காமராஜ்

    முறுக்கு மாலை

    தேசபக்தி

    வைக்கம் போராட்டம்

    ரௌலட் சட்டம்

    ஜாலியன் வாலாபாக் பயங்கரம்

    ஒத்துழையாமை இயக்கம்

    சத்தியமூர்த்தியும் காமராஜரும்

    கள்ளுக்கடை மறியல் போராட்டம்

    சைமன் கமிஷன்

    சைமன் கமிஷன் எதிர்ப்பு போராட்டம்

    உப்பு சத்தியாகிரகப் போராட்டம்

    தேர்தலில் வெற்றி

    தீரர் சத்தியமூர்த்தி

    மக்கள் தந்த பதவி

    வெள்ளையனே வெளியேறு

    குலக்கல்வித் திட்டம்

    முதல்வர் காமராஜ்

    கே பிளான்

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர்

    தமிழகத்தில் ஆட்சி மாற்றம்

    காமராஜரின் கல்விப்பணிகள்

    மதிய உணவுத் திட்டம்

    பள்ளிச் சீருடைத்திட்டம்

    ஆகட்டும் பார்க்கலாம்

    சீரிய பணியில் காமராஜர்

    பெல் தொழிற்சாலை

    மணலி பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனம்

    ஆவடி டாங்க் பாக்டரி

    எது சிறந்த நகரம்?

    நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்

    முதியோர் ஓய்வூதியத் திட்டம்

    எளிய வாழ்க்கை முறை

    காமராஜரின் மனித நேயம்

    நேர்மையாளர் காமராஜர்

    மேதை காமராஜ்

    கிங் மேக்கர்

    ஜெய் ஜவான் ஜெய் கிஸான்

    பச்சைத்தமிழன்

    கண்கலங்கிய காமராஜர்

    இறுதிநாட்கள்

    காமராஜரும் பதவிகளும்

    பட்டம் வேண்டாம்

    எளிமைக்கு கிடைத்த மரியாதை

    படிப்பாளி காமராஜர்

    காமராஜரும் தோழர் ஜீவாவும்

    நடையைக் கட்டுங்கள்

    எளிமையான உணவு

    வெளிநாட்டுப் பயணங்கள்

    அஞ்சலி

    காமராஜரின் பொன்மொழிகள்

    கு.காமராஜ் - காலக்குறிப்பு

    கர்மவீரர் என்ற சொல் காமராஜரைக் குறிக்கும்.நம்மிடையே நமது காலத்தில் வாழ்ந்த தேசத்தலைவர்களில் காமராஜர் மிகவும் எளிமையானவர்.அவரது திட்டங்கள் அனைத்தும் பலராலும் போற்றப்பட்டவை.தமிழகத்தில் இவர் காலத்தில் கல்வி சிறப்பான முறையில் வளர்ச்சி பெற்றது.

    காமராஜர் பல பெரிய பதவிகளை வகித்திருக்கிறார்.இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்று சிறைக்குச் சென்றிருக்கிறார்.இவரது வாழ்க்கை வரலாறு இன்றைய மாணவ சமுதாயத்திற்கு மிகவும் பயன்படக் கூடிய ஒரு அரிய பொக்கிஷம்.

    பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றையும் தமிழகத்திற்கு அவர் செய்த செயற்கரிய செயலையும் மிக எளிய முறையில் பள்ளி மாணவர்களும் மாணவியரும் புரிந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கத்தில் எழுதியுள்ளேன்.இந்த நல்ல நூலை தமிழ் மக்கள் அனைவரும் படித்து பயன் பெற வேண்டும் என்று விரும்புகிறேன்.தமிழக மாணவச் செல்வங்கள் இந்த பயனுள்ள நல்ல நூலை நிச்சயம் படிக்க வேண்டும்.

    இந்நூலை மிகச்சிறப்பான முறையில் மின்னூலாக வெளியிட்டிருக்கும் புஸ்தகா நிறுவனத்திற்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.

    அன்புடன்

    ஆர்.வி.பதி

    ஆகட்டும் பார்க்கலாம்

    தற்போது விருதுநகர் என்றழைக்கப்படும் ஊர் அக்காலத்தில் விருதுப்பட்டி என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்தது.அந்த ஊரிலே ஒரு உத்தமர் பிறந்தார்.வடநாட்டவர்கள் அந்த உத்தமரை காலாகாந்தி என்று அன்போடு அழைத்தார்கள்.காலாகாந்தி என்றால் கருப்புகாந்தி என்பது பொருள்.

    இந்த உத்தமரும் காந்தியைப் போன்று எளிமையானவர். அன்பானவர்.அடக்கமானவர்.இவரது பள்ளிப்படிப்போ கொஞ்சம்தான்.ஆனால் அவர் பல பல்கலைக்கழகங்களுக்கு நிகரானவர்.இவரிடம் நேர்மை குணம் ஏராளமாக இருந்தது.இரக்க குணம் இதயம் முழுக்க நிறைந்திருந்தது.எளிமையான வாழ்க்கை முறை இருந்தது.நெஞ்சினில் ஏழைகளுக்கு உதவவேண்டும் என்ற ஈரம் இருந்தது.ஏழைகள் அனைவரும் படிக்க வேண்டும் என்ற உயர்ந்த லட்சியம் இருந்தது.ஒரு உத்தமருக்கு இருக்க வேண்டிய அனைத்து விஷயங்களும் இவரிடத்திலே இருந்தது.அதனால்தான் இந்த உத்தமரைப்பற்றி இன்னும் நாம் வியந்து பேசிக்கொண்டிருக்கிறோம்.

    ஆடம்பரத்தை இவர் என்றும் விரும்பியதில்லை. அதிகம் பேசியதில்லை.கொஞ்சம் பேச்சு அதிக செயல் இதுவே இவரது வாழ்க்கைத் தத்துவம்.ஆகட்டும் பார்க்கலாம் என்பதே இவருடைய தாரக மந்திரம்.பதவியை இவர் பெரியதாய் நினைத்ததில்லை. இவர் நினைத்திருந்தால் இரண்டு முறை இந்தியப்பிரதமர் பதவியை ஏற்றிருக்கலாம்.ஆனால் இவரோ இரண்டு முறையும் இந்தியாவின் பிரதமர்களை தீர்மானித்திருக்கிறார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவியை கட்சிப்பணிக்காக இராஜினாமா செய்தவர்.

    இவர் காந்திஜியின் உண்மையான சீடர்.குழந்தைகளை மிகவும் நேசித்த அருமை நேருஜியின் இனிய நண்பர்.இந்திய சுதந்திரப்போரில் தன்னை முழுவதுமாய் இணைத்துக் கொண்டு பாடுபட்டவர்.ஆம்.அவர்தான் கு.காமராஜ்.

    பெருந்தலைவர் என்றும் கர்மவீரர் என்றும் அனைவராலும் அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர்.இரண்டு முறை இந்தியாவின் பிரதமர்களை தீர்மானித்த கிங் மேக்கர் காமராஜர்.இவரது ஆட்சியில் தமிழ்நாட்டில் கல்வி செழித்து வளர்ந்தது.ஏழைக்குழந்தைகளுக்கு பள்ளியில் இலவச மதிய உணவளித்து அவர்களது பசியைப் போக்கி அவர்களை ஆர்வமுடன் பள்ளிக்கு வரவழைத்தவர் காமராஜர்.

    காமராஜர் ஒரு அதிசய மனிதர்.நேர்மைக்கு ஓர் அடையாளம்.எளிமையின் சின்னம்.வாக்கு தவறாத உத்தமர்.படித்ததோ ஆறாம் வகுப்பு வரைதான்.ஆனால் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டவர். அகில இந்திய அளவில் பிரபல அரசியல்வாதியாக ஒளி வீசியவர். அரசியல்வாதி என்ற போதிலும் பண்பு மிக்கவர்.பண்பு மிக்க நேர்மையான உள்ளம் படைத்த சுயநலம் என்பதே சிறிதும் இல்லாத நாட்டு நலனில் மிகுந்த அக்கறை கொண்ட நல்ல நல்ல தலைவர்களிடம் காமராஜர் பழகியதே இதற்கு முக்கிய காரணம்.காமராஜரைப் பற்றி இப்படிப்பட்ட பல விஷயங்களை சொல்லிக் கொண்டே செல்லலாம்.

    எந்த ஒரு விஷயத்தையும் எளிதாகச் சொல்லிவிடலாம்.ஆனால் அதன்படி நின்று வாழ்ந்து காட்டுவது என்பது எல்லோருக்கும் சாத்தியமில்லை. இந்த மிகப்பெரிய விஷயத்தை திருவள்ளுவர் ஒரு குறள் மூலம் மிக அழகாக நமக்கு விளக்கிச்சென்றிருக்கிறார்.

    சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

    சொல்லிய வண்ணம் செயல்

    சொல்லியபடி வாழ்ந்து காட்டியவர்கள் வெகுசிலரே. அப்படிப்பட்;ட ஒரு சிலருள் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து இந்திய அளவில் அரசியலில் பல சாதனை புரிந்த ஒரு தலைவர் நமது காமராஜர்.

    காமராஜரின் பிறப்பு

    காமராஜர் 15 ஆம் நாள் ஜீலை மாதம்

    Enjoying the preview?
    Page 1 of 1